அவனதிகாரம் - 9
அதிகாரம் – 9
பூட்டிய
வீட்டை பார்த்ததும் வேலுச்சாமியும், மரகதமும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
‘என்ன
வீடு பூட்டி இருக்கு எங்க போனாங்க..? குழந்தை எங்கே..?’ என்ற பல கேள்விகள்
அவர்களுக்குள் எழுந்தது.
மரகதம்,
“என்னங்க வீடு பூட்டி இருக்கு..
எங்க போயிருக்காங்கன்னு தெரியலயே” என்று படபடப்பாக கேட்டார்.
வேலுச்சாமி,
“தெரியலயே மரகதம், ஒருவேளை
பிள்ளையை தூக்கிக்கிட்டு பக்கத்தில் கோவிலுக்கு எங்கேயாவது போயிருக்காங்களோ
என்னவோ... இரு அக்கம் பக்கத்தில் விசாரிச்சு பார்க்குறேன்” என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று
விசாரித்தார்.
பக்கத்து
வீட்டுக்காரர், “தெரியலைங்க ஐயா.. நாலு நாளா
பூட்டி தான் கிடக்கு” என்று கூறினார். அவரின் பதிலை
கேட்டதும் மீண்டும் திகைத்தார் வேலுச்சாமி.
ஏனெனில்,
கிருஷ்ணமூர்த்தி இவரிடம் கூறாமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டார்.
அப்படிப்பட்டவர் குழந்தையை வாங்கியதில் இருந்து இவரை சந்திக்கவும் இல்லை, இவரிடம்
பேசவும் இல்லை.
இப்பொழுது
வீடும் பூட்டு போட்டு இருக்கிறது. வேலுச்சாமி குழம்பிப் போனார். அவருக்கு என்ன
நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. அதற்குள் மரகதம் அழுகத் தொடங்கி விட்டார்.
“என்னங்க இது எங்க போனாங்கன்னு
தெரியலையே.. எங்கனு போய் நான் தேடுவேன்”
என்று புலம்பி அழத் தொடங்கினார்.
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா
மரகதம்” என்று வீட்டிற்கு அழைத்து
வந்தார் வேலுச்சாமி.
சுப்பிரமணியனுக்கு
நடப்பவை ஒன்றும் புரியவில்லை சிறு பிள்ளை தானே.. அழுது கொண்டிருக்கும் தன்
தாயிடம், “என்னம்மா என்ன ஆச்சு? ஏன்
அழறீங்க? சித்தி வீட்டில் இல்லையா... பாப்பாவை கூப்பிட்டுகிட்டு ஊருக்கு போய்
இருக்காங்களா? எப்போ மா வருவாங்க?”
என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டான்.
இவனின்
கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மரகதம் மீண்டும் மீண்டும் நொந்து போனார்.
வேலுச்சாமி
தனக்கு தெரிந்தவர்களிடம் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி விசாரிக்கலானார்.
ஆனால்,
யாருக்கும் அவரைப் பற்றிய எந்த ஒரு விவரமும் தெரியவில்லை. வீட்டில் நடந்த
பிரச்சனையில் வேலுச்சாமி நான்கு நாட்களாக ஜவுளி கடைக்கும் செல்லவில்லை.
ஆகையால்,
கிருஷ்ணமூர்த்தி ஜவுளிக்கடைக்கு செல்லாததும் இவருக்கு தெரியாமலே போனது. இன்று
கடைக்கு சென்று ஜவுளிக்கடை ஊழியர்களிடம் விசாரிக்கும் பொழுது தான் நான்கு நாட்களாக
கிருஷ்ணமூர்த்தி கடைக்கும் செல்லவில்லை என்ற விஷயம் தெரிய வந்தது. மலைத்து
நின்றார் வேலுச்சாமி...
ஒரு
பக்கம், அவர்களை தேடிக்கொண்டும். மற்றொரு பக்கம், வீட்டில் மரகதத்தையும்,
சுப்பிரமணியையும் சமாதானப்படுத்திக் கொண்டும் வேலுச்சாமி தன் நாட்கள் நகர்ந்தினார்.
நாட்கள்
வாரங்களாக கடந்தது கிருஷ்ணமூர்த்தியை பற்றி எந்த ஒரு விவரமும் தெரியவில்லை.
வாரங்கள் மாதங்களாக கடந்தும், மாதங்கள் ஆண்டுகளாக கடந்தும் விட்டது.
