அவனதிகாரம் - 58

 

 

 

அதிகாரம் – 58

 

அபிமன்யு தன் கோபத்தை அடக்கியபடி, இங்க பாரு.. நான் யார்கிட்டயும் என்னை பத்தின எந்த ஒரு எக்ஸ்பிளனேஷன்சும் இதுவரைக்கும் கொடுத்ததில்லை. இதான் ஃபர்ஸ்ட் டைம். அதுவும் இவளுக்காக தான் என்று யாழினியைக் காட்டியவன்.

 

என்னை பத்தி வெளியில் ஆயிரம் பேர் தப்பான ரூமர்ஸை ஸ்ப்ரெட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு எல்லாம் நான் என்னைக்குமே கவலைப்பட்டதும் இல்லை. அவங்களை எல்லாம் ஒரு பொருட்டா மதிச்சதும் கிடையாது.

 

அந்த ஆயிரத்தில் ஒன்னா தான் நான் உன்னையும் பார்க்கிறேன். ஆனா, இவளுக்கு அப்படி கிடையாது. இவளுக்காக தான் நீ ஏன் இப்படி பொய் சொன்னன்னு உன் வாயாலேயே க்ளியர் பண்ணனும்னு பேசிகிட்டு இருக்கேன். அதுக்காக என் பொறுமையை ரொம்ப சோதிக்காத. அப்புறம் விளைவுகள் வேற மாதிரி இருக்கும் என்று தன் ஒற்றைப் புருவத்தை தூக்கி மிரட்டும் தோணியில் கூறவும்.

 

அருகில் இருந்த யாழினிக்கே அபிமன்யுவின் கோபத்தைக் கண்டு சற்று பயம் ஏற்பட. எதிரில் இருக்கும் பிரியாவை பற்றி சொல்லவே தேவையில்லை.

 

அபிமன்யுவின் இந்த பரிமாணத்தை முதல் முறை பார்ப்பதால் வெடவெடத்துப் போய் அமர்ந்திருந்தாள் பிரியா. தேவை இல்லாமல் அவசரப்பட்டு விட்டோம் என்று மூளை உரைத்தாலும், காலம் கடந்த சிந்தனை என்று மனம் கூறியது.

 

என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள். பிரியாவின் அமைதி மேலும் அபிமன்யுவிற்கு கோபத்தை தூண்ட, டேபிளின் மீது ஒரு தட்டு தட்டியவன்.

 

இடியட்! உன்கிட்ட தான கேட்டுக்கிட்டு இருக்கேன். வாயைத் திறந்து சொல்ல மாட்ட என்று கத்தவும்.

 

மற்ற மேசையில் இருந்த அனைவரும் இவர்களையே வேடிக்கை பார்த்தனர்.

 

அதனால் யாழினி எங்கே திட்டி விடுவானோ என்ற பயத்தோடு அபிமன்யுவின் கையை பற்றியவாறு, எல்லாரும் பாக்குறாங்க மாமா. ஆபீஸ்க்கு போய் பேசிக்கலாமே என்றாள் மெதுவான குரலில்.

 

அதற்கு அபிமன்யு யாழினியை கனிவாக பார்த்தவன், அவகிட்ட சொன்னது தான் உனக்கும். நான் யார்கிட்டயும் என்னை பத்தி எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேன். ஆனா, நீ எனக்கு அப்படி கிடையாது. யூ ஆர் ஸ்பெஷல் டு மீ என்றான் தன் கையை பற்றி இருந்த அவளின் கையில் அழுத்தத்தை கொடுத்தவாறு.

 

இதை எல்லாம் பார்த்த பிரியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, கோபம் கட்டுக்கடங்காமல் தலைக்கு ஏற.

 

இங்க பாருங்க அபி.. என்று ஆரம்பிக்கும் பொழுது அவளின் உரையாடலுக்கு நடுவே புகுந்தவன், கால் மீ சார் என்றான் வெட்டுவதைப் போல் பார்த்தபடி.

