அவனதிகாரம் - 70
அதிகாரம் – 70
அன்றே
மீரா யாழினியிடம் ஆரணியின் அறையில் தங்கிக் கொள்ளும் படி கூறினார்.
“ஏன் அத்தை என்ன ஆச்சு. நான்
எதுக்கு ஆரணி அறையில் தங்கனும்?”.
“எல்லாம் உன்னுடைய நல்லதுக்காக
தான் யாழினி பண்றேன்”.
யாழினிக்கு
என்ன கூறுவது என்று தெரியவில்லை. ‘என்னை எங்க வீட்டுக்கு அனுப்ப போறதா சொன்னாங்க.
ஆனா, இப்போ ஆரணி ரூம்ல தங்க சொல்றாங்க. என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலையே.
ஒருவேளை அத்தை மனசு மாறிட்டாங்களோ.
அப்புறம்
ஏன் என்னை ஆரணி ரூம்ல தங்க சொல்றாங்க. ஒருவேளை, அந்த ஹிட்லர் என்னை அவர் ரூம்ல
தங்க வைக்க கூடாதுனு அத்தை கிட்ட சொல்லி இருப்பாரோ? என்னை அடிச்சதுக்கு ஒரு சாரி
கூட கேட்கல அவர். அத்தை சொல்ற மாதிரி இனிமே நான் ஆரணி கூடவே தங்கிக்குறேன்’ என்று பலவாறு சிந்தித்த படி ஆரணியின்
அறைக்கு சென்று விட்டாள்.
ஆரணி, “ஹே யாழ், என்ன இந்த நேரத்துல இங்க வந்து
இருக்க?”.
“அதுவா.. இனிமே நானும் உன் கூட
தான் தங்க போறேன்”.
யாழினி
கூறியதைக் கேட்டு சற்று அதிர்ச்சியான ஆரணி எதையோ மறைத்தபடி, “என்ன திடீர்னு.. முன்னாடியே என்கிட்ட
சொல்லி இருந்தா நான் ரூமை ரெடி பண்ணி இருப்பேன்ல”.
யாழினி
சுற்றும் முற்றும் ரூமை தன் பார்வையால் அலசியவள், “இதுல ரெடி பண்ண என்ன இருக்கு ஆரணி. ரூம் நல்லா தானே இருக்கு”.
“இருந்தாலும், நீயும் என் கூட ஷேர்
பண்ணிக்க போறேன்னு சொல்லி இருந்தா ரூமை கிளீன் பண்ண சொல்லி இருப்பேன்”.
“பரவாயில்ல விடு...” என்று கூறிக் கொண்டே கப்போர்டை திறக்க
சொல்ல.
ஆரணி
பதட்டமாக, “யாழினி என்ன.. என்ன வேணும்?” என்றாள் அவளை திசை திருப்பும் படி.
“ஒன்னும் இல்ல, என்னோட திங்க்ஸ்
எல்லாம் இந்த கபோர்டுல வைக்கலாம்னு பார்த்தேன்” என்றாள் ஆரணியை சந்தேகப் பார்வை பார்த்தபடி.
ஆரணி
சமாளிப்பாக, “ஓ! அப்படியா.. அந்த கபோர்டுல
என்னோட திங்க்ஸ் எல்லாம் இருக்கு. நீ இந்த கப்போர்ட்ல வச்சுக்கோ” என்று வேறொரு இடத்தை காட்ட “சரி” என்று அதிலேயே வைத்துக் கொண்டாள்.
“இங்க நான் தங்குறது உனக்கு
பிடிக்கலையா?”.
“ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம்
எதுவும் இல்ல. ஏன் இப்படி எல்லாம் பேசுற?”.
“இல்ல, நான் இங்க தங்க போறேன்னு
சொன்னதும் உன்னுடைய முகமே சரியில்லையே அதான் கேட்டேன்”.