வள்ளியம்மையும்,
கிருஷ்ணமூர்த்தியும் குழந்தையை அவர்களுடன் எடுத்துச் சென்று 30 வருடங்கள்
ஆகிவிட்டது. வேலுச்சாமியும் தனக்குத் தெரிந்த வரை சுற்றுவட்டாரத்தில் அனைவரிடமும்
விசாரித்து பார்த்து விட்டார். அவர்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.
30
வருடங்கள் கழித்து...
வேலுச்சாமி
தொழில் ரீதியாக சென்னை வரை பயணம் மேற்கொண்டார். அப்பொழுது தான் சென்னையில் அவருடைய
நண்பர் கிருஷ்ணமூர்த்தியை கண்டார்...!
பார்த்ததும்
இவருக்கு அதிர்ச்சி தாளமுடியவில்லை. அவர் கிருஷ்ணமூர்த்தி தானா என்னும் சந்தேகமும்
ஏற்பட்டது. அவர் அருகில் சென்று ‘கிருஷ்ணமூர்த்தி’ என்று அழைத்தார்.
இவரை
பார்த்ததும் கிருஷ்ணமூர்த்தி பதட்டமாக அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டார்.
வேலுச்சாமி,
“கிருஷ்ணமூர்த்தி, டேய்
கிருஷ்ணா... கிருஷ்ணா... இருடா, எங்க போற...” என்று அழைத்தார்.
வேலுச்சாமியை
இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. தான் பார்ப்பது உண்மை தானா
என்று சந்தேகம் எழுந்தது. எப்படி தெரிந்திருக்கும்....
30
ஆண்டுகளாக யாருக்கு தெரியக்கூடாது என்று தான் வளர்ந்த ஊரை விட்டு வந்து மறைந்து
மறைந்து வாழ்ந்தாரோ அவர் இப்பொழுது இதோ கண் முன்னே நிற்கிராரே.
பார்த்ததும்
பதட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவ்விடத்தை விட்டு கடகடவென நடக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது
அவரின் கையை பிடித்து தடுத்த வேலுச்சாமி, “கிருஷ்ணா இங்க பாரு.. நான் தான் டா வேலு.. எங்க போன இவ்வளவு
நாள்..? வள்ளி எப்படி இருக்கா..? குழந்தையை வேற தூக்கிக்கிட்டு போயிட்டியே..
பிள்ளை எப்படி இருக்கு..? உங்களை காணும்னு நாங்க எங்கெல்லாம் விசாரிச்சோம்
தெரியுமா.. வீட்டில் மரகதமும், சுப்பிரமணியனும் ரொம்ப கவலைப்பட்டாங்க.. நானும்
மரகதமும் உன்னை தேடாத இடம் இல்லை. எங்கடா போனீங்க..? பிள்ளை எப்படி இருக்கு..?
குழந்தை நல்லா இருக்குல்ல..? குழந்தைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல..?” என்று பதட்டமாகவும், ஆனந்தமாகவும்
கேள்விகளை அடக்கி கொண்டே போனார்.
இவரின்
கேள்விகள் எதற்கும் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
உடனே
வேலுச்சாமி, “என்னடா கிருஷ்ணா என்ன ஆச்சு...
ஏன் ஒரு மாதிரி அமைதியா இருக்க.. ஒன்னும் பிரச்சனை இல்லைல..?” என்று மீண்டும் கேட்டார்.
அதற்கு
கிருஷ்ணமூர்த்தி கோபமாக, “என்ன வேணும் உனக்கு.. இப்போ நான்
என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்குற.. நான் என் பொண்டாட்டி என் புள்ள மூணு பேரும்
சந்தோஷமா, நிம்மதியா இருக்கோம். போதுமா..! இனிமே, எங்களை தொந்தரவு பண்ணாத..
உங்களுடைய உறவே வேண்டாம்னு தான நாங்க தனியா வந்துட்டோம். இப்போ எதுக்காக திரும்ப
வந்து எங்களை இப்படி தொந்தரவு பண்றீங்க”
என்று கோபமாக படபடவென பேசினார்.
வேலுச்சாமிக்கு
ஒன்றும் புரியவில்லை, “என்ன ஆச்சு..? ஏன் இப்படி எல்லாம்
பேசுற..? நாங்க என்ன டா பண்ணோம்” என்று அப்பாவியாக கேட்டார்.
