அவனதிகாரம் - 97
அதிகாரம் – 97 யாழினியின் நண்பர்கள் எதுவோ பிரச்சனை என்று எண்ணியவர்கள், “ யாழினி நாங்க அப்போ கிளம்புறோம். நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம் ” என்று கூறி விட்டு வெளியேற எத்தனிக்க. அபிமன்யு, “ ஒரு நிமிஷம், எல்லாருக்கும் கீழ டின்னர்க்கு ரெடி பண்ணி இருக்கோம். சாப்பிட்டு போங்க.. ஆரியன், அவங்கள கூப்பிட்டு போய் பார்த்துக்கோ ” என்று ஆரியனையும் அவர்களுடன் அனுப்பி வைத்தான். ஆரியன் ‘ சரி ’ என்று தலையசைத்தவன், அவர்களை அழைத்துக் கொண்டு கீழே செல்ல. வள்ளியம்மை பாட்டி கலங்கிய கண்களுடன், “ ஏங்க.. ஏங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. நம்ம பேத்திக்கு தானங்க பிறந்தநாள். உங்களுக்கு பிடிச்ச பேரனுடைய பொண்டாட்டி வேற. ஏன் இப்படி அவளோட மனசை நோகடிக்கிற மாதிரி நடந்துக்குறீங்க ” . “ பேத்தியா.. யாருக்கு யாரு டி பேத்தி.. இவ எனக்கு பேத்தியா? ” . இவரின் பேச்சில் சுப்பிரமணிக்கு கோபம் எழ. விசாலாட்சிக்கு குதூகலமாக இருந்தது. இவ்வளவு நேரம் தான் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் தன் மனதை குளிர வைக்கிறார் என்று நடப்பவற்றை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொ...