இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 24

    அதிகாரம் – 24   சிறு வயது அபிமன்யு தங்கள் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது வேலுச்சாமி வள்ளியம்மையையும், கிருஷ்ணமூர்த்தியையும் அவர்களின் ஊர் திருவிழாவிற்கு அழைத்து செல்ல வந்திருந்தார்.   வந்தவரை கிருஷ்ணமூர்த்தி தன் வார்த்தைகளால் காயப்படுத்தியும், அவமானப்படுத்தியும் திருப்பி அனுப்பி வைத்தார். அதனை பார்த்த சிறு வயது அபிமன்யுவிற்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும், ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டவன்.   வேலுச்சாமி சென்றவுடன் நேராக கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று, “ தாத்தா, யார் அந்த புது தாத்தா வந்துட்டு போறாங்க? நீங்க ஏன் அவங்களை திட்றீங்க ” என்று விவரம் அறியாமல் கேட்டான்.   அனைத்தையும் இவன் பார்த்துவிட்டதை கேட்டு திகைத்த கிருஷ்ணமூர்த்தி நொடியில் ஒரு புது கதையை உருவாக்கி விட்டார். ஆரம்பத்தில் உறவுகளின்மை, குழந்தையின்மையினால் மீராவை அங்கிருந்து அழைத்து வந்து விட்ட கிருஷ்ணமூர்த்தி, தற்பொழுது மீரா வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டதால் எங்கே என்றேனும் ஒரு நாள் வேலுச்சாமியோ, மரகதமோ வந்து உண்மையைக் கூறி அழைத்து சென்...

அவனதிகாரம் - 23

  அதிகாரம் – 23   மீராவின் குடும்பம் அரசனூரில் இருந்து சென்னை வந்து இன்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்துவிட்டது. திருமண பேச்சை வீட்டில் யாரும் எடுக்கவில்லை. பாட்டியும் அபிமன்யுவிற்கு சிறிது அவகாசம் கொடுக்க எண்ணியவர், கொஞ்சம் அவனை விட்டுப் பிடிப்போம் என்று எண்ணி ஒரு வாரம் கடத்திவிட்டார்.   அன்று ஞாயிற்றுக்கிழமை, காலையிலேயே மீராவின் செல்போனிற்கு அழைப்பு வந்தது மரகதத்திடம் இருந்து. போனை எடுத்தவர், “ சொல்லுங்க பெரியம்மா. நல்லா இருக்கீங்களா. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க? வேலுப்பா நல்லா இருக்காங்களா? ” என்று வரிசையாக விசாரித்தார்.   “ எல்லாரும் நல்லா இருக்கோம்மா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. அம்மா எப்படி இருக்காங்க? ” என்று மரகதமும் பதில் நலம் விசாரித்தார்.   நல விசாரிப்புகள் எல்லாம் முடிந்து தன் தாயிடம் கொடுப்பதாக கூறி மீரா வள்ளியம்மையிடம் ஃபோனை கொடுத்தாள்.   போனை பெற்ற வள்ளியம்மை, “ அக்கா! எப்படி இருக்க? மாமா நல்லா இருக்காங்களா? ” என்று விசாரித்தார்.   “ நல்லா இருக்காங்க வள்ளி. வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டோம். அதான் உன...