அவனதிகாரம் - 44

 

 

அதிகாரம் – 44

 

யாழினி தன் மனதில் இருப்பதை பேச்சு வார்த்தையில் சாதாரணமாக கூறி விட, அதைக் கேட்டு அபிமன்யு எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதி காத்தவன், நான் உன் கூட இருக்கும் போது நீ ஏன் உன் குடும்பத்து ஆளுங்களை பத்தி யோசிக்குற. அப்போ நான் உன்னை நல்லா பாத்துக்க மாட்டேன்னு நினைக்கிறியா என்றான் கோபமாக.

 

என்ன இது, நம்ம ஒன்னு சொன்னா இவன் வேற மாதிரி புரிஞ்சுக்கிறானே என்று நொந்து போன யாழினி, அய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. நான் சும்மா.. தோணுச்சு சொன்னேன்.

 

இவளின் சிந்தனை அவளின் குடும்பத்தாரிடம் போகாமல் தடுக்க வேண்டும் என்றால் அவளின் சிந்தனை மொத்தமும் தன்னை சுற்றியே இருக்க வேண்டும் என்று யோசித்தவன் குரலை செறுமிக் கொண்டு, பொய் சொன்னா.. அதுக்கு பனிஷ்மென்ட் இருக்கு. தெரியுமா என்றான் ஒற்றை உருவத்தை ஏற்றி.

 

அடப்பாவி.. உனக்காக தான டா பொய் சொன்னேன். கடைசியில என்னையே கோர்த்துவிடுறியே என்று ஏமாற்றமாக அபிமன்யுவை பார்த்தாள்.

 

உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் வெளியே விரைப்பாக நின்று கொண்டு, என்ன பனிஷ்மென்ட் சொன்னதும் என்னையே குறுகுறுன்னு பாக்குற. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை என்று கூறி தன் ஒரு கையால் சட்டையின் மேல் பட்டனையும் இழுத்து போட, யாழினிக்கு அபிமன்யுவின் செயலில் நெஞ்சு வலி வராத குறை தான்.

 

அதிர்ந்து போய் கண்கள் இரண்டும் விரிய வென்று அபிமன்யுவை பார்த்தாள் யாழினி. கோபம் ஏகத்துக்கும் ஏற, பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு. நான் என்னமோ உன்கிட்ட தப்பா நடந்துக்குற மாதிரி சட்டையை வேற இழுத்து விடுறியா என்று மனதிற்குள் திட்டியவளிற்கு கோபத்தில் மேல் மூச்சு கீழு மூச்சு வாங்க. மூச்சுக்காற்று வேகமாக புசுபுசுவென்று வந்தது.

 

அபிமன்யு, நான் இப்போ என்ன சொல்லிட்டு இருந்தேன். ஆங்.. பனிஷ்மென்ட். மாமானு கூப்பிடு என்று தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி, ஒற்றை காலை சுவற்றில் ஊன்றி நின்றான்.

 

யாழினி கோபமாக, அதெல்லாம் சொல்ல முடியாது என்றாள் வெடுக்கென்று.

 

ஏன்?.

 

சொல்ல முடியாதுனா.. முடியாது. நான் எதுக்கு உங்களை மாமானு கூப்பிடனும். நான் என்னோட ஜீவா மாமாவை மட்டும் தான் மாமானு கூப்பிடுவேன் என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

அவள் சாதாரணமாக ஜீவாவை தான் மாமா என்பேன் எனவும், அபிமன்யுவின் ஈகோவை அது சீண்டிப் பார்த்தது.

 

அதுவரை இருந்த மனநிலை கோபமாக மாற, இப்போ கூப்பிடாம இங்க இருந்து உன்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்றான் கர்ஜனையாக.

 

இதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவன், ஏன் என்று தெரியாமல் திடீரென கோபமாக பேசவும் ஒரு நிமிடம் திடுக்கிட்டு விழித்த யாழினியை பார்த்து, சொல்லுடி.. என்றான் பற்களை கடித்த படி.

