அவனதிகாரம் - 19
அதிகாரம் – 19
“ஏன் மா லட்சுமி, எங்க உன் மூத்த
மகளை காணும்?” என்று கேட்டார் வள்ளியம்மை
பாட்டி.
“சின்னத்த அவ மாசமா இருக்கா. அதான்
வீட்டில் விட்டுட்டு நாங்க மட்டும் வந்திருக்கோம். அவளோட துணைக்கு தான் ஜீவா மாப்ள
போயிருக்காங்க”.
“ஓ.. அப்படியா! ரொம்ப சந்தோஷம்மா..
எத்தனை மாசம் ஆகுது?”.
“எட்டு
முடிஞ்சு 9 ஆரம்பிக்க போகுது அத்த”.
“சரி மா, வளைகாப்புலாம் செஞ்சாச்சா”.
“பண்ணிட்டோம். ஏழாவது மாசமே
வளைகாப்பு வச்சு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டோம். தல பிரசவம் இல்லையா
அதான் அவங்க அப்பா ஏழாவது மாசமே கூப்பிட்டு வந்துடலாம்னு சொன்னாங்க. இப்போ இங்க
தான் இருக்கா”.
“சரிமா, கயல்விழி என்ன பண்றா
படிக்கிறாளா?”.
“இல்ல அத்த,
அவங்க அப்பா 12வது வரைக்கும் தான் பிள்ளைங்களை படிக்க வைப்பார். 12வது முடிச்சதும்
நல்ல மாப்பிள்ளை வந்தா கட்டி கொடுத்திடுவார். பெரியவளுக்கும் அப்படி தான் பண்ணோம்.
என் அண்ணன் பையன் தான் ஜீவா. சொந்தத்திலேயே கொடுத்திடலாம்னு கொடுத்துட்டோம். இப்போ
கயல்விழிக்கும் அதே மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கோம்”.
“ஓ அப்படியா..” என்று இழுத்த வள்ளியம்மை பாட்டி, “இப்போ கயல்விழிக்கு எத்தனை வயசு ஆகுது”.
“20 வயசு ஆகுது அத்த.. 12வது
முடிச்சு ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. இன்னும் நல்ல வரன் அமையல. அதான்
பார்த்துக்கிட்டு இருக்கோம். நல்ல மாப்பிள்ளை வந்தா எப்போ வேணாலும் கட்டுற மாதிரி
தான் இருக்கோம்”.
“ம்ம்.. நல்லது மா” என்று கூறிய வள்ளியம்மை தன் மனதில், ‘எப்படி அபியிடம் பேசி சம்மதம் வாங்குவது’ என்று யோசிக்கலானார்.
அப்பொழுது
வேலுச்சாமி தாத்தாவை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர், “பேஷன்ட்கிட்ட இப்போ நல்லா இம்ப்ரூவ்மெண்ட்
தெரியுது. ஹி வில் பி பைன் சூன்”.
“தேன்க் யூ சோ மச் டாக்டர்” என்று நன்றி தெரிவித்தார் மீரா.
பிறகு,
மரகதம் பாட்டி வள்ளியம்மையையும், மீராவையும் பார்த்து, “சரி நீங்க வாங்க, நம்ம வீட்டுக்கு போயிட்டு வருவோம். கொஞ்ச
நேரம் ஓய்வெடுத்த மாதிரி இருக்கும். ரொம்ப தூரத்தில் இருந்து வந்து இருக்கீங்கல்ல” என்று தங்கள் வீட்டிற்கு அழைத்தார்.
அதற்கு
வள்ளியம்மை பாட்டி என்ன கூறுவது என்று தெரியாமல் மீராவை பார்த்தார். அதை உணர்ந்த
மீரா, “சரிங்க பெரியம்மா”.
“உன் கூட ஒரு தம்பி வந்துச்சே,
எங்கம்மா?” என்று கேட்டார் மரகதம் பாட்டி.
“அவன் என்னோட மூத்த பையன்
பெரியம்மா. அவன் பெயர் அபிமன்யு” என்று கூறினார் மீரா.
“அட ஆமா.. கேட்கவே இல்ல பாரு,
எத்தனை பிள்ளைங்கமா உனக்கு” என்று வினவினார் மரகதம் பாட்டி.
“எனக்கு மூணு பசங்க பெரியம்மா”.
அதற்கு
வள்ளியம்மை, “மூத்தவன் பெயர் அபிமன்யு அக்கா.
இரண்டாவது உள்ளவன் பெயர் ஆரியன். மூணாவது பொம்பள புள்ள பெயர் ஆரணி” என்று கூறினார்.
“மத்தவங்கள எல்லாம் கூப்பிட்டு
வரலையாமா” என்று கேட்டார் மரகதம் பாட்டி.
“இல்ல பெரியம்மா. பரீட்சை
நடக்குது, சின்னவன் காலேஜ் போறான். அதான் வர முடியல. அபி எம்பிஏ முடிச்சிட்டு
இப்போ தான் பிசினஸ் நடத்த ஸ்டார்ட் பண்ணி ஒன் இயர் ஆகுது” என்று கூறினார்.
“சரி மா, தம்பிக்கு போன் பண்ணி வர
சொல்லு. எங்கேயோ வெளியில் போயிடுச்சு எல்லாரும் சேர்ந்து கிளம்பலாம்”.
‘சரி’ என்னும் விதமாக தலையை அசைத்த மீரா, தன் செல்போனை எடுத்து
அபிக்கு அழைக்கலானார்.
மூன்றாவது
ரிங்கிலேயே எடுத்த அபி, “என்ன மாம், எல்லாம் ஓவரா. இட்ஸ்
கெட்டிங் லேட். ஷல் வி கோ நவ்”.
“இல்ல அபி.. இவங்க வீடு இங்க
பக்கத்தில் தான் இருக்காம். வீட்டுக்கு வந்துட்டு போக சொல்றாங்கப்பா. வீட்டுக்கு
போய் பார்த்துட்டு அப்படியே கிளம்பிடலாம்”.
“மாம், ஐ ஆல்ரெடி டோல்ட் யூ
ஹாஸ்பிடலுக்கு போய் பார்த்துட்டு வந்துடனும்னு. இப்போ வீட்டுக்கு கூப்பிடுறீங்க..
இதெல்லாம் சரி வராது மாம். அதான் அவரை பார்த்தாச்சுல்ல நாம இப்படியே கிளம்புவோம்,
வீட்டுக்கு எல்லாம் வேண்டாம்” என்று சிடுசிடுத்தான்.
“நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு
அபி. இப்போ தான் இரண்டு குடும்பமும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க. வீட்டுக்கு
போகாமல் இப்படியே கிளம்புனா நல்லா இருக்காது பா. போய் பார்த்துட்டு கிளம்பிடலாம்.
நம்ம என்ன அங்க ஸ்டே பண்ணவா போறோம். சும்மா போயிட்டு கிளம்பிட போறோம். இதில் என்ன
இருக்கு” என்று அவனை சமாதானம் செய்தார்.
வேறு
வழி இன்றி ஒப்புக்கொண்ட அபிமன்யு, “ஓகே
மாம். நீங்க சொல்றதுனால தான் அக்செப்ட் பண்றேன். பட், ஒன் ஹவர்ல கிளம்பிடனும்.
அங்க போயிட்டு வேற எதுவும் என்கிட்ட கேட்கக் கூடாது. நோ மோர் எக்ஸ்கியூஸ்”.
“ஓகே அபி ஷ்யோர்” என்று ஒப்புக்கொண்டார் அவனின் அன்னை
மீரா.
“நான் காரில் தான் இருக்கேன்.
நீங்க அவங்க அட்ரஸ் வாங்கிக்கிட்டு வாங்க. நம்ம இப்படியே கிளம்பலாம்”.
“அதெல்லாம் நல்லா இருக்காது அபி.
நீ இவ்வளவு தூரம் வந்துட்டு தாத்தாவை பார்க்காமல் போகுறது. அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. வா, வந்து தாத்தாவை
பார்த்ததும் நம்ம அப்படியே கிளம்பிடலாம். நானும், பாட்டியும் பார்த்துட்டோம். நீ
சீக்கிரமா வா” என்று கூறி, அவனின் பதிலை
எதிர்பாராமல் வைத்து விட்டார்.
அவனை
பதில் பேச விட்டாள் அவன் ஒப்புக்கொள்ள மாட்டான் வர முடியாது என்று தான் கூறுவான்
என்று மீராவுக்கு தெரியும். எனவே, அவனின் பதிலை எதிர்பாராமல் தான் கூற வந்ததை
மட்டும் கூறிவிட்டு அணைப்பை துண்டித்து விட்டார்.
கடுப்பில்
ஸ்டியரிங்கில் ஒரு குத்துவிட்ட அபி, “இதுக்கு
தான் இங்க வரவே கூடாதுன்னு நினைச்சேன். எல்லாம் நான் நினைச்ச மாதிரியே தான்
நடக்குது” என்று சிடுசிடுத்தபடி
காரிலிருந்து இறங்கி மருத்துவமனையினுள் சென்றான்.
அவன்
தங்களை நோக்கி வருவதை கண்ட யாழினி கயல்விழியிடம், “அக்கா அங்க பாரு, அந்த மிஸ்டர். ஸ்மார்ட் இங்கேயும்
வந்துட்டான்” என்று காட்டினாள்.
அவனை
பார்த்த கயல்வழி, “இவன் எதுக்கு டி நம்ம இருக்க
பக்கம் வரான்.. யாருன்னு தெரியலையே”.
அதற்குள்
இவர்களின் அருகில் வந்த அபிமன்யு அமைதியாக நின்றான்.
மரகதம்
பாட்டியை காட்டிய மீரா, “இவங்க தான் பெரிய பாட்டி. வணக்கம்
சொல்லு அபி” என்று கூறினார். வேண்டா
வெறுப்பாக ஒரு வணக்கத்தை வைத்தான் அபிமன்யு.
“பரவாயில்ல இருக்கட்டும் கண்ணா..
எப்படி இருக்க?” என்று கேட்டார் மரகதம் பாட்டி.