“என்னோட ரூம்ல தேவையில்லாத திங்ஸ்
நிறைய இருக்கும். நீ தங்குறனு முன்னாடியே சொல்லி இருந்தா, அதை எல்லாம் தூக்கிப்
போட்டு ரூமை கிளீன் பண்ணி இருப்பேன். அதுக்கு தான் கேட்டேன் வேற ஒன்னும் இல்ல. நீ
எதுவும் நினைச்சுக்காத”.
“சரி சரி விடு” என்று ஆரணி கூறியதை உண்மை என்று
நம்பிவிட்டாள்.
“சரி வா. நம்ம போய் சாப்பிட்டு
வந்துடலாம்”.
‘சரி’ என்று யாழினி முன்னே நடக்க. தன் கபோர்டை திறந்து சில
பொருட்களை எடுத்து வேறு இடத்தில் மறைவாக மறைத்து வைத்தாள் ஆரணி.
பிறகு,
உணவு உண்ணும் வேளையில் யாழினி அபிமன்யுவை தன் கண்களால் தேட.
வள்ளியம்மை
பாட்டி, “இப்போ எதுக்கு மீரா யாழினியை ஆரணி
ரூம்ல தங்க வைக்கிற?”.
“அவளுடைய படிப்பு முடிகிற
வரைக்கும் அவ ஆரணி ரூம்லயே தங்கட்டும் மா. அதான் சரியா இருக்கும்”.
“அதான் கேட்கிறேன்.. ஏன் திடீர்னு
இப்படி முடிவு பண்ணி இருக்க? அபி என்ன சொன்னான்?”.
மீரா
சாப்பிட்டுக் கொண்டே யாழினியை பார்த்தபடி, “அபி கிட்ட நான் சொல்லிட்டேன் மா. அவனும் சரினு சொல்லிட்டான்.
நாளையிலிருந்து காலேஜ் ஆரம்பிக்க போகுது. அவளுடைய கவனம் படிப்புல மட்டும் தான்
இருக்கணும். அப்போ தான் நல்லா படிக்க முடியும். அதுக்காக தான் இப்படி பண்ணேன் வேற
ஒன்னும் இல்ல”.
வள்ளியம்மை,
“சரி மா” என அனைவரும் உணவருந்தி முடித்தனர்.
மறுநாள்
காலைப் பொழுது ஆரணிக்கும், யாழினிக்கும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருந்தது.
அதிலும்,
யாழினிக்கு சொல்லவே தேவை இல்லை. விருப்பம் இல்லாமல் கிளம்பினாலும், எப்படி இந்த
புதிய சூழலை எதிர்கொள்வது என்ற பதட்டமும், படபடப்புமாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.
ஆரியன்,
“எதுக்கு இப்போ நீங்க ரெண்டு
பேரும் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?”.
ஆரணி, “டென்ஷனா..! அதெல்லாம் ஒன்னும் இல்ல. புது
காலேஜ் எப்படி இருக்குமோனு கொஞ்சம் நர்வசா இருக்கு. அவ்வளவு தான்”.
“ஆனா நம்ம அண்ணியார் முகத்தை
பார்த்தா அப்படி தெரியலையே” என்றான் யாழினியைப் பார்த்து
சிரித்தபடி.
யாழினி
எதுவும் பதில் கூறவில்லை அமைதியாக தன் தட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
மீரா, “ரொம்ப நேரமா தட்டுல கையை வச்சு
பிசைஞ்சுக்கிட்டே இருக்கியே சாப்பிடு”.
யாழினி,
“ஆங்..” என்று விட்டு மீண்டும் சாப்பிடாமல் தட்டையே பார்த்தபடி
அமர்ந்திருந்தாள்.
ஆரியன்,
“என்ன யாழினி ஏன் ஒரு மாதிரி
இருக்க?”.
“ஒன்னும் இல்ல”.
பிறகு
இருவரும் தயாராகி காலேஜிற்கு கிளம்ப.
யாழினியின்
முகம் தெளிவடையாமல் இருப்பதை பார்த்து மீரா, “நீ பயப்படுற மாதிரி எதுவுமே இருக்காது. நீ வேணும்னா பாரு
ஈவினிங் வந்து ஜாலியா இருந்துச்சுனு சொல்ல போற”.
