அவனதிகாரம் - 14

 

அதிகாரம் – 14

 

மரகதம் பாட்டி, என்னய்யா டாக்டர் என்ன சொல்லுறாங்க? என்று கண்ணீருடன் கேட்டார்.

 

பயப்படாதீங்கம்மா அப்பாக்கு எதுவும் ஆகாது. டாக்டர் உள்ள பார்த்துகிட்டு இருக்காங்க வெளியில் வரும் போது தான் சொல்லுவாங்க.. அது வரைக்கும் இங்கனையே காத்துக்கிட்டு இருக்க சொல்லி இருக்காங்க என்று கூறினார் சுப்பிரமணி.

 

யாழினி, அப்பா, தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாதுல.

 

எதுவும் ஆகாது மா தைரியமா இருங்க. லட்சுமி பிள்ளைங்களை எல்லாம் எதுக்கு ஆஸ்பித்திரிக்கு கூப்பிட்டு வந்த.. பாரு, எப்படி பயப்படுறாங்கன்னு என்று கேட்டார்.

 

லட்சுமி, நான் எங்கங்க கூப்பிட்டு வந்தேன். நானும் அத்தையும் தான் கிளம்புனோம்.. கயல்விழியும், யாழினியும் எங்க கூட தான் வருவோம்னு அடம் பிடிச்சு வந்திடுச்சுங்க சொன்னா கேட்கல.

 

பின்னர், சுப்பிரமணி ஜீவாவிடம், மாப்ள, நீங்க வீட்டுக்கு போய் கயல்விழியையும், யாழினியையும் விட்டுட்டு, அப்படியே கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு வாங்க.. இங்க நாங்க மூணு பேரும் இருக்கோம்.

 

பரவாயில்ல மாமா, நீங்க தான் பார்க்க ரொம்ப களைப்பா தெரியுறீங்க. நீங்க போய் ஓய்வு எடுத்துட்டு வாங்க நான் அத்தைகூடவும், பாட்டிகூடவும் இங்க இருக்கேன்.

 

இல்ல, பரவாயில்ல மாப்ள.. நீங்க போய் வெண்ணிலாவை பார்த்துட்டு அப்படியே இவங்களையும் விட்டுட்டு வாங்.

 

சரிங்க மாமா என்று ஒப்புக் கொண்டான் ஜீவா.

 

அப்போது மருத்துவர் வெளியே வரவும் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

 

சுப்ரமணி, டாக்டர், அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு? நல்லா இருக்காங்கல்ல? ஒண்ணும் பிரச்சனை இல்லையே? என்று படபடப்பாக கேட்டார்.

 

அதற்கு அவர் எந்த பதிலும் கூறாமல் அமைதி காக்கவும், அனைவருக்கும் பதட்டம் அதிகமானது.

 

ஜீவா, என்ன ஆச்சு டாக்டர் வேற ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க அதுக்கு உண்டான ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க லேட் பண்ண வேண்டாம்.

 

அதற்கு டாக்டர், மீரா யாரு...? என்று கேட்டார்.

 

பெரியவர்கள் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க. சிறியவர்கள் இருவரும் புரியாமல் பார்த்தனர்.

 

முதலில் சுதாரித்த ஜீவா, ஏன் டாக்டர்... என்ன ஆச்சு?.

 

டாக்டர், சார் பேஷண்ட் அவங்க பெயரை தான் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்காங்க. அவங்களோட கான்ஷியஸ் புல்லா இப்போ மீரா பத்தி மட்டும் தான் இருக்கு. நீங்க உடனே அவங்களை வர வச்சு பேஷண்ட் கிட்ட பேச வைங்க.. அப்போ தான் பேஷண்ட்டோட மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். நம்ம பண்ற ட்ரீட்மென்ட்டை அவங்க பாடி ஏத்துக்கும். நாம இப்போ என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் அவங்க பாடி அதை ஏத்துக்க மாட்டேங்குது. அவங்க கம்ப்ளீட் ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க. ப்ளீஸ், ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்.. இப்போ பேஷண்ட்டை க்யூர் பண்றதுக்கு மீராவை இங்க வர வைக்கிறது தான் ஒரே வழி என்று கூறி முடித்தார்.

