அவனதிகாரம் - 33
அதிகாரம் – 33
கயல்விழி
கூறியதை கேட்ட குடும்பத்தினர் திகைத்து நிற்க. முதலில் சுதாரித்த லட்சுமி, “என்னடி சொல்ற. யாரு இவன்?” என்று கோபமாக கேட்டார்.
அதற்கு
ஜீவா புதியவனின் சட்டையை பிடித்து, “ராமலிங்கம்
வாத்தியாரோட பையன் தான நீ” என்று மிரட்டும் தோணியில்
கேட்டான்.
கயல்விழி,
“மாமா என்ன பண்றீங்க. அவர் மேல
இருந்து முதலில் கையை எடுங்க” என்று கோபமாக கூற.
வெண்ணிலா,
“கயல் என்ன பேசுற நீ” என்று கயல்விழியை அதட்டினாள்.
“என்னக்கா உன் வீட்டுக்காரரை ஒன்னு
சொன்னதும், உன்னால தாங்க முடியலையோ.. இவர் எப்படி அவரோட சட்டையில் கை வைக்கலாம்.
அவரை யாருன்னு நினைச்சிங்க. அவர் ஒரு காலேஜ் உடைய ப்ரொபசர். எப்படி இப்படி அவர்கிட்ட
மரியாதை இல்லாமல் நடந்துக்கலாம்” என்றாள் கோபம் மாறாமல்.
“ஓ காலேஜ் ப்ரொபசரா..! சொல்லிக்
கொடுக்குற வாத்தியாரே இப்படி கல்யாணம் நடக்க இருக்கிற பொண்ண இழுத்துகிட்டு போனா.
இவர்கிட்ட படிக்கிற பசங்க எப்படி நல்ல பழக்கத்தை கத்துப்பாங்க. என்னப்பா இது? இது
தான் நீ மத்த பசங்களுக்கும் சொல்லிக் கொடுக்குறியா. உங்களுக்குள்ள விருப்பம்
இருந்தா, நீ என்கிட்ட வந்து நேரடியா பேசி இருக்கணும். அதை விட்டுட்டு வேற
ஒருத்தருக்கு நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ண இருந்த பொண்ண கடைசி நேரத்தில் வந்து
இப்படி தான் கூப்பிட்டு போவியா” என்றார் சுப்பிரமணி கோபமாக.
அதற்கு,
“ஐயா, என் பெயர் மகேஷ். தப்பு தான்
எங்களை மன்னிச்சிடுங்க” என்று தன் கரம் கூப்பி மன்னிப்பு
வேண்டினான்.
அதற்குள்
வெகுண்டு எழுந்த கயல்விழி, “என்ன பேசுறீங்க நீங்க. முதலில்
கையை கீழே இறக்குங்க. நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க. அப்பா அவர் மேல எந்த தப்பும் கிடையாது.
அவர் வீட்டில் சொல்லலாம்னு தான் சொன்னார். நான் தான் இவங்க கிட்ட எல்லாம்
சொல்றதும் ஒன்னு தான், சொல்லாததும் ஒன்னு தான்னு சொல்லி தடுத்துட்டேன். அப்படியே
இவர் வந்து உங்ககிட்ட சொல்லி இருந்தாலும், கண்டிப்பா நீங்க எங்களை சேர்த்து
வச்சிருக்க மாட்டீங்க. பிரிச்சி தான் விட்டு இருப்பீங்க. அதான் இப்படி கடைசி
நேரத்தில் ஒன்னா வந்து நின்னா, உங்களால எதுவும் பண்ண முடியாதுன்னு நான் தான்
சொன்னேன்”.
இந்த
கயல்விழி அவளின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புதியவள். கயல்விழி தைரியமானவள்
என்று அனைவருக்கும் தெரியும். சரியான முடிவு எடுப்பவள் என்றும் தெரியும். ஆனால்,
இப்படி சுயநலம் அவளுக்குள் எப்போது கலந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
வெண்ணிலா,
“இப்போ இவ்வளவு தெளிவா பேசுறியே
கயல். உன்னால அங்க பாரு யாழினியுடைய நிலைமையை” என்று மணவறையை நோக்கி கை காட்டினாள்.