ஆரணி, “நீ பயப்படுற அளவுக்கு அங்க ஒண்ணுமே
இருக்காது யாழ். நம்ம படிக்க தானே போறோம். நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற ஃப்ரீயா வா”.
‘சரி’ என்று தலையசைத்து விட்டு அனைவரிடமும் விடைபெற்றபடி இருவரும்
வெளியே செல்ல.
அபிமன்யு,
“மாம் நான் இவங்களை காலேஜ்ல டிராப்
பண்ணட்டுமா” என்றான் பின்னிருந்த படி.
மீரா, “உனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆகிடுமே அபி”.
“நோ ப்ராப்ளம் மாம். நான்
பார்த்துக்குறேன்”.
“ஓகே. நீயே அப்போ டிராப் பண்ணிடு”.
பிறகு,
ஆரணி பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள. அபிமன்யு யாழினிக்காக முன்பக்க கதவை திறந்து
விட்டபடி டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.
யாழினி
முன்னிருக்கையில் ஏறும்போதே ஆரியன் ஓடிவந்து ஆரணியின் அருகில் அமர்ந்தபடி, “அண்ணா என்னையும் டிராப் பண்ணிடுங்க” என்றான்.
அபி
எதுவும் கூறாமல் வண்டியை எடுத்து விட்டான்.
பிறகு,
ஆரணியிடம் ஆரியன், “பார்த்தியா ஆரணி, என்னைக்காவது
அண்ணா என்னை காலேஜ்லையோ இல்ல, உன்னை ஸ்கூல்லையோ டிராப் பண்றேன்னு சொல்லி
இருக்காரா. இன்னைக்கு இந்த மேடம் காலேஜுக்கு போறாங்கனு நம்மையும் சேர்த்து டிராப்
பண்றாரு”.
அபிமன்யு,
யாழினி இருவருக்கும் இடையில் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. ஆனாலும், அவ்வப்பொழுது
யாழினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி கார் ஓட்டிக் கொண்டிருந்தான். பிறகு, கல்லூரி
வளாகத்தை அடைந்ததும் ஆரணி இறங்க.
அபிமன்யு,
“ஆல் த பெஸ்ட் ஆரணி”.
ஆரணி
சிரித்த முகமாக, “தேங்க்ஸ் அண்ணா” என்றபடி இறங்கி முன்னே நடந்தாள்.
அபிமன்யு
ஆரியனிடம், “என்ன உட்கார்ந்துட்டே இருக்க
இறங்கு”.
“அண்ணா என்னோட காலேஜ் நெக்ஸ்ட்
ஸ்டாப்பிங்ல தான இருக்கு”.
“நான் காரை திரும்ப போறேன்.
வேணும்னா இங்கேயே இறங்கு. இல்லைனா என் ஆபீஸ்க்கு போய் தான் கார் நிக்கும்” என்றான் கராராக.
“இதுக்கு நான் என் பைக்லையே வந்து
இருக்கலாம்” என்று புலம்பியபடி இறங்கி சென்று
விட்டான்.
பிறகு,
யாழினி கதவை திறக்கும் முன்பு அவளின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து
அணைத்தவன்.
அவளின்
முதுகில் தேய்த்து விட்டவாறு, “ரிலேக்ஸ் பேபி டால். டோன்ட் வொரி,
நீ இப்படி பயப்படுற அளவுக்கு அங்க ஒன்னும் நடக்க போறது இல்ல. சோ, பி கூல் ஓகே” என்றபடி அவளிடமிருந்து விலகினான்.
அபிமன்யுவின்
ஆறுதலான வார்த்தை யாழினிக்குள் சிறிது தெம்பை கொடுக்க தலையசைத்தபடி கீழே இறங்கி
சென்று விட்டாள்.
பிறகு,
ஆரணியும், யாழினியும் ஒன்றாக கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் பொழுதே மூன்று
பேருடைய ஒரு கும்பல் சொடக்கிட்டு அவர்களை அழைக்க.