 

சுப்ரமணியனும், லட்சுமியும், மரகதம் பாட்டியும் செய்வதறியாது விழித்தனர். எப்படி மீராவை இங்கே வர வைப்பது.. வள்ளியம்மையும், கிருஷ்ணமூர்த்தியும் இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்களே.

 

பிறகு, எப்படி இது சாத்தியமாகும். தனியாக சந்தித்து மீராவிடம் பேசலாம் என்று நினைத்தாலும், மீராவுக்கு நாங்கள் யார் என்று கூட தெரியாதே. நாம் கூறுவதை எல்லாம் அவள் நம்புவாளா என்றும் எண்ண ஓட்டம் அதன் பாட்டிற்கு ஓடியது.

 

ஜீவா, மாமா நீங்க பார்த்துக்கோங்க நான் போய் அவங்க கிட்ட பேசி கூட்டிட்டு வரேன். அவங்க அட்ரஸ் மட்டும் எனக்கு கொடுங்க மாமா.

 

சுப்பிரமணி என்ன பேசுவது என்று கூட அறியாமல் அவர்களின் முகவரியை மட்டும் ஜீவாவிடம் கொடுத்துவிட்டு, பார்த்து மாப்ள என்று மட்டும் கூறினார்.

 

கயல்விழியும், யாழினியும் இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மருத்துவர் கூறி சென்றதை கேட்டதும் பாட்டி மீண்டும் அழுகையை ஆரம்பித்து விட்டார்.

 

சுப்பிரமணியனிடம், என்னப்பா டாக்டர் இப்படி சொல்றார். இதெல்லாம் எப்படி நடக்கும்.. அப்போ அப்பாவை காப்பாத்த முடியாதா.. இந்த மனுஷன் அவர் பாட்டுக்கு தூக்கி கொடுத்துட்டார். இப்போ வருத்தப்பட்டுக்கிட்டு இப்படி ஆஸ்பத்திரியில் வந்து படுத்துக்கிட்டார். என்னை பத்தி எப்பயுமே இந்த ஆளுக்கு நினைப்பே இருக்காதா.. இவர் பண்ற எல்லா விஷயத்திலும் நான் தான் நடுவில் கிடந்து அல்லாடுறேன் என்று கூறி அழுதார்.

 

சுப்பிரமணி, அம்மா அழாதீங்க.. அப்பாவுக்கு எதுவும் ஆகாது. அதான் மாப்ள போயிருக்காருல எல்லாம் நல்ல படியா நடக்கும்னு நம்புவோம். நம்ம நம்பிக்கை அப்பாவை கண்டிப்பா காப்பாத்தும். இன்னும் கயல்விழி கல்யாணம், யாழினி கல்யாணம் எல்லாம் நீங்களும் அப்பாவும் சேர்ந்து பார்க்க வேண்டியது இருக்கு. வருத்தப்படாதீங்கம்மா டாக்டர் காப்பாத்த முடியாதுன்னு சொல்லலையே.. அவர் உடம்பு டாக்டர் செய்யுற ட்ரீட்மெண்ட்டை ஏத்துக்கிட்டா ஈஸியா காப்பாத்திடுவாங்க மா. அதுக்கு தான மாப்ள மீராவை கூப்பிட போயிருக்கார். எல்லாம் நல்ல படியா நடக்கும்னு வேண்டிக்குவோம்.

 

லட்சுமி, ஆமா அத்த, நீங்க கவலைப்படாதீங்க.. நான் கோவிலுக்கு போய் மாமா பெயரில் அர்ச்சனை பண்ணிட்டு வந்திடுறேன். எல்லாம் நல்ல படியா தான் நடக்கும் என்றுவிட்டு சுப்பிரமணியனிடம், ஏங்க நான் அப்படியே கயல்விழியையும், யாழினியையும் வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு கோவிலுக்கு போயிட்டு வரேன்.

