அவனதிகாரம் - 7
அதிகாரம் – 7
நான்கு
வருடங்கள் கழித்து...
வெண்ணிலா
தன் முதல் மகவை சுமந்துக்கொண்டு இருக்கிறாள். ஆம், ஜீவா எண்ணியது போல் இரண்டு
வருடங்கள் குழந்தை வேண்டாமென இருந்துவிட்டான்.
அந்த
இரண்டு வருடங்களும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொண்டனர்.
வெண்ணிலாவும் அவர்களுடைய இரண்டாம் திருமண நாள் அன்று தன் காதலை ஜீவாவிடம்
வெளிப்படுத்தினாள்.
இதில்,
ஜீவாவிற்கு பெரும் மகிழ்ச்சி. ஆனந்தத்தில் அவனது காதல் மனைவி நிலாவை கொண்டாடித்
தீர்த்துவிட்டான்.
அவர்கள்
தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு
குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. ஊரில் உள்ள அனைவரும் இவர்களுக்கு குழந்தை
செல்வம் இருக்காது என்று இவர்கள் காதுபடவே பேச ஆரம்பித்தனர்.
அதில்,
வெண்ணிலாவிற்கு மிகவும் வருத்தம். அவளின் குடும்பத்தினருக்கும் தான். வெண்ணிலாவின்
தாய் பல கோவில்கள் சென்று தன் மகளிற்காக வேண்டிக் கொண்டார்.
இறுதியில்,
மூன்று வருடங்கள் கழித்து வெண்ணிலா கர்ப்பம் அடைந்தாள். தற்பொழுது அவளிற்கு 8 ஆம்
மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவரையிலும் அவள் தன் படிப்பைப் பற்றி ஜீவாவிடம்
கூறவில்லை.
கயல்விழி,
12ஆம் வகுப்பு முடித்து 1 வருடம் ஆகப் போகிறது. அவளின் ஜாதகப்படி அவளிற்கு வரன்
இன்னும் அமையவில்லை.
யாழினி,
பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.
கயல்விழி,
வெண்ணிலாவை போல் இல்லாமல் தன் தந்தையிடமே தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை தான்
மேல் படிப்பு படிக்க விரும்புவதாக கூறிவிட்டாள்.
சுப்ரமணியன்,
“அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு
சரி வராது. உன்னோட அக்காவை பார்த்தல்ல பள்ளிக்கூடத்திலேயே முதல் மார்க் வாங்கினா.
ஆனா, நான் சொன்னதும் ஜீவா மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா. பொம்பள
புள்ளைங்க இப்படி பெத்தவங்க பேச்சைக் கேட்டு நடந்தா தான் பெத்தவங்களுக்கு மரியாதை.
நீ என்ன இப்படி புது பழக்கமா அப்பாகிட்டயே எதிர்த்து பேசிட்டு இருக்க” என்று சற்று கோபமாக கேட்டார்.
அவரின்
கோபத்தைப் பார்த்து பயப்படுவதற்கு கயல்விழி ஒன்றும் வெண்ணிலாவோ, லட்சுமியோ,
யாழினியோ கிடையாதே.... கயல்விழிக்கு தான் துணிச்சல் அதிகம் ஆகிற்றே...!
“நான் என்ன படிக்க தானே
கேட்கிறேன். வேற ஏதாவது தப்பா பண்ணிட்டேன். இதுக்கு ஏன் பா விட மாட்டேங்குறீங்க..?” என்று மீண்டும் தான் பிடித்த பிடியிலேயே
இருந்தாள்.
“நம்ம ஊரிலேயும் நிறைய பிள்ளைங்க
படிக்கிறாங்க. நாங்களும் படிச்சா உங்களுக்கும் பெருமை தானே” என்றாள்.
சுப்பிரமணியனுக்கு
கோபம் தலைக்கேறியது, “லட்சுமி...! என்ன இது.. இப்படித்
தான் புள்ளையை பேச விட்டு வேடிக்கை பார்ப்பியா..? நாம நம்ம பிள்ளைங்களை பொறுப்பா
வளர்த்திருக்கோம்னு நான் எவ்வளவு பெருமை பட்டுக்கிட்டு இருக்கேன். இவ என்ன இப்படி
பேசிக்கிட்டு இருக்கா” என்று லட்சுமியிடம் எகிரினார்.