 

அதில் அவமானமடைந்த பிரியா, ஒ.. ஓகே.. சார். உங்களுக்கு என்னை பத்தி எதுவும் தெரியாது. ஆனா, எனக்கு உங்களை பத்தி எல்லாமே தெரியும். நான் உங்களை டூ இயர்ஸா லவ் பண்றேன். உங்களோட சிச்சுவேஷன் இப்போ என்னனு எனக்கு நல்லா புரியுது.

 

உங்களுக்கு விருப்பம் இல்லாமல் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க. அந்த பொண்ணும் கல்யாண மண்டபத்துல ஓடிப் போயிட்டா. மத்தவங்க முன்னாடி உங்களுடைய கௌரவத்தை காப்பாத்துறதுக்காக நீங்க இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க.

 

எனக்கு எல்லாமே தெரியும். இல்லைனா உங்களோட தகுதிக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத இவளை போய் நீங்க ஏன் கல்யாணம் பண்ண போறீங்க. உங்க படிப்பு என்ன... அவளோட படிப்பு என்ன... நான் ஒத்துக்குறேன், பார்க்க ஆள் கொஞ்சம் அழகா தான் இருக்கா. அவ்வளவு தான்!.

 

மத்தபடி இவகிட்ட வேற எதுவும் இல்ல. நீங்க மட்டும் இவளை கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தா, இப்போ இவ இருக்க இடத்துல நான் இருந்து இருப்பேன். உங்களுக்கு எல்லா விதத்துலயும் சப்போட்டா என்னால் மட்டும் தான் இருக்க முடியும்.

 

ஆஃபீஸ்க்கு வந்து கேம் விளையாடி டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்க இவளால் ஆஃபீஸ் வொர்க்கை பார்க்க முடியுமா. இப்போ கூட எதுவும் டிலே ஆகல. ப்ளீஸ், நீங்க இவளை டைவர்ஸ் பண்ணிடுங்க. உங்க முன்னாடி உங்களுக்கு மரியாதை கொடுக்குற எல்லாருமே உங்க பின்னாடி உங்களை கிண்டல் பண்ணி சிரிக்கிறாங்க. எனக்கு அது ரொம்ப ஹர்டிங்கா இருக்கு. அதுக்கு முழு காரணம் இவ தான். நம்ம லைஃப் பார்ட்னரை பொறுத்து தான் நம்ம லைப் அமையும். இப்படி ஒரு பார்ட்னர் உங்களுக்கு தேவையா? என்று யாழினியை கை காட்டினாள்.

 

யாழினிக்கு அவமானத்தில் முகம் கறுத்து விட்டது.

 

இவ சந்தோஷமா தான் இருப்பா. ஏன்னா.. இவளுக்கு கிடைச்சிருக்க வாழ்க்கை இவ கனவுளையும் நினைச்சு பார்க்காத அளவுக்கு பெருசா அமைஞ்சிருக்கு. நல்லா பணக்கார பையன், நல்லா படிச்சு இருக்கீங்க, அழகா இருக்கீங்க வேற என்ன வேணும் இவளுக்கு. இவளுடைய தகுதிக்கு மீறுன வாழ்க்கை கிடைச்சிருக்குன்ற சந்தோஷத்துல இருக்கா. ஆனா, உங்களுக்கு அப்படி இல்ல. கொஞ்சம் யோசிச்சு பாருங்க ப்ளீஸ்.. எனக்காக.. ஐ லவ் யூ சோ மச்!

 

இதற்கு மேல் வேறு என்ன வேண்டும். தன் கண் முன்னே தன் கணவரை வேறொரு பெண் காதலிக்கிறேன் என்று கூறுகிறாள். அதை தடுக்க முடியாமல் இருக்கிறோமே. அவள் கூறுவதும் சரி தானே.

 

இவருடைய தகுதிக்கு நாம் கொஞ்சமும் பொருத்தம் கிடையாது. இவள் மட்டுமா கூறுகிறாள். தன் உடன் பிறந்த சகோதரியும் தானே கூறுகிறாள். மேலும், அனைவரும் நம்மால் தான் அபிமன்யுவை கேலி செய்கிறார்களோ என்ற குற்ற உணர்ச்சியும் தோன்றியது.

 

யாழினி அவமானத்திலும், தாழ்வு மனப்பான்மையிலும் கூனிக் குறுகிய படி அமர்ந்திருக்க. அபிமன்யுவிற்கு கோபத்தில் கண்கள் சிவந்துவிட்டது. கை விரல்களை மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு அமர்ந்திருந்தவனால் இதற்கு மேல் முடியவில்லை.

 

செட் அப்.. இடியட்! ஹவ் டேர் யூ டு டாக் லைக் திஸ். அதுவும் என் வைஃப் முன்னாடி. உனக்கு அசிங்கமா இல்ல. ஏற்கனவே, கல்யாணம் ஆனவனை போய் ப்ரொபோஸ் பண்ற ச்சீ... என்று தன் முகத்தை சுழித்தான்.

 

அதில் பிரியாவிற்கு அவமானம் ஆகிப்போக, உங்களுக்கு கல்யாணம் ஆனது என்னோட தப்பு இல்லையே. சந்தர்ப்ப சூழ்நிலையினால் தான் இந்த கல்யாணம் நடந்திருக்கு. நீங்க ரெண்டு பேரும் முழு மனசோட கல்யாணம் பண்ணிக்கலையே என்று மேலும் கேள்வி எழுப்ப.

 

யாரு சொன்னா.. நான் இவளை ஒன் இயரா லவ் பண்ணி பிளான் பண்ணி கல்யாணம் பண்ணேன். அதை பத்தின எக்ஸ்ப்ளனேசன்ஸ் எல்லாம் உனக்கு கொடுக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை.

 

யாழினிக்கு இப்போது தான் மனது ஆசுவாசமடைந்தது. ஏனென்றே தெரியாமல் பிரியா, தானும் அபிமன்யுவும் காதலிக்கிறோம் என்று கூறியது முதல் வேதனையாக உணர்ந்தவள்.

 

இப்பொழுது தான் நிம்மதியாக உணர்ந்தாள். அது ஏன் என்று அறிந்து கொள்ள எண்ணியிருந்தாலே, அபிமன்யுவின் மேல் அவள் கொண்டிருக்கும் காதலை உணர்ந்து இருப்பாள்.

 

லுக்.. நமக்கு யாரு பெர்பெக்டா இருப்பாங்கன்னு பார்த்து வருவது பேரு லவ் கிடையாது. ஷி மே பி இம்பர்ஃபெக்ட் டு மீ. பட், ஷீ இஸ் தி ஒன் ஐ வான்ட் என்று கூறியபடி யாழினியின் தோளில் கையை போட்டு தன் பக்கம் இறுக்கினான்.

 

அதில், பிரியாவின் பொறாமை மேலும் தூண்ட.

 

இன்னும் எவ்வளவு நாள் நீங்க இப்படி சொல்றீங்கன்னு பாக்குறேன். கண்டிப்பா இவ உங்களுக்கு சரியானவ இல்லைனு நீங்க புரிஞ்சிப்பீங்க. அதுவரைக்கும் நான் உங்களுக்காக வெயிட் பண்ணுவேன்.

 

வெயிட் பண்றதும் பண்ணாததும் உங்க இஷ்டம். பட், டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். அண்ட் ஒன் மோர் திங், என் வைஃப் கிட்ட நீங்க இப்படி பேசினதால நான் உங்களை இந்த ஆபீஸ் விட்டு அனுப்ப மாட்டேன். என் வைஃபை ஹர்ட் பண்ண உங்களுக்கு பனிஷ்மென்ட் வேணுமில்ல... என்று சற்று இடைவெளி விட்டவன்.

 

யாழினியை பார்த்து, நீ சொல்லு பேபி டால். இவளுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம் என்று இலகுவாக கேட்டான்.

 

அபிமன்யுவின் அழைப்பில் யாழினிக்கு தான் அங்கே அமர்வதே பெரும் அவஸ்தை ஆகிப் போனது. இதில், எங்கே பதில் கூறுவது.

 

ஆ... அது... என்று திணறியபடி அமர்ந்திருந்தாள்.

 

ஓகே.. ஓகே.. நீ வொரி பண்ணிக்காத. உனக்கெல்லாம் யாரையும் ஹர்ட் பண்ணவே தெரியாதே என்று பிரியாவை பார்த்தபடி கூறியவன்.

