அவனதிகாரம் - 37
அதிகாரம் – 37
மறுநாள்
இரவு அனைவரும் உணவருந்த சாப்பாட்டு மேஜையில் அமரும் நேரம் தான் திரும்பி வந்தான்
அபிமன்யு.
மீரா, “அபி பிரஷ் ஆயிட்டு வா பா சாப்பிடலாம்”.
அபிமன்யு,
“ஒன் செக் மாம்” என்று கூறியவன் இரவு உடைக்கு மாறி கீழே
வந்தான்.
அனைவருக்கும்
மீரா பரிமாறிக் கொண்டிருந்தார். வந்தவன் யாழினியின் அருகில் காலியாக இருந்த
இருக்கையில் சென்று அமர்ந்தான். ஆரணியிடம் வளவளத்துக்கொண்டே சாப்பிட்டுக்
கொண்டிருந்த யாழினி இவன் வந்து அருகில் அமர்ந்ததை கவனிக்கவில்லை.
ஆரணி
கிசுகிசுப்பாக யாழினியிடம், “நேத்து உனக்கும், அபி அண்ணாக்கும்
பேரிங் ரொம்ப நல்லா இருந்தது யாழினி”.
யாழினி,
“பேரிங் நல்லா இருக்குற எல்லாரும்
பெஸ்ட் கப்புல்ஸ் ஆகிட முடியாது ஆரணி”.
ஆரணி, “அப்படி எல்லாம் இல்ல. நீ வேணும்னா பாரு
நீயும், அபி அண்ணாவும் தான் பெஸ்ட் கப்புல்சா இருக்க போறீங்க” என்று கூறி குறும்பாக சிரித்தாள்.
யாழினி,
“அப்படியா சரி, சரி. இந்த நாளை
நான் கேலண்டரில் குறிச்சி வச்சிக்கிறேன். நீ சொன்னபடி நடந்தா, உனக்கு நான்
சாக்லேட் வாங்கி தருவேன். அப்படி நடக்கலைனா நீ எனக்கு சாக்லேட் வாங்கி தரணும்.
டீலா” என்று சேலஞ்ச் செய்து கொண்டனர்
இருவரும்.
இதை
அருகில் இருந்து கவனித்த அபிமன்யு மனதினுள், “அடிப்பாவிங்களா, நம்ம வாழ்க்கை உனக்கு விளையாட்டா போச்சா
சாக்லேட் வாங்கி தரேன்னு பெட் கட்டுற ரூமுக்கு வா உன்னை வச்சிக்கிறேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டே வெளியில்
எந்த உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
அவனிற்கு
நேர் எதிரே மரகதம் பாட்டி அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவரை பார்க்க
பார்க்க இவனுக்கு கோபம் பெருக்கெடுத்தது.
அதிலும்,
மரகதம் பாட்டி யாழினியிடம், “இன்னும் ஒரு இட்லி வச்சுக்கோ
யாழினி. ஏன் அதுக்குள்ள கை கழுவுற”
என்று அன்பாக விசாரிப்பது இவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அபிமன்யு,
“இவங்ககிட்ட எல்லாம் எதுக்கு இவ
பாசமா பேசிக்கிட்டு இருக்கா இடியட். கொஞ்சம் கூட இவளுக்கு அறிவே இல்ல. யாரு
எப்படினு புரிஞ்சுக்க தெரியல. எல்லாமே நான் தான் சொல்லிக் கொடுக்கணும் போலருக்கு” என்று திட்டிக் கொண்டே சாப்பிட்டு
முடித்தான்.
யாழினி,
மரகதம் பாட்டி, வள்ளியம்மை பாட்டி, ஆரணி என நால்வரும் ஒரு குழுவாக அமர்ந்து பேசி
சிரித்துக்கொண்டிருந்தனர்.
அதை
பார்க்க பார்க்க அபிமன்யுவின் கோபம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுக்க, “யாழினி ரூமுக்கு வா” என்று சத்தமாக அழைத்துவிட்டு அறையை
நோக்கி சென்று விட்டான்.
மரகதம்
பாட்டி, “போ மா. தம்பி கூப்பிடுறார். போய்
என்ன வேணும்னு பாரு” என்று அனுப்பி வைத்தார்.
