அவனதிகாரம் - 41
அதிகாரம் – 41
அபிமன்யு
தாத்தாவின் அறையில் இருந்து வெளி வருவதற்காகவே காத்திருந்த ஆரணியும், ஆரியனும்
அவன் வெளிவருவதை பார்த்து, “அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று பின்னே ஓடினர்.
ஒரு
கையை காதில் செல்போனிற்கு கொடுத்தவாறு திரும்பி இவர்களை பார்த்தவன் ‘என்ன’ என்னும் விதமாக புருவத்தை உயர்த்தினான்.
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் ஆரணி.
அபி, “ஓகே வில் கால் யு பேக்” என்று கூறிவிட்டு போனை அணைத்தவன்.
“என்ன விஷயம்?”.
“அண்ணா... அது வந்து...” என்று இழுத்தாள் ஆரணி.
அபி, “எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.
எனக்கு முக்கியமான கால் பேசணும்”.
அதற்கு
ஆரியனை திரும்பி பார்த்த ஆரணி கண்களால் ஆரியனை உதவிக்கு அழைக்க, “அண்ணா உங்க கிட்ட யாழினி பத்தி கொஞ்சம்
பேசணும்” என்றான் ஆரியன்.
யாழினி
என்றவுடன் அபியின் பார்வை கூர்மையாக. ஆரணி, “அண்ணா யாழினி ரொம்ப பாவம். நீங்க அவகிட்ட ரொம்ப ரூடா
நடந்துக்கிறீங்க. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவங்க அக்கா
கயல்விழியை விட யாழினி ரொம்ப நல்லவ”
என்றாள்.
அபி, “சோ?” என்று தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு, இருவரையும்
பொறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆரியன்,
“இல்லண்ணா. நீங்க யாழினிகிட்ட ரூடா
நடந்துக்குறீங்கன்னு ஆரணி பீல் பண்றா. அதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தோம்”.
அபி, “ஐ நோ வாட் ஐ அம் டூயிங். கவலைப்படாத
என்னால உன் பிரண்டுக்கு எந்த பிரச்சனையும் வராது” என்று கூறிவிட்டு சரசரவென அறையை நோக்கி சென்று விட்டான்.
மரகதம்
பாட்டி, “தம்பி ஒரு நிமிஷம்” என்றார் அறையினுள் அபிமன்யு நுழைவதைப்
பார்த்து.
அவரை
திரும்பி பார்த்தவன் எந்த பதிலும் கூறாமல் ‘என்ன’ என்பது போல் அலட்சியமாக
பார்த்தான்.
மரகதம்,
“உங்களுக்கு எங்க குடும்பத்து மேல
என்ன கோவம்னு தெரியல. ஆனா, எங்க மேல இருக்குற கோவத்த தேவையில்லாம நீங்க யாழினி
மேல காட்டுறீங்க. யாழினி சின்ன பொண்ணு. நாங்க சொன்ன ஒரே காரணத்துக்காக உங்களை
கல்யாணம் பண்ணி இருக்கா. உங்களை நம்பி வந்தவ மேல இப்படி கோபத்தை காட்டாதீங்க தம்பி” என்று கூறியவர், தன் வாயில் துணியை
வைத்து பொத்திக்கொண்டு அழுவதை போல் அபிமன்யுவிற்கு தன் முதுகை காட்டி திரும்பிக்
கொண்டார்.
அந்த
புறம் திரும்பியவர் அபிமன்யுவின் முன்பு அழுவதைப் போல் குலுங்கி குலுங்கி, “யாழினிக்கு ஜாதகத்துல பெரிய பிரச்சனை
இருக்கு. அவ உயிரோட இருக்குறது உங்க கையில் தான் இருக்கு தம்பி” என்றார் மரகதம் பாட்டி.
அழுது
கொண்டு கூறுவது போல் கூறவும், அவர் கூறுவதை உண்மை என்று நம்பிய அபிமன்யு, “என்ன சொல்றீங்க. யாழினிக்கு என்ன பிரச்சனை” என்றான் பதட்டமாக.
“அவளுக்கு கொஞ்சம் நாளைக்கு
முன்னாடி தான் நாங்க ஜாதகம் பார்த்தோம். அப்போ தான் எங்களுக்கு அந்த உண்மை
தெரிஞ்சது” என்று ஒப்பாரி வைப்பது போல்
அழுகையினோடு நடித்தார்.
அபிமன்யு
கோபமாக, “ஃபர்ஸ்ட் என்ன விஷயம்னு
சொல்லிட்டு அப்புறமா ஒப்பாரி வைங்க. யாழினிக்கு என்ன பிரச்சனைனு முதலில் சொல்லுங்க”.