 

ஓகே பிரியா, நீங்க எங்க ஆபீஸ்லேயே வொர்க் பண்றது தான் உங்களுக்கு நான் கொடுக்குற பனிஷ்மென்ட். அப்போ தான நாங்க ரெண்டு பேரும் நீங்க சொன்ன மாதிரி கிடையாது. வி ஆர் இம்பர்ஃபக்ட்லி பர்ஃபக்ட்டுனு உங்களுக்கு தெரியும். அதுவே உங்களுக்கு பனிஷ்மென்ட் தான்னு நான் நினைக்கிறேன். ஓகே லெட்ஸ் கோ என்று கூறிவிட்டு யாழினியின் கையை பிடித்தவன் தன்னோடு அழைத்துக் கொண்டு தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று வெளியேறி விட்டான்.

 

யாழினி மனதிற்குள், இவர் பிரியாவை லவ் பண்ணல போலருக்கே. இது தெரியாம பாவம் நம்ம வேற சண்டை போட்டுட்டோம். நமக்காக சப்போர்ட் பண்ணி தான பிரியா கிட்ட பேசினார். என்னடி நீ... கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி பேசிட்டியே என்று மனதிற்குள் புலம்பியபடி வந்தவள்.

 

அபிமன்யு கார் கதவை திறந்துவிட்டு ஏறு என்று கூறியதையே கவனிக்கவில்லை.

 

அபிமன்யு ஏதோ சிந்தனையில் இருந்த யாழினியின் பக்கவாட்டாக கை கொடுத்து தன்னோடு இறுக்கிய படி, என்ன... என்னை பத்தி தான யோசிச்சுக்கிட்டு இருக்க என்றான் அவளின் காதில் கிசுகிசுப்பாக.

 

அபிமன்யுவின் திடீர் அணைப்பில் பதறிய யாழினி, என்ன பண்றீங்க நீங்க. யாராவது பாத்துட போறாங்க. கையை எடுங்க என்று அவனை தள்ளி விட்டு இரண்டு அடி பின்னே சென்று நின்றாள்.

 

உன்னை ஹர்ட் பண்ணதுக்காக அவளுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தாச்சு. என்னை நீ ஹர்ட் பண்ணல. சோ, உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணுமே என்று சிறிது நேரம் யோசித்தவன்.

 

சரி காரில் ஏறு வீட்டுக்கு போய் கொடுத்துக்கலாம் என்றவனின் கண்கள் சிறிது நேரம் யாழினியின் இதழிலேயே நிலைத்து நிற்க.

 

பதட்டமான யாழினி அவசரமாக, சாரி என்று கிசுகிசுத்துவிட்டு காரினுள் ஏறிக்கொண்டாள்.

 

பிறகு, வீட்டிற்கு சென்றதும் அபிமன்யு அறைக்கு சென்றுவிட, யாழினி அறைக்கு செல்லாமல் இருக்க வேண்டி வீட்டில் உள்ளவர்களிடம் வளவளத்து கொண்டே ஹாலிலும், கிச்சனிலும் மாற்றி மாற்றி இருந்தாள்.

 

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு கிருஷ்ணமூர்த்தி, விசாலாட்சி, ஷைலஜா யாரும் நேரடியாக யாழினியைப் பேசுவது இல்லாவிட்டாலும், மறைமுகமாக யாரும் இல்லாத போது பேசுவதும், பார்க்கும் போதெல்லாம் முறைப்பதும் தவறுவதில்லை.

 

ஆனால், அதை எல்லாம் யாழினி பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. முடிந்தவரை அவர்களிடம் தனியாக சிக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தாள்.

 

ஆரணி, அம்மா காலேஜ் போறதுக்கு ஷாப்பிங் பண்ணனும்மா.

 

ஆரியன், என்னது.. ஷாப்பிங்கா.. உன்கிட்ட தான் எல்லாமே இருக்கே. அப்புறம் எதுக்கு ஷாப்பிங்.

 

நீ சும்மா இரு. காலேஜ் போறது என்ன ஸ்கூல் மாதிரி யூனிபார்ம் போடனும்னு நினைச்சுக்கிட்டியா. டெய்லி காலேஜ்க்கு டிரஸ் போடணும். அதுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டாமா?.