 

சரி லட்சுமி, அப்படியே அம்மாவையும் கூப்பிட்டு போய் வீட்டில் விட்டுடு. பாவம், ரொம்ப சோர்வா இருக்காங்க.

 

வேண்டாம் பா நான் வீட்டுக்குலாம் போகல இங்கனையே இருக்கேன் என்று அடம் பிடித்தார்.

 

சொன்னா கேளுங்க மா. அப்பாவை நினைச்சு கவலைப்பட்டு உங்களுக்கும் உடம்பு முடியாமல் போயிட போகுது. வீட்டுக்கு போய் ஓய்வெடுங்க நான் இங்க பார்த்துக்குறேன் மாப்ள மீராவை அழைச்சிட்டு வந்ததும் உங்களுக்கு தகவல் கொடுக்குறோம் அப்புறம் வாங்க என்று சமாதானப்படுத்தி லட்சுமி உடன் அனுப்பி வைத்தார்.

 

லட்சுமி மூவரையும் அழைத்துக் கொண்டு அவர்களின் காரில் வீடு நோக்கி புறப்பட்டார்.

 

ஜீவா சென்னை செல்லும் வழியிலேயே மீராவின் குடும்பத்தை பற்றிய மொத்த தகவல்களையும் சேகரித்து விட்டான்.

 

எங்கே சென்றால் தான் நினைத்து வந்த காரியம் நடக்கும் என்பதை அறிந்த ஜீவா நேராக சென்று நின்ற இடம் சென்னை அண்ணா நகரில் உள்ள புகழ் பெற்ற ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் தான்.

 

வெளியில் இருந்து பார்ப்பதற்கு அவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்தது அந்த கட்டிடம். கட்டிடத்தின் நுழைவாயிலில் தங்க நிறத்தால் மீரா பில்டர்ஸ் என்னும் பெயர் பலகை ஜொலித்துக் கொண்டிருந்தது. கட்டடத்தின் தோற்றமே அவர்களின் செழுமையை காட்டியது. நேராக உள்ளே சென்ற ஜீவா ரிசப்ஷனை நோக்கி சென்றான்.

 

குட் மார்னிங் சார். ஹவ் மே ஐ ஹெல்ப் யூ என்று அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் அழகான ஆங்கிலத்தில் கேட்டாள்.

 

“’மிஸ்டர். கிஷோரை மீட் பண்ணனும்.

 

வெயிட் ட மினிட் சார் என்று கூறிய ரிசப்ஷனிஸ்ட் தன் தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒருவன் ஜீவாவை நோக்கி நடந்து வந்தான். டக்கின் செய்த பேண்ட் ஷர்ட் உடன் ஃபார்மலான உடையில் இருந்தான்.

 

நேராக ஜீவாவிடம் வந்தவன், ஹலோ, ஐ அம் கிஷோர்’” என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.

 

ஜீவா, ஹலோ மிஸ்டர். கிஷோர் ஐ அம் ஜீவா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களுக்கு கால் பண்ணி பேசினது நான் தான். உங்க ஹெட்டை பார்க்கணும் என்று கூறினான்.

 

உங்களுக்காக அப்பாயிண்மெண்ட் போட்டாச்சு சார். சார் ஒரு இம்பார்டன்ட் மீட்டிங்ல இருக்காங்க. ஒன் ஹவர் கழிச்சு நீங்க போய் அவங்களை பார்க்கலாம். அதுவரைக்கும் இங்க வெயிட் பண்ணுங்க என்று ஒரு இருக்கையை காட்டினான்.

 

ஓகே ஷ்யோர் என்று கூறிய ஜீவா அங்கே சென்று அமர்ந்து காத்திருந்தான்.

 

அந்த கட்டிடத்தில் பணிபுரியும் அனைவருமே சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தனர். அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஜீவா தன்னுடைய நேரம் வந்தவுடன் உள்ளே சென்றான்.

