இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 59

    அதிகாரம் – 59   அன்று அபிமன்யு கோபமாக யாழினியை அவளின் வீட்டிலிருந்து அழைத்து வந்த பிறகு அவளின் பெற்றோருக்கும், தாத்தா, பாட்டிக்கும் பெரும் வருத்தமாகிப் போனது.   சில நாட்கள் கழித்து லட்சுமி, “ என்னங்க இப்போ தான் மாப்பிள்ளை கொஞ்சம் மனசு மாறுன மாதிரி தெரிஞ்சது. அதுக்குள்ள இந்த கயல் என்ன என்னமோ பேசி திரும்ப அவரை கோபப்படுத்திட்டாளே ” என்றார் வருத்தமாக.   “ மூணு பேரையும் நாம ஒரே மாதிரி தான வளர்த்தோம் லட்சுமி. இவள் மட்டும் ஏன் இப்படி இருக்கானு தெரியலையே. ரெண்டு பொண்ணுங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கு . இவ அவளுக்கு புடிச்ச வாழ்க்கை தான் வேணும்னு போனா, இப்போ வந்து கஷ்டப்படுறேன்னு கண்ணை கசக்கிக்கிட்டு நின்னா நம்ம என்ன பண்ண முடியும். அவங்களுக்கு பண உதவி செய்யுறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல லட்சுமி.   ஆனா, உன் பொண்ணுக்கு இன்னும் திமிர் அதிகமாயிடும். நம்மகிட்டயே இந்த பேச்சு பேசுறா அவ, அங்க இருக்கவங்களை எப்படி மதிப்பா. எங்க அப்பா வீட்டில் இருந்து வந்தது தானே இதெல்லாம்னு அவங்க கிட்ட திமிரா நடந்துக்கிட்டா அவ வாழ்க்கையே அதனால் வீணா போக கூட சந்தர்ப்...

அவனதிகாரம் - 58

      அதிகாரம் – 58   அபிமன்யு தன் கோபத்தை அடக்கியபடி, “ இங்க பாரு.. நான் யார்கிட்டயும் என்னை பத்தின எந்த ஒரு எக்ஸ்பிளனேஷன்சும் இதுவரைக்கும் கொடுத்ததில்லை. இதான் ஃபர்ஸ்ட் டைம். அதுவும் இவளுக்காக தான் ” என்று யாழினியைக் காட்டியவன்.   “ என்னை பத்தி வெளியில் ஆயிரம் பேர் தப்பான ரூமர்ஸை ஸ்ப்ரெட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு எல்லாம் நான் என்னைக்குமே கவலைப்பட்டதும் இல்லை. அவங்களை எல்லாம் ஒரு பொருட்டா மதிச்சதும் கிடையாது.   அந்த ஆயிரத்தில் ஒன்னா தான் நான் உன்னையும் பார்க்கிறேன். ஆனா, இவளுக்கு அப்படி கிடையாது. இவளுக்காக தான் நீ ஏன் இப்படி பொய் சொன்னன்னு உன் வாயாலேயே க்ளியர் பண்ணனும்னு பேசிகிட்டு இருக்கேன் . அதுக்காக என் பொறுமையை ரொம்ப சோதிக்காத. அப்புறம் விளைவுகள் வேற மாதிரி இருக்கும் ” என்று தன் ஒற்றைப் புருவத்தை தூக்கி மிரட்டும் தோணியில் கூறவும் .   அருகில் இருந்த யாழினிக்கே அபிமன்யுவின் கோபத்தைக் கண்டு சற்று பயம் ஏற்பட. எதிரில் இருக்கும் பிரியாவை பற்றி சொல்லவே தேவையில்லை.   அபிமன்யுவின் இந்த பரிமாணத்தை முதல் முறை பார்ப...