அவனதிகாரம் - 85

 

 

அதிகாரம் – 85

 

யாழினி ஸ்வேதாவின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள், என்ன ஸ்வேதா ஏதோ பேசணும்னு கூப்பிட்டு வந்துட்டு ஒண்ணுமே பேச மாட்டேங்குற.

 

நீ சந்தோஷமா இருக்கியா யாழினி?.

 

நான் சந்தோஷமா தான் இருக்கேன். ஏன் இப்படி கேட்குற?.

 

ஏன்னா.. நான் சந்தோஷமாவே இல்ல டி என்றால் வருத்தமான குரலில்.

 

அதில் பதட்டமான யாழினி, என்னடி சொல்ற. ஏன் என்ன ஆச்சு? என்று கேட்க.

 

ஆமா டி. என் வீட்டுக்காரர் ரொம்ப கோவக்காரரா இருக்கார். அவங்க அம்மா என்ன சொல்றாங்களோ, அதை தான் டி கேட்கிறார். என்னுடைய பீலிங்க்ஸை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார். நான் எது சொன்னாலும், அவங்க அம்மாகிட்ட போய் கேட்டுட்டு அவங்க சரினு சொன்னா தான் செய்யுறார். அவங்க வேண்டாம்னு சொன்னா என்கிட்டயும் வந்து வேண்டாம்னு சொல்லிடுறார்.

 

ஓ.. ஆனால் அவரைப் பார்த்தா அப்படி தெரியலையே. நல்லா தான் பேசுறார்.

 

வெளியில் இருந்து பார்த்தா எல்லாம் நல்லா தான் இருக்கும். இப்போ கூட அவங்க அம்மா தான் சொல்லி அனுப்புனாங்க. போய் அவள அவங்க வீட்ல விட்டுட்டு வந்துடு. நீ அங்க தங்கக்கூடாதுனு சொன்னாங்க. அதனால தான் அவர் உடனே கிளம்பிட்டார். எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை யாழினி. எல்லாத்துக்குமே அம்மா பேச்சை கேட்டு நடக்கணும்னா எதுக்கு இவருக்கெல்லாம் கல்யாணம் என்றாள் கோபமாக.

 

யாழினி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

 

நீயே சொல்லு, எல்லாத்துக்குமே அம்மாகிட்ட கேட்டுட்டு செய்ய முடியுமா. என்னுடைய வாழ்க்கையையும் சேர்த்து அவங்க அம்மா தான் டி வாழ்ந்துகிட்டு இருக்காங்க. எங்க அம்மா கிட்ட சொன்னா, ஆரம்பத்துல இப்படித் தான் இருக்கும். கொஞ்சம் பொறுத்துப்போனு சொல்றாங்க. எவ்வளவு நாள் தான் டி நான் பொறுத்து போறது.

 

யாழினி, சரி, நீ காலேஜ் சேர்ந்துட்டியா.

 

இல்லடி.

 

என்ன டி சொல்ற. காலேஜ் போக போறேன்னு சொன்ன.

 

அதை ஏன் டி கேட்குற. அட்மிஷன் எல்லாம் வாங்கியாச்சு. திடீர்னு என் மாமியார் முதல்ல குடும்பத்த எப்படி நடத்துறதுனு கத்துக்கட்டும். அப்புறமா காலேஜ் படிப்புலாம் படிக்கலாம். இப்போ காலேஜுக்கு போறதா முக்கியம், குடும்பத்தை கவனிக்கிறது தான் முக்கியம்னு சொல்லி அப்புறமா பார்த்துக்கலாம். இப்போ வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என் வீட்டுக்காரரும் அம்மா பேச்சைக் கேட்டு காலேஜ்க்கு எல்லாம் இப்போ வேண்டாம். அப்புறமா கரஸ்ல படிச்சுக்கலாம்னு சொல்றார் டி.