பெரும்பாலான
குடும்பத் தலைவர்கள் தங்கள் கோபத்தை காட்டும் ஒரே இடம் அவர்களது மனைவி தானே...!
லட்சுமியும்
கயல்விழியிடம், “நான் தான் உன்கிட்ட முன்னாடியே
சொல்லிட்டேன்ல. அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கனு. அப்புறம் ஏன் இப்படி
அடம் பிடிக்கிற. அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்காக தான் இருக்கும்” என்று அவளை சமாதானப்படுத்தி அங்கிருந்து
நகர்த்த முயன்றார்.
சுப்பிரமணியன்,
“பன்னிரெண்டாவது முடிச்சுட்டு
கட்டி கொடுத்ததுக்கே வெண்ணிலா குழந்தை இல்லாமல் எவ்வளவு பேச்சு வாங்குனானு
பார்த்தல்ல. அம்புட்டு கஷ்டப்பட்டா என் மகள்.. இப்போ தான் கடவுள் புண்ணியத்தில் அவ
மாசமா இருக்கா. உன்னை படிக்க அனுப்பிட்டு வயசானதுக்கு அப்புறம் கட்டி கொடுத்து நீ
கஷ்டப்படுறதையும் எங்களால் பார்க்க முடியாது. எல்லாம் காலா காலத்தில் நடக்கணும்” என்று கூறிவிட்டு மேற்கொண்டு பேசுவதற்கு
அவர் அங்கே நிற்கவில்லை வெளியே சென்று விட்டார்.
பாட்டி
லட்சுமியிடம், “என்ன இது லட்சுமி, சுப்பிரமணி
எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறான். வெண்ணிலாவுக்கு குழந்தை இல்லாததுக்கும்,
கயல்வழி படிப்புக்கும் என்ன சம்பந்தம்”
என்று தன் மருமகளிடம் கேட்டார்.
“உங்க மகனை பத்தி தான் உங்களுக்கு
தெரியுமே அத்தை. அவருக்கு இவளை படிக்க வைக்குறதுக்கெல்லாம் விருப்பமில்லை. அதை
சொன்னாலும் இவ புரிஞ்சுக்க மாட்டேங்குறா.. ரெண்டு பேருக்கும் நடுவில் நான் தான்
மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு” என்று புலம்பினார்.
கயல்விழி
எதுவும் பேசவில்லை. அமைதியாக தன் கோபத்தை அடக்கி கொண்டாள். பாட்டி கயல்விழியிடம்
சென்று, “ஏன்தா கயல்விழி, உன் அப்பனை பத்தி
தான் உனக்கு தெரியும்ல. அப்புறம் ஏன்தா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க. கல்யாணம்
கட்டிக்கிட்டு போய் நீ ஆசைப்பட்ட படிப்பு படி டா” என்று தற்சமயம் அவளை அமைதியாக்கும் பொருட்டு சமாதானம்
பேசினார்.
அதற்கு
கயல்விழியோ, “வெண்ணிலா அக்காகிட்டயும் இப்படி
தானே பாட்டி சொன்னீங்க. அவ கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் எங்க படிச்சா...” என்று கோபமாக கேட்டாள்.
“அதுக்கு நாம என்ன பண்ண முடியும்.
அது அவளோட முடிவு”.
கயல்விழி
கோபமாக அவளது அறையை நோக்கி சென்று விட்டாள். அதன் பிறகு, கயல்விழிக்கு மாப்பிள்ளை
பார்க்கும் வேலை ஆரம்பமானது.
அவளின்
நல்ல நேரமோ, கெட்ட நேரமோ எந்த ஜாதகமும் இவளது ஜாதகத்துடன் பொருந்தவில்லை. திருமண
வேலைகள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்தே தடைபட்டுக் கொண்டே வந்தது. சுப்பிரமணிக்கு
அந்த கோபம் அனைத்தும் கயல்விழியின் மேலே திரும்பியது.