“சரி பாட்டி” என்று கூறிய யாழினிக்கோ உள்ளுக்குள் திக்
திக் என்று இருந்தது.
யாழினி,
“சும்மாவே ஆடுவான். இப்போ அவனை
அடிச்சு சலங்கையை வேற கட்டி விட்டுட்டோம். என்ன பேச்சு பேச போறானோ தெரியலையே.
இல்லைனா, பதிலுக்கு திரும்ப அடிச்சிடுவானோ. மண்டபத்திலேயே கையை ஓங்கிக்கிட்டு
வந்தான். நல்ல வேளை வள்ளியம்மை பாட்டி வந்து காப்பாத்திட்டாங்க. இப்போ என்ன பண்ண
முடியும். போய் தான ஆகணும்” என்று புலம்பி கொண்டே அறையனுள்
சென்றாள்.
அங்கே
பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு. அவன்
அருகில் சென்ற யாழினி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
“என்ன, நேத்து வரைக்கும் சின்ன
பொண்ணா இருந்த, கல்யாணம் பண்ண மறுநாளே குடும்பத்தலைவியா ஆயிட்டீங்க போல மேடம்” என்று நக்கலாக கேட்டான் அபிமன்யு.
இவன்
என்ன கூறுகிறான் என்று புரியாமல் விழித்தாள் யாழினி. “என்ன திருதிருன்னு பார்க்குற ஒன்னும் தெரியாத மாதிரி. உங்க
குடும்பத்தில் இருக்குறவங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு என்னெல்லாம் அடிச்சு விடற.
நீயும், நானும் சந்தோஷமா வாழறோம்னு சொல்ற. சொல்லுடி.. சந்தோஷமா வாழறோமா” என்று கேள்வியாக கேட்டான்.
எதுவும்
கூறாமல் அமைதியாக நின்ற யாழினியை பார்த்து, “உன்னை தான கேட்டுட்டு இருக்கேன். எதுக்கு அப்படியே சிலை
மாதிரி நிக்கிற. உங்க தாத்தா மனசு கஷ்டப்பட கூடாது. உங்க அப்பா மனசு கஷ்டப்பட
கூடாது. அதுக்காக எல்லார்கிட்டயும் அள்ளி விடுற. என்னை மாப்பிள்ளை நல்லா
பார்த்துக்கிறார். தாங்கு தாங்குன்னு தாங்குறார். எப்படி.. எப்படி.. அவங்க கிட்ட
நீ பாசமா இருக்கிறது பார்த்து நான் கோவிச்சுக்கிட்டு உன் மேல கோவப்படுறேனா..” என்று கூறி கைதட்டி சிரித்தான்.
அபியின்
சரமாரியான கேள்விகளில் யாழினிக்கு விழி பிதுங்கி விட்டது. யாழினி மனதிற்குள், ‘எல்லாத்தையும் ஒன்னு விடாமல் கேட்டு
இருக்கானே. இவன் ரூம்ல தான இருந்தான். வீட்டை சுத்தி கேமரா ஏதாவது வச்சிருக்கானோ’ என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.
அபிமன்யு,
“உன்னை தான கேட்கிறேன். வாயை
திறந்து பதில் சொல்லு. எதுக்கு அப்படி பொய் சொன்ன. நாம சந்தோஷமா வாழுறோமா” என்று மீண்டும் கேட்டு ஒரு புருவத்தை
தூக்கி அவளை பார்த்தான்.
“சும்மா ஹக் பண்ணதுக்கு என்னை
கன்னத்தில் அறைஞ்சவ தான நீ. எப்படி நம்ம சந்தோஷமா வாழறோம்னு அவங்ககிட்ட நீ
சொல்லலாம்” என்று மீண்டும் மீண்டும் அதையே
கேட்டான்.
“இல்ல.. அவங்க மனசு
கஷ்டப்படக்கூடாதுன்னு தான் அப்படி சொன்னேன்” என்றாள் மெதுவாக.
“நீ எதுக்கு கில்டியா பீல் பண்ற.
இப்போ என்ன உங்க வீட்டில் இருக்கவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னா.. நம்ம
சந்தோஷமா நம்ம வாழ்க்கையை வாழனும் அவ்வளவு தானே” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்.
“சரி வா நாம சந்தோஷமா வாழலாம்” என்று கூறி அவளின் கையைப் பிடித்து
இழுத்தான்.