 

நீ சொல்றது நம்பவே முடியல ஸ்வேதா. அவர பார்த்தா அப்படி தெரியல. ஆனா, நீ சொல்ற மாதிரி எல்லாத்துக்குமே அம்மாகிட்ட கேட்டு செய்றதுனா கொஞ்சம் கஷ்டம் தான். உன் நிலைமை எனக்கு புரியுது. ஆனா, அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.

 

என்ன பண்ண முடியும். காலம் முழுக்க எங்க அம்மா சொல்ற மாதிரி பொறுத்துக்கிட்டே போக வேண்டியது தான்.

 

நான் வேணும்னா உன் வீட்டுக்காரர் கிட்ட பேசி பார்க்கவா டி.

 

நீ என்ன பேசினாலும் அவர் சரி சரினு தான் டி சொல்லுவார். கடைசியா, அவங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதைத் தான் கேட்பார் என்றாள் அலுத்து போன குரலில்.

 

சரி, இது எல்லாத்தையும் மறந்துடு. நீ இப்போ என்னை பார்க்க தான வந்திருக்க. நாம கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி எல்லாம் என்ஜாய் பண்ணுவோம். அதே மாதிரி நீ என்கூட இருக்க போற இந்த டூ டேஸும் நமக்காக மட்டும் ஸ்பென்ட் பண்ணலாம் என்றாள் ஸ்வேதாவின் மனதை மாற்றும் பொருட்டு. அது நன்றாகவே வேலை செய்தது.

 

ஸ்வேதா மின்னும் கண்களுடன், நிஜமாவா சொல்ற. அப்போ வா வைதேகி அக்கா கடைக்கு போய் பட்டம் வாங்கிக்கிட்டு வந்து விடலாம்.

 

மறுபடியும் அந்த பக்கத்து வீட்டு பரமசிவம் தாத்தாவோட வீட்டு மேல பறக்க விட்டுடாத அவ்வளவு தான். போன தடவை எப்படி சண்டைக்கு நின்னாருனு பார்த்தல்ல என்று இருவரும் பழைய நினைவுகளை பற்றி மாற்றி, மாற்றி பேசியபடி பட்டம் வாங்குவதற்காக கடையை நோக்கி சென்றனர்.

 

இருவரும் தங்களுக்கு பிடித்த நிறத்தில் பட்டத்தை வாங்கிக் கொண்டு வந்து யாழினியின் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று பட்டம் விடுவதற்கு தயாராக.

 

ஆரணி, எங்க போன யாழ். ரொம்ப நேரமா நான் உன்ன தேடிகிட்டு இருக்கேன்.

 

பட்டம் வாங்க போனேன் ஆரணி என்று பட்டத்தை அவளிடம் காட்டினாள்.

 

ஆரணி ஆச்சரியமாக, வாவ் சூப்பர்! யாழினி உனக்கு பட்டம் விட தெரியுமா.

 

தெரியுமே, ஏன் உனக்கு தெரியாதா?.

 

ஆரணி, எனக்கு தெரியாது. ஸ்வேதா உனக்கு தெரியுமா?.

 

யாரை பார்த்து என்ன கேள்வி கேட்குற. இந்த ஊரிலேயே பட்டம் விடுறதுல நானும், யாழினியும் தான் ஸ்பெஷலிஸ்ட். எங்களுக்கு படிப்பு தான் சரியா வராதே தவிர, இந்த மாதிரி எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் நல்லாவே வரும் என்றாள் பெருமிதமாக.

 

இதை கேட்டபடியே இவர்களை நோக்கி வந்த ஆரியன், வாவ் சூப்பர்! இப்படி ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியை நான் கேள்விப்பட்டதே இல்லை. இந்த மாதிரி ஏதாவது செஞ்சா ஃபர்ஸ்ட் மார்க் வரும்னா நான் கூட வாங்குவேனே. எவ்வளவு பெரிய சாதனையை பண்ணி இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் என்று புகழ்வது போல் அவர்களை கிண்டல் செய்தான்.