“ஆரம்பிக்கும் போதே வேண்டாம்
வேண்டாம்னு அபசகுணம் மாதிரி பேசுன.. இப்போ பார்த்தியா, எல்லாமே தடையா போகுது. எந்த
ஜாதகமும் பொருந்தி வரமாட்டேங்குது. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்த்து உங்களை
கட்டிக் கொடுத்துட்டு நீங்க வாழுறதை கண்ணார பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ
வெளியூரில் தான் மாப்பிள்ளை தேடணும் போலருக்கு” என்று அனைவரின் முன்பும் கயல்விழியை பார்த்து கோபமாக
கூறினார்.
தாத்தா,
“தம்பி, இப்போவாவது நான் சொல்றதை
கொஞ்சம் கேளுயா” என்று சுப்பிரமணியனிடம்
கூறினார்.
“நீங்க சொல்றதெல்லாம்
கேட்குறதுக்கு வேணும்னா நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வருமா” என்று கோபமாக பேசினார்.
“ஒரு தடவை பேசி பார்க்கலாமே பா” என்று பாவமாக கேட்டார்.
“நீங்க சொன்னீங்களேனு தான் ஊர்
திருவிழாவுக்கு கூப்பிட்டு பாத்தோம். வந்தாங்களா..? இல்லையே.. உங்க ஊர்
திருவிழாவுக்கு நாங்க ஏன் வரனும் எங்களுக்கு நீங்க யாருன்னு எடுத்தெரிஞ்சு
பேசிட்டாங்க. அப்புறமும் வெண்ணிலா கல்யாணத்துக்கு அவங்களை கூப்பிடனும்னு
ஆசைப்பட்டீங்க. உங்க ஆசைப்படி செய்யுங்கனு நானும் சரினு விட்டேன். நேரில் போய்
கூப்பிட்டு யாரு அசிங்கப்பட்டது. எவ்வளவு பெரிய மனுஷன் நீங்க... கொஞ்சம் கூட
மரியாதை இல்லாமல் பத்திரிக்கையை வாங்க முடியாதுன்னு உங்ககிட்டயே திருப்பி கொடுத்து
அனுப்பிட்டாங்க. இவளோ நடந்தும், கயல்விழிக்கு அவங்க பையனை போய் மாப்பிள்ளை
கேட்கலாம்னு சொல்லுறீங்களே பா. இதெல்லாம் எப்படி நடக்கும். எனக்கு மட்டும் பாசம்
இல்லைனு நினைச்சிட்டு இருக்கீங்களா. நானும் தான் பாசமா இருக்கேன். எங்க பாசத்தை
பிரிச்சதே நீங்க தான. ஒத்துமையா இருக்க வேண்டியவங்களை இப்படி தனித்தனியா யாரோ
மாதிரி நிக்க வச்சுட்டீங்கல்ல” என்று வருத்தத்துடன் முடித்தார்.
தாத்தாவிற்கு
பேச வார்த்தைகள் இல்லை. பாட்டியும், அவருக்காக எதுவும் பரிந்து பேசும் நிலையில்
இல்லை. அவர் செய்தது ஒன்றும் சிறிய விஷயம் இல்லையே. எவ்வளவு பெரிய விஷயத்தை அன்று
சாதாரணமாக செய்து விட்டார்.
அதில்,
பாட்டிக்கும் மன வருத்தம் இருந்தது. ஆனாலும், ஒன்றும் பேச முடியாத நிலைமையில்
அப்பொழுதும் அமைதியாக நின்றார். இப்பொழுதும் அமைதியாக நிற்கிறார்.
ஆனாலும்,
வேலுச்சாமி தாத்தாவை பார்க்கும் பொழுது பாட்டிக்கு பாவமாக தான் இருந்தது. தான்
செய்த தவறை எப்படியாவது தானே சரி செய்ய வேண்டும் என்று எண்ணி, அவர் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே சென்று முடிகின்றன.
சுப்பிரமணியன்
பேசி முடிக்கையில் தாத்தா தன் நெஞ்சினை பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்தார்.
அனைவரும் பதட்டமாகி ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்தனர்.
சுப்பிரமணியன்,
“அப்பா..... என்ன ஆச்சு.....
ஒன்னும் இல்லை இங்க பாருங்க.... லட்சுமி, கொஞ்சம் தண்ணி கொண்டாமா” என்று கத்தினார்.