இழுத்த
வேகத்தில் நிலை தடுமாறி அவனின் மேலேயே மோதி நின்றவள், “இல்ல.. நான்.. உங்களுக்காக தான்.. சும்மா சொன்னேன்” என்று அவசரமாக தடுமாறி கூறினாள்.
“சும்மா சொன்னா என்ன நிஜமா சொன்னா
என்ன.. அது விஷயம் கிடையாது. நாம சந்தோஷமா வாழறோமா இல்லையா.. அது தான் விஷயம். என்
கூட உன்னால சந்தோஷமா வாழ முடியாதுன்னு இப்போவே போய் சொல்லிடு. உன் பாட்டி இங்க தான
இருக்காங்க அவங்க கிட்ட போய் சொல்லு”
என்று கூற. செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு திணறியபடி நின்றாள் யாழினி.
“என்ன இப்படியே நின்னா என்ன
அர்த்தம். எனக்கு டைம் இல்ல. நான் போய் உன் பாட்டியை பார்த்துட்டு வரேன்” என்று நகர போனான்.
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அவங்க கிட்ட
எதுவும் சொல்லிடாதீங்க. தாத்தாவுக்கு ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம் இப்போ தான் கொஞ்சம்
சரியாகி இருக்கு. திரும்பவும் என்னால அவருக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் நான்
அப்படி பொய் சொன்னேன்” என்று தலையை குனிந்த படி
கூறினாள். அதற்குள் அவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி விட்டது.
“சரி, அப்போ உன் பாட்டி கிட்ட நான்
எதுவும் சொல்ல கூடாதுன்னா.. உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணுமே” என்று யோசிப்பது போல் பார்த்தான்.
‘இதில் என்ன வில்லங்கத்தை
வச்சிருக்கான்னு தெரியலையே. கடவுளே! என்னை எப்படியாவது இவன்கிட்ட இருந்து
காப்பாத்து’ என்று அவசர வேண்டுதலை வைத்தாள்
யாழினி.
“ஓகே.. மண்டபத்தில் நான் உன்னை
கட்டி பிடிச்சதுக்காக தான நீ என்னை அடிச்ச” என்று அவனின் தாடையில் கை வைத்து அந்த காட்சியை நினைத்து
பார்த்தவன், “இப்போ நீ... அதாவது ‘மிஸஸ். யாழினி அபிமன்யு ஆரியன்’ ஆகிய நீ... இந்த அபிமன்யுவை கட்டி
பிடிக்கணும்” என்று கூறி கூலாக நின்றான்.
இவன்
கூறியதை கேட்டு அதிர்ந்த யாழினி வாயடைத்து போய்விட்டாள்.
“உனக்கு இப்போ இரண்டு ஆப்ஷன் தான்
இருக்கு. ஒன்னு, உன் பாட்டிகிட்ட எல்லா உண்மையையும் சொல்லணும். அப்படி இல்லையா,
என்னோட பனிஷ்மென்ட்டை ஏத்துக்கணும். ரெண்டுல எது செலக்ட் பண்றியோ அது உன்னோட
டெசிஷன்” என்று கூறிவிட்டு அமைதியாக
நின்றான்.
“இதெல்லாம் ஒரு பனிஷ்மென்டா.
வில்லன் மாதிரி பேசுறான். ஆனா, இவன் நடந்துக்குறதை பார்த்தா அப்படி தெரியலையே.
வேணும்னே இவன் நம்மளை பழி வாங்குறான்”
என்று மனதிற்குள் திட்டியவள் அமைதியாக நிற்க.
தன் கை கடிகாரத்தை
திருப்பி பார்த்தவன். “சரி, இதெல்லாம் சரி வராது. நான்
போய் பாட்டியை பார்க்கிறேன்” என்று நகர போனவனின் கையை
பிடித்தவள். அவன் சுதாரிக்கும் முன்பு அவனை அணைத்திருந்தாள்.
அபிமன்யுவை
பொருத்தவரை இதற்கு முன்பு இரு முறை அவளை அணைத்திருந்தாலும், அதில் அபிமன்யுவின்
பங்கு மட்டுமே இருந்திருக்கிறது.
இதுவே
முதல் முறை இருவரும் விருப்பத்தோடு இணைவது. யாழினி வெறுப்போடு அணைத்திருந்தாலும்,
அதனை விரும்பி ஏற்றான் அபிமன்யு.
அபிமன்யுவின்
மனதிற்குள், ‘இதுவும் நல்லா தான் இருக்கு.
இவகிட்ட கோவத்தை காட்டி எந்த வேலையும் சாதிக்க முடியாது. இப்படி ஏதாவது செஞ்சு
தான் நம்ம நினைச்சதை சாதிக்கனும் போலருக்கு’ என்று எண்ணினான்.
யாழினியின்
நிலையோ படு மோசமாகி போனது. கணவனாக இருந்தாலும், ஒரு ஆடவனை அணைப்பது அவளுக்கு இதுவே
முதல் முறை. கை, கால்கள் எல்லாம் கிடுகிடுவென ஆட தொடங்கியது.
முடிந்த
அளவு தன்னை கட்டுப்படுத்தியவள். சிறிது நேரத்தில் அபிமன்யுவிடமிருந்து விலகி
திரும்பியும் பாராமல் அறையை விட்டு வெளியே ஓடிவிட்டாள்.
அப்போது
எதிரே வந்த வள்ளியம்மை பாட்டியின் மீது எதிர்பாராத விதமாக மோதியவளை பார்த்த
வள்ளியம்மை பாட்டி முகம் முழுக்க சிவந்து படபடப்பாக இருந்த யாழினியை பார்த்ததும்
அவரின் எண்ணம் ‘அபி ஏதோ திட்டி விட்டானோ, அடித்து
விட்டானோ’ என்று அப்படி போய்விட்டது.
“என்னாச்சு யாழினி, என்னம்மா.. அபி
ஏதாவது சொன்னானா” என்று படபடப்பாக அவளின் முகத்தை
நிமிர்த்தி கேள்வி கேட்டார். அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே யாழினிக்கு மிக
கூச்சமாக இருக்க.
“ஒன்னும் இல்ல பாட்டி” என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
“கண்டிப்பா இவன் தான் ஏதாவது
திட்டி இருப்பான். முதல்ல அக்காகிட்ட எல்லா உண்மையையும் சொல்லி இதுக்கு ஒரு முடிவு
கட்டணும்” என்று மனதிற்குள் தீர்மானத்தோடு
மரகதத்தை தேடி போனார் வள்ளியம்மை.
இங்கே
அபிமன்யு, யாழினி விட்டு சென்ற நிலையிலேயே சிலையாக நின்று விட்டான். ‘உன்னோட மனசுல நீ என்ன நினைக்குறனு எனக்கு
புரியுது பேபி டால். உனக்கு உன் குடும்பத்தை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்.
ஆனா, நீ ஏன் இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்த. இதுவே நீ மட்டும் வேற ஏதாவது ஒரு
குடும்பத்தில் பிறந்து இருந்தேனா. உன்னை உன் குடும்பத்தோட சேர்த்து நான் கொண்டாடி
இருப்பேன். இப்போ, அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. என் அம்மாவை வேண்டாம்னு
தூக்கி எறிஞ்ச குடும்பம் அது. நமக்கும் அவங்க வேண்டாம் பேபி டால். உன்னை நான்
நல்லா பாத்துக்குவேன். அவங்க வேண்டாம்’
என்று மனதிற்குள்ளே பிதற்றிக் கொண்டிருந்தான்.
மரகதம்
பாட்டியிடம் அனைத்து உண்மையையும் கூறிய வள்ளியம்மை, அவரின் பதிலுக்காக அவரின்
முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
“பால்கனியில் இவ்வளவு காத்து
வீசுது. ஆனா, நீ சொன்னதை கேட்டதும் மூச்சு அடைக்கிற மாதிரி இருக்கு வள்ளி” என்று கூறினார் அதிர்ந்த நிலையில் இருந்த
மரகதம்.