“அதை எப்படி தம்பி நான் என் வாயால
சொல்லுவேன். அவ உயிர் பிழைக்குறதே உங்க கையில தான் இருக்கு” என்று ராகம் பாடினார்.
யாழினி
உயிருக்கு ஆபத்து என்று கேட்டதும் பதட்டம் ஆகிய அபிமன்யு, “அப்படி என்ன தான் பிரச்சனை?” என்று கோபமாக கத்தினான்.
தன்
மூக்கை முந்தானையால் துடைத்து விட்டவர், “யாழினிக்கு திருமண கண்டம் இருக்குதாம். அவளுக்கு கல்யாணம்
முடிஞ்ச அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள அவ மாசம் ஆகலைனா அவளோட உயிருக்கு ஆபத்துன்னு
எங்க குடும்ப ஜோசியர் சொல்லிட்டார்”.
அபிமன்யு
குழப்பமாக மரகதம் பாட்டியை பார்த்தவன், “வாட்!” என்றான் குழம்பி போய். “இப்படி எல்லாம் கூட இருக்கா” என்றான் சந்தேகமாக.
அபிமன்யுவின்
சந்தேகப் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்த மரகதம் பாட்டி, “உங்க கிட்ட பொய் சொல்லி என்ன ஆகப்போகுது தம்பி. நாங்க
யாழினிக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இந்த விஷயத்தை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க
கிட்ட சொல்லி தான் கட்டிக் கொடுக்கணும்னு இருந்தோம். அதுக்குள்ள என்னெல்லாமோ நடந்து போச்சு. உங்க கல்யாணமும் அவசர
அவசரமா நடந்ததால இதை பத்தி வெளியில் சொல்ல முடியல. இப்போ நீங்க யாழினி கிட்ட
இப்படி கோவமா நடந்துக்கிறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எங்க என்
பேத்தியோட உயிருக்கு உங்களால எதுவும் ஆபத்து வந்துடுமோனு பயமா இருக்கு” என்று கூறியவர்.
“எங்க மேல இருக்க கோவத்துல என்
பேத்தியை கொன்னுடாதீங்க”.
அவர்
கூறுவதை கேட்டு அதிர்ந்த அபிமன்யுவிற்கு அடுத்து என்ன என்று புரியாத நிலை.
அபிமன்யுவின்
மனதிற்குள் “இப்படியெல்லாம் கூட தோஷம்
இருக்குமா. கல்யாணம் ஆன ஒரு வருஷத்துல புள்ள பொறக்கணும்னு சொல்றாங்க. கல்யாணம்
ஆகுறதுக்கு தானே நிறைய தடைகள் வரும். குழந்தை
பிறக்குறதுக்கும் நிறைய தடைகள் இருக்கும்னு சொல்லுவாங்க. கல்யாணம் பண்ணி ஒரு
வருஷத்துல குழந்தை பிறக்கணும்னு கூடவா இருக்கும். இவங்க சொல்றது உண்மை தான்னு
எப்படி நம்புறது.
ஒரு
வேளை இவங்க பொய் சொல்றாங்களா. இவங்களுக்கு பொய் சொல்லணும்னு என்ன அவசியம் இருக்கு.
ஏன் அவங்க பேத்தியோட வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்னு, நாம அவ கூட சேர்ந்து
வாழணும்னு கூட இப்படி பொய் சொல்லலாம்ல”
என்று பலவாறு சிந்தித்தவன். ‘எதுக்கும் இந்த விஷயத்தை பற்றி
விசாரிக்கணும்’ என்று எண்ணினான்.
அபிமன்யுவின்
யோசனை கலந்த முகத்தை பார்த்த மரகதம் பாட்டி, “நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா அவளோட ஜாதகத்தை
உங்ககிட்ட கொடுக்குறேன். உங்களுக்கு தெரிஞ்ச எந்த ஜோசியர் கிட்ட வேணும்னாலும்
பார்த்துக்கோங்க. நான் சொன்னது தான் அவங்களும் சொல்லுவாங்க. இன்னும் ஒரு
வருஷத்துக்குள்ள என் பேத்தி புள்ள உண்டாகலைனா அப்புறம் அவளோட உயிருக்கே ஆபத்தா
போயிடும்” என்றவர், சிறிது நேரம் யோசித்து
விட்டு, “இதை சரி செய்ய ஒரு வழி இருக்கு” என்றார்.
அபிமன்யு,
“என்ன..” என்றான் அவசரமாக.
“உங்களுக்கு தான் யாழினியை
பிடிக்கலையே பேசாமல் அவளை விட்டு பிரிஞ்சிடுங்க. இப்படி ஒரு வருஷத்துக்குள்ள அவளை
விட்டு நீங்க பிரிஞ்சுட்டீங்கனா அவ மாசம் ஆகணும்னு அவசியம் இருக்காது” என்று அசராமல் அபிமன்யுவின் தலையில்
குண்டை தூக்கி போட்டார்.
யாழினியை
பிரிய வேண்டும் என்பதை அபிமன்யுவால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, “என்ன உளறுறீங்க” என்றான் பற்களை கடித்தபடி கோபமாக.
“ஆமா தம்பி. உங்களுக்கு தான்
யாழினியை பிடிக்கலையே. பிடிக்காதவளோட குடும்பம் நடத்தி உங்களால குழந்தை பெத்துக்க
முடியுமா.. முடியாது. அதனால, நீங்க ரெண்டு பேரும் பிரியுறது தான் உங்க ரெண்டு
பேருக்குமே நல்லது.
எனக்கு என் பேத்தி
வாழ்க்கையை விட அவளோட உயிர் தான் முக்கியம். நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்கு
அப்புறமா வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து எல்லா உண்மையையும் சொல்லி அவளுக்கு
நாங்க கல்யாணம் பண்ணி வைப்போம்”.
யாழினியை
பிரியப்போவதையே ஏற்றுக்கொள்ள முடியாத அபிமன்யுவால், அவளுக்கு வேறொருவனுடன்
திருமணம் செய்யப் போவதாக கூறியதைக் கேட்டதும் கோபம் தாறுமாறாக ஏறியது.
“ஷெட் அப்” என்று கத்தியவன், “இந்த
அபியோட பொண்டாட்டிக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா” என்றான் கோபத்தில் ருத்ரமூர்த்தியாக.
“எனக்கு வேற வழி தெரியல தம்பி.
எனக்கு என் பேத்தி தான் முக்கியம்”
என்றார் மரகதம்.
இனி
இவரிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று எண்ணியவன் கோபமாக அறையினுள் நுழைந்தான்.
செல்லும்
அபிமன்யுவின் முதுகை பார்த்து சிரித்த மரகதம் பாட்டி, “படவா! என் பேத்தியை விரும்புறேன்னு உன் வாயாலேயே சொல்ல
வைக்கிறேன் பாரு. நீ எங்களை ஆட்டி வைக்க பாக்குறியா. நான் உன்னை எப்படி ஆட்டி
வைக்கிறேன்னு பாரு” என்று எண்ணிக் கொண்டு சென்றார்.
கோவமாக
அபிமன்யு அறையினுள் நுழைவதை கவனிக்காத யாழினி தன் சிந்தனையிலேயே உழன்று
கொண்டிருந்தாள்.
“அப்படி பாட்டி என்ன செய்யப்
போகுதுன்னு தெரியலையே. அவர் என்ன கேட்டாலும் ஆமான்னு சொல்ல சொல்லுது. ஏதாவது
மாத்தி உளறி வச்சிட்டா என்ன பண்றது. ஐயோ! எதுக்கும் பாட்டி சொன்ன மாதிரி அவர் என்ன
கேட்டாலும் ஆமான்னு சொல்லிடுவோம். ஆனா, பாட்டி என்ன சொல்ல போறாங்கன்னு தெரியலையே” என்று யோசனையாக அமர்ந்திருந்தாள்.
யாழினியின்
எதிரே கோபமாக சென்று நின்ற அபிமன்யு, “யாழினி” என்றான் அதட்டலாக.
அபிமன்யுவின்
குரலில் தன் சிந்தனையில் இருந்து கலைந்த யாழினி, ‘இப்போ என்ன பிரச்சனைனு தெரியலையே. ஏன் இப்படி கோவமா
நிற்கிறான்’ என்று மனதில் நினைத்தவள் திருதிருவென
விழித்த படி எழுந்து நின்றாள்.
யாழினியின்
பார்வையில் அபிமன்யுவின் கோபம் பனி என கரைய. இப்பொழுது அவன் மனதினுள் எங்கே
இவளுடைய பாட்டி கூறியது உண்மையாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.
அபிமன்யு,
“உன்னோட பாட்டி சொன்னது உண்மையா?” என்று கேட்டான்.
“அட லூசு, என்ன விஷயம்னு சொன்னா
தான டா தெரியும். எதுவுமே சொல்லாம பாட்டி சொன்னது உண்மையானு கேட்குற. நான் என்னனு
பதில் சொல்லுறது” என்று கைகளை பிசைந்தபடி நின்று
இருந்தாள்.