 

அபிமன்யுவின் அதட்டலில் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்த யாழினி, மா.. என்று ஆரம்பிக்கும் முன்பே மாமா... என்று கத்தியபடி ஷைலஜா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

 

ஷைலஜாவின் மாமா என்ற அழைப்பு அபிமன்யுவிற்கு எரிச்சலை கொடுக்க அவளை முறைத்தான். அவனின் முறைப்பை எல்லாம் சட்டை செய்யாத ஷைலஜா, யாழினி முன்பு ஏதோ இவர்கள் இருவரும் பல வருடங்களாக நெருங்கி நட்புறவாடி வருவது போல் காட்டிக் கொள்ள நினைத்தவள், மாமா.. எப்படி இருக்கீங்க. உங்க நெனப்பாவே இருந்துச்சு. அதான் அம்மாவை கூட்டிட்டு ஓடி வந்துட்டேன் என்றாள்.

 

அபிமன்யு எந்த பதிலும் கூறாமல் சலிப்பாக தன் முகத்தை திருப்பிக் கொண்டான். யாழினி கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகித்து வெளியே நழுவி சென்று விட்டாள்.

 

ஷைலஜா, அபிமன்யுவுடன் நெருக்கமாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் யாழினி வெளியே சென்று விட்டாள் என்று எண்ணிய ஷைலஜா, இப்போ இந்த ரூமை விட்டு வெளியில் போன மாதிரி, சீக்கிரமே உன்னை அபியோட வாழ்க்கையிலிருந்து வெளியில் அனுப்புறேன் பாரு என்று கருவிக்கொண்டாள்.

 

ஷைலஜா, எப்படி இருக்க அபி. ஒண்ணுமே பேச மாட்டேங்குற.

 

அபிமன்யு, இடியட்.. ஒருத்தவங்க ரூமுக்கு வருவதற்கு முன்னாடி நாக் பண்ணிட்டு வரணும்ன்ற பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா உனக்கு. இப்படி கத்திக்கிட்டே கதவை திறந்துட்டு வந்து நிக்கிற. கெட் அவுட் ஃப்ரம் மை சைட் என்று கத்தினான்.

 

சரியான வேஸ்ட் என்று மனதிற்குள் திட்டியவள் வெளியேறி விட்டாள்.

 

வெளியே வந்த யாழினி அங்கே மீராவுடன் பேசிக்கொண்டிருந்த விசாலாட்சியை பார்த்து, வாங்கம்மா என்றாள்.

 

விசாலாட்சி யாழினியை ஏற இறங்க பார்த்தவர், யாருக்கு யார் அம்மா. ஏதோ என் அண்ணி உன்னை இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்ததும், பழசு எல்லாம் மறந்துடாத. உன்னுடைய தகுதி எங்க எங்களுடைய தகுதி எங்க. அம்மாவாம் அம்மா என்று முகத்தை திருப்பிக் கொண்டார். விசாலாட்சியின் வார்த்தையில் யாழினிக்கு கண்கள் கலங்கிவிட்டது.

 

மீரா யாழினியிடம், டைம் ஆயிடுச்சு ஆபீஸ்க்கு கிளம்பனும்னு சொன்ன. இப்போ ஏன் இங்க வந்து நிக்குற? போ, போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. அபி கிளம்பிட போறான். மணி ஆகுது பாரு என்று அனுப்பிவிட்டார்.

 

சரி என்று தலையசைத்தவள், மீண்டும் அறைக்கு சென்று தயாராகி கீழே வந்தாள். டைனிங் டேபிளில் விசாலாட்சி, ஷைலஜா, வள்ளியம்மை பாட்டி, மகேந்திரன் என அனைவரும் உணவருந்திக் கொண்டிருக்க.

