அவனதிகாரம் - 40
அதிகாரம் – 40 யாழினி, “ என்ன பேசணும்னு சொல்லுங்க பேசுறேன் ” என்றாள் அமைதியாக. மரகதம் பாட்டி, “ என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்படி சோகமா இருக்க. வாழ்க்கையில சரி பண்ண முடியாத பிரச்சனைனு எதுவும் இல்லை யாழினி ” . அவர் கூறியதை கேட்டு விரக்தியாக சிரித்த யாழினி, “ இனிமே என் வாழ்க்கையில என்ன நடக்கணும்னு நீங்க சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல. எல்லாமே மத்தவங்க விருப்பப்படி தான் நடக்குது. இவ்வளவு நாள் உங்க விருப்பப்படி நடந்துச்சு. இனிமே, அவரோட விருப்பப்படி நடக்கப் போகுது அவ்வளவு தான். உங்க யாருக்கும் என்னை பத்தி எந்த கவலையும் இல்ல. அக்கா பண்ண தப்புக்காக எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு எல்லாரும் சேர்ந்து அவளோட தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்துட்டீங்க ” . யாழினியின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த மரகதம் பாட்டி அவள் எந்த அளவிற்கு மனம் உடைந்து இருக்கிறாள் என்று அவளின் வார்த்தையிலேயே உணர்ந்தார். “ இப்படி எல்லாம் பேசாத யாழினி. இங்க இவ்வளவு பிரச்சனை இருக்கும்னு நாங்க யாருமே நினைச்சு கூட பார்க்கல. உன் வாழ்க்கை வீணா போகணும்னு நாங்களே நினைப்ப...