“இப்படி எல்லாம் பேசாதக்கா. அவனோட
மனசுல இருக்குற எண்ணம் தப்புன்னு அவனுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு
தெரியல. சின்ன வயசுல இருந்தே என் வீட்டுக்காரர் தப்பான விஷயத்தை சொல்லி சொல்லி
அவனை இப்படி மாத்தி வச்சிருக்கார். நான் எவ்வளவு எடுத்து சொன்னாலும் அவன் புரிஞ்சுக்க
மாட்டேங்குறான். ஏதோ என் அக்கா குடும்பம் அதனால நான் திரும்ப ஒன்னு சேரனும்னு பொய்
சொல்ற மாதிரி பேசுறான். அவனுக்கு எப்படி உண்மையை சொல்றதுன்னு எனக்கு ஒன்னும்
புரியல. அதான் உன்கிட்ட ஏதாவது யோசனை கேட்கலாம்னு சொன்னேன்”.
“நம்ம இந்த விஷயத்தை முதலில்
யாழினிகிட்ட சொல்லணும் வள்ளி”.
“இதை யாழினிகிட்ட சொல்றது சரி
வருமா. பாவம், சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்”.
“அப்படி இல்ல. சின்ன பொண்ணா
இருந்தாலும், இப்போ அவளுக்கு அபி கூட கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இனிமே அவ
வாழ்க்கையை அவ தான் வாழனும். இப்படி ஒரு சிக்கலில் அவ இருக்கான்றது முதலில்
அவளுக்கு தெரியணும். அப்போ தான் அந்த சிக்கலை எப்படி சரி பண்ணனும்னு அவளுக்கு
தெரியும். நம்ம வெளியில் இருந்து பார்க்கிறவங்க என்ன வேணாலும் யோசிக்கலாம். ஆனா,
அந்த இடத்தில் இருக்கிறது யாழினி தான். எனக்கு ஒன்னு மட்டும் புரியல வள்ளி.
இவ்வளவு கோபமா இருக்கவன் எப்படி யாழினியை கட்டுனான்” என்று சந்தேகமாக கேட்டார்.
“அதான் சொன்னனேக்கா. மீரா கிட்ட
நீங்க யாரும் உண்மையை சொல்லாமல் இருக்குறதுக்காக தான் அவன் யாழினியை
கட்டியிருக்கான்” என்று சலிப்பாக கூறினார்
வள்ளியம்மை பாட்டி.
அதற்கு
மரகதம் பாட்டி, “இல்ல வள்ளி. நீ சொல்றது உண்மையான
காரணமா இருக்கும்னு எனக்கு தோணல. இதுக்கு பின்னாடி வேற என்னமோ காரணம் இருக்கு.
ஏன்னா, நிச்சயத்தப்போ அபியோட முகமே கடுகடுன்னு இருந்துச்சு. ஆனா, ரிசப்ஷன்ல அபி
விருப்பம் இல்லாம யாழினி பக்கத்தில் நின்ன மாதிரி தெரியல. ஏதோ, அவன் எதிர்பார்த்த
வாழ்க்கை அவனுக்கு கிடைச்சிட்ட மாதிரி, மன நிறைவா நின்றிருந்த மாதிரி தான் எனக்கு
தெரிஞ்சது. இதில் வேற என்னமோ இருக்கு”
என்றார் யோசனையாக.
“இல்லையேக்கா. அப்படி ஏதாவது
இருந்தா எனக்கு தெரிஞ்சிருக்குமே. என் வீட்டுக்காரர் தான் அவன்கிட்ட சொன்னார்,
மீராவுக்கு எந்த உண்மையும் நீங்க சொல்லாமல் இருக்கணும்னா அதுக்கு நமக்கு ஒரு
பிடிப்பு வேணும். அவங்க வீட்டு பொண்ண நீ கட்டுனா அவங்க மீரா கிட்ட உனக்கு பயந்துகிட்டு
எதுவும் சொல்லாமல் இருப்பாங்கன்னு சொன்னார். அதை கேட்டுட்டு தான்க்கா இவனும்
முட்டாள் மாதிரி நடந்துகிட்டு இருக்கான்”
என்றார் வெறுப்பாக.
“சரி வள்ளி. இப்போ நமக்குள்ள
எதுக்கு இந்த குழப்பம். போக போக எது உண்மைனு தானா வெளியே வரும்” என்று கூறியவர், “முதலில் யாழினிகிட்ட இந்த விஷயத்தை
எல்லாம் சொல்லுவோம்”.
இருவரும்
சென்று யாழினியை பார்க்க. அவளோ ஆரணியிடம் சிக்கி தப்பிக்க முடியாமல் அவளின்
கேள்விகளில் விழி பிதுங்கி அமர்ந்திருந்தாள்.