 

யாழினி பசிக்குது, போய் உட்காரலாமானு தெரியலையே. காலையிலேயே ஒரு மாதிரி பேசிட்டாங்க. இப்போ போய் உட்கார்ந்தா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே என்று யோசித்தபடி சற்று தள்ளியே நின்று விட்டாள்.

 

ஆரியன், யாழினி.. ஏன் அங்கேயே நின்னுட்ட. சாப்பிட வா என்று அழைத்தான்.

 

இல்ல ஆரி, பரவாயில்ல. நீங்க எல்லாம் சாப்பிடுங்க. எனக்கு பசிக்கல. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன் என்று அங்கிருந்து வெளியேற நினைத்தவளை விசாலாட்சி, என்ன பேச்சு இதெல்லாம். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம.. உன்னை விட பெரிய பையன். மச்சினன் வேற. வா போனு பேசுற என்றார் சிடுசிடுப்பாக.

 

உடனே ஆரணி, எந்த காலத்துல இருக்கீங்க அத்தை நீங்க. இப்போ போய் வாங்க போங்கனு கூப்பிட்டுக்கிட்டு இருக்க முடியுமா. நான், ஆரி அண்ணா, யாழினி மூணு பேரும் பிரண்ட்ஸ் மாதிரி என்றாள் யாழினிக்கு சப்போர்ட்டாக.

 

அதற்கு விசாலாட்சி ஏதோ கூற வரும் முன்பு, அபி யாருடனோ போனில் பேசியபடி டைனிங் ஹாலுக்கு வந்து சேர்ந்தான். இவர்களின் உரையாடல் பாதியிலேயே தடைப்பட்டது.

 

மாம், ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. பிரேக் ஃபாஸ்ட் வெளியில் பாத்துக்குறோம் என்றவன் வா என்று யாழினியிடம் கூறிவிட்டு வெளியேறி விட்டான்.

 

யாழினி மீராவை பார்த்து தலையசைத்தபடி வெளியேறி விட்டாள்.

 

விசாலாட்சி மீராவிடம், எங்க கூப்பிட்டு போறான் இவளை?.

 

மீரா, தினமும் ஆபீஸ்க்கு யாழினியை கூப்பிட்டு தான் அபி போறான்.

 

12ம் கிளாஸ் கூட தாண்டல. இவளுக்கு என்ன தெரியும்னு இவளை கூப்பிட்டு போறான் என்றார் அபியின் காதுகளில் விழும்படி.

 

விசாலாட்சியின் ஏளனமான பேச்சு யாழினிக்கு பெரும் அவமானமாக இருந்தது.

 

யாழினி, ஆபீஸ்க்கு வந்து நான் சும்மா தானே இருக்க போறேன். நான் வீட்டிலேயே இருந்துக்குறேன் என்றாள் தயக்கமாக.

 

அபிமன்யு சற்று நேரம் யோசித்தவன்.

 

யாழினி, நான் பாட்டிகிட்டலாம் பேசமாட்டேன் என்றாள் தலையை குனிந்த படி.

 

ஓகே. யுவர் விஷ் என்றவன் அவசர வேலையின் காரணமாக வேறு எதுவும் பேசாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

 

யாழினி வீட்டிற்குள் செல்ல மனமின்றி தோட்டத்தின் பக்கம் சென்று விட்டாள். யாழினியின் பின்னால் யாரோ சொடக்கிடும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.

 

ஷைலஜா, என்ன ஜோடியா ஆபீஸ்க்கு கிளம்புனீங்க. இப்போ பார்த்தா இங்க நிக்குற என்றாள் நக்கலாக.

 

அதற்கு எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து வீட்டிற்குள் செல்ல முற்பட்ட யாழினியை கைநீட்டி தடுத்தவள், என்ன.. பதில் சொல்ல மாட்டியா. இப்போ நாங்க எதுக்காக இங்க வந்து இருக்கோம்னு தெரியுமா.

 

அதற்கும் பதில் கூறாமல் அமைதியாக நின்றாள்.

