அவனதிகாரம் - 35

 

 

அதிகாரம் – 35

 

அபிமன்யுவின் அதிரடியான செயலில் திகைத்த யாழினி செய்வதறியாது நின்றாள். சில நொடிகளில் பயத்திலும், படபடப்பிலும் மயங்கி அவன் கரங்களிலே சரிந்தாள். வாடிய கொடியென தன் கரத்தில் சரிந்தவளை தன் இரு கரம் கொண்டு அள்ளியவன் கட்டிலில் கிடத்தினான்.

 

அபிமன்யு மென்புன்னகையுடன், என்ன டி இதுக்கே மயங்கிட்டா எப்படி. இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு என்று ஹஸ்கி வாய்ஸில் யாழினியின் கன்னத்தில் கோலம் போட்டுக் கொண்டே கூற.

 

இது எதையும் அறியாமல் மயங்கிய நிலையில் இருந்தாள் யாழினி. அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்தவன். மயக்கம் தெளியவும் தன் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாத அபிமன்யு, என்ன?.

 

இப்பொழுது இங்கே நடந்த சம்பவத்திற்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் சாதாரணமாக இருந்தான். மேலும், அபிமன்யு உண்மையிலேயே தன்னை அணைத்தானா என்று யாழினிக்கு சந்தேகம் வரும் அளவிற்கு எந்த ஒரு சலனமும் இன்றி அமைதியாக பார்த்தான்.

 

யாழினி மனதிற்குள், இப்போ நிஜமாவே அது நடந்துச்சு தான. ஏன் இப்படி பண்ணாருன்னு எப்படி அவர்கிட்ட கேட்குறது. எந்த ரியாக்ஷ்னும் இல்லாம சாதாரணமா இருக்கார். ஒருவேளை, நாம தான் ஏதாவது கனவு கண்டோமோ. இல்ல இல்ல.. உண்மையா தான் நடந்திருக்கு என்று பலவாறு யோசித்தவளின் முக பாவனைகளை பார்த்தவாறு தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அபிமன்யு.

 

அவள் தனக்குள் இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா என்று யோசித்து முக பாவனைகளை மாற்றிக் கொண்டே இருந்தாளே ஒழிய இவனை கண்டு கொள்ளவே இல்லை.

 

சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன் தொண்டையை சிறுமிக் காட்டினான். அதில், தன்னிலை அடைந்தவள். அபிமன்யுவை குழப்பமாக பார்க்க.

 

என்ன பார்க்குற. மணி இப்போ தான் 12 ஆகுது படுத்து தூங்கு என்று உறுமளாக கூறிவிட்டு கட்டிலின் மறுபுறம் சென்று படுத்தான்.

 

அவன் தன் அருகில் வந்து படுத்ததும் பதறிய யாழினி டக்கென்று கட்டிலில் இருந்து கீழே இறங்கியவள், நான் இங்க படுத்துக்கிறேன் என்று தரையை கை காண்பித்துவிட்டு அவனின் பதிலிற்கு கூட கார்த்திறாமல் ஒரு போர்வையை தரையில் விரித்து படுத்துவிட்டாள்.

 

அதில் டென்ஷனான அபி கோபமாக யாழினியின் அருகில் சென்றவன். அவள் சுதாரிக்கும் முன்பு அவளை தன் கரங்களில் ஏந்தி மீண்டும் கட்டிலில் கிடத்தினான்.

 

அவளின் முன்பு சொடக்கிட்டவன், இது தான் உன்னோட இடம். இனிமே, நீ இங்க தான் படுக்கணும் என்று கூறிவிட்டு மறுபுறம் வந்து படுத்தான்.

 

அதற்கு எந்த பதிலும் கூறாத யாழினி இவனின் அதிரடிகளில் பயந்து தனக்குள் ஒடுங்கிவிட்டாள். ஓரமாக படுத்திருந்தவளை தன் புறம் இழுத்து அவளின் மேல் கை போட்டு சிறிதளவு அணைத்தவாறு தன் தூக்கத்தை தழுவினான் அபிமன்யு.

