அவனதிகாரம் - 86
அதிகாரம் – 86
அபிமன்யு
சென்ற பிறகு யாழினி அறைக்கு செல்வதற்காக கீழே இறங்கி வர. அவளை வழிமறித்து நின்றனர்
ஸ்வேதா, ஆரணி, ஆரியன்.
யாழினி
மனதிற்குள், “ஐஐயோ...! இவங்கள மறந்துட்டோமே...
எப்படி இவங்கள சமாளிச்சு ரூமுக்கு போறதுன்னு தெரியலயே” என்று திருதிருவென விழித்தாள்.
ஆரியன்,
“என்ன இப்படி முழிக்கிற... உன்
முழியே சரியில்லையே..” என்றான் யாழினியைப் பார்த்து.
ஸ்வேதா,
“என்கிட்ட என்ன சொன்ன. இந்த டு
டேஸ் என்கூட ஸ்பென்ட் பண்றேன்னு சொல்லிட்டு, நீயும் அண்ணாவும் என்ன பண்ணிட்டு
இருக்கீங்க” என்று மாற்றி மாற்றி கேள்வி
கேட்க.
யாழினி
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள்.
ஆரணி, “என்ன யாழினி பதில் சொல்லாம இப்படி
முழிக்கிற”.
யாழினி,
“என்ன பதில் சொல்றது. என்கிட்ட
கேட்கிறதெல்லாம் போய் உங்க அண்ணன் கிட்ட கேளுங்க. எப்போ பார்த்தாலும் என்னையே நிக்க
வச்சு கேள்வி கேட்க வேண்டியது”.
ஆரியன்,
“என்ன.. அவர்கிட்ட நாங்க கேட்க
மாட்டோம்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? எங்களுக்கு யாராயிருந்தாலும் ஒன்னு தான்.
எங்களுக்கு நீதி, நியாயம், நேர்மை தான் முக்கியம்” என்றான் கெத்தாக.
“ஐயா சாமி! நேர்மையை காப்பாத்த நீ
தான் பிறந்து வந்திருக்க போதுமா. எனக்கு கொஞ்சம் வழிய விடுங்க. எனக்கு அவசரமான
வேலை ஒன்னு இருக்கு”.
ஸ்வேதா,
“அப்படி என்ன அவசரமான வேலை. நீ
என்கூட டைம் ஸ்பென்ட் பண்றேன்னு தான சொல்லி இருக்க”.
“உன் கூட தான் டி டைம் ஸ்பென்ட்
பண்ண போறேன். ஒரு டூ மினிட்ஸ், இதோ உடனே வந்துடுறேன்” என்று அவர்களின் கையில் சிக்காமல் பறந்து விட்டாள்.
×××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××
அறைக்
கதவை திறந்து கொண்டு யாழினி உள்ளே செல்கையில், வெற்று அறையே அவளை வரவேற்றது.
சுற்றி முற்றி அபிமன்யுவை தேடிக் கொண்டிருக்கையிலேயே பின்புறம் கதவை தாழிடும் ஓசை
கேட்டு சட்டென்று திரும்பினாள் யாழினி.
அபிமன்யு
தான் கதவை தாழிட்டு விட்டு தன் ஒற்றைக் காலை கதவின் மீது ஊனியபடி, தன் கைகளை
கட்டிக்கொண்டு யாழினியை குறுகுறுவென பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.
அவனின்
பார்வையே யாழினியின் கன்னங்கள் சிவக்க போதுமானதாக இருந்தது. யாழினிக்கு
வார்த்தைகளே எழவில்லை, பேசாமல் நின்று இருந்தாள்.
அவளை
நோக்கி ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து யாழினியின் அருகில் வந்த அபிமன்யு. அவளின்
உயரத்திற்கு ஏற்ப குனிந்து காதுகளில் கிசுகிசுப்பாக, “விட்ட இடத்தில இருந்து தொடங்கலாமா” என்றான்.
அபிமன்யுவின்
மூச்சுக்காற்று கொடுத்த குறுகுறுப்பில் யாழினிக்கு மேனி சிலிர்த்து அடங்கியது.
அபிமன்யுவை நிமிர்ந்து பார்த்தவள் புரியாத பார்வை பார்க்க.
அபிமன்யு
யாழினியின் கையை பிடித்து ஒரு சுழற்று சுழற்றி அவளின் பின்பக்கமாக அணைத்தபடி, “உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்றான் அதே கிசுகிசுப்போடு.