“என் பேரு ‘கண்ணா’ இல்ல ‘அபி’ நான் நல்லா இருக்கேன்”.
இவன்
கூறிய பதிலை கேட்டு இவனுக்கு பின்னால் இருந்து கலகலவென சிரிப்பு சத்தம் கேட்டது.
திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்து முறைத்தான் அபி. இவன் முறைப்பதை பார்த்ததும்,
கயல்விழியும், யாழினியும் ‘கப் சிப்’ ஆகினர்.
பிறகு
மீரா, “போ அபி. அந்த ரூம்ல தான் தாத்தா
இருக்காங்க. போய் பார்த்துட்டு வா”
என்று அனுப்பினார்.
அபி
அமைதியாக அந்த அறையை நோக்கி நகர்ந்தான்.
அறையினுள்
அபி நுழைந்ததும் ‘யார்’ என்று தெரியாமல் புரியாத பார்வை பார்த்த தாத்தாவின் அருகில்
சென்ற அபி, “நான் மீராவோட பையன்” என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.
“நல்லா இருக்கியா?” என்று கேட்டார் தாத்தா.
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி
இருக்கீங்க” என்று விசாரித்தான்.
“உங்களை எல்லாம் பார்த்ததும்
எனக்கு எல்லாமே சரியாயிடுச்சு” என்று சந்தோஷமாக கூறினார்
தாத்தா.
அதற்கு
சலிப்பாக தன் தலையை திருப்பிய அபிமன்யு, “சரி, நாங்க கிளம்புறோம்” என்று கூறிவிட்டு, அவரின் பதிலை எதிர்பாராமல் சரசரவென வெளியே
வந்து விட்டான்.
என்ன
இவன் பாட்டுக்கு வந்துட்டு கிளம்பிட்டான் என்று நினைத்த தாத்தா, மீராவை பார்த்த
சந்தோஷத்தில் அபிமன்யுவின் நடவடிக்கை அவருக்கு பெரிதாக தெரியவில்லை.
வெளியே
வந்த அபி தன் அன்னையை பார்த்து, “கிளம்பலாமா மாம்” என்று கேட்டான்.
“ஓகே அபி” என்று கூறிய மீரா லட்சுமியை பார்த்து, “அண்ணி, நீங்க முன்னாடி காரில் போங்க.
நாங்க உங்களை பாலோ பண்ணிக்கிட்டு பின்னாடியே வந்துடறோம்”.
அனைவரும்
சுப்பிரமணியத்திடம் கூறிவிட்டு அவர்களின் வீடு நோக்கி புறப்பட்டனர். அப்போது
யாழினி கயல்விழியிடம், “அக்கா அந்த மிஸ்டர். ஸ்மார்ட்
நம்ம அத்தை பையன் தான் போலருக்கு” என்று கூறி சிரித்தாள்.
“ம்ம்... ஆமா, நீ பேசுனதெல்லாம்
கேட்டு இருந்தா இப்போ அவன் நம்மை பத்தி என்ன நினைச்சிருப்பான்” என்று முறைத்தாள் கயல்விழி.
“நான் சும்மா விளையாட்டுக்கு தான்
பேசினேன்” என்று கூறி சமாளித்தாள் யாழினி.
அனைவரும்
வீடு வந்து சேர்ந்ததும் லட்சுமி, “உள்ள
வாங்க அத்தை, வா மீரா, வாங்க தம்பி”
என்று அழைத்துவிட்டு உள்ளே சென்றார். மூவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.
அப்போது
வெளிவந்த வெண்ணிலா அவர்களுக்கு வணக்கம் வைத்து, “வாங்க” என்று அழைத்தாள்.
எழுந்து
வெண்ணிலாவின் அருகில் சென்ற வள்ளியம்மை பாட்டி, “நல்லா இருக்கியாமா?”
என்று கூறி அவளின் தலையை தடவி கொடுத்தார்.
“நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க
எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தாள் வெண்ணிலா.
“நல்லா இருக்கேன் மா” என்று இவர்கள் உரையாடல் ஒரு புறம் நடந்து
கொண்டிருக்க.
ஜீவா
அபிமன்யுவை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தான். ‘நாம கூப்பிடும் போது வரர்துக்கு அவ்வளவு கண்டிஷன் போட்டான்.
இப்போ வீட்டுக்கே வந்து இருக்கான். இவன் என்ன மாதிரி கேரக்டர்னு புரிஞ்சுக்கவே
முடியலையே’ என்று எண்ணி அபிமன்யுவை
பார்த்துக் கொண்டிருந்தான்.
அதனை
உணர்ந்த அபிமன்யு, ‘எல்லாம் என் நேரம்’ என்று மனதிற்குள் திட்டினான்.
கயல்விழிக்கும்,
அபிமன்யுவிற்கும் திருமணம் நடைபெறுமா..?
தாத்தாவின்
ஆசை நிறைவேறுமா..?
அபிமன்யு
எதற்காக இவர்கள் மீது கோபமாக உள்ளான்..?
கருத்துகள்
கருத்துரையிடுக