 

அபிமன்யு தன் மேல் கையை போட்டவுடன் யாழினிக்கு இருந்த தூக்கம் மொத்தமும் பறந்து விட்டது. விடிய விடிய தூங்க முடியாமல், ஏன் அசையக் கூட முடியாமல் அவனின் கை பலத்தால் கட்டுண்டு கிடந்தவள் விடியற்காலையில் தான் கண்ணயர்ந்தாள்.

 

காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தவன். அவள் உறங்குவதை கண்டு மெலிதாக புன்னகைத்து விட்டு அவனுடைய பிரத்தியேக ஜிம் அறைக்கு சென்றுவிட்டான்.

 

தன் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு கீழே இறங்கி வந்தவன் ஆபீஸ்க்கு தயாராகி வெளியே வர. அது வரையிலும் தூங்கிக் கொண்டிருந்த யாழினியை பார்த்து கடுப்பானவன். அருகில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து அதில் இருந்த மொத்த நீரையும் அவளின் மேல் ஊற்றினான்.

 

அதில் பதறி அடித்து எழுந்தவள் தன் அருகில் கோபமாக நின்று இருந்த அபிமன்யுவை பார்த்து திருதிருவென விழித்தாள்.

 

மணி என்ன ஆகுது? என்றான் உறுமலாக.

 

அவன் குரல் உயர்த்தவும் பயந்து போன யாழினி கடிகாரத்தை பார்த்து, ஒன்பது என்றாள் மெதுவாக.

 

இப்படி தான் உங்க வீட்டிலும் தூங்குவியா இடியட்.

 

இல்ல, நைட் தூக்கமே வரல. அதான் லேட்டாயிடுச்சு என்றாள் திக்கி திக்கி.

 

ஓ.. அப்படியா.. நைட் ஃபுல்லா தூங்காமல் யாரை பார்த்துக்கிட்டு இருந்த என்றான் ஒரு மார்க்கமாக.

 

அவன் கேள்வியில் திகைத்த யாழினி, யாரையும் பார்க்கல. சாயந்தரம் தூங்கினதால எனக்கு நைட் தூக்கம் வர லேட் ஆயிடுச்சு என்றாள் அழுகையினோடு.

 

ஒன்னு சொல்லிடக்கூடாது. உடனே இந்த டேம்மை திறந்து விட்டுடுவ. போ, போய் குளிச்சிட்டு கீழ போ என்று துரத்திவிட்டான்.

 

தப்பித்தால் போதும் என்று அந்த இடத்தை விட்டு பாத்ரூமிற்குள் தஞ்சம் புகுந்தாள் யாழினி. உள்ளே சென்றதும் தான் அவளுக்கு மூச்சு சீராக வந்தது.

 

கடகடவென தன் காலை கடன்களை முடித்தவள். ஐயோ! இவங்க வீட்டில் எல்லாம் எழுந்திருச்சு இருப்பாங்களே. இப்போ நம்ம போனா நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க என்று புலம்பி கொண்டு அவசர அவசரமாக தயாராகி கீழே சென்றாள்.

 

இவள் கீழே செல்லும் வரை எங்கும் அபிமன்யு தென்படவில்லை. வீட்டில் இல்ல போலருக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டே தயக்கமாக அங்கே டைனிங் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வள்ளியம்மை பாட்டியிடமும், மீராவிடமும் சென்றாள்.

 

மீரா, யாழினியின் முகம் வாட்டமாக இருப்பதை கண்டவர். அபிமன்யு ஏதேனும் கூறியிருப்பானோ என்று எண்ணிக்கொண்டே, வா மா என்று அழைத்தார் இன்முகமாக.

 

யாழினி, அத்தை, இன்னைக்கு கொஞ்சம் லேட்டா எழுந்திருச்சிட்டேன். நாளையிலிருந்து சீக்கிரம் எழுந்திரிச்சிடுறேன் என்றாள் தயக்கமாக.

 

யாழினி இதில் என்னமா இருக்கு. பரவாயில்ல விடு. பாரு, இன்னும் இந்த ஆரணி எழுந்திருச்சு வரல என்று கூறி சிரித்தார்.

 

யாரும் தவறாக எண்ணவில்லை என்று எண்ணிய யாழிக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. இதுவே, அவர்கள் ஊராக இருந்திருந்தால் இந்நேரத்துக்கு மரகதம் பாட்டி திட்டி தீர்த்திருப்பார்.

 

இங்கே வள்ளியம்மை பாட்டி எதுவும் கண்டு கொள்ளாமல் சிரித்து பேசவும், இவளுக்கு பெரும் மகிழ்ச்சி ஆகி போனது. அன்று முழுவதும் அபிமன்யுவிற்கு அலுவலகத்தில் பயங்கர வேலை.

 

ஈவினிங் ரிசப்ஷனிற்கு பிளான் செய்து இருப்பதால் காலையில் விரைவாக கிளம்பி அலுவலகம் சென்றவன். மாலை 4 மணி அளவில் வருவதாக வீட்டில் கூறி விட்டான்.

 

மீரா, என்ன அபி, 7’o க்ளாக் பங்க்ஷன் வச்சிருக்கோம். நீ நாலு மணிக்கு வந்தா சரியா இருக்குமா என்று சந்தேகமாக கேட்டார்.

 

அபிமன்யு, மாம், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். 5’o க்ளாக் ஹாலுக்கு போனா போதும்.

 

இவன் ரிசப்ஷனிற்கு வருவேன் என்று ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம் என்று எண்ணிய மீரா, மேற்கொண்டு எதுவும் பேசி அவனை கோபப்படுத்தாமல், சரிப்பா என்று முடித்துக் கொண்டார்.

 

அன்று முழுவதும் அபிமன்யு வீட்டில் இல்லாததால் ஜாலியாக வலம் வந்தாள் யாழினி.

 

ஆரணியுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதும், அத்தை, பாட்டியுடன் சேர்ந்து பேசி சிரிப்பதுமாக அன்றைய பொழுது கழிந்தது. சாயந்திரம் 4 மணி அளவில் அபிமன்யு வரும் பொழுது உடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தான்.

 

யார் என்று புரியாமல் அனைவரும் அவரை பார்க்க. யாழினியோ, ஐயையோ வந்துட்டானே என்ற மாடுலேஷனில் அபிமன்யுவை பார்த்துக் கொண்டிருந்தாள். அதனை உணர்ந்தவன் இவளை திரும்பி ஒரு பார்வை பார்க்க. டக்கென்று தலை தொங்கிவிட்டது யாழினிக்கு.

 

ஷீலா இவங்களுக்கு தான் நீங்க மேக்கப் பண்ணனும். நான் சொன்னேன்ல அதே மாதிரி செஞ்சிடுங்க என்று கூறி யாழினியை கை காட்டினான்.

 

மீரா, யாருப்பா இது?.

 

அபிமன்யு, இவங்க பிரைடல் மேக்கோவர் பண்றாங்கம்மா. நான் தான் கூட்டிட்டு வந்தேன். கல்யாணத்தில் நீங்க அடிச்ச கூத்து வரைக்கும் போதும். ரிசப்ஷனில் எல்லாமே என்னோட டெசிஷன் தான் என்று கரராக கூறிவிட்டான்.

 

ஆகையால், யாரும் எதுவும் கூறவில்லை. இவர்கள் பேசுவது எதுவும் புரியாமல் யாழினி திருத்திருவென பார்த்துக் கொண்டிருக்க.

 

ஆரணி ரூம்ல ரெடியாக சொல்லுங்க என்று கூறிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.

 

யாழினி இவங்களை ஆரணி ரூம் கூட்டிட்டு போய் இவங்க சொல்ற மாதிரி ரெடி ஆயிட்டு வா மா. ஈவினிங் ரிசப்ஷன் இருக்குல்ல என்றார் மீரா.

 

ரிசப்ஷனா.. யாருக்கு அத்த? என்றாள் யாழினி.

 

யாழினிக்கு இந்த திருமண பரபரப்பில் மறுநாள் ரிசப்ஷன் வைத்ததே அவளுக்கு மறந்து போனது. திடீரென ஏற்பட்ட திருமணத்தால் ரிசப்ஷனை நிறுத்தி இருப்பார்கள் என்று எண்ணியவளிற்கு, தனக்கும், அபிமன்யுவிற்கும் ரிசப்ஷன் என்பது புதிய செய்தியாக இருந்தது.

 

உனக்கும் அபிக்கும் தான் மா. அப்போ தான் இங்க எல்லாருக்கும் நீ தான் அபியோட வைஃப்ன்னு தெரியும் என்றார் மீரா.

 

சரிங்க அத்தை என்று கூறிய யாழினி, ஷீலாவை அழைத்துக் கொண்டு ஆரணி அறைக்குள் நுழைந்தாள்.

 

பாட்டிக்கும், மீராவிற்கும் யாழினியின் மாற்றம் நன்றாகவே புரிந்தது. காலை முதல் எந்த கவலையும் இன்றி பட்டாம்பூச்சியாய் சுற்றிக்கொண்டு இருந்த யாழினி, அபிமன்யு வந்தவுடன் பெட்டி பாம்பாக அடங்கியதை அவர்கள் இருவரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

 

வள்ளியம்மை பாட்டியிடம் மீரா, அம்மா நம்ம எதுவும் தப்பு பண்ணிட்டோமோ என்று மன உறுத்தலாக கேட்டார்.

 

ஏன் இப்படி எல்லாம் பேசுற. அப்படி எல்லாம் எதுவும் இல்ல. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் பாரு. யாழினி குணத்துக்கு சீக்கிரம் அபி அவளை புரிஞ்சுப்பான் என்று மீராவிற்கு சமாதானம் கூறினார்.

 

அனைவரும் தயாராகி ரிசப்ஷன் ஹாலுக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது யாழினி ஷீலாவின் கைவண்ணத்தில் பின்க் வித் கோல்டன் கலர் லெஹங்காவில், டைமண்ட் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, சிகை அலங்காரத்திலும் வெள்ளை கற்கள் பதித்த அணிகலன்களை அணிவித்து தேவதை போல் தயாராகி வெளியே வந்தாள். 

 

மற்ற குடும்பத்தினர் அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து வென யாழினியை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஆரணி, யாழினியா இது? என்று கூறி அவள் அருகில் சென்று அவளை சுற்றி வந்தாள். அதில் யாழினிக்கு வெட்கமாகி போய்விட தலையை குனிந்து கொண்டாள்.

 

மீரா, ஆரணி ரொம்ப ஓட்டாத. பாரு, எவ்வளவு அழகா இருக்கா என்று அவளிற்கு திருஷ்டி கழித்தார்.

 

வள்ளியம்மை பாட்டி, அபியோட டெசிஷன் எப்பயுமே கரெக்டா தான் இருக்கும் மீரா. பாரு, எப்படி எல்லாம் பார்த்து பார்த்து பண்ணி இருக்கான்னு என்று கூறி சிரித்தார்.

 

மகேந்திரன், யூ லுக்கிங் கார்ஜியஸ் எங் லேடி என்று சிரித்த முகமாக யாழினியை பாராட்டினார். அதற்கு சிறு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தாள்.

 

ஆரியன், மாம், பாட்டி சொன்னது கரெக்டு தான். இப்போ தான் தெரியுது ப்ரோ ஏன் யாழினியை கட்டிக்குறேன்னு சொன்னாருன்னு. அவரோட டெசிஷன் தானே யாழினியும்.

 

அவனின் வார்த்தைகளில் யாழினிக்கு முகம் வாடிவிட்டது. கயல்விழியை தானே முதலில் அபிமன்யுவிற்கு திருமணம் முடிப்பதாக இருந்தது. தான் வாழும் வாழ்க்கை கயல்விழியினுடையது. அவளுக்கு சொந்தமான இடத்தில் தான் நிற்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஆகிப்போனது.

 

இது தேவையில்லாத குற்ற உணர்ச்சி தான் என்று மனம் உரைத்தாலும். ஏனோ, அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை நாட்களாக அக்காவிற்கு கணவராக வர போகிறார் என்று எண்ணியவர்.

 

ஒரே நாளில் தன் கணவராகி போக, அதனை ஏற்றுக் கொள்ள பேதையின் மனம் முரண்டு பிடித்தது. அந்த நேரம் பார்த்து சரியாக கீழே வந்த அபியின் காதுகளில் ஆரியன் கூறிய வார்த்தைகள் தெளிவாக கேட்க. யாழினியை தான் முதலில் பார்த்தான்.

 

அவள் முகத்தின் வாட்டத்தை வைத்து அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவன். அமைதியாக வந்து நின்றான்.

 

அவனை பார்த்த வள்ளியம்மை பாட்டி, இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு அபி.

 

ஏன்னா இது என்னுடைய செலக்சன் பாட்டி. மை செலக்ஷ்ன் இஸ் தி பெஸ்ட் ஆல்வேஸ் என்று கர்வமாக கூறி யாழினியை பார்த்தான்.

 

அவனின் பார்வை போன திசையை பார்த்த பாட்டிக்கு எதுவோ தவறுதலாக நடந்து இருப்பது மட்டும் புரிந்தது. அபிமன்யு திருமணத்தன்று இவர்கள் செலக்ட் செய்த உடை எதுவுமே அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

 

ஆகையால், ரிசப்ஷனில் அனைத்துமே அவனுடைய விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறிவிட்டான்.

 

ஆடைகள் முதற்கொண்டு அவனே பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்து வடிவமைக்க சொல்லி விட்டான். அவனுக்கு தான் தெரியுமே எப்படியும் யாழினி தான் மணப்பெண் என்று.

 

ஆகையால், முன்னதாகவே யாழினிக்கும் அவளுக்கு தகுந்தார் போல் உடையை வடிவமைத்து வைத்து விட்டான். அனைவரும் கிளம்பி ரிசப்ஷன் ஹாலிற்கு செல்ல.

 

அபிமன்யுவும், யாழினியும் பின் இருக்கையில் அமர்ந்திருக்க. ஆரியன் அந்த காரை ஓட்ட அருகில் ஆரணி அமர்ந்திருந்தாள். அடுத்த காரில் மற்ற குடும்பத்தினர் எறிக்கொள்ள.

 

மகேந்திரனின் தங்கை குடும்பத்தினர் ஒரு காரிலும், அண்ணன் குடும்பத்தினர் வேறு ஒரு காரிலும் ஏறி ரிசப்ஷன் ஹாலை நோக்கி புறப்பட்டனர்.

 

ஷைலஜா, மாம், எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இரிடேடிங்கா இருக்கு. நேத்தே கிளம்பலாம்னு சொன்னேன். நீ தான் அண்ணன் கோவிச்சுப்பாரு அது, இதுன்னு சொல்லி தங்க வச்சுட்ட. இன்னைக்கு ரிசப்ஷன் முடிஞ்சதும் நான் வீட்டுக்கு எல்லாம் வரமாட்டேன். அப்படியே கிளம்பிடுவேன் என்று கோபமாக கூறினாள்.

 

விசாலாட்சி, என்னை என்ன பண்ண சொல்ற. அவ்வளவு பேசியும் அவன் உன்னை கட்டிக்க முடியாதுன்னு அத்தனை பேரு முன்னாடி அசிங்கப்படுத்திட்டான். உன்னால எனக்கு தான் அவமானமா இருக்கு. சரி, ஆரியனையாவது எப்படியாவது உன் கைக்குள் கொண்டு வருவன்னு பார்த்தா ஊருக்கு போலாம்னு சொல்ற என்று கோபப்பட்டார்.

 

ஷைலஜா, வாட் ஆரியனா.. மாம்! அபி எங்க, ஆரியன் எங்க. அபிக்கு கெத்தும், திமிரும் தான் அழகு. அது ஆரியனுக்கு கொஞ்சம் கூட செட் ஆகாது. அவன் சாக்லேட் பாய் மாதிரி இருப்பான் மா. எனக்கு இந்த டைப் பாய்ஸ் செட் ஆகாது என்று கூறி முகத்தை சுழித்தாள்.

 

விசாலாட்சி, முதல்ல உனக்கு அவனை பிடிக்குதாங்கிறது முக்கியமில்லை. அவனுக்கு உன்னை பிடிக்கணும். அது தான் முக்கியம் என்று வெடுக்கென்று கூறினார்.

 

இங்க பாரு ஷைலஜா, நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. அந்த வீட்டுக்கு நீயும் ஒரு மருமகளா போகணும். உன்னை கட்ட மாட்டேன்னு சொன்ன அபிமன்யு முன்னாடி அதே வீட்டில் நீ வாழ்ந்து காட்டணும். இது என்னுடைய தன்மான பிரச்சனை. இதை மட்டும் நீ செய்யல. அப்புறம் நான் சும்மாவே இருக்க மாட்டேன் பாத்துக்கோ. ஒழுங்கா ஆரியனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுற வழியை பாரு என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

 

சலிப்பாக தன் முகத்தை திருப்பிய ஷைலஜாவிற்கும் தன் தாய் கூறுவது சரி தான் என்று பட்டது. அந்த யாழினி அவனுக்கு பொருத்தம் இல்லைனு அந்த வீட்டில் ஆரியனோட நான் வாழ்ந்து காட்டணும். எங்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்து அந்த அபிமன்யு பொறாமையில் சாகனும். அதுக்காகவே எப்படியாவது இந்த ஆரியனை நம்ம கரெக்ட் பண்ணனும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

பின்னர், அனைவரும் ரிசப்ஷன் ஹாலை அடைய. ஏழு மணி அளவில் ரிசப்ஷன் இனிதே துவங்கியது. மகேந்திரனின் தொழில் முறை நண்பர்களும், அபியின் தொழில் முறை நண்பர்களும் அதிகமானோர் என்பதால் ஹாலே நிரம்பி வழிந்தது கூட்டத்தில்.

 

அது ஏசி ஹால் என்பதால் அனைவரும் புழுக்கம் இன்றி தப்பித்துக் கொண்டனர். ஒரு பக்கம் பஃபே முறையில் உணவு ஏற்பாடு செய்திருக்க. மற்றைய பக்கத்தில் அனைத்து வகையான ஸ்வீட்டுகளும், சாட் ஐட்டங்களும், ஐஸ்கிரீமும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

 

யாழினியின் விழிகளோ யாரையோ வாசலில் தேடிக் கொண்டே இருந்தது. அதனை கவனித்த அபி யாழினியின் கையை பிடித்து அதில் அழுத்தத்தை கொடுத்தான். வலி தாங்க முடியாமல் கண்கள் சட்டென கலங்கி விட்டது யாழினிக்கு.

 

யாழினி யாரை எதிர் பார்க்கிறாள்...?

 

அபியின் அடக்குமுறைக்கு பின் இருக்கும் காரணம் என்ன...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5