திரும்பி
பார்த்த யாழினி ஆரணியின் கையை பிடித்தபடி, “ஆரணி ரேகிங் எல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க. இவங்க ஏன்
நம்மளை கூப்பிடுறாங்க”.
ஆரணி, “அதுக்கு எதுக்கு நீ பயப்படுற. போய் என்னனு
கேட்டா தானே தெரியும். ஏதாவது கேட்டா அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு
கிளம்பிடுவோம்”.
பிறகு,
இருவரும் அவர்களை நோக்கி செல்ல.
கூட்டத்தில்
ஒருவன், “என்ன ஃபர்ஸ்ட் இயரா?”.
ஆரணி, “ஆமா”.
“எந்த டிபார்ட்மெண்ட்?”.
“கம்ப்யூட்டர் சயின்ஸ்”.
நடுவில்
அமர்ந்திருந்தவன், “என்ன.. நீ மட்டும் தான் பதில்
சொல்லுவியா.. மேடம் பேச மாட்டாங்களா?”
என்று யாழினியைப் பார்த்து கேட்க.
“நான் சிவில் இன்ஜினியரிங்”.
யாழினி
சிவில் இன்ஜினியரிங் என்ற உடன் அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.
மீண்டும்
ஒருவன், “சரி இன்னைக்கு தானே ஃபர்ஸ்ட் டே
காலேஜ். ஒரு குட் மார்னிங் கூட சொல்லாம நீங்க பாட்டுக்கு போறீங்க”.
ஆரணி, “ராகிங் பண்ணா கம்ப்ளைன்ட் பண்ணிடுவோம்”.
மற்றொருவன்,
“என்ன மா நீங்க. இதெல்லாம்
ராகிங்கா சும்மா ஃபன்னுகாக பண்றது. அப்போ தானே எல்லாருக்கும் நடுவுல ஒரு
பிரண்ட்ஷிப் உண்டாகும். நீங்க ஏன் இதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க. ஜஸ்ட்
ஃபார் ஃபன் தான்”.
நடுவில்
அமர்ந்திருந்தவன், “இந்தா மா சிவில் இன்ஜினியர்.
இதைப் புடி” என்று யாழினியின் கையில் ஒரு
பூவை கொடுத்தான்.
அவள் ‘என்ன இது’ என்று திருதிருவென விழிக்க, ஆரணிக்கும் அதே அதிர்ச்சி தான்.
“இதை இவன்கிட்ட கொடுத்து ப்ரபோஸ்
பண்ணு”.
யாழினி
அதிர்ச்சியாக, “நானா!” என்று கேட்க.
ஆரணி, “என்ன இதெல்லாம்? இது தான் ஃபன்னா” என்று கோபமாக கேட்டாள்.
நடுவில்
அமர்ந்திருந்தவன், “இங்க பாருமா நீ அடுத்த
டிபார்மெண்ட். இந்த பொண்ணு தான் எங்க டிபார்ட்மெண்ட். அதான் இந்த பொண்ணு கையில
கொடுத்தோம்”.
அதற்குள்
இவர்களுக்கு பின் இருந்து, “யாருப்பா அது கும்பலா உட்கார்ந்து
ராக் பண்றது” என்று ஒரு குரல் கேட்க, அனைவரும்
திரும்பிப் பார்த்தனர்.
ஐந்து
பேர் கொண்ட குழு ஒன்று நின்று கொண்டிருந்தது.
ஆரணி, “இவங்க தான் அண்ணா எங்களை ராக் பண்றாங்க” என்று அந்த மூவரையும் நோக்கி கை காட்ட.
மூவரும்
ஜெர்க் ஆகி எழுந்து நின்றனர்.
அதில்
ஒருவன், “குட் மார்னிங் சீனியர்” என்று கூற.
சீனியர்களில்
ஒருவன், “நீங்களும் ஃபர்ஸ்ட் இயர் தான.