 

மீரா, சரி.. சரி.. ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க. நாளைக்கு ஷாப்பிங் போகலாம்.

 

தேங்க்யூ மாம் என்று மீராவை கட்டி அணைத்தவள்.

 

இன்னும் ஒன் வீக் தான் இருக்கு காலேஜ் ஓபன் பண்ண போறாங்க. அதுக்குள்ள எல்லாம் வாங்கிடனும். யாழினி நீயும் எங்க கூட வா.

 

நானா.. நான் எதுக்கு?.

 

மீரா, கல்யாணமானதிலிருந்து நம்மளும் எங்கேயும் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளயே தான இருக்கோம். எல்லாருமே சேர்ந்து போகலாம். நீயும் வா.

 

இவர்களின் பேச்சு வார்த்தையை கவனித்தபடி கீழே இறங்கி வந்த அபிமன்யு டைனிங் ஹாலில் வந்து அமர்ந்தான். இப்படி இவர்கள் பொதுவான விஷயங்களை பற்றி பேசும்பொழுது அபிமன்யு பெரும்பாலும் அவர்களுடன் இணைந்து கொள்ள மாட்டான்.

 

தனியே ஹாலில் அமர்ந்து விடுவான். இன்று அனைவருடனும் சேர்ந்து டைனிங் ஹாலில் அமர்ந்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

 

என்ன அபி, எதாவது வேணுமா?.

 

நத்திங் மாம். சும்மா தான் வந்தேன்.

 

மீரா சிரித்த முகமாக, சரிப்பா.

 

அபிமன்யு, ஆரணி உன்னோட காலேஜுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் எப்போ ஷாப்பிங் பண்ண போற.

 

நாளைக்கு போகலாம்னு அம்மா சொன்னாங்க அண்ணா.

 

நாளைக்கா... என்று சிந்தித்தவன், எனக்கு இம்போர்டண்ட் மீட்டிங் இருக்கு. சோ, டூ டேஸ் கழிச்சு போகலாம். நானும் வரேன்.

 

அபிமன்யு கூறியதை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியமாக அவனை பார்க்க.

 

ஆரியன், அண்ணா.. நிஜமா தான் சொல்றீங்களா. நாங்க ஷாப்பிங் போறோம்.

 

தெரியுமே. அதான் ஆரணி சொல்லிட்டாளே.

 

ஆரியன், ஷாப்பிங் எல்லாம் நீங்க பொதுவா வர மாட்டீங்களே... என்று இழுத்தப்படி யாழினியை பார்க்க.

 

யாழினி மனதிற்குள் என்னை ஏன்டா பார்க்குற லூசு என்று ஆரியனை திட்டினாள்.

 

எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியது இருக்கு.

 

ஆரியன், என்ன.. உங்களுக்கா..!.

 

ஏன்.. நான் எல்லாம் ஷாப்பிங் பண்ண கூடாதா.

 

அதுக்கு இல்லைண்ணா. எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் நம்ம எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஷாப்பிங் போனதே கிடையாது. அதான் கேட்டேன்.

 

எல்லாரும் ஒன்னா சேர்ந்து போறதா தானே இப்போ பிளான் பண்ணீங்க. அதான் சரி நம்மளும் போகலாம்னு தோணுச்சு.

 

மீரா, அவன் கடக்குறான் விடு அபி. ஏதாவது உளறிக்கிட்டே இருப்பான். நீயும் வா, எல்லாரும் சேர்ந்து போகலாம்.

 

ஓகே மாம்.

 

இரண்டு நாட்கள் எப்படி போனது என்று யாழினிக்கு தெரியவில்லை. அபிமன்யு பனிஷ்மென்ட் என்னும் பெயரில் யாழினியை சீண்டுவதும், அவனிடமிருந்து தப்பிப்பதுமே யாழினிக்கு பெரும்பாடாகி போக. இப்படியே இரண்டு நாட்கள் கடந்து விட்டது.

 

வள்ளியம்மை பாட்டி, நான் எதுக்குமா. நீங்க மட்டும் போயிட்டு வரக்கூடாதா.