“ஆமா, நீங்க எதுவுமே பண்ணல..
இனிமேலும் எதுவும் பண்ணக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன் போதுமா” என்றார்.
நண்பனிடம்
இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திடாத வேலுச்சாமி, “எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு டா.. நீ சொன்னா தானே
எனக்கு தெரியும்.. உன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கனு தெரியாமல் நான்
என்னனு புரிஞ்சுக்கிறது. உங்களை காணோம்னு நாங்க எங்கெல்லாம் தேடுனோம் தெரியுமா...
இப்போ இப்படி கோவமா பேசுறியே.. ஏன் இவ்வளவு கோவப்படுற” என்று ஆற்றாமையுடன் கேட்டார்.
“போதும் வேலு நிறுத்து! இனிமே, என்
முகத்திலேயே முழிக்காத.. உங்க யாரையும் பார்க்க நாங்க விரும்பல.. இனிமே இப்படி
சந்திக்கிறதை விட்டுடு.. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்” என்று கோபமாக கூறிவிட்டு இடத்தை காலி
செய்தார்.
அவரை
பின்தொடர்ந்த வேலுச்சாமி அவரின் வீட்டு முகவரியை கண்டு கொண்டார். வேலுச்சாமி ஆறு
மாதத்திலேயே அள்ளிக் கொடுத்த தன் செல்ல மகளை அங்கே கண்டார். 31 வயது மங்கையாக
வளர்ந்திருந்தால் அவரின் செல்ல மகள்...!
தன்
மகளுடைய பெயர் கூட தெரியவில்லையே என்று வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்தார்
வேலுச்சாமி.
அப்பொழுது
தூரத்தில், “அம்மா இங்க வாங்க” என்று ஏழு வயதுடைய மகன் இவர் மகளை ஓடி
வந்து அணைத்துக் கொண்டான்.
இதை
கண்ட வேலுச்சாமிக்கு அப்பொழுது தான் புரிந்தது. அவருடைய மகளுக்கு திருமணம்
முடிந்து ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது என்பது. பெற்றவருக்கு கண்கள் எல்லாம்
நிறைந்துவிட்டது இக்காட்சியை காணும் பொழுது. தன் மகளையும், தன் பேரக்
குழந்தையையும் முதல் முறை காண்கிறார் அல்லவா.... கண்களில் கண்ணீர் ஆறென வடிய
தொடங்கியது.
அப்போது
தான் இவரை கவனித்த அப்பெண்மணி, “யார் நீங்க? யாரை பாக்கணும்?” என்று வினவினாள்.
தன்
மகள் முதன் முதலில் தன்னிடம் பேசுகிறாள் என்பதை உணர்ந்த வேலுச்சாமி. என்ன கூறுவது
என்பதை மறந்து அவரையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றார்.
“யார் நீங்க? என்ன வேணும்? யாரை
பார்க்க வந்திருக்கீங்க?” என்று மீண்டும் வினாவினார்
பெண்மணி.
அப்பொழுது
பின்னாலிருந்து, “மீரா யாருமா? யார்
வந்திருக்காங்க?” என்று கேட்டபடி வள்ளியம்மை
வெளிவந்தார்.
வள்ளியம்மையை
பார்த்த வேலுச்சாமிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
வேலுச்சாமியை
இங்கே சற்றும் எதிர்பாராத வள்ளியம்மை அதிர்ச்சியில் பேசாமல் நின்றுவிட்டார்.
“என்ன வள்ளி, என்னை இப்போ நீங்க
எதிர்பாக்கலையோ” என்று எள்ளலாக கேட்டார்
வேலுச்சாமி.
பதில்
கூறாமல் அவரையே பேய் அறைந்தார் போல் பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மை, “நீ... நீங்க... எப்படி... இங்க” என்று வார்த்தைகள் தந்தியடிக்க பேசினார்.
அப்போது
வள்ளியம்மையிடம் மீரா, “யாரு மா இவங்க? உங்களுக்கு
தெரியுமா?” என்று கேட்டாள்.
“ஹான்..” என்ற வள்ளியம்மை, அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல்,
“மீரா நீ பிள்ளையை தூக்கிகிட்டு
உள்ளே போ. அப்பா உன்னைய கூப்பிடுறாங்க”
என்று கூறினார்.