நீங்க இவங்களை ராக் பண்றீங்களா” என்று கேட்கவும்.
யாழினிக்கும்,
ஆரணிக்கும் பெரிய அதிர்ச்சி ஆகி போனது.
யாழினியும்,
ஆரணியும் மனதிற்குள், “அடப்பாவிங்களா! நீங்களும்
ஃபர்ஸ்ட் இயர் தானா. சீனியர் மாதிரி ராக் பண்ணீங்க” என்று யோசித்த படி அவர்களைப் பார்க்க.
அவர்கள்
மூவரும் இவர்களை பார்த்து அசடு வழிந்தனர்.
“இங்க பாருங்க தம்பி. எங்க காலேஜ்ல
ராக் பண்றது எல்லாம் ரொம்ப தப்பு பா”
என்றான் விக்னேஷ் என்பவன்.
ஜுனியர்,
“அண்ணா சும்மா ஒரு ஃபன்னுகாக தான்
பண்ணோம். இந்த பொண்ணும் எங்க டிபார்ட்மெண்ட் தான். அதான் சும்மா..” என்று இழுத்தான்.
யாழினி
அவசரமாக, “ரொம்ப தேங்க்ஸ் சீனியர் அண்ணா.
நீங்க மட்டும் வரலைனா நான் இவங்களை சீனியர்னு நினைத்து இவங்க சொன்னதெல்லாம் செஞ்சி
இருப்பேன்”.
சீனியர்,
“இட்ஸ் ஓகே மா. எந்த
டிபார்ட்மெண்ட் நீங்க?”.
“நான் கம்ப்யூட்டர் சயின்ஸ். இவ
சிவில்”.
சீனியர்,
“ஓ.. நம்ம டிபார்ட்மெண்ட். இங்க
பாருமா என் பேரு சிவா, தேர்ட் இயர் படிக்கிறேன். உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும்
என்கிட்ட சொல்லு சரியா. இந்த பசங்க திரும்ப ஏதாவது வம்பு பண்ணாங்கனா என்கிட்ட
சொல்லு”.
யாழினி
இன்முகமாக, “ரொம்ப தேங்க்ஸ் சீனியர் அண்ணா”.
பிறகு
அந்த சீனியர் கும்பல் அந்த ஜூனியர் கேங்ஸ்டர்களை இடத்தை விட்டு காலி செய்ய
வைத்தது.
யாழினியும்,
ஆரணியும் தங்களின் டிபார்ட்மெண்ட்டை தேடி செல்லும் வழியில் யாழினி, “நல்ல வேளை ஆரணி, அந்த சீனியர் அண்ணா
மட்டும் வரலைனா என் நிலைமை ரொம்ப மோசமா ஆகி இருக்கும்”.
“உன் நிலைமை மோசமா ஆகி இருக்காது.
அந்த பசங்க நிலைமை தான் மோசமா ஆகி இருக்கும். அண்ணாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்”.
“இதெல்லாம் நீ அவர்கிட்ட சொல்லிடாத”.
“ஏன்?”.
“தேவையில்லாம எதுக்கு முதல் நாளே
பிரச்சனை? அவங்க சும்மா விளையாட்டுக்காக தானே பண்ணாங்க. அதான் அவங்க சொன்ன மாதிரி
நாம எதுவுமே செய்யலையே. இதை இப்படியே விட்டுடலாம்”.
“சரி, ஆனாலும் அந்த பசங்க உன்
கிளாஸ் தான் போலருக்கு. பார்த்து நடந்துக்கோ, ஏதாவது திரும்ப வம்பு பண்ணாங்கனா
பயப்படாம என்கிட்ட சொல்லு சரியா”.
யாழினி,
“சரி” என்று தலையசைக்க.
இருவரும்
தனித்தனியாக அவர்களின் டிபார்ட்மெண்ட் நோக்கி பிரிந்து சென்றனர்.
“பார்த்து யாழினி கரெக்டா
கேட்டுட்டு கிளாசுக்கு போயிடு. கிளாஸ் முடிந்ததும் இதே இடத்துல மீட் பண்ணலாம்.