அருகில்
அரவிந்த் வேறு “சொல்லு, சொல்லு” என்று நச்சரித்துக் கொண்டு இருந்தான்.
வள்ளியம்மை,
“இங்க என்ன நடக்குது” என்று குரல் கொடுத்தார்.
அவரின்
குரலில் திரும்பிய ஆரணியும், ஆரியனும் பாட்டியை பார்த்து அசடு வழிய. யாழினி தான்
தப்பிக்க ஒரு வழி கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் பாட்டியை பார்த்தாள்.
“என்ன வேணும் உங்க ரெண்டு
பேருக்கும். எதுக்கு இப்போ யாழினியை போட்டு பாடா படுத்துறீங்க” என்று கேட்டார் வள்ளியம்மை பாட்டி.
“பாட்டி உங்களுக்கு ஒன்னும்
தெரியாது. இவளுக்கும், அபி அண்ணாவுக்கும் நடுவில் என்னமோ நடந்திருக்கு” என்று குறம்பாக கூறினாள் ஆரணி.
மரகதம்
பாட்டி, “அப்படியா! என்னமா நடந்திருக்கு” என்று ஆரணியுடன் சேர்ந்து யாழினியை
கிண்டல் செய்தார்.
“பாட்டி...” என்று யாழினி பல்லை கடிக்க.
ஆரியனோ,
“அதை தான் பாட்டி நாங்களும்
கேட்கிறோம். வாயவே திறக்க மாட்டேங்குறா. என்னை விட இவ சின்ன பொண்ணு தான. நான் தான
பெரிய பையன். என்கிட்ட கூட சொல்ல மாட்டேங்குறா என்ன நடந்துச்சுன்னு” என்று மரகதம் பாட்டியிடம் முறையிட்டான்.
அதற்கு
வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்ட யாழினி, “ஏதாவது நடந்தா தான சொல்ல முடியும். எதுவுமே நடக்கல. நீ
சொல்லு, சொல்லுனா நான் என்ன சொல்றது”
என்று சலித்துக் கொண்டாள்.
உடனே
ஆரணி கோபமாக, “ஐயோ பாட்டி. இவ நல்லா பொய்
சொல்றா. நம்பாதீங்க, அங்க பாருங்க அவளை. எப்படி ப்ளஷ் ஆகுறா. அது மட்டும் இல்ல,
அபி அண்ணா பேர சொன்னாலே முகம் சிவக்குது. என்னமோ நடந்திருக்கு பாட்டி” என்று அடித்துக் கூறினாள்.
வள்ளியம்மை,
“சரிடி, அப்படியே ஏதாவது
நடந்திருந்தாலும் உனக்கு என்ன. அவ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல. கல்யாணம் ஆயிடுச்சு,
உன்னோட அண்ணி. உன் அண்ணனோட வாழ்க்கையிலயும், அண்ணியோட வாழ்க்கையிலயும் என்ன
நடக்குதுன்னு பாக்குறது தான் உன்னோட வேலையா. போய் ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு. இல்ல,
உங்க அப்பாகிட்ட சொல்லி விட்டுடுவேன்”
என்று அதட்டினார்.
“ஆனா, ஊனா இதை சொல்லிடுங்க. சின்ன
பொண்ணு, சின்ன பொண்ணுன்னு” முறுக்கிக் கொண்டு
சென்றுவிட்டாள் ஆரணி.
ஆரணியின்
நிலையை பார்த்த ஆரியன் வாயை திறக்காமல் அவளின் பின்னோடு சென்று விட்டான். பிறகு,
வள்ளியம்மையும், மரகதமும் யாழினியை அமர வைத்து மொத்த குடும்ப கதையையும் கூறி
முடித்தார்கள்.
இவர்கள்
கூறிய கதையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த யாழினி, “என்ன பாட்டி சொல்றீங்க” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
யாழினியின்
முடிவு என்ன...
தன்னை
ஒரு பகடைக்காயாக எண்ணி திருமணம் செய்த அபியுடன் சேர்ந்து வாழவாளா...?
அல்லது,
பிரிந்து செல்வாளா...?
கருத்துகள்
கருத்துரையிடுக