அவனதிகாரம் - 15

 

அதிகாரம் – 15

 

அபிமன்யு கூறியதை கேட்ட ஜீவாவிற்கு பெரும் கோபம் வந்தது. ஆனால், அதை வெளிக்காட்டும் சூழலில் அவன் தற்பொழுது இல்லையே.. எப்படியாவது மீராவை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும். எனவே, அமைதி காத்தான் வேறு வழி இல்லாமல்.

 

ஜீவா, சார் ப்ளீஸ், கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. இந்த ஒரு தடவை மட்டும் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் என்று மன்றாடினான்.

 

அதற்கு சலிப்பாக தன் முகத்தை திருப்பிய அபிமன்யு, ச்சே.... ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா.. ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க.. எனக்கு டைம் இல்ல யூ மே கோ நவ் என்று சிடுசிடுத்தான்.

 

அபிமன்யுவின் நடவடிக்கையில் ஜீவாவிற்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. ‘என்ன இவன் நாம எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்கோம். நம்ம சொன்னது ஒரு விஷயமே இல்லை என்ற மாதிரி நடந்துக்குறானே என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டு வெளியே, ப்ளீஸ் சார், மீரா மேடம் வந்தா தான் தாத்தாவை காப்பாத்த முடியும். இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. இனிமே, உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் என்று கெஞ்சினான்.

 

ஹே.. ஸ்டாப் இட் திஸ் நான்சென்ஸ்.. நானும் போனா போகுதுன்னு பொறுமையா சொல்லலாம்னு பார்க்குறேன். ஆனா, நீ விட மாட்ட போலருக்கே என்று கத்தியவன் கோபமாக ஜீவாவை பார்த்து, கெட் அவுட் ஃப்ரம் மை சைட்.

 

அதற்கு மேல் ஜீவாவால் பொறுக்க முடியவில்லை பெற்ற தந்தை தன் மகளை காண துடிக்கிறார். இடையில் தடுப்பதற்கு இவர்கள் எல்லாம் யார் என்று பெரும் கோபம் எழுந்தது.

 

வேகமாக நாற்காலியில் இருந்து எழுந்தவன், என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. அவர் பெத்த பொண்ண கடைசி நிமிஷத்தில் அவர் பார்க்கணும்னு ஆசைப்படுறார். அதை தடுக்க நீங்க எல்லாம் யாரு.. உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இனி, உங்க கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல.. நான் போய் மீரா மேடமை பார்த்து அவங்க கிட்டயே நேரடியா பேசிக்குறேன் என்று கூறி வெளியேற சென்றான்.

 

இவன் கூறியதை கேட்ட அபிமன்யுவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. இதுவரை இவன் கூறுவதை மட்டுமே அனைவரும் கேட்டு செய்வார்கள். யாரும் இவனை எதிர்த்து பேச மாட்டார்கள்.

 

அனைவரிடமும் தன் அதிகாரத்தின் மூலமே தான் நினைத்ததை நிறைவேற்றுபவனுக்கு, இப்பொழுது ஜீவா இவனை எதிர்த்துப் பேசியதும் கோபம் தாறுமாறாக வந்தது.

 

அவன் என்ன காரணம் கூறியிருந்தாலும், மீரா அங்கு செல்ல அபிமன்யு ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், மீராவிடமே அனைத்தையும் நேரடியாக கூறப்போகிறேன் என்று அவன் கூறிய வார்த்தைகள் தான் அபிமன்யுவை லேசாக அசைத்துப் பார்த்தது.

 

வெயிட்...! யூ இடியட்...! என்று கத்திக்கொண்டு நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்து நின்றான்.

 

இவனின் கத்தல் காதில் விழுந்தும் அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக திரும்பி என்ன என்னும் விதமாக தோள்களை குலுக்கினான் ஜீவா அபிமன்யுவை பார்த்து.

 

ஜீவாவின் இத்தகைய செயல் அபிமன்யுவிற்கு கோபத்தை கிளப்பியது. யாரும் அவனிடம் இப்படி மரியாதை குறைவாக அவ்வளவு எளிதில் நடந்து விட முடியாது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்பவனை யாரால் மரியாதை குறைவாக நடத்தி விட முடியும்.

 

தன்னை திரும்பிப் பார்த்து தோள்களை குலுக்கியவனை எரிச்சலுடன் பார்த்த அபிமன்யு, இங்க வா என்று அழைத்தான்.

 

அதற்கு ஜீவா, எதுவா இருந்தாலும் அங்கிருந்தே சொல்லுங்க. எனக்கு டைம் இல்ல, நான் போய் மீரா மேடமை மீட் பண்ணனும்.

 

ச்ச.... என்று சலித்துக் கொண்ட அபி, சரி, உனக்கு இப்போ என்ன வேணும்.

 

ஏன் எனக்கு என்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா.. இவ்வளவு நேரம் நான் சொன்னதை கவனிச்சிக்கிட்டு தான இருந்தீங்க. ஐ வாண்ட் டு மீட் மிஸஸ்.மீரா மகேந்திரன்.

 

நோ வே, மீரா மேடம் இப்போ ஊரில் இல்லை அவங்க வெக்கேஷன்காக அப்ராட் போயிருக்காங்க என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பினான் அபிமன்யு.

 

சூப்பர் சார்.. தி கிரேட் அபிமன்யு சார்க்கு பொய் சொல்லுறது ரொம்ப ஈஸி போலருக்கே.. எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர்.அபிமன்யு என்னை பத்தி நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. ஐ அம் நாட் அ கிட் நீங்க என்ன சொன்னாலும் நம்புறதுக்கு.. நான் வரும் போது மீரா மேடம் எங்க இருக்காங்கன்னு விசாரிச்சிட்டு தான் வந்திருக்கேன். ஐ நோ ஷீ இஸ் இன் சென்னை நவ் என்று கூறிவிட்டு தன் கைகளை கட்டிக்கொண்டு அபிமன்யுவின் முன்பு நிமிர்ந்து நின்றான்.

 

கடுப்பாகிய அபிமன்யு, வெளியில் வெயிட் பண்ணு கூப்பிடுறேன் என்று கூறி அவனை வெளியே அனுப்பினான்.

 

என்கிட்டயே ஆட்டிட்யூட் காட்டுறான் இடியட் என்று திட்டிவிட்டு, இவனை என்ன சொல்லி இங்கிருந்து அனுப்புவது என்று யோசித்த அபிமன்யுவிற்கு அவன் என்ன சொன்னாலும் இங்கிருந்து செல்ல மாட்டான் என்று புரிந்தது. பிறகு, தன் மனதில் ஒரு யோசனையோடு அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஜீவாவை அறைக்குள் அழைத்தான்.

 

அபி ஜீவா உள்ளே நுழைந்ததும், சிட் என்று இருக்கையை கை காட்டினான்.

 

ஜீவா அமைதியாக அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

 

ஓகே, நீ சொன்னதெல்லாம் யோசிச்சு பார்த்தேன். இப்போ உனக்கு உன் தாத்தாவை பார்க்க மீரா வரணும் அவ்வளவு தான என்று கேள்வியாக கேட்டான் அபிமன்யு.

 

அதற்கு ஜீவா என்ன கூற போகிறான் என்ற யோசனையோடே, ‘ஆமாம்’ என்னும் விதமாக தலையசைத்தான் அபிமன்யுவை பார்த்து.

 

உடனே அபிமன்யு, சரி, மீரா உன் தாத்தாவை பார்க்க நான் ஏற்பாடு பண்றேன். பட், ஒன் கண்டிஷன் என்று பீடிகை போட்டான்.

 

ஜீவா எதிர்பார்த்தது தான், என்ன.

 

நானும் மீரா கூட வருவேன் என்று கூறினான் அபி.

 

ஓகே.. நோ ப்ராப்ளம் வாங்க.

 

ஐ அம் நாட் ஆஸ்கிங் யூ பர்மிஷன் என்று பல்லை கடித்தான் அபிமன்யு.

 

அபிமன்யுவை ஜீவாவினால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவன் ஏன் இவ்வளவு கோபப்படுகிறான். இவன் குணமே இது தானா அல்லது, வேண்டுமென்றே பண்ணுகிறானா என்று ஒரு மாதிரி பார்த்தான் அபிமன்யுவை.

 

அதையெல்லாம் கண்டு கொள்ளாத அபிமன்யு, லுக்... மீரா கூட நானும் வருவேன். அதுக்கு எனக்கு யாரோட பர்மிஷனும் தேவையில்லை. பட், மீரா கிட்ட நீங்க யாரும் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது.

 

இவன் பதிலில் குழப்பமடைந்த ஜீவா, என்ன சொல்றீங்க என்று கேள்வியாக பார்த்தான் அபிமன்யுவை.

 

எஸ், அங்க மீரா வந்ததும் பெத்தவங்க பாசத்தை காட்டுறேன், அண்ணன் பாசத்தை காட்டுறேன்னு எந்த ஒரு ஃபேமிலி டிராமாவும் அங்க நடக்கக்கூடாது. அதுக்காக தான் நான் அவங்க கூட உங்க ஊருக்கு வரேன்.