 

ஷைலஜா, நினைச்சேன். என்னடா என்னைக்கும் இல்லாமல் திடீர்னு அபி கால் பண்ணி வாழ்க்கையே வெறுத்த மாதிரி பேசுறானே அப்படினு. இப்போ தான் தெரியுது என்ன காரணம்னு. இப்படி உம்முனா மூஞ்சி மாதிரி ஒரு பொண்டாட்டி கட்டுனா யாரு தான் சந்தோஷமா இருக்க முடியும் என்று நகைத்தவாறு சொல்ல.

 

வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாரு. நாங்க இப்போ இங்க எதுக்காக வந்திருக்கோம்னா.. நானும், அபியும் மேரேஜ் பண்ணிக்க போறோம். அதுக்கு தான் எங்களை அபி இங்க வர சொல்லி இருக்கான். உனக்கு சீக்கிரமே டிவோர்ஸ் கொடுக்கப் போறான். உங்க வீட்டுக்கு போறதுக்கு

துணிமணி எல்லாம் எடுத்து வச்சு ரெடியா இரு என்று கூறி விட்டு சென்றாள்.

 

நேராக அறைக்கு சென்ற யாழினிக்கு ஏனென்று தெரியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. அபிமன்யுவை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அவனிடம் பேசவே பயமாக இருக்கிறது.

 

இங்கே இருக்கவே பிடிக்கவில்லை. இருந்தாலும், அவனை விட்டு விலகப் போகிறோம் என்று அறிந்ததும் ஏன் என்றே தெரியாமல் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

 

திடீரென கதவு தட்டப்படும் ஓசையில் கண்ணீரை துடைத்துக் கொண்டு யார் என்று பார்த்தாள். மரகதம் பாட்டி தான். மரகதம் பாட்டியை பார்த்ததும் இவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

அவரை கட்டிக் கொண்டு ஓ.. என அழுதாள்.

 

பதறிய பாட்டி, ஏன் அழற.. என்ன ஆச்சு.

 

யாழினி, பாட்டி, நான் சொன்னேன்ல, அவருக்கு என்னை பிடிக்கல. அவரோட மாமா பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறாராம். எனக்கு விவாகரத்து கொடுக்க போறாராம் என்றாள் அழுகையோடு.

 

குழப்பம் அடைந்த மரகதம் பாட்டி, என்ன உளறுர. யாரு சொன்னது உன்கிட்ட இப்படி எல்லாம். அபி சொன்னானா.

 

யாழினி, இல்ல, அவரோட  அத்தை பொண்ணு தான் சொன்னாங்க.

 

உன் வீட்டுக்காரர் எதுவுமே சொல்லல அந்த மேனாமினுக்கி சொன்னதுக்காகவா நீ இப்படி அழுதுகிட்டு இருக்க. முதல்ல என்னை பாரு யாழினி. இப்படியே மத்தவங்க சொல்றதை எல்லாம் நம்பிகிட்டு அழக்கூடாது.

 

நீ தான் பாட்டி புரியாம பேசுற. அவர் என் மேல அன்பா இருந்தா எதுக்காக என்னை திட்ட போறார். எப்போ பார்த்தாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்கார். அவருக்கு என்னை பிடிக்கல போலருக்கு. கயல் அக்காவை தான் பிடிச்சிருக்கு.

 

இப்படியே பேசிக்கிட்டு இருந்தா என்கிட்ட அடி தான் வாங்குவ சொல்லிட்டேன். எப்போ அவர் உன் கழுத்துல தாலி கட்டுனாரோ, அப்போவே அவருக்கு நீ மட்டும் தான் பொண்டாட்டினு முடிவாயிடுச்சு. இனிமே கயலை பத்தி உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரக்கூடாது சொல்லிட்டேன் என்றார் எச்சரிக்கை விடுப்பது போல்.

 

நான் அம்மாகிட்ட போறேன்.