அந்த மரத்துக்கு அடியில் இருக்கும் பெஞ்ச் கிட்ட நான் வெயிட் பண்றேன். ஓகே பாய்” என்று விட்டு ஆரணி கிளம்பி விட்டாள்.
யாழினிக்கு
எங்கே சென்று யாரிடம் கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை. எவ்வளவு பெரிய கல்லூரி,
இங்கே எப்படி தன் வகுப்பறையை கண்டுபிடிப்பது.
பள்ளிக்கூடத்தில்
ஒரே ஒரு கட்டிடம் தான் இருக்கும். இங்கே இத்தனை கட்டிடங்கள் இருக்கின்றதே என்று
பார்ப்பதற்கே மலைப்பாக இருந்தது.
‘கடவுளே என்னை நல்லா இப்படி மாட்டி
விட்டுட்டியே. நீ தான் எப்படியாவது காப்பாத்தணும்’ என்று பல வேண்டுதல்களை பட்டியலிட்டு கொண்டு தன் வகுப்பறையை
தேடி சென்றாள்.
எதிர்பாராமல்
எதிரே யார் மீதோ மோதி விட, “சாரி.. சாரி..” என்ற பதட்டமான குரலில் நிமிர்ந்து
பார்த்தாள்.
ஒரு
பெண் அழகிய நீல நிறத்தில் குர்த்தி அணிந்து தலை முடியை போனிட்டைலிட்டு அழகாக
நின்று கொண்டு இருந்தாள்.
யாழினி,
“பரவாயில்ல விடுங்க”.
“ஹாய் ஐ அம் வர்ஷினி!” என்று கை நீட்டினாள்.
பதிலுக்கு
யாழினி கை குலுக்கியபடி, “ஹாய் நான் யாழினி”.
“நீங்க எந்த இயர் படிக்கிறீங்க?”.
“ஃபர்ஸ்ட் இயர்”.
“தேங்க் காட். நானும் ஃபர்ஸ்ட்
இயர் தான். சரி வாங்க கிளாஸ் எங்க இருக்குனு பார்த்து போவோம்”.
பிறகு,
இருவரும் தங்களைப் பற்றி மாற்றி, மாற்றி விசாரித்தபடி பேசிக் கொண்டே வகுப்பறையை
கண்டுபிடித்து சென்றனர். வகுப்பறைக்கு உள்ளே நுழையும் பொழுதே யாழினி வெளியே
பார்த்த அந்த மூவர் குழு இங்கே இருந்தது.
ஆசிரியர்
இருக்கையில் ஒருவன் அமர்ந்திருந்திருக்க, மற்ற இருவரும் இரண்டு பக்கமும் நின்றபடி
இருந்தனர். யாழினி குழப்பமாக ‘இவனுங்க இங்க என்ன பண்றாங்க’ என்று யோசித்தபடி உள்ளே வந்தாள்.
இருக்கையில்
அமர்ந்திருந்தவன், “ஹலோ சிவில் இன்ஜினியர் மேடம் ஒரு
வழியா க்ளாஸ் ரூமை கண்டு பிடிச்சிட்டிங்க போலருக்கு”.
மற்றொருவன்,
“என்ன முழிக்கிற? எங்களை நல்லா
சீனியர் அண்ணா கிட்ட மாட்டி விட்டுட்டீங்கல்ல”.
“ஐயோ! வேணும்னு எதுவும் பண்ணல”.
மீண்டும்
அமர்ந்திருந்தவன், “எங்களை மாட்டிவிட்டதுக்கு
கண்டிப்பா உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு”.
யாழினிக்கு
‘இது என்னடா புதிய தலைவலி’ என்று இருந்தது.
“சாரி, இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்றாள் அழுது விடும் குரலில்.
வர்ஷினிக்கு
இங்கே என்ன நடக்கின்றது என்று ஒன்றும் புரியவில்லை.
இனி
நடக்கப்போவது என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக