அவனதிகாரம் - 86
அதிகாரம் – 86 அபிமன்யு சென்ற பிறகு யாழினி அறைக்கு செல்வதற்காக கீழே இறங்கி வர. அவளை வழிமறித்து நின்றனர் ஸ்வேதா, ஆரணி, ஆரியன். யாழினி மனதிற்குள், “ ஐஐயோ...! இவங்கள மறந்துட்டோமே... எப்படி இவங்கள சமாளிச்சு ரூமுக்கு போறதுன்னு தெரியலயே ” என்று திருதிருவென விழித்தாள். ஆரியன், “ என்ன இப்படி முழிக்கிற... உன் முழியே சரியில்லையே.. ” என்றான் யாழினியைப் பார்த்து. ஸ்வேதா, “ என்கிட்ட என்ன சொன்ன. இந்த டு டேஸ் என்கூட ஸ்பென்ட் பண்றேன்னு சொல்லிட்டு, நீயும் அண்ணாவும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” என்று மாற்றி மாற்றி கேள்வி கேட்க. யாழினி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள். ஆரணி, “ என்ன யாழினி பதில் சொல்லாம இப்படி முழிக்கிற ” . யாழினி, “ என்ன பதில் சொல்றது. என்கிட்ட கேட்கிறதெல்லாம் போய் உங்க அண்ணன் கிட்ட கேளுங்க. எப்போ பார்த்தாலும் என்னையே நிக்க வச்சு கேள்வி கேட்க வேண்டியது ” . ஆரியன், “ என்ன.. அவர்கிட்ட நாங்க கேட்க மாட்டோம்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? எங்களுக்கு யாராயிருந்தாலும்...