அவனதிகாரம் - 70
அதிகாரம் – 70 அன்றே மீரா யாழினியிடம் ஆரணியின் அறையில் தங்கிக் கொள்ளும் படி கூறினார். “ ஏன் அத்தை என்ன ஆச்சு. நான் எதுக்கு ஆரணி அறையில் தங்கனும்? ” . “ எல்லாம் உன்னுடைய நல்லதுக்காக தான் யாழினி பண்றேன் ” . யாழினிக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. ‘என்னை எங்க வீட்டுக்கு அனுப்ப போறதா சொன்னாங்க. ஆனா, இப்போ ஆரணி ரூம்ல தங்க சொல்றாங்க. என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலையே. ஒருவேளை அத்தை மனசு மாறிட்டாங்களோ. அப்புறம் ஏன் என்னை ஆரணி ரூம்ல தங்க சொல்றாங்க. ஒருவேளை, அந்த ஹிட்லர் என்னை அவர் ரூம்ல தங்க வைக்க கூடாதுனு அத்தை கிட்ட சொல்லி இருப்பாரோ? என்னை அடிச்சதுக்கு ஒரு சாரி கூட கேட்கல அவர். அத்தை சொல்ற மாதிரி இனிமே நான் ஆரணி கூடவே தங்கிக்குறேன் ’ என்று பலவாறு சிந்தித்த படி ஆரணியின் அறைக்கு சென்று விட்டாள். ஆரணி, “ ஹே யாழ், என்ன இந்த நேரத்துல இங்க வந்து இருக்க? ” . “ அதுவா.. இனிமே நானும் உன் கூட தான் தங்க போறேன் ” . யாழினி கூறியதைக் கேட்டு சற்று அதிர்ச்சியான ஆரணி எதையோ மறைத்தபடி, “ என்ன திடீர்னு.. முன்னாடி...