 

நீங்க பேசுறது கொஞ்சம் கூட நியாயமே இல்ல அபிமன்யு. இத்தனை வருஷம் கழிச்சு பெத்தவங்க அவங்க புள்ளையை பார்க்கும் போது எப்படி பாசம் காட்டாமல் ஓரமா யாரோ மாதிரி நிற்க முடியும்.

 

ஐ டோன்ட் நீட் யுவர் எக்ஸ்பிளனேசன்ஸ்.. நான் சொன்ன கண்டிஷனுக்கு ஓகேனா மீரா அங்க வருவாங்க. இல்லைனா, எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்க வழியை பார்த்துகிட்டு நீங்க போகலாம் என்று கராராக கூறினான்.

 

இவன் கூறுவதை கேட்டு ஜீவாவிற்கு கோபம் வந்தாலும், எப்படியாவது மீராவை தாத்தாவை பார்க்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனின் கோபத்தை வெளிக்காட்ட விடாமல் தடுத்தது.

 

சரி, நீங்க சொல்ற மாதிரியே ஒத்துக்குறேன். யாரும் மிரா கிட்ட பழைய விஷயத்தை பேச மாட்டாங்க என்று உறுதி அளித்தான்.

 

நீ சொல்றதை நான் எப்படி நம்புறது. இப்போ மீரா வருவதற்காக என்கிட்ட இப்படி சொல்லிட்டு, அங்க போனதும் உங்க இஷ்டத்துக்கு எல்லா உண்மையையும் சொல்லிட்டா என்று கேள்வியாக பார்த்தான்.

 

அப்படியெல்லாம் நாங்க பண்ண மாட்டோம் சொன்ன வார்த்தையை நான் கண்டிப்பா காப்பாத்துவேன்.

 

அப்போ ஓகே என்று கூறி நெட்டி முறைத்த அபிமன்யு, நீ கிளம்பி போ நைட்டுக்குள்ள நான் மீராவோட உங்க ஊரில் இருப்பேன். பட், மீராவுக்கு வள்ளியோட அக்கா மரகதம் அவங்களோட வீட்டுக்காரர் வேலுச்சாமி அப்படின்னு தான் நான் அறிமுகப்படுத்துவேன். ரொம்ப நாளா ஏதோ மனஸ்தாபத்தில் பிரிஞ்சு இருந்த குடும்பம் இப்போ வேலுச்சாமிக்கு சீரியசா இருக்கு என்பதால் பார்க்க வந்திருக்காங்க அப்படினு தான் சொல்ல போறேன். உங்க பேமிலியில் எல்லார்கிட்டயும் இந்த ஸ்டோரியை மெயின்டைன் பண்ணிக்க சொல்லு. ஏதாவது மாத்தி சொன்னாங்கன்னா உங்க யாரையும் நான் சும்மாவே விடமாட்டேன். என்னை பத்தி விசாரிச்சிட்டு தான வந்திருப்ப உனக்கு என்னை பத்தி தெரியும்னு நினைக்கிறேன் என்று கூறி திமிராக பார்த்தான்.

 

எங்களுக்கு மீரா மேடம் ஒரு தடவை தாத்தாவ பாத்தாலே போதும். வேற எந்த ஒரு எண்ணமும் எங்களுக்கு கிடையாது. போன உறவை திரும்பவும் புதுப்பிச்சுக்கனும்னு நாங்க ஆசைப்படல.. தாத்தாவோட ஆசைக்காக தான் நான் மீரா மேடமை கூட்டிட்டு போக வந்தேன். அவங்க ஒரு தடவை வந்துட்டு போனாலே போதும் நான் வரேன் என்று வெளியேறி விட்டான்.

 

வெளியே வந்த ஜீவாவிற்கு, இவன் ஏன் இப்படி இருக்கான். என்ன மனுஷன் இவன்.. இவனுக்கு போய் கயல் விழியை கட்டி கொடுக்கலாம்னு தாத்தா யோசிச்சாரே.. நல்ல வேளை, கயல்விழியோட வாழ்க்கை தப்பிச்சிடுச்சு. அப்படி ஏதாவது நடந்திருந்தா பாவம், கயல்விழியோட வாழ்க்கையே இவன்கிட்ட மாட்டி நாசமா போயிருக்கும் என்று எண்ணினான்.

 

ஆம்! இவன் தான் மீராவின் மூத்த மகன் அபி என்னும் அபிமன்யு மகேந்திரன்..!

 

அபி மீராவை அழைத்துக் கொண்டு தாத்தாவை பார்க்க செல்வானா..?

 

பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா..?

 

செல்லும் இடத்தில் அங்கு என்ன நடக்கும்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5