 

யாழினி கோபமாக, ஆரி வேண்டாம், உன்கிட்ட சண்டை போட்டு என்னுடைய மூடை நான் ஸ்பாயில் பண்ணிக்க விரும்பல.

 

ஏன் நீ வேணா சண்டைக்கு வாயேன். வந்து தான் பாரேன் என்று அவளிடம் வம்பு செய்ய.

 

ஆரணி, டேய் சும்மா இருடா. யாழினி நீ பட்டத்தை விடு. எப்படி போகுதுனு பார்ப்போம்.

 

ஆரியன், பாரு, பாரு.. பட்டம் சீக்கிரமாகவே அறுந்து விழப்போகுது. அதை நல்லா நின்னு பாரு. நான் ஸ்வேதா சைடு தான் நிற்க போறேன். பார்ப்போம், ஸ்வேதாவோட பட்டம் உயரமா போகுதா இல்ல, யாழினியோட பட்டம் உயரமா போகுதான்னு.

 

ஸ்வேதா, ஏய் யாழினி, இவன் நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு விட பார்க்கிறான் டி.

 

ஆமா நீங்க ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே பிறந்தீங்க உங்க ரெண்டு பேரையும் நான் பிரிச்சு விட போறேன். இதெல்லாம் சும்மா ஒரு ஃபன்க்கு தான. வாங்க பட்டம் விடலாம் என்றபடி ஸ்வேதாவின் பட்டத்தினுடைய கயிறை தன் கையில் வாங்கிக் கொண்டான்.

 

ஸ்வேதா ஆரியனிடம், உனக்கு பட்டம் விட தெரியுமா?.

 

இந்த மாதிரி சின்ன பிள்ளை தனமான விஷயத்தை எல்லாம் நான் தெரிஞ்சுக்க மாட்டேன். என்னோட ரேஞ்சே வேற என்றான் கெத்தாக.

 

ஸ்வேதா நக்கலாக சிரித்தபடி, ஒரு பட்டம் கூட விட தெரியல. ஆனா, வாய் மட்டும் நல்லா காது வரைக்கும் இருக்கு. உனக்கு மட்டும் வாய் இல்ல அவ்வளவு தான் என்று அவனை ஓட்டினாள்.

 

பிறகு ஆரணியும், ஆரியனும் இவர்களை கமான்.. கமான்.. என்று சியரப் செய்கிறோம் என்ற பெயரில் கத்திக் கொண்டிருக்க.

 

யாழினியும், ஸ்வேதாவும் யாரின் பட்டம் உயரத்தில் பறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு பறக்கவிட்டனர். வெகு நாட்கள் கழித்து இப்படி ஒன்றாக சேர்ந்து விளையாடுவதில் இருவருக்குமே அளவற்ற மகிழ்ச்சி.

 

அது அவர்களின் முகத்திலும் பிரதிபலித்தது. இவர்கள் அறியாமல் இவர்களின் பின் நின்று கொண்டு அபிமன்யு இவர்களை பார்த்துக் கொண்டிருக்க.

 

ஸ்வேதா, ஏன் ஆரியன் உங்க அண்ணனுக்கு பட்டம் விட தெரியுமா?.

 

எங்க அண்ணனுக்கு யாராவது தப்பு பண்ணா கன்னத்துல தான் ஒன்னு விட தெரியும். பட்டம் எல்லாம் விட தெரியாது.

 

பட்டம் கூட விட தெரியாதா. இப்படி ஒரு டேலண்ட் இல்லாத மாப்பிள்ளைக்கு எங்க யாழினியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோமே என்றாள் வருத்தமான குரலில்.

 

ஆரணி, நீங்க எங்க கொடுத்தீங்க. நாங்க பிளான் பண்ணி யாழினியை தூக்கி இருக்கோம் என்றாள் கெத்தாக.

 

இவர்கள் அனைவரும் வாயாடிக் கொண்டே இருக்க. யாழினியின் கவனம் முழுவதும் பட்டம் விடுவதிலேயே இருந்தது. யாழினி இமைக்காமல் பட்டத்தையே பார்த்திருக்க.