 

அவன் சென்று கதவை திறக்கையில் பளார் என்னும் சத்தம் ஜீவாவின் காதை கிழித்துக்கொண்டு வெளியே கேட்டது. அதில், திகைத்து பார்த்தான் ஜீவா.

 

இடியட்.. ஸ்டுப்பிட்.. ஹவ் டேர் யூ டு டூ லைக் திஸ். திஸ் இஸ் மை ப்ராஜெக்ட். எப்படி நீ என்னை கேட்காமல் சேன்ஞ் பண்ணலாம் என்று கத்திக்கொண்டு இருந்தான் அவன். அந்த கம்பெனியின் முதலாளி அபி என்னும் அபிமன்யு .

 

சாரி சார். நீங்க பிஸியா இருந்தீங்க. அதான் நானே பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கூறினான் அவர்களின் கம்பெனியில் பணியாற்றும் டிசைனர்.

 

இனிமே என்னை கேட்காமல் எந்த ஒரு டெசிஷனும் உன் இஷ்டத்துக்கு எடுக்க கூடாது. ஞாபகம் வச்சுக்கோ என்று கூறிவிட்டு, கெட் அவுட் நவ் என்று கத்தினான்.

 

செல்லும் அவனை பாவமாக பார்த்த ஜீவாவை நோக்கி சொடக்கிட்டு அழைத்த அபிமன்யு, ஹூ ஆர் யூ? ஒய் ஆர் யூ ஸ்டாண்டிங் ஹியர் என்று கூறி கேள்வியாக பார்த்தான்.

 

அவனை நோக்கிச் சென்ற ஜீவா, குட் மார்னிங் சார். ஐ அம் ஜீவா. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று கூறினான்.

 

அபோட் வாட்? எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லிட்டு கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கூறி தன் பார்வையை கணினியின் புறம் திருப்பினான்.

 

ஜீவா, மீராவை பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டு அபிமன்யுவின் பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இவன் கூறிய அனைத்தையும் கேட்ட அபிமன்யு அவனின் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் அவ்வளவு தானா முடிந்து விட்டதா என்பது போல் ஜீவாவை பார்த்தான்.

 

ஜீவா, சார்.. என்று ஆரம்பிக்கையில்.

 

ஓகே ஜீவா இப்போ என்ன பண்ணனும்னு என்னை பார்க்க வந்திருக்கீங்க என்று நேராக விஷயத்திற்கு வந்தான் அபிமன்யு.

 

சார், தாத்தாவுக்கு இப்போ உடம்பு முடியல. ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருக்கோம். அவர் மீரான்ற பெயரை மட்டும் தான் அன்கான்சியஸ்ல கூட சொல்லிட்டே இருக்கார். சோ, டாக்டர்ஸ் மீராவை கூப்பிட்டு வந்து தாத்தா கிட்ட பேச வைக்க சொல்லி இருக்காங்க. அப்போ தான் அவருடைய உடம்பு ட்ரீட்மென்ட்க்கு ஒத்துழைக்கும்னு சொல்றாங்க. சோ, ப்ளீஸ் நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.

 

இவன் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அபிமன்யு, வயசானவர் தான ஜீவா எதுக்கு இவ்வளவு வொரி பண்ணிக்குறீங்க. ஜஸ்ட் லீவ்.. செத்தா சாகட்டும்.. இனிமே, வாழ்ந்து என்ன சாதிக்க போறாரு என்று சாதாரணமாக தோல்களை குலுக்கி கேட்டான்.

 

இவனின் பதிலில் அதிர்ச்சி அடைந்த ஜீவா திகைப்புடன் அபிமன்யுவை பார்த்தான்.

 

அபிமன்யு யார்....?

 

எதற்காக ஜீவா அபிமன்யுவின் உதவியை நாடி வந்திருக்கிறான்....?

 

மீரா ஜீவா உடன் தாத்தாவை பார்க்க வருவாரா....?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5