மரகதம்
பாட்டி, “என்னங்க, இங்க பாருங்க.... இங்க
பாருங்க....” என்று பதட்டமாக கூறிக் கொண்டே
இருந்தார்.
வெண்ணிலாவும்,
கயல்விழியும், யாழினியும், “தாத்தா, என்ன ஆச்சு தாத்தா,
எழுந்திரிங்க தாத்தா” என்று பதறினர்.
லட்சுமி
தண்ணிரைக் கொண்டு வந்ததும் சுப்பிரமணியன் அதை வாங்கி அவரின் முகத்தில் தெளித்து, “அப்பா, அப்பா இங்க பாருங்க” என்று எழுப்பி பார்த்தார்.
ஆனாலும்,
வேலுச்சாமி தாத்தாவிடம் எந்த ஒரு அசைவம் தென்படவில்லை.
உடனே
தாமதிக்காமல், “முருகேசா காரை எடு” என்று தன் வீட்டில் பணிபுரியும் கார்
ஓட்டுனரிடம் கூறிவிட்டு தன் தந்தையை தூக்கிச் சென்று காரில் ஏற்றினார்
சுப்பிரமணியன்.
முன்பக்கம்
டிரைவர் பக்கத்தில் சுப்பிரமணியனும், பின் சீட்டில் தாத்தாவை படுக்க வைத்துவிட்டு
லட்சுமி ஏறச் சென்றார். அதற்குள், வெண்ணிலாவை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்த
ஜீவா இவர்களை பார்த்துவிட்டு, “என்ன ஆச்சு மாமா, தாத்தாவுக்கு
என்ன ஆச்சு.. எங்க கூப்பிட்டு போறீங்க”
என்று விசாரித்தான்.
“ஒன்னும் இல்ல மாப்ள, திடீர்னு
மயக்கம் போட்டுட்டார். தண்ணீர் தெளிச்சு பார்த்தோம் எழுந்திருக்கல.. அதான் ஆஸ்பித்திரி
கூட்டிட்டு போலாம்னு கிளம்புறோம்” என்றார் சுப்ரமணியன்.
ஜீவா, “சரி மாமா, நானும் கூட வரேன். அத்தை, நீங்க
இருங்க நான் மாமா கூட போறேன்”.
“சரிங்க மாப்ள” என்று லட்சுமி இறங்கிக்கொண்டார்.
பிறகு,
தாத்தாவின் அருகில் ஜீவா அமர்ந்துக் கொண்டான். கார் ஹாஸ்பிடலை நோக்கி சென்றது.
மருத்துவமனையை அடைந்ததும் தாத்தாவை அவசர பிரிவில் அனுமதித்தனர்.
“என்ன ஆச்சு மாமா. நல்லா தானே
இருந்தாங்க. திடீர்னு எப்படி மயக்கம் வந்துச்சு” என்று தன் மாமனாரிடம் விசாரித்தான்.
இனி
மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தவர், “அது வந்து மாப்ள..”
என்று இழுத்தார்.
“எதுவா இருந்தாலும் பரவாயில்ல
மாமா, சொல்லுங்க”.
இவ்வளவு
நாட்களாக தன் பிள்ளைகளுக்கு கூட தெரியாத விஷயத்தை முதல் முறையாக ஜீவாவிடம்
சுப்பிரமணியன் கூறத் தொடங்கினார்.
“அப்பாவோட மனசுல ரொம்ப வருஷமாவே
ஒரு வருத்தம் இருக்கு மாப்ள. அதை எப்படியாவது சரி பண்ணிடனும்னு அவரும் எவ்வளவோ
மெனக்கெடுறார். ஆனா, அதை சரி பண்ண முடியல. நாங்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப்
பார்த்துட்டோம். ஆனாலும், அவரால் அந்த விஷயத்தை விட முடியல. ஒருத்தவங்க மேல பாசம்
வச்சுட்டா அதை மறக்குறது ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்லையே..” என்றார் வருத்தமாக.
தாத்தாவின்
மனதில் இருக்கும் வருத்தம் என்ன என்பதை அறிந்த பின் ஜீவா அதை சரி செய்ய உதவி
புரிவானா...?
தாத்தாவின்
ஆசைப்படி கயல்விழிக்கு அவனுடன் திருமணம் நடக்குமா...?
கருத்துகள்
கருத்துரையிடுக