 

அபிமன்யு யாழினியின் அருகில் வந்தவன், நான் பண்ணவா? என்று கேட்டான்.

 

ஆரியன் ஆச்சரியமாக, அண்ணா உங்களுக்கு பட்டம் விட தெரியுமா?.

 

யாராவது ஒருத்தருக்கு தெரிஞ்சா போதும்.

 

சரி இந்தாங்க. இதை புடிச்சுகிட்டு இப்படி இப்படி ஆட்டுங்க என்று பட்டத்தின் நூலை அபிமன்யுவின் கையில் கொடுத்தாள்.

 

அபிமன்யு எப்படி செய்வது என்று தெரியாமல் தடுமாற. அபிமன்யுவின் கையைப் பிடித்து யாழினி எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுத்தாள்.

 

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாத அபிமன்யு யாழினியை தன் கை வளைவுக்குள்ளேயே நிற்க வைத்துக் கொண்டான்.

 

ஆரியன், நினைச்சேன். அண்ணா வரும் போதே ஏதோ சரி இல்லையேனு... என்று முணங்கியவன், யாழினி நீ பட்டம் விட கத்துக் கொடுத்துட்டேனா கொஞ்சம் தள்ளி வந்து நில்லு. அப்போ தான எங்க அண்ணன் நல்லா ஹைட்டா விடுவான் என்று கூற.

 

யாழினி மனதிற்குள், நான் என்ன வரமாட்டேன்னா சொல்றேன். உங்க அண்ணன் விட்டா தானே வரர்துக்கு என்று மெதுவாக தன் கையை அபிமன்யுவிடமிருந்து விளக்க முற்பட்டாள்.

 

அபிமன்யுவின் பிடி இறுக்கமாக இருக்கவே யாழினியால் தன் கையையும், உடலையும் அசைக்கக்கூட முடியவில்லை. இவர்களின் ஊடலை புரிந்து கொண்ட ஸ்வேதா அமைதியாக பட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்த.

 

ஆரணி, வாவ்..! அண்ணா சூப்பர். நல்லா ஹைட்ல போயிடுச்சு நம்ம பட்டம் என்று குதூகலமானாள்.

 

ஆரியன், இவ ஒருத்தி, இது இரண்டும் வேற எதுக்கோ ப்ளான் போடுற மாதிரி தெரியுது. இவ என்னடானா பட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கா.

 

ஆரியன் ஸ்வேதாவிடம், ஸ்வேதா உன் பிரண்டுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கானு பார்த்தியா. நாம இத்தனை பேரு நிக்கிறோம். எங்க அண்ணன் கிட்ட எப்படி ஒட்டிக்கிட்டு நிக்கிறா பாரு என்று யாழினியை பற்றி குற்றம் சாட்ட.

 

என் ஃப்ரெண்டுக்கு அறிவு இருக்கு. உங்க அண்ணனுக்கு தான் அது இருக்கா இல்லையானு தெரியல. அவர் தான் இவள போகவிடாம நிக்க வச்சிருக்கார்.

 

என்னோட அண்ணன் ஜென்டில்மேன். அந்த மாதிரி எல்லாம் பண்ணவே மாட்டார். நீ உன் ப்ரண்டை காப்பாத்துறதுக்காக எங்க அண்ணன் மேல பழி சொல்லாத என்றான் வீராப்பாக.

 

டேய் லூசு மாதிரி பேசாதடா. அங்க பாரு, அவ கையை கூட எடுக்க முடியாம எப்படி கஷ்டப்படுறானு. உன்னால முடிஞ்சா உங்க அண்ணன் கிட்ட சொல்லி கொஞ்சம் தள்ளி நிக்க சொல்லேன் பார்ப்போம்.

 

அண்ணா அங்க காற்று ரொம்ப அதிகமா இருக்கு. நீங்க இந்த பக்கம் வாங்க.