யாழினிக்கு
அபிமன்யுவின் வார்த்தைகள் எதுவுமே அவளின் செவி மடலை சென்றடையவில்லை. இப்படி நின்று
கொண்டு பேசினால் எப்படி கேட்கும்..
“என்னனு கேட்க மாட்டியா?”.
யாழினிக்கு
அபிமன்யுவின் நெருக்கம் தந்த பதட்டத்திலும், அவனின் மூச்சுக்காற்று தன் செவி மடலை
தீண்டுவதில் ஏற்படும் குறுகுறுப்பிலும், தொண்டை வறண்டு போனது போல் ஆகிவிட்டது.
வார்த்தைகளே எழவில்லை.
ஒவ்வொரு
எழுத்தாக கூட்டி, “என்ன..?” என்று கேட்பதற்குள்ளாகவே தன் மொத்த சக்தியும் வடிந்தது போல்
ஆகிவிட்டது யாழினிக்கு.
“உனக்கு என்கிட்ட ஏதாவது
கேட்கணுமா?”.
எதற்குமே
யாழினியிடம் பதில் இல்லை. அவளின் நிலையை உணர்ந்தவன், அவளுக்கு சற்று ஆசுவாசமடைய
நேரம் கொடுப்பதற்காக அவளை விட்டு விலகினான்.
அவளின்
கையைப் பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமர செய்தவன். தானும் அவளுடன்
அமர்ந்தபடி யாழினியின் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
“இப்போ சொல்லு, உனக்கு என்கிட்ட
ஏதாவது கேட்கணுமா..?”.
யாழினி ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.
“உனக்கு நான் பண்ணது தப்புனு
தோணுதா?”.
யாழினிக்கு
அபிமன்யுவின் பேச்சில் ஒன்றும் புரியவில்லை. இப்படி என்ன விஷயம், ஏது என்று
தெளிவாக கூறாமல் கேள்வி கேட்டால் என்ன பதில் கூறுவது.
“நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு
ஒன்னும் புரியல” என்றாள் குழப்பமாக அபிமன்யுவை
பார்த்தபடி.
மேலும்,
‘திரும்ப ஏதேனும் வில்லங்கம்
செய்து விட்டானோ’ என்ற யோசனையும் ஒரு பக்கம்
ஓடியது.
“இல்ல, உங்க அக்காவை கல்யாணம் பண்ண
பிளான் பண்ணிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனே அதை பத்தி கேட்கிறேன்”.
“என்ன இவ்வளவு நாள் கழிச்சு இப்போ
போய் கேட்குறீங்க”.
“ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா
கண்டிப்பா உனக்கு என்னை பிடிக்கலைனு தான சொல்லி இருப்ப.. அதான் இப்போ கேட்கிறேன்.
உனக்கு என்னை பிடிக்கும் தான..?” என்றான் எதிர்பார்ப்போடு, ‘எங்கே யாழினி பிடிக்காது’ என்று கூறிவிடுவாளோ என்ற பதட்டம்
அபிமன்யுவிற்குள்.
இப்படி
பதட்டமாக அபிமன்யு இருந்ததே கிடையாது. இது அவனுக்கே புதிதாக தான் இருந்தது.
யாழினி
குழப்பமாக அபிமன்யுவை பார்த்தபடி, “ஏன்
திடீர்னு இப்படி எல்லாம் பேசுறீங்க”.
“நான் கேட்டதுக்கு மட்டும் பதில்
சொல்லு”.
“இப்போ வேணும்னா எனக்கு உங்கள
பிடிச்சிருக்கலாம். ஆனா, ஆரம்பத்துல நீங்க பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான். உங்களால
எங்க அக்கா ரொம்ப வருத்தப்பட்டிருக்கா”.
“நான் ஒன்னும் உங்க அக்காவ காதலிச்சு
ஏமாத்தலையே. அவங்க வேற ஒருத்தர காதலிக்கிறாங்கனு தெரிஞ்ச பிறகு தான் அவங்களோட நான்
மேரேஜ் பிக்ஸ் பண்ணவே ஒத்துக்கிட்டேன். எப்படியும் அவங்களே இந்த மேரேஜை ஸ்டாப்
பண்ணிடுவாங்கனு எனக்கு தெரியும். எனக்கு நீ வேணும். உன்னை கல்யாணம் பண்றதுக்கு
எனக்கு ஒரு சான்ஸ் வேணும். வேற என்ன பண்ணி நான் உன்னை கல்யாணம் செஞ்சிருக்க
முடியும்”.