 

ஆரணி, பாட்டி அண்ணா இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் நம்ம எல்லார் கூடவும் சேர்ந்து ஷாப்பிங் போறேன்னு சொல்லி இருக்காங்க. நீங்களும் வந்தா ஜாலியா இருக்கும்ல. ஃபேமிலியா போயிட்டு வரலாம்.

 

ஆமாம்மா, இப்போ நானும் தான் எதுவும் வாங்கப்போறதில்ல. சும்மா வாங்க போயிட்டு வரலாம்.

 

ஆரியன் யாழினியை பார்த்தவாரே, ஆமாம் பாட்டி. நீங்களும் கண்டிப்பா வரணும். நம்ம கூட எப்பயுமே வரமாட்டேன்னு சொல்ற அண்ணன், அவரே வரேன்னு ஒத்துக்கிட்டார். அவர் யாருக்காக என்ன ஷாப்பிங் பண்ண போறாருன்னு பார்க்கணும்ல என்று நக்கல் குரலில் கூற.

 

பாட்டி, சும்மா இருடா. அவளை கிண்டல் பண்றதே உனக்கு வேலையா போச்சு என்று அவன் தோளில் ஒரு அடி போட்டார்.

 

யாழினி, நல்லா சொல்லுங்க பாட்டி. எப்போ பார்த்தாலும் என்னை வெறுப்பேத்திக்கிட்டே இருக்கான்.

 

மீரா, சரி.. சரி.. அபிக்கு போன் பண்ணி எப்போ வரான்னு கேளு.

 

ஆரியன், அண்ணா டைரெக்டா ஷாப்க்கு வரேன்னு சொல்லிட்டாரு மாம்.

 

சரி, அப்போ நாம கிளம்பலாம்.

 

இவர்களின் கார் நேராக பெரிய மாலிற்கு சென்றது. யாழினிக்கு இதுவே முதல் முறை மால்லை பார்ப்பது. சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஆரியன் யாழினியிடம், என்ன அப்படி பார்க்குற?.

 

யாழினி தன் பார்வையை சற்றும் அகற்றாது கடைகளை வேடிக்கை பார்த்தவாறு, இது என்ன கடை. இவ்வளவு பெருசா இருக்கு.

 

ஆரியன், இது மால் யாழ். இதுக்கு முன்னாடி நீ பார்த்ததில்லையா என்று சந்தேகமாக கேட்டான்.

 

ஓ மால்லா.. இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் ஆரி. சூப்பரா இருக்குல, எவ்வளவு பெருசு.

 

ஆரணி, இங்க எல்லா ஷாப்ஸும் ஒரே இடத்தில் இருக்கும் யாழ். நம்ம ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியா போக வேண்டாம்.

 

யாழினி, அப்படியா.. என்றவள் அந்த இடத்தை சுற்றிப் பார்ப்பதிலே பிஸி ஆகிவிட்டாள்.

 

ஆரியன், ரொம்ப இதுக்கே எக்சைட் ஆகிடாத யாழ். உனக்கு இன்னும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.

 

யாழினி சட்டென திரும்பி, சர்ப்ரைஸா... என்னது? என்றாள் ஆர்வமாக.

 

அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது. கொஞ்ச நேரத்துல நீயே பார்ப்ப.

 

ஆரணி, ஏய்.. என்கிட்டயாவது சொல்லுடா.

 

அதெல்லாம் யார்கிட்டயும் சொல்ல முடியாது.

 

ஆரணி, அம்மா இங்க பாருங்க இவனை. ஏதோ சர்ப்ரைஸ்னு சொல்லிட்டு, என்னன்னே சொல்ல மாட்டேங்குறான் என்று மீராவிடம் சொல்ல.

 

ஆரியன், நடக்கும்போது நீங்களே பாருங்களேன். அதுக்குள்ள என்ன அவசரம். அப்புறம் எப்படி சர்ப்ரைஸ் மாதிரி இருக்கும்.

 

ஆரணி கோபமாக, போடா.. நீ சும்மா சொல்ற. நீ வா யாழ் என்று யாழினியின் கைகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

யாழினிக்காக கார்த்திருக்கும் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5