அபிமன்யு
சற்று குரலை உயர்த்தியவாறு, “சொல்லு, உன் கிட்ட தான
கேட்கிறேன். பாட்டி சொன்னதெல்லாம் உண்மையா?” என்றான் மீண்டும்.
அதற்கு
நாளா புறமும் தலையை ஆட்டி வைத்தாள் யாழினி.
அபி, “இப்படி எல்லாத்துக்கும் மண்டையை மண்டையை
ஆட்டாத வாய திறந்து பதில சொல்லு. உண்மையா, பொய்யா?”.
“உண்மை தான்”.
சற்றும்
யோசிக்காமல் யாழினி பொய் கூற மாட்டாள் என்ற நம்பிக்கையில் அவள் உண்மை என்றவுடன்
முற்றிலுமாக உள்ளுக்குள் உடைந்தான் அபிமன்யு.
அவளை
இழுத்து தனக்குள் இறுக்கிக்கொண்டான். எங்கே விட்டாள் அவள் இப்பொழுதே மாயமாக
மறைந்து விடுவாளோ என்பது போல். அவனின் இறுக்கத்தில் யாழினிக்கு வலி ஏற்பட தன்னால்
முடிந்த மட்டும் தன்னிடமிருந்து அபிமன்யுவை பிரிக்க முயன்றாள்.
அதே
சமயம் தன் பாட்டியை திட்டவும் அவள் மறக்கவில்லை. ‘கிழவி.. அப்படி என்னத்த சொல்லி தொலைச்ச இவன் கிட்ட. இப்போவே
மூச்சு முட்டி செத்துடுவேன் போலருக்கு’
என்று மனதிற்குள் புலம்பிய படி, “விடுங்க ப்ளீஸ்” என்று தள்ளினாள்.
இவளின்
பேச்சோ, செயலோ எதுவுமே அபிமன்யுவை பாதிக்கவில்லை. அவனின் மனதிற்குள் யாழினியை
தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.
சட்டென
தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தவன். யாழினி மூச்சு விட முடியாமல் சிரமப்படுவதை
கண்டு அவளை விட்டு விலகி கடகடவென அறையை விட்டு வெளியேறி விட்டான். யாழினி தான்
ஒன்றும் புரியாமல் ‘ஙெ’ வென முழித்துக் கொண்டு நின்றாள்.
“என்ன இது, அவன் பாட்டுக்கு
வந்தான். பாட்டி சொன்னது உண்மையானு கேட்டான். இப்போ அவன் பாட்டுக்கு போறான்.
பாட்டி...” என்று பல்லை கடித்தாள் யாழினி.
நேராக
வள்ளியிடம் சென்று நின்றவன், “பாட்டி, எனக்கு உங்ககிட்ட ஒரு
சந்தேகம் கேட்கணும்” என்றான் நேரடியாக.
வள்ளியம்மை,
“சொல்லு அபி. என்ன?”.
“இந்த ஜாதகத்துல கல்யாணம் பண்ண
உடனே குழந்தை பொறக்கணும்னு ஏதாவது தோஷம் இருக்கா?” என்றான் சந்தேகமாக.
இவன்
என்ன சொல்கிறான் என்று ஒன்றும் புரியாத வள்ளியம்மை, “நீ என்ன கேட்குறன்னு ஒன்னும் புரியலையே. என்ன குழந்தை
பிறக்கனும், தோஷம் யாருக்கு?” என்றார் புரியாமல்.
தன்
பொறுமையை முற்றிலுமாக இழந்த அபிமன்யு, “ஐயோ
பாட்டி.. நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. கல்யாணம் பண்ணா அடுத்த ஒரு
வருஷத்துக்குள்ள குழந்தை பிறக்கணும்னு ஏதாவது தோஷம் இருக்குமா ஜாதகத்துல”.
வள்ளியம்மை,
“அது வந்து.. தெரியலையே அபி.
ஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும்”.
“சரி இதை பிடிங்க” என்று அவர் கையில் யாழினியின் ஜாதகத்தை
வைத்தவன்.
“இந்த ஜாதகத்துக்கூட என்னோட
ஜாதகத்தையும் சேர்த்து வச்சு பாருங்க. அப்படி ஏதாவது தோஷம் இருந்தா எனக்கு உடனே
இன்பார்ம் பண்ணுங்க” என்று கூறிவிட்டு வெளியேறி
விட்டான்.
வள்ளியம்மை,
‘என்ன இது. யாருடைய ஜாதகம்?’ என்று புரியாமல் பார்த்துக்
கொண்டிருக்கும் போது அருகில் வந்த மரகதம் பாட்டி, “என்ன வள்ளி, உன் பேரன் ரொம்ப குழம்பி இருக்கான் போல” என்றார் சிரித்தபடி.
“ஆமா கா. என்ன விஷயம்னே தெரியல.
திடீர்னு வந்தான். ஏதோ தோஷம் அது இதுனு சொல்றான். இப்போ இது யாரோட ஜாதகம்னு தெரியல
என் கையில் கொடுத்துட்டு அவனோட ஜாதகத்துக்கும், இந்த ஜாதகத்துக்கும் பொருத்தம்
பார்க்க சொல்றான். ஏதாவது தோஷம் இருந்தா உடனே சொல்லுங்கனு சொல்லிட்டு போறான்.
ஒன்னும் புரியல” என்றார் சலிப்பாக.
“எல்லாம் நல்லபடியா நடக்கும்
வள்ளி. நீ ஒன்னும் கவலைப்படாத” என்றவர் நடந்த அனைத்தையும்
அவரிடம் கூறினார்.
“இதுக்கு தான் இப்படி குழம்பி போய்
இருக்கானா. அப்போ நீ சொல்ற மாதிரி நிஜமாவே இவன் யாழினியை விரும்புறானா. என்னால
நம்பவே முடியலக்கா. இது எப்படி நடந்திருக்கும். உங்க குடும்பத்து மேல அவ்வளவு
கோவமா இருக்கான். அது மட்டும் இல்லாம, இதுவரைக்கும் கல்யாண பேச்சை நாங்க எடுத்தா
பிடி கொடுக்கவே மாட்டான். அவனே போய் ஒரு பொண்ண விரும்பி இருக்கான்னு நீ சொல்றது
என்னால சுத்தமா நம்பவே முடியல” என்றார் ஆச்சரியம் கலந்த
குரலில்.
“சரி நீ இப்போ என்ன பண்ற சாயந்தரமா
அபி கிட்ட நீ சொன்னபடியே ஜோசியர் கிட்ட கேட்டேன். அவரும் தோஷம் இருக்கிறதா தான்
சொல்றாருன்னு சொல்லிடு”.
“அக்கா அவன் கண்டுபிடிச்சிட்டான்னா
என்ன பண்றது” என்றார் அச்சமாக.
“அதெல்லாம் ஒன்னும் நடக்காது
வள்ளி. நீ ஒன்னும் பயப்படாத அவன் யாழினியோட உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதும் மத்த
எதுவுமே யோசிக்க மாட்டான். எப்படியாவது இதை சரி பண்ணனும்னு மட்டும் தான்
யோசிப்பான்”.
‘சரி’ என்று ஒப்புக்கொண்டார் வள்ளியம்மை. தன் அக்கா கூறியதை
அப்படியே அபியிடம் ஒப்பித்தார். வள்ளியம்மை கூறியதை கேட்ட அபிமன்யுவிற்கு தன்
எண்ணம் இனி நிறைவேறாமல் போய்விடுமோ என்று தோன்றியது.
யாழினியை
விரும்பி தான் மணந்துக் கொண்டான் அபிமன்யு. இருந்தாலும், இந்த திருமணத்தின் மூலம்
அவன் செய்ய வேண்டிய காரியம் ஒன்றும் இருந்தது.
இப்போது
யாழினிக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அவன் நினைத்த காரியம் நடைபெறாது.
யாழினியின் வாழ்க்கை லட்சியத்தையே புரட்டிப் போட நினைத்த அபிமன்யுவிற்கு கடைசியில்
இவனின் லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற எண்ணம் தோன்றியது.
அடுத்து
என்ன என்று சிந்திக்க அவனுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. எனவே, தனிமையை நாடி
தோட்டத்திற்கு சென்றான். அங்கே யாரோ உருவம் அவசர அவசரமாக காரில் இருந்து இறங்கி
பதுங்கி பதுங்கி வீட்டினுள் செல்வது தெரிய.
“யார் அது?” என்று அவசரமாக சத்தமிட்டான்.
அபிமன்யுவை
இங்கே சற்றும் எதிர்பார்க்காத அந்த மூவரும் அதிர்ந்து போய் திரும்பினர். வேறு
யாரும் இல்லை நம் ஆரணி, ஆரியன், யாழினி தான்.
இவர்களை
இங்கே சற்றும் எதிர்பாராத அபிமன்யு, “நீங்க
மூணு பேரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்றான் கோபமாக.
அதற்கு
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக்
கொண்டே நின்றனர்.
மரகதம்
பாட்டி எண்ணுவதை போல் அபிமன்யு தன் விருப்பத்தை யாழினியிடம் வெளிப்படுத்துவானா...
கருத்துகள்
கருத்துரையிடுக