 

எனக்கு இங்க தான் பிடிச்சிருக்கு. நான் இங்க தான் நிப்பேன்.

 

உங்களுக்கு பட்டம் நல்லா பறக்கணுமா வேண்டாமா.

 

பட்டம் பறந்தா எனக்கு என்ன, பறக்கலைனா எனக்கு என்ன.

 

நீங்க பட்டம் விட தான இங்க வந்திருக்கீங்க.

 

நான் உன்கிட்ட சொன்னேனா பட்டம் விட தான் வந்து இருக்கேன்னு. பட்டம் விடுறது எப்படினு கத்துக்க தான் வந்து இருக்கேன். அதான் யாழினி எனக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்காளே அப்புறம் என்ன. நான் இங்கிருந்தே விட்டுக்கிறேன். நீ நூல் விடுற வேலையை மட்டும் பாரு.

 

ஸ்வேதா ஆரியனைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, பார்த்தியா, உங்க அண்ணன் தான் என் பிரண்டை பிடிச்சு வச்சிருக்கார். சரி வா, நாம இங்க இருந்தா இவங்களுக்கு டிஸ்டர்ப் ஆக இருக்கும். நம்ம கீழ போகலாம்.

 

அதெல்லாம் முடியாது. நான் வரமாட்டேன்.

 

ஆரணி, டேய் இப்போ நீ மட்டும் வரல. நான் போய் பாட்டிகிட்ட சொல்லிடுவேன் என்று அவனின் கைகள் இரண்டையும் ஸ்வேதாவும், ஆரணியும் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே அழைத்து சென்றனர்.

 

யாழினி, ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க. அவங்க எல்லாரும் நம்மள பத்தி என்ன நினைச்சிருப்பாங்க.

 

நம்மள பத்தி நினைக்கிறதுக்கு அவங்களுக்கு எந்த ரைட்சும் இல்லை. அப்படியே நினைச்சாலும் நினைச்சுட்டு போகட்டும். அதை பத்தி நமக்கு என்ன.

 

நீங்க வர வர கொஞ்சம் கூட சரியே இல்லை. உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு. சரி கையை விடுங்க. நான் போகணும் என்று தன் கையை அவனிடம் இருந்து எடுக்க முயற்சி செய்தாள்.

 

அபிமன்யு ஒரு இன்ச் கூட அவளை நகர விடாமல் பட்டத்திலிருந்து கையை எடுத்தவன். பின் பக்கமாகவே அவளை அணைத்துக் கொண்டான்.

 

என்ன பண்றீங்க நீங்க. இது கிராமம், யாராவது பார்த்தாங்கனா தப்பா பேசுவாங்க. கையை எடுங்க என்று அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்ய.

 

அபிமன்யுவின் விரலை கூட அசைக்க முடியவில்லை.

 

யாழினி சோர்ந்து போனவள், இப்போ உங்களுக்கு என்ன வேணும்?.

 

என்ன வேணும்னு சொன்னா உடனே கொடுத்திடுவியா? என்றான் பீடிகையோடு.

 

அதில் சுதாரித்த யாழினி, என்னால முடிஞ்சா கொடுப்பேன் என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.

 

அவளின் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவன், அதெல்லாம் முடியாது குடுப்பியா மாட்டியானு மட்டும் சொல்லு.

 

சரி, என்னனு சொல்லுங்க.

 

அபிமன்யு ஏதோ ஏடாகூடமாக கேட்கப் போகிறான் என்று யாழினி நினைத்திருக்க.

 

எனக்கு உன்னோட டைம் வேணும்.

 

யாழினி தான் கேட்டது உண்மை தானா என்ன கூறுகிறான் இவன் என்று குழப்பமாக பார்க்க.

 

என்ன நான் சொன்னது உனக்கு புரியலையா. எனக்கு உன் கூட கொஞ்சம் பேசணும் ரூமுக்கு வா என்று விட்டு முன்னே நடந்தான்.

 

அபிமன்யு கூறப்போகும் விஷயம் என்ன..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5