இன்னும்
கண்ணீர் வற்றாத ஊற்றாய் கண்களில் கொட்டிக் கொண்டிருக்க. அதிர்ச்சி மாறாத
முகத்துடன் அமர்ந்திருந்தாள் யாழினி.
அதற்கும்
குடும்பத்தினரிடம் எகிறிய கயல், “என்னப்பா நடக்குது இங்க. அவ சின்ன
பொண்ணு. நான் இல்லை என்றதும் அவளை பிடிச்சு கட்டி வச்சிட்டீங்களா. என்ன ஆளுங்க
நீங்க எல்லாம். அவளை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீர்களா” என்று படபடவென பொரிந்தாள்.
மரகதம்
பாட்டி, “வாயை மூடு கயல். தப்பெல்லாம் நீ
பண்ணிட்டு எங்க மேல பழி சொல்றியா. உங்க அப்பா மேல் படிப்பு படிக்க வைக்க
மாட்டேன்னு தான் சொன்னான். அதுக்காக விருப்பமில்லாத கல்யாணத்தை நடத்துவேன்னு
சொல்லலையே. வெண்ணிலாவுக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி ஜீவாவை
புடிச்சிருக்கான்னு கேட்டு தானே கட்டிக் கொடுத்தோம். அப்படி இருக்கும் போது உன்னை
மட்டும் பிடிக்காத இடத்தில் கட்டி கொடுப்பாங்கன்னு நீயே எப்படி நினைச்சுக்கலாம்.
இப்போ யாழினி இப்படி உட்கார்ந்து இருக்கிறதுக்கு முழு காரணம் நீ தான்” என்று கயல்விழியை சாடினார்.
“என்ன பாட்டி சொல்றீங்க. எந்த
தப்பு நடந்தாலும் அதுக்கு நான் தான் காரணமா. ஏன் அவளுக்கு வாய் இல்ல. இந்த
கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வேண்டியது தான. சின்ன வயசுல இருந்து கல்யாணம் பண்ணா
ஜாலியா இருக்கலாம்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்க இல்ல. அதான் தன்னுடைய சொந்த அக்கா
காணாமல் போனதும் நல்லதா போச்சுன்னு மணவறையில் ஏறி அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா” என்று கோபத்தில் வார்த்தையை விட்டாள்.
இவள்
கூறுவதை கேட்டு திகைத்த யாழினி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல்
அமர்ந்திருந்தாள். ‘தன் மேல் தான் தவறோ, அவசரப்பட்டு
விட்டோமோ, சிறு வயது முதல் விளையாட்டாக பேசியது இப்படி தனக்கே இழுக்காக அமைந்து
விட்டதே’ என்ற வருத்தத்துடன் யாரின்
முகத்தையும் பார்க்க முடியாமல் கூனிக்குறுகி உடல் கூசி தலை குனிந்து
அமர்ந்திருந்தாள்.
மேலும்,
‘அபிமன்யு தன்னை பற்றி என்ன
நினைப்பான். ஏற்கனவே, வாய்க்கு வந்ததை பேசுபவன், கோபக்காரன். தற்பொழுது, இவள்
கூறுவதைக் கேட்டு அவனும் கல்யாணத்திற்காக அலைந்தோம் என்று எண்ணிவிடுவானோ’ என்று ஏனென்றே தெரியாமல் பயம் தொற்றிக்
கொண்டது.
அவன்
நினைத்தால் தனக்கென்ன என்று எண்ணாமல் தாலி கட்டியவுடன் புதிய உரிமை உணர்வு
எழுந்துவிட்டது யாழினிக்கு. இதுதான் மஞ்சள் கயிறின் மேஜிக்கோ..
இவளிடம்
என்ன எடுத்துக் கூறினாலும் இவளுக்கு புரியாது என்று மொத்த குடும்பத்திற்கும்
புரிந்தது.
“சரி, அவன் தான் வேணும்னு
போயிட்டல்ல. இப்போ எதுக்குடி இங்க வந்து நிற்கிற” என்று கோபமாக கேட்டார் லட்சுமி.
“நான் எவன் கூடயோ ஓடிப்
போயிட்டேன்னு என் பெயரில் தப்பு வந்துடக்கூடாதுல்லமா. அதான் வந்தேன். எனக்கு
புடிச்ச மாதிரி மாப்பிள்ளை எனக்கு அமைந்திருக்கிறார். கூடிய சீக்கிரம் எங்களுக்கு
கல்யாணம் நடக்க போகுது. என்னால முடியாமல் போன படிப்பை இனிமேல் படிக்க போறேன்” என்று சவால் விடுவது போல் கூறிவிட்டு, “வாங்க மகேஷ் போகலாம்” என்று அவனது கையைப் பிடித்து இழுத்துக்
கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டாள்.
அவள்
சென்ற பிறகு புயல் அடித்து ஓய்ந்தார் போல் அமைதியாகிவிட்டது. வேலுச்சாமி தாத்தா
எதுவும் பேசவில்லை. அவர் தானே கயல்விழிக்காக அபிமன்யுவை மாப்பிள்ளை கேட்டார்.
எப்படி, எந்த முகத்தை வைத்துக்கொண்டு வள்ளியம்மையிடம் பேசுவது என்று மௌனமாக
ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார்.
அவரின்
நிலையை உணர்ந்த மரகதம் பாட்டி, “நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.
அதான் நம்ம பேத்தி யாழினிக்கும், அபிக்கும் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சே. இவ
போனா போறா” என்று ஆறுதல் கூறினார்.
இவர்களின்
பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது யாழினியின் முன்பே மீராவிடம்
அபிமன்யு, “வாட் ரப்பிஷ் இஸ் திஸ் மாம்.
இரிடேடிங்! என்ன குடும்பம் இது. உங்களுக்கு பொண்ணு எடுக்க வேற ஃபேமிலியே தெரியலையா” என்று எரிச்சலாக கூறிவிட்டு, “நான் ரூமுக்கு போறேன். இந்த டிராமாஸ்
எல்லாம் முடிந்ததும் என்னை கூப்பிடுங்க”
என்று கூறிவிட்டு, யாழினியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மணமகன் அறை நோக்கி
சென்று விட்டான்.
யாழினிக்கு
வழக்கம் போல் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. அவள் தான் இடையில் மாட்டிக்
கொண்டு விழித்தாள்.
‘இப்போது அபிமன்யுவுடன் செல்ல
வேண்டுமா அல்லது, தன் குடும்பத்திடம் செல்ல வேண்டுமா’ ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. அனைத்தும் புதிதாக தோன்றியது.
எந்த
ஒரு உறவிற்கும் அடிப்படையே அன்பு தான். ஆனால், இவர்களின் உறவிற்கோ அடிப்படை
கோபமாகி போனது. கயல்விழி சென்றதும் அனைவரும் அப்போது தான் யாழினியை கவனித்தார்கள்.
மணவறையில்
அமர்ந்த வாக்கிலேயே அடுத்து என்ன என்று செய்வதறியாது அழுகையுடன் அமர்ந்திருந்தாள்
யாழினி. பார்ப்பதற்கே அனைவருக்கும் பாவமாகி போனது.
லட்சுமி
ஓடிச் சென்று தன் ஆசை மகளை அள்ளி அணைத்துக் கொண்டார்.
“இந்த பெண்ணு இப்படி பண்ணுவானு
கொஞ்சம் கூட எதிர்பார்க்கல டா. எங்களை மன்னிச்சிடு. அவ பண்ண தப்புக்கு உன்னை வச்சு
பிராயசித்தம் பண்ற மாதிரி ஆகிப்போச்சு”
என்று மன்னிப்பு கேட்டார் யாழினியிடம்.
யாழினி,
“ஐயோ அம்மா! இப்படி எல்லாம்
பேசாதீங்க”.
சுப்பிரமணி
பெண் பிள்ளைகளுக்கு விவரம் தெரிந்தது முதல் அவர் அருகில் வைத்து கொஞ்சியதோ,
தொட்டுப் பேசியதோ கிடையாது. யாழினிக்கு விவரம் தெரிந்து முதல் முறை சுப்ரமணி அவளின்
தலையை இப்போது தான் தடவி கொடுக்கிறார்.
கலங்கிய
குரலில், “அப்பாவை மன்னிச்சிடுமா”.
தன்
அப்பாவிற்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா என்று திகைத்துப் பார்த்த யாழினி.
அவர் மன்னிப்பை யாசிப்பதை புரிந்து, “உங்க
மேல எந்த தப்பும் இல்ல பா. அக்கா பண்ணதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. என் தலையில்
இப்படி தான் நடக்கணும்னு இருந்திருக்கு”.
சரியாக
அந்த நேரம் பார்த்து அபிமன்யு மணமகன் அறையை விட்டு வெளியே வந்தவன், இவள் கூறிய
கடைசி வாக்கியத்தை மட்டும் அரை குறையாக கேட்டுவிட்டு, ‘என்னை கல்யாணம் பண்ணது
உனக்கு தலையெழுத்தா’ என்று மனதிற்குள் தேவையில்லாத வன்மத்தை மேலும் மேலும்
வளர்த்தான்.
மீராவிடம்,
“கிளம்புங்க மாம் ஊருக்கு போகலாம்”.
குடும்பத்தினர்
மொத்த பேரும் பதறியபடி, “என்ன அபி சொல்ற. இப்போ தான்
கல்யாணம் முடிஞ்சு இருக்கு. இன்னும் பொண்ணு வீட்டுக்கு கூட போகலப்பா. சில
சடங்குகள் எல்லாம் செய்ய வேண்டியது இருக்கு” என்றார் மீரா.
“இது என்ன முறைப்படி பேசி வச்சு
பண்ண கல்யாணமா. திடீர்னு நடந்த கல்யாணம் தான. அதெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்ல.
என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. நான் கிளம்புறேன். நீங்க வரிங்களா
இல்லையா”.
மகேந்திரன்,
“அபி, கண்ட்ரோல் யுவர் செல்ப்.
இந்த நிலைமையில் நாம இப்படியே கிளம்புனா... பாவம், அவங்க என்ன நினைப்பாங்க. உன்னோட
சிச்சுவேஷன் எனக்கு புரியுது. பட், யாரும் எதிர்பார்க்காமல் நடந்த விஷயத்துக்கு
அவங்களை மட்டும் ப்லேம் பண்ண முடியாது”
என்று எடுத்துரைத்தார்.
இவர்கள்
கூறிய எதையும் கேட்பதற்கு அபி தயாராக இல்லை.
“ஓகே நீங்க எல்லாம் இங்கேயே
இருந்து சடங்குகளை முடிச்சிட்டு வாங்க. நான் கிளம்புறேன்” என்று கூறியவன் வெளியேற எத்தனிக்கும் முன்பு யாழினியை
திரும்பி பார்த்து, “நீ என்ன, என் கூட வர போறியா..
இல்ல, உங்க அப்பா வீட்டிலேயே இருக்க போறியா?” என்று தன் ஒற்றை புருவத்தை ஏற்றிக் கேட்டான்.
இவனின்
கேள்வியில் திகைத்த யாழினி முதல் முறை இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறாள்.
எப்படி கையாள்வது என்று தெரியாமல் திருத்திருவென விழித்தவாறு நின்றவளை சுப்ரமணி, “நீ போ மா” என்றார்.
உடனே,
அபிமன்யுவுடன் சென்று விட்டாள். செல்லும் வழியெல்லாம் திரும்பி திரும்பி தன்
குடும்பத்தினரை ஏக்கமாக பார்த்துக் கொண்டு சென்ற யாழினியை பார்க்க இவர்களுக்கு
பாவமாக தெரிந்தது.
முதல்
முறை ‘மாப்பிள்ளையை பற்றி நன்கு
விசாரிக்காமல் விட்டு விட்டோமோ’ என்ற குற்ற உணர்ச்சி
சுப்பிரமணிக்குள் குடி கொண்டது. ஜீவாவிற்கோ சூழ்நிலை கையை மீறி போனதில் தடுக்கவும்
முடியவில்லை, பார்வையாளராக பார்க்கவும் முடியவில்லை.
மனதில்
பாரத்தோடு செல்லும் அவர்களை பின்தொடர்ந்து சென்றவன். அபிமன்யு காருக்குள் ஏறும்
நொடி, “அபிமன்யு ஒரு நிமிஷம்” என்று அழைத்தான்.
கோபமும்,
எரிச்சலும் கலந்து திரும்பி ஜீவாவை பார்த்து முறைத்தவன், “கால் மீ சார்”.
அதில்
திகைத்த ஜீவா, ‘இவனின் குணம் தெரிந்தது தானே’ என்று எண்ணியவன், “ஓகே சார்”.
யாழினிக்கு
தான் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் ஜீவா மாமாவை ‘சார்’ என்று கூற சொல்லுகிறானே என்று
அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜீவா, “யாழினி சின்ன பொண்ணு தெரியாம ஏதாவது தப்பு
பண்ணா அவளை மன்னிச்சிடுங்க சார். கொஞ்சம் பாத்துக்கோங்க”.
அதற்கு
நக்கலாக யாழினியை பார்த்து சிரித்தபடியே, “ஏன் மேடம் இப்போ தான் எல்.கே.ஜி ஸ்கூலுக்கு போறாங்களா.
டீச்சர் கிட்ட சொல்ற மாதிரி என்கிட்ட வந்து சொல்ற. சின்ன பொண்ணுக்கு எதுக்கு
கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க. இவளை பாத்துக்குறது ஒன்னும் என்னோட டியூட்டி
கிடையாது. தப்பு பண்ணா தப்புக்கு உண்டான தண்டனை கண்டிப்பா கிடைக்கும்” என்று யாழினியை பார்த்தவாறு திடமாகக்
கூறி முடித்தான்.
யாழினிக்கு
மேலும் பதட்டம் அதிகரித்துவிட்டது. ஜீவாவிற்க்கோ ‘ஏன் இவனிடம் பேசினோம்’ என்று ஆகிவிட்டது.
யாழினியிடம்,
“பார்த்துடா. ஏதாவதுனா மாமாக்கு
போன் பண்ணு”.
‘சரி’ என்னும் விதமாக தலையை அசைத்தவள் பதில் கூறும் நிலையில் இல்லை
என்பது அவளின் முகத்தை வைத்தே தெரிந்து கொண்டான் ஜீவா.
வாயை
திறந்தால் கண்களில் அருவி கொட்டி தீர்த்து விடும் நிலையில் மௌனமாக அவனின் பின்னால்
காரில் ஏறினாள். ஜீவா அங்கே நின்று இருந்தும் அவனை ஒரு ஆளாக கூட பொருட்படுத்தாத
அபிமன்யு
ஜீவாவின்
முன்பே, “ஹே இடியட்! என்னை பார்த்தா உனக்கு
எப்படி தெரியுது. நான் என்ன உனக்கு கார் டிரைவரா.. மகாராணி சொகுசா பின்னாடி
உட்கார்ந்துகிட்டு வரீங்க” என்று கத்தினான்.
மேலும்,
மேலும் இவனின் பேச்சிலும், அதட்டலிலும் முற்றிலுமாக உடைந்து போனாள் யாழினி.
கண்களில்
கண்ணீர் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்க, “முன்னாடி வந்து உட்கார்” என்று பற்களை கடித்துக் கொண்டு கூறினான்.
உடனே,
டக்கென்று கதவை திறந்து இறங்கியவள். அவசர அவசரமாக முன் இறுக்கைக்கு மாறினாள். இப்படி
நடந்து கொள்கிறானே என்று யாழினியின் நிலையை எண்ணி மிகவும் பரிதாபமாகி போனது
ஜீவாவிற்கு.
காரினுள்
ஏறியவள் திரும்பி ஜீவாவை பார்க்க. அதனை பார்த்த அபிமன்யு எரிச்சலுடன்
ஸ்டியரிங்கில் ஒரு குத்துவிட. அவனின் கைகளில் அந்த கருப்பு நிற ஆடி கார் சீறிப்பாய
தொடங்கியது.
பெண்ணும்,
மாப்பிள்ளையும் இப்படி கிளம்பி சென்றதும். யாரை வைத்து சம்பிரதாயங்களை செய்வது
என்று செய்வதறியாது நின்றனர் இரு குடும்பத்தினரும்.
மகேந்திரன்,
“அதான் ரெண்டு பேரும்
கிளம்பிட்டாங்களே, நாங்களும் கிளம்புறோம் சம்பந்தி. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.
அங்க போய் செய்ய வேண்டியதை நாங்க பார்த்துக்குறோம். உங்க பொண்ண பார்க்க நீங்க
எப்போ வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம்”.
மகேந்திரனின்
கையைப் பிடித்த சுப்பிரமணி, “எதிர் பார்க்காமல் என்னவெல்லாமோ
நடந்திடுச்சி சம்பந்தி. பெரிய மனசு பண்ணி எங்களை மன்னிச்சிருங்க. யாழினியை
நல்லபடியா பாத்துக்கோங்க. அவ விவரம் தெரியாத பொண்ணு”.
“அதெல்லாம் நீங்க ஒன்னும்
வருத்தப்படாதீங்க. எனக்கு யாழினியும், ஆரணி மாதிரி தான். நாங்க நல்லபடியா
பார்த்துக்கிறோம்” என்று கூறிவிட்டு, அபிமன்யுவின்
குடும்பத்தினர் அங்கிருந்து விடைபெற்று சென்னையை நோக்கி புறப்பட்டனர்.
வீட்டுக்கு
சென்ற பிறகு கூட சுப்பிரமணியனிற்கும், லட்சுமிக்கும் மனம் ஆறவில்லை. யாழினி
இவர்களை திரும்பி திரும்பி பார்த்து சென்றது மனக்கண்ணின் முன்பு வந்து நின்றது.
லட்சுமி,
“ஏங்க நாளைக்கு மறுநாள் நாம போய்
யாழினியை பார்த்துட்டு வருவோமா?”.
சுப்பிரமணி,
“இப்போ வேண்டாம் லட்சுமி. எல்லா
பிரச்சனையும் கொஞ்சம் ஓயட்டும். மாப்பிள்ளை ரொம்ப கோபமா இருக்கார். கொஞ்ச நாள்
போகட்டும், அடுத்த வாரத்தில் போய் பார்ப்போம்”.
மரகதம்
பாட்டி, “அவ நம்மளை பார்த்துக்கிட்டே போனது
இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது. மனசு ஆற மாட்டேங்குது”.
“எல்லாம் சரியா போயிடும்மா. நீங்க
ஒன்னும் கவலைப்படாதீங்க” என்று கூறிவிட்டு எழுந்து சென்று
விட்டார் சுப்பிரமணி.
அபிமன்யுவின்
கையில் சீறிப்பாய்ந்த கார் வழியில் எங்கும் நிற்காமல் நேராக சென்னையில் அவர்களின்
வீட்டின் வாயிலின் முன்பு தான் நின்றது. வழியெங்கும் அமைதி மட்டுமே நிலவியது.
ஆனால், அவனின் கோபத்தின் அளவை காரின் வேகமே காட்டியது.
இவ்வளவு
பெரிய சொகுசு காரில் யாழினி இதுவரை பயணப்பட்டதே இல்லை. இதுவே முதல் முறை. மேலும்,
அவனின் வேகத்தில் அஞ்சி ஸ்தம்பித்து அமர்ந்துவிட்டாள்.
வீட்டின்
வாயிலில் வந்து நின்றது கூட தெரியாமல் தனக்குள்ளேயே உழன்று கொண்டு
அமர்ந்திருந்தவளை, “என்ன இறங்குற ஐடியா இருக்கா
இல்லையா” என்று கேட்டு கலைத்தான்
அபிமன்யு.
“ஆங்..” என்று விழித்தவள் இறங்கி வீட்டினுள் சென்றாள்.
இல்லை,
அதை வீடு என்று கூட கூறி விட முடியாது. பார்ப்பதற்கு ஏதோ பெரிய மாளிகை போல்
தோன்றியது யாழினிக்கு.
இதுவரை
அரசனூரை விட்டு தாண்டாதவள். ஏதேனும், பெரிய விசேஷம் ஜவுளி எடுக்க வேண்டும்
என்றாலொழிய வேறு எதற்கும் டவுன் பக்கம் கூட செல்லாதவள்.
இப்பொழுது
சென்னையில் இவ்வளவு பெரிய வீட்டை பார்த்ததும் ‘ஆ’வென வாசலிலேயே நின்று விட்டாள்.
இவளின் பார்வையை ஏளனமாக பார்த்த அபிமன்யு மனதிற்குள், ‘கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும்னு இனிமே உனக்கு போக போக
காட்றேன்’ என்று நினைத்துக் கொண்டு சரசரவென
படிகளை ஏறி தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
யாழினியின்
வாழ்க்கையை இனி அவன் அதிகாரத்தை கொண்டு ஆட்டி வைக்கப் போகிறானா...
கருத்துகள்
கருத்துரையிடுக