 

என்ன யாழினி இது, சின்ன புள்ள மாதிரி.. அதான் பாட்டி உன் கூடவே இருக்கேனே அப்புறம் என்ன.

 

எனக்கு ஊருக்கு போய் எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு.

 

பாட்டி சரி என்று பெருமூச்சு விட்டவர், மாப்பிள்ளை வந்ததும் கேட்டு பாரு. அவர் ஒத்துக்கிட்டா மட்டும் தான் நீ போகணும் சரியா.

 

சரி என்று தலையசைத்தாள் யாழினி.

 

அன்று முழுவதுமே அவளை பார்க்கும் போதெல்லாம் விசாலாட்சி தன் வார்த்தைகளால் கொட்டிக் கொண்டே இருந்தார். மீரா, வள்ளியம்மை பாட்டி என்று யார் கூறுவதையும் விசாலாட்சி காதில் எடுத்துக் கொள்வதாகவே இல்லை.

 

நாக்கை தேள் கொடுக்காக்கி யாழினியை வார்த்தைகளால் கொட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சு வாங்கி யாழினி ஒரே நாளில் சோர்ந்து போய் விட்டாள்.

 

இரவு அபிமன்யு தன் வேலைகளை முடித்துவிட்டு சீக்கிரமே வீடு திரும்பினான். உண்மை காரணம், அவனால் யாழினியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனாலேயே அவசர அவசரமாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீடு திரும்பினான்.

 

நாளைக்கு காலையில என்ன சொன்னாலும் கேட்க கூடாது. நம்ம கூடவே கூப்பிட்டு போயிடணும். ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

இவ்வாறு ஒரு வாரம் கடந்து விட்டது. நாளுக்கு நாள் வீட்டில் விசாலாட்சி, ஷைலஜாவின் எச்சும் பேச்சும் யாழினியிடம் அதிகமாகிக் கொண்டே போனது.

 

மீராவும், வள்ளியம்மை பாட்டியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் அடங்குவதாக இல்லை. பக்க பலமாக இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி வேறு ஆதரவாக இருக்க. இவர்களின் ஆட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் எதுவும் அபிமன்யுவின் காதிற்கு சென்றடையவில்லை.

 

அவனுக்கும் டென்டர் வேலை மிகவும் அதிகமாக இருக்க, அவனாலும் வீட்டில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. எவ்வளவு வேலை பலு இருந்தாலும், தன் தாய்க்கு மட்டும் இடையில் ஒரு முறை போன் செய்து ஒன்று, இரண்டு வார்த்தை விசாரிப்பான்.

 

யாழினி, அபிமன்யுவை பார்த்தே ஒரு வாரம் ஆகிவிட்டது. அவள் காலையில் எழும் முன்பே இவன் தயாராகி அலுவலகம் சென்று விடுவான். அதோடு நள்ளிரவில் தான் வீட்டிற்கு திரும்புவான்.

 

அபிமன்யுவின் கடின உழைப்பால், அவன் எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான டெண்டர் இவனுக்கு கிடைத்திருந்தது. சந்தோஷமான மனநிலையில் சாயந்திரமே வீடு திரும்பி இருந்தான்.

 

இவன் தாமதமாக தான் வீடு வருவான் என்று எண்ணிய யாழினி, அறையில் விளக்கை கூட ஒளிர விடாமல் படுக்கையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். திடீரென அறை வெளிச்சமாகவும் திரும்பிப் பார்க்க, அங்கே அபிமன்யு நின்று கொண்டிருந்தான்.

 

இந்த ஒரு வாரத்தில் யாழினி நிறையவே மாறி இருந்தாள். இல்லை... இல்லை... மாற்றப்பட்டிருந்தாள் விசாலாட்சியாலும், ஷைலஜாவாலும்.

