இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 5

    அதிகாரம் – 5   தன் தாயின் அறிவுரைகளை எல்லாம் கேட்டுக்கொண்டு வெண்ணிலா அமைதியாக இருந்தாள்.   லட்சுமி, “ சரி மா, விளக்கேத்திட்டு சாமி கும்பிடு ” என்றார்.   வெண்ணிலாவும் தன் தாய் சொல் படி அனைத்தும் செய்தாள்.   சாமி கும்பிட்டு முடித்ததும் வெண்ணிலாவின் தோழிகளை அழைத்தார் லட்சுமி, “ வெண்ணிலாவை அவளோட அறையில் கொண்டு போய் விட்டுடுங்கமா ” .   செல்லும் வழியெல்லாம் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டு வெண்ணிலாவை அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் பேசியது தான் எதுவுமே வெண்ணிலாவை சென்றடையவில்லை.   அவள் தான் வேறொரு எண்ணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாளே. தோழிகளில் ஒருத்தி, “ ஏய் வெண்ணிலா, என்ன டி என்ன யோசிச்சிக்கிட்டிருக்க.. நாங்க பாட்டுக்கு என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு எதுவுமே கண்டுக்காமல் எதையோ யோசிச்சிக்கிட்டு வர ” .   அதற்கு, வெண்ணிலா பதில் கூறும் முன் இவர்கள் தோழிகளில் இன்னொருத்தி, “ அவளுக்கு இப்போ நம்ம நினைப்பெல்லாம் எங்கடி இருக்கும். அவ ஜீவா அண்ணாவை பத்தி மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருப்பா ” எ...

அவனதிகாரம் - 4

    அதிகாரம் – 4   ‘’ கெட்டி மேளம்.... கெட்டி மேளம்... ” என்னும் ஐயரின் சத்தம் உறக்க கேட்க...   மேல தாளங்கள் இசை முழங்க...   உறவினர்கள், நண்பர்கள் படை சூழ...   தன் மாமன் மகள் வெண்ணிலாவின் கழுத்தில் மங்கள நாணை மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரி பாதியாக ஆக்கிக் கொண்டான் ‘ ஜீவா ’ என்னும் ‘ ஜீவானந்தம் ’ ..!   தன்னவன் முன் தலை குனிந்து என்றும் வாழ்க்கையில் உனக்கு சரி பாதியாக இருப்பேன் என்னும் விதமாக அவன் அணிவித்த மங்கள நாணை ஏற்றுக் கொண்டாள் வெண்ணிலா..!   வெண்ணிலாவின் தந்தை, பெருமையுடனும், வெண்ணிலாவின் தாய், கண்களில் மின்னும் ஆனந்த கண்ணீருடனும், மரகதம் பாட்டி, கண்ணீருடன் கூடிய பூரிப்புடனும், கயல்விழியும், யாழினியும், ஸ்வேதாவும் பெரும் மகிழ்ச்சியுடனும், ஜீவாவின் தாயும், தந்தையும் மனநிறைவுடனும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.   ஒருவாறு உறவினர்கள், பெரியோர்களின் நல்லாசியுடனும், நண்பர்களின் வாழ்த்துக்களுடனும், கடவுளின் ஆசியுடனும் ஜீவா, வெண்ணிலாவின் திருமணம் இனிதே நடைபெற்றது..!   ஒவ்வொரு பெண்ணுக்கும், தன் வாழ...

அவனதிகாரம் - 3

  அதிகாரம் - 3              அந்த கல்யாண மண்டபத்தில் கூட்டம் களைகட்டி இருந்தது. கல்யாண மண்டபத்தில் இருந்த விருந்தினரில் ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்தார், “ ஏய் சாரதா, பாத்தியா டி எம்புட்டு கூட்டம்னு ” .   “ பின்ன, ஊர் தலைவர் வீட்டு, கல்யாணம்னா சும்மாவா..! என்னனு நினைச்ச நீயி... அதுவும், ஐயா வீட்டு முதல் விசேஷம், ஊருக்கே விருந்து வைக்காக... மொத்த ஊரும் இங்க தான கூடியிருக்கு ” என்று பெருமை பேசினார் சாரதா.   அப்பொழுது, அந்த வழியாக ஊர் தலைவரின் வீட்டில் வேலை செய்யும் ராணி கடந்து செல்வதை அவ்விருவரும் கண்டனர்.   “ ஏய் ராணி, ஒரு நிமிஷம் நில்லு ” என்று சாரதா ராணியை அழைத்தார்.   “ சொல்லு சாரதா அக்கா, என்ன விஷயம்.. அங்குட்டு நிறைய சோலி கிடக்கு ” என்றாள் ராணி.   “ என்னடி இவ சும்மா ரெண்டு வார்த்தை பேசலாம்னு கூப்பிட்டா, எதோ இந்த கல்யாணமே இவ தலைமையில் தான் நடக்குதுங்குற மாதிரி சிலுப்பிக்கிறா ” என்றாள் மற்றொருத்தி, சாரதாவின் தங்கை விமலா.   “ அக்கா, இதை பேசத்தேன் என்ன ...

அவனதிகாரம் - 2

    அதிகாரம் - 2              வெண்ணிலா தன் தாயிடம் பேசிப் பார்த்து எந்த பலனும் அளிக்காததால் அழுகையுடன் தன் அறை நோக்கி ஓடினாள். அவளின் தாய் லட்சுமி, தன் மகளுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத தன் நிலையை எண்ணி வருந்தியபடி அழுகையுடன் செல்லும் தன் மகளை பார்த்து நின்றார்.   சுப்பிரமணியன், “ என்ன லக்ஷ்மி இங்க நின்னுட்டு என்னத்த பாத்துகிட்டு இருக்க... ” .   “ ஒன்னும் இல்லைங்க, இன்னையோட நம்ம வெண்ணிலாவுக்கு 12ஆவது பரீட்சை முடிஞ்சிடுச்சு ” . என்று கூறிவிட்டு கைகளை பிசைந்து கொண்டு நின்றார்.   அவரை நிதானமாக பார்த்தவர், “ என்ன லட்சுமி என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்க... ” என்று கேட்டார்.   “ இல்லைங்க, நான் தான் உங்ககிட்ட சொல்லி இருந்தேனே... வெண்ணிலா மேல படிக்கணும்னு ஆசைப்படுறா. நம்ம ஜீவாவுக்கு தானே அவளை கட்டி வைக்க போறோம். ஆசைப்படுற மாதிரி படிப்பு முடிஞ்சதும், ஜீவாவுக்கு கட்டிக் கொடுத்திடலாமே.. நான் அண்ணன் கிட்ட பேசுறேன்.. ” என்று கடகடவென கூறிவிட்டு கணவரின் முகத்தை பார்த்தார்.   “ இ...