“சரி, இப்போ முடிஞ்சதை பத்தி பேசி
என்ன ஆகப்போகுது. இதெல்லாம் தான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே. இப்போ ஏன் திடீர்னு
கேட்குறீங்க”.
“நீ உங்க அக்கா கிட்ட பேசுனதை நான்
கேட்டேன்”.
“இல்ல.. அது வந்து..” என்று எதுவோ கூற வாய் எடுக்க அவளின்
வாயின் மீது தன் ஒற்றை விரலை வைத்து அவளை பேசாதே என்பது போல் தலையசைத்தவன், “ஐ அம் சாரி” என்றான், தன் தவறை முழுதாக உணர்ந்து.
அவசரமாக
தன் வாயின் மேலிருந்த அபிமன்யுவின் விரலை விளக்கியவள், “நீங்க ஏங்க சாரி சொல்றீங்க”.
“நான் என்னுடைய லவ்வை பத்தி
மட்டும் தான் யோசிச்சேன். உன்ன இந்த வீட்ல இருந்து கூப்பிட்டுகிட்டு போகணும்னு
நினைச்சேனே தவிர, உன்னுடைய மனசை பத்தி நான் யோசிக்கல. இங்க இருந்து வந்துட்டா நீ
அங்க என் கூட சந்தோஷமா இருப்பனு நான் நினைச்சேன்.
ஆனா,
அதுக்கு நான் யூஸ் பண்ண வழி தான் தப்பா ஆயிடுச்சு. உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்க
நான் தயாராகி இருக்கக் கூடாது. அதனால தான உன்னோட மனசுல நான் உன்னோட அக்காவுக்கு
கணவரா வரப் போறவர்ன்ற எண்ணம் வந்துச்சு. நீ இதைப்பத்தி சொல்லும் போது தான் உன்னோட
மனசு எவ்வளவு வேதனை பட்டு இருக்கும்னு நானே உணர்ந்தேன். ஐ அம் சாரி” என்றான் யாழினியின் கைகளை பிடித்துக்
கொண்டு.
இதற்கு
என்ன பதில் கூற முடியும். என்ன பதில் கூறுவது..
ஆரம்ப
காலத்தில் அபிமன்யு செய்தது தவறாக இருந்தாலும், இப்படி மன்னிப்பு வேண்டுபவனிடம்
என்ன கூற முடியும்.
“சரி விடுங்க. பழச பத்தி பேசி என்ன
ஆகப்போகுது”.
“நான் உன்ன நிறைய ஹர்ட் பண்ணி
இருக்கேன் யாழினி. பட், இனிமே அப்படி எதுவும் நடக்காம நான் பார்த்துப்பேன். ஐ
ப்ரொமஸ் யு” என்று கூறி முடிக்கவும்.
படபடவென
கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.
யாழினி,
“யாரோ கதவு தட்டுறாங்க. நான் போய்
பார்த்துட்டு வரேன்” என்று விட்டு வந்து கதவை திறக்க.
அதே
மூவரும் தான் இங்கே நின்று இருந்தனர்.
ஆரியன்,
“இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு
இருக்க” என்று கூறியவன்.
யாழினியின்
பின்னே அபிமன்யு வந்து நிற்பதை பார்த்ததும் வாயை மூடிக்கொண்டான்.
ஸ்வேதா,
“அண்ணா இங்க பாருங்க. யாழினி டு
டேஸ் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ண போறதா சொல்லி இருக்கா. அதனால, எங்கள கொஞ்சம்
ஃப்ரீயா விடுங்க” என்று கூறிவிட்டு யாழினியின்
கையைப் பிடித்து அழைத்து செல்ல முற்பட்டாள்.
ஆனால்,
யாழினி ஸ்வேதாவுடன் செல்லாமல் அபிமன்யுவை திரும்பிப் பார்க்க.
ஆரியன்,
“என்ன.. அதான் அண்ணனே ஒன்னும்
சொல்லாம நிக்கிறார்ல. அவர் சும்மா இருந்தாலும், நீ சும்மா இருக்க மாட்ட போலருக்கு.
போ... போய் பட்டம் விடுற வேலையை பாரு”.
அபிமன்யு,
“என்ன ஆரி, உன்னோட அண்ணி கிட்ட
இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா?”.
அபிமன்யுவின்
கேள்வியில் ஆரியன் அதிர்ச்சியாக, “அண்ணியா..?”.
“ஆமா.. யாழினி உனக்கு அண்ணி தான.
இனிமே, அவள நீ அண்ணினு தான் கூப்பிடனும். இப்படி மரியாதை இல்லாம பேசக்கூடாது” என்றான் ஆர்டர் போல்.
“அண்ணா அதெல்லாம் என்னால முடியாது.
இவ என்னை விட சின்ன பொண்ணு தான, நான் இவள மரியாதையா கூப்பிடணுமா... அவளே என்னை
பெயர் சொல்லி தான் கூப்பிடுறா... அவ கிட்ட சொல்லுங்க, நான் அவள விட பெரிய பையன்.
இனிமே என்னை பெயர் சொல்லி கூப்பிடக்கூடாதுனு சொல்லுங்க”.
“நீ இப்படி ஏதாவது பண்ணுவனு தான்
நான் உன்ன இங்க வர வேண்டாம்னு சொன்னேன். ஒழுங்கா ஊரிலேயே இருந்து கம்பெனி பொறுப்பை
பார்த்திருக்கலாம். இங்க வந்து சின்ன பசங்க மாதிரி பட்டம் விட்டுக்கிட்டு இருக்க”.
ஆரியன்
அழுது விடும் குரலில், “அண்ணா, நீங்க பண்றது எல்லாம்
கொஞ்சம் கூட நியாயமே இல்ல. உங்க பொண்டாட்டிக்கு கல்யாணம் ஆயிடுச்சு அவளே பட்டம்
விடுறா. நான் வயசு பையன், நான் விட கூடாதா”.
“கல்யாணம் ஆனாலும் யாழினி குழந்தை
மாதிரி, அவ என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஆனா, நீ அப்படி கிடையாது. ஏழு கழுதை
வயசாகுது. கொஞ்சமாவது மெச்சூர்டா நடந்துக்க ட்ரை பண்ணு ஆரியன்” என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே
அபிமன்யுவின் செல்போன் இசைத்தது.
அதை
எடுத்து பார்த்தவன், “ஒரு இம்பார்டன்ட் கால் உன்கிட்ட
நான் அப்புறம் பேசுறேன்” என்று விட்டு அறையினுள் சென்று
விட்டான்.
“அப்பாடா போயிட்டார். சீக்கிரம்
இவள கூப்பிட்டுகிட்டு வாங்க. நாம கிளம்புவோம்” என்று விட்டு முன்னே நடக்க, மற்றவர்கள் பின்னே சென்றனர்.
×××××××××××××××××××××××××××××××××××××
பிறகு,
இரண்டு நாட்கள் நால்வரும் சேர்ந்து நன்றாக ஆட்டம் போட்டனர். யாருக்கும்
அடங்கவில்லை... யாரின் பேச்சையும் கேட்கவில்லை... அபிமன்யுவும் எதுவும் கண்டு
கொள்ளாமல் விட்டு விட்டான்.
யாழினி,
ஸ்வேதாவிடம் கூறியது போல் அந்த இரண்டு நாட்களும் நன்றாக ஊர் சுற்றினர். இரண்டு
நாள் கழித்து ஸ்வேதா கிளம்புகையில் அவளை அழைத்து செல்வதற்காக ஸ்வேதாவின் கணவர்
யாழினியின் வீட்டிற்கு வந்திருந்தார்.
வாசலிலேயே
அவரை கண்ட யாழினி, “வாங்க அண்ணா” என்று வரவேற்றாள்.
சந்துரு
பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டும் அளித்தார் சிறு தலையசைப்புடன்.
யாழினி
தயக்கத்துடன், “அண்ணா, நான் உங்ககிட்ட ஒன்று
கேட்கலாமா?”.
சந்துரு
‘என்ன’ என்பது போல் பார்க்க.
“நீங்க ஸ்வேதாவை எதுக்காக கல்யாணம்
பண்ணிக்கிட்டீங்க?”.
“எதுவாயிருந்தாலும் நேரடியாவே
கேளுங்க. நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு புரியல”.
“பெத்தவங்க முக்கியம் தான். அதே
மாதிரி நம்மள நம்பி கல்யாணம் பண்ணி வந்தவங்களும் முக்கியம் தான. என்ன சொல்ல
வரேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நான் ஏதாவது அதிகப்படியா
பேசி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க அண்ணா. நானும், ஸ்வேதாவும் சின்ன வயசுலருந்து
ஒன்னா தான் இருப்போம். அதனால அவ கஷ்டமா ஒரு விஷயத்த சொல்லும் பொழுது எனக்கும்
ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் உங்ககிட்ட பேசுறேன்”.
சந்துரு
யாழினி கூறியதை கேட்டு சாதாரமாக, “பரவாயில்ல
இருக்கட்டும். நான் எதுவும் தப்பா நினைக்கல. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பொண்ணோட
வாழ்க்கை மட்டும் மாறுறது கிடையாது. பையனுடைய வாழ்க்கையும் தான் ரொம்பவே மாறுது.
ஒரு பக்கம் பொண்டாட்டியையும் நல்ல படியா எந்த குறையும் இல்லாம பார்த்துக்கணும்.
இன்னொரு
பக்கம் அம்மாவையும் எந்த குறையும் வராம பார்த்துக்கனும். பொண்டாட்டிக்கு ஆதரவா
பேசுனா.. அம்மா பொண்டாட்டி பக்கம் சாய்ஞ்சுட்டான்னு சொல்லுவாங்க. அதே அம்மாவுக்கு
சாதகமாக பேசினா... மனைவி, கணவன் அம்மா பேச்சை கேட்கிறார்னு சொல்லுவாங்க.
இரண்டுக்கும் நடுவுல மாட்டிகிட்டு நாங்க தான் முழிக்க வேண்டியதா இருக்கு” என்றார் வருத்தமாக.
சந்துருவின்
வார்த்தைகளில் இருந்து யாழினிக்கு ஸ்வேதா கூறியது தவறான புரிதலினாலோ என்று
தோன்றியது.
“ஸ்வேதா உங்க கிட்ட நான் என்னுடைய
அம்மா பேச்சை கேட்கிறேன்னு சொல்லி இருக்கா போல. அதனால தான் நீங்க என்கிட்ட இப்படி
கேட்குறீங்க”.
யாழினி
என்ன கூறுவது என்று தடுமாற.
“பரவாயில்ல மா. நான் எதுவும் தப்பா
எடுத்துக்கல. உங்க வீட்டு பொண்ணு மேல இருக்க அக்கறையில் தான நீங்க கேட்குறீங்க.
நான் எங்க அம்மா மேல ரொம்ப அன்பு வச்சிருக்கேன் தான். ஏன்னா, எனக்கு அப்பா
கிடையாது, அம்மா மட்டும் தான்.
என்னை
சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. இப்போ, கல்யாணம் ஆனதும்
அவங்களுடைய எதிர்பார்ப்பு, எங்க பையன் நம்ம கையை விட்டு போயிடுவானோ... பொண்டாட்டி
பேச்சை கேட்டு நம்மள தனியா விட்டு விடுவானோ... நாம தனியா ஆயிடுவோமோன்ற பயம்
அவங்களுக்குள்ள இருக்கு.
எனக்கு
புரியுது ஸ்வேதா உடைய நிலைமை. இருந்தாலும், எங்க அம்மாவுக்கு நான் எப்பவும் போல
தான் இருக்கேன்னு புரிய வச்சிட்டா. அதுக்கு அப்புறம் அவங்க எங்க விஷயத்துல தலையிட
மாட்டாங்க. இதெல்லாம் ஆரம்பத்திலேயே சரி பண்ணணும்னு நினைச்சு தான் நான் எங்க
அம்மாவுக்கு சப்போட்டா பேசினேன். அதுக்காக ஸ்வேதா மேல அன்பும், அக்கறையும் இல்லைனு
அர்த்தம் கிடையாது. என்னை நம்பி கல்யாணம் பண்ணி வந்தவள நான் எப்படி விட்டுடுவேன்”.
“அண்ணா நான் இப்போ உங்ககிட்ட
பேசினது எதுவும் ஸ்வேதாவுக்கு தெரியாது. அவகிட்ட நீங்க எதுவும் கேட்காதீங்க”.
“நான் எதுவும் கேட்க மாட்டேன்.
அவளுக்காக நீங்க இவ்வளவு தூரம் கேட்டதே, எனக்கு ரொம்ப சந்தோஷமா தான் இருக்கு.
நீங்க கவலைப்படாதீங்க... இரண்டு பேரையுமே எந்த குறையும் வராம பார்த்துக்க தான்
நான் ட்ரை பண்றேன்” என்றார் இன்முகமாக.
திருமணத்திற்கு
பிறகு பெண்களின் வாழ்க்கையே மாறிவிடும்...!
அதே
போல் தான், ஆண்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது...!
ஒரு
பக்கம் தன்னை ஈன்றெடுத்த தாய்...
மற்றொரு
பக்கம், தன்னை நம்பி வந்த மனைவி....
என இரு
பக்கமும் அல்லாடும் நிலைமை தான் அவர்களுக்கும்...!
கருத்துகள்
கருத்துரையிடுக