மீரா,
தன் ஏழு வயது மகனை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
செல்லும்
தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்த வேலுச்சாமி, “ஏன் இப்படி பண்ணீங்க? உங்களுக்கு ஒரு கஷ்டம்னு வந்ததும் என்
புள்ளையை தூக்கி கொடுத்தேன். எங்களை இப்படி ஏமாத்திட்டீங்களே.... பெத்த புள்ளையை
பாக்காமல் மரகதம் எப்படி தவிச்சு போனா தெரியுமா.. எங்க புள்ளையை எங்க கண்ணுல கூட
காட்டாமல் தூக்கிட்டு வந்துட்டீங்களே.. அப்படி நாங்க என்ன பாவம் பண்ணோம்” என்று ஆதங்கமாக கேட்டார்.
“இதுக்காக தான் மாமா... இதுக்காக
தான் நாங்க அங்கிருந்து வந்தோம். இப்போ சொன்னிங்களே பெத்த புள்ளைனு....
அம்மாவையும், புள்ளையையும் பிரிக்கணும்னு நாங்க நினைக்கல.. ஆனா, என்னைக்கா
இருந்தாலும் பெத்த பாசம் அந்த பிள்ளையை பார்க்கும் போது விட்டுப் போகாது. எப்போ
என் பிள்ளையை பாத்தாலும், அது நம்ம புள்ளைனு அக்காவுக்கு தோணும். அப்படி தோணக்
கூடாதுன்னு தான் உங்ககிட்ட எதையும் சொல்லாமல் புள்ளையை தூக்கிக்கிட்டு நாங்க
சென்னைக்கு வந்துட்டோம். உங்க உறவே எங்களுக்கு வேண்டாம். ஏன், எங்களுக்கு யாருமே
வேண்டாம். அந்த ஊரும் வேண்டாம், எதுவுமே வேண்டாம். எங்களுக்கு எங்க புள்ள மட்டும்
போதும்னு தான் பிள்ளையை மட்டும் தூக்கிக்கிட்டு இங்க வந்து வாழ்ந்துட்டிருக்கோம்.
தயவு செஞ்சு, இங்க இருந்து போயிடுங்க”
என்று கையெடுத்து கும்பிட்டார் கண்ணீருடன்.
“என்ன பேசுற வள்ளி நீ, உனக்குன்னு
குடுத்த பிள்ளையை நாங்க கேட்போம்னு நீ எப்படி நினைக்கலாம். உன் கிட்ட கொடுத்தாலும்
எங்க கண்ணு முன்னாடியே வளருவா ஆசைத்தீர பார்த்துக்கலாம்னு நினைச்சோமே தவிர, உன்
கிட்ட இருந்து புள்ளையை திரும்ப வாங்கணும் என்ற எண்ணம் எங்களுக்கு எப்பவுமே
வந்ததில்லை. ஆனா, நீ புள்ளையை வாங்கினதும் இப்படி பண்ணிட்டல்ல” என்று கோபமாக கேட்டார்.
“போதும் மாமா.. தயவு செஞ்சு, இங்க
இருந்து போயிடுங்க.. எங்களை பார்த்ததை அக்காகிட்ட நீங்க சொல்லக்கூடாது. இதுவே
நமக்குள்ள நடக்குற கடைசி பேச்சு வார்த்தையா இருக்கனும். இனிமே, இங்க வராதீங்க
நமக்குள்ள எந்த உறவும் கிடையாது” என்று கூறிவிட்டு கண்ணீருடன்
அவரை திரும்பியும் பார்க்காது விறு விறுவென வீட்டினுள் சென்று விட்டார்.
வேலுச்சாமிக்கு
ஒன்றும் புரியவில்லை. இப்பொழுது மரகதத்திடம் என்ன கூறுவது.. தொலைந்த மகள் திரும்ப
கிடைத்துவிட்டாள் என்று கூறுவதா.. இல்லை, கிடைத்த மகள் மீண்டும் கை நழுவி சென்று
விட்டாள் என்று கூறுவதா..
மீராவிற்கு,
வேலுச்சாமியும் மரகதமும் தான் தன் தாய் தந்தை என்னும் உண்மை தெரிய வருமா..?
அப்படி தெரிய வந்தால், மீரா அவளை பெற்றவர்களுடன் செல்வாளா..?
அல்லது வளர்த்தவர்களுடன் செல்வாளா..?
கருத்துகள்
கருத்துரையிடுக