 

ஆம்! முதல் நாள் விசாலாட்சி பேசியதை கேட்டு அலுவலகம் செல்லாமல் நின்றது தான் யாழினி செய்த பெரிய தவறாகிப் போனது. வீட்டில் அனுதினமும் அவளை வார்த்தைகளால் அம்மாவும், மகளும் பந்தாடிக் கொண்டு இருந்தனர். மேலும், அதிக வேலைகளையும் அவளை ஏவிக்கொண்டு இருந்தனர்.

 

மீராவோ, பாட்டியோ யாழினிக்கு ஆதரவாக பேசினாள். நம்முடைய குடும்ப தகுதிக்கு ஏத்த மாதிரி இவளை மாற்ற வேண்டாமா. நீங்க யாரும் இதில் தலையிடாதீங்க என்று கிருஷ்ணமூர்த்தி கூறி, அனைவரின் வாயையும் அடைக்க செய்தார்.

 

மரகதம் பாட்டியாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. எப்படியாவது அபி கிட்ட இதை பத்தி பேசு யாழினி என்று பலமுறை கூறிவிட்டார். ஆனால், அவனை இவள் பார்த்தால் தானே.

 

அந்த ஒரு வாரம் யாழினிக்கு பெரும் வேதனையாக தான் கழிந்தது. நாள் முழுக்க ஏதேனும் வேலை செய்தவாறு, தன் வீட்டினரிடமும் பேச முடியவில்லை. அபிமன்யுவையும் பார்க்க முடியவில்லை.

 

அதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினாள். அதிலும், இன்று நடந்த சம்பவம். யாழினியால் சற்றும் ஜீரணிக்கவே முடியவில்லை. யாரின் முகத்தையும் பார்க்க பிடிக்காமல் மதியம் அறைக்கு வந்தவள். விளக்கை கூட போடாமல் அழுது கொண்டிருக்கிறாள்.

 

அபிமன்யுவிற்கு ஒன்றும் புரியவில்லை. யாழினியின் முகமே கலை இழந்து அழுதழுது கண்கள் வீங்கி, முகம் சிவந்து காட்சியளித்தாள். யாழினியை பார்த்ததும் அபிமன்யுவிற்கு பதட்டம் தொற்றிக் கொள்ள. யாழினிக்கோ பயம் தொற்றிக் கொண்டது. எங்கே அவனின் அத்தை பேச்சை அபிமன்யு நம்பி விடுவானோ என்று. இரண்டே எட்டில் யாழினியை அடைந்தவன்.

 

அவளின் கன்னங்களை தன் கைகளில் ஏந்தியபடி, பேபி டால்.. என்ன ஆச்சு. ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க? என்றான் பதட்டமா.

 

அவனின் குரலே கூறியது அவனின் பதட்டத்தையும், அன்பையும். மேலும், அவனின் பேபி டால் என்ற அழைப்பில் முற்றிலுமாக உடைந்த யாழினி அபிமன்யுவை கட்டிக்கொண்டு மாமா... என்று அழுக ஆரம்பித்து விட்டாள்.

 

யாழினியின் மாமா என்ற அழைப்பை ரசித்து கேட்கும் மனநிலையில் இல்லாத அபிமன்யு. அவளின் அழுகைக்கான காரணத்தை அறியவே முற்பட்டான்.

 

தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தியவன், முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.

 

இவன் கேட்க, கேட்க அவளின் அழுகை அதிகமாகிக் கொண்டே போனதே தவிர, குறைந்த பாடில்லை. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளின் கையில் கொடுத்தவன்.

 

ஃபர்ஸ்ட் இதை கொஞ்சம் குடி. ரிலாக்ஸ் பண்ணு உக்காரு. என்ன ஆச்சு சொல்லு என்று அவளின் தலையை தடவிக் கொடுத்தான்.

 

தண்ணீரை அருந்தி தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவள். நடந்ததை கூற தொடங்கினாள்...

 

விசாலாட்சியும், ஷைலஜாவும் அப்படி என்ன செய்திருப்பார்கள்...

 

கிருஷ்ணமூர்த்தியின் எண்ணம் நிறைவேறுமா...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5