அவனதிகாரம் - 45
அதிகாரம் – 45
அபிமன்யு,
“சே சம்திங் யாழினி. இப்படியே
உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்”.
எவ்வளவு
சமாதானம் கூறினாலும் யாழினியின் கண்ணீர் நிற்கவே இல்லை.
‘உப்’ என்று சலிப்பாக செய்தவன்.
“சரி நான் போய் அம்மாகிட்ட என்ன
நடந்துச்சுன்னு கேட்டுட்டு வரேன்” என்று எழுந்தான்.
அவனை
செல்ல விடாதவாறு அவனின் கைகளை வேகமாக பிடித்த யாழினி பயம் கலந்த பதட்டமான பார்வை
பார்த்தாள். அவள் பிடித்திருந்த கைக்கு மேல் தன் கையை வைத்து சற்று அழுத்தம்
கொடுத்தவன். அவள் அருகில் அமர்ந்து மெதுவான
குரலில், “இங்க பாரு, என்னை பாருன்னு
சொல்றேன்ல. என்ன நடந்ததுன்னு நீயும் சொல்ல மாட்டேங்குற. அம்மா கிட்டயும் கேட்க விட
மாட்டேங்குற. இப்படி அழுதுகிட்டே இருந்தா நான் என்ன பண்றது” என்றான் சலிப்பாக.
“சொன்னா.. கோவப்பட மாட்டீங்கல்ல” என்றாள் பயத்துடன்.
“அப்படி கோவப்படுற அளவுக்கு நீ
என்ன பண்ண” என்றான் சாதாரணமாக.
யாழினியின்
அழுகைக்கு முன்னால் அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. இப்பொழுதெல்லாம்
அவனால் யாழினியின் மேல் கோவப்படவே முடியவில்லை.
யாழினி
அழுகையினோடு, “நான் எதுவுமே பண்ணல மாமா.. ஆனா..
நான் தான் பண்ணேன்னு சொல்றாங்க”.
இவளின்
பேச்சில் அபிமன்யுவிற்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. இது சரி வராது
என்று நினைத்தவன்.
“சரி நீ வா” என்று அவளின் கையைப் பிடித்து வெளியே
அழைத்து சென்றான்.
யாழினி
அவசரமாக, “இல்ல இல்ல.. நான் வரமாட்டேன்” என்று பின் தங்கினாள்.
“ஏன்?” என்று அபிமன்யு தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி கேட்க.
“இதுவரைக்கும் யாரும் என் மேல
இப்படி பழி சொன்னதே கிடையாது. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு மாமா. யார்
முகத்தையும் பார்க்க முடியல. நான் இங்கேயே இருக்கேன்”.
சற்று
நேரம் யாழினியை உற்றுப் பார்த்தவன், “நீ
ஏதாவது தப்பு பண்ணியா?”.
உடனே
யாழினி அவசரமாக ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“அப்புறம் எதுக்கு தயங்குற. நான்
தானே உன்னை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். உனக்கு ஒரு
அவமானம்னா, அது எனக்கும் தான்”.
யாழினி
தனக்காக இல்லாவிட்டாலும், அபிமன்யுவிற்காக தன் மேல் எந்த தவறும் இல்லை என்று
நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். அமைதியாக
அபிமன்யுவுடன் சென்றாள்.
நடு
ஹாலிற்கு யாழினியை அழைத்து சென்றவன், “மாம்...
பாட்டி...” என்று குரல் கொடுத்தான்.
அபிமன்யுவின்
குரலே கூறியது அவனின் கோபத்தின் அளவை. வீடே அதிர்வது போல் கத்தியவனின் குரலில்
மகிழ்ச்சியான விசாலாட்சியும், ஷைலஜாவும், கிருஷ்ணமூர்த்தியும் இந்த தருணத்திற்காக
தானே கார்த்திருந்தோம் என்பது போல் கெத்தாக ஹாலிற்கு வந்தனர்.
மற்றவர்கள்
அனைவரும் இவன் என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்தில் ஹாலிற்கு வந்தனர். தன் அண்ணனை
பார்த்ததும் ஆரணி வேகமாக அவனிடம் வந்தவள்.
அபிமன்யுவின்
கையை பிடித்த படி, “அண்ணா நீங்க யாழினி மேல
கோபப்படாதீங்க. கண்டிப்பா இப்படி ஒரு விஷயத்தை அவ செஞ்சு இருக்க மாட்டா”.
அவளை
கூர்மையாக பார்த்தவன், “அப்போ வேற யாரு செஞ்சி இருப்பாங்க” என்றான்.
அபிமன்யுவின்
கேள்விக்கு விடை தெரியாத ஆரணி வாய் அடைத்து நின்று விட்டாள்.
அபிமன்யு,
“பாட்டி” என்று வள்ளியம்மையை பார்த்தவன், “என்ன நடந்தது?”.
வள்ளியம்மை
பாட்டி யாழினியை பார்க்க. யாழினி சற்றும் தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.
வள்ளியம்மை
பாட்டி தயங்கியபடி, “யாழினி எதுவும் சொல்லலையாபா” என்றார்.
பக்கவாட்டாக
திரும்பி தலை குனிந்து நின்றிருக்கும் யாழினியை பார்த்தவன் ‘இல்லை’ என்னும் விதமாக தலையசைத்தான்.
வள்ளியம்மை
பாட்டி, “அது வந்து... அபி..” என்று தட்டு தடுமாறி இழுத்தார்.
உடனே
இடைப் புகுந்த ஷைலஜா, “நான் சொல்றேன் அபி” என்று முன் வந்தாள்.
ஷைலஜா, “பாட்டி குளிக்கப் போகும் போது அவங்களோட
வைர தோடு கழட்டி டிரெஸ்ஸிங் டேபிள் மேல வச்சிட்டு போயிருக்காங்க. அதுக்கு அப்புறம்
அவங்க ரூமுக்குள்ள கிளீன் பண்றதுக்காக கடைசியா போனது இவ தான்” என்று யாழினியை கை காட்டினாள்.
அவள்
கூறும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.
“இவ ரூமுக்கு போய் கிளீன்
பண்ணிட்டு வெளியில் வந்ததுக்கு அப்புறம் பாட்டியோட ஜீவல்லரியை காணோம்”.
அபிமன்யு,
“சோ...” என்று கேள்வியாக பார்த்தான்.
ஷைலஜா, “நாங்க எல்லா இடத்திலும் தேடிட்டோம்.
பாட்டி டேபிள் மேல வச்ச நகை எப்படி காணாமல் போயிருக்கும். இவ தான் எடுத்து இருக்கா” என்றாள் யாழினியை பார்த்து.
யாழினிக்கு
ஆதரவாக பேச வந்த மரகதம் பாட்டியை திரும்பி பார்த்த ஒரே பார்வையில் தடுத்து தள்ளி
நிறுத்தி விட்டான் அபிமன்யு. மரகதம் பாட்டிக்கு தாங்க முடியவில்லை. பெரியவர்களின்
ஆசைக்காக சிறு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கி விட்டோமே என்று மனம் அடித்துக்
கொண்டது.
அபிமன்யு,
“இவ எடுத்ததை யாராவது
பார்த்தீங்களா?”.
கிருஷ்ணமூர்த்தி,
“நான் பார்த்தேன் அபி”.
இது
அனைவருக்கும் புதிது. மதியம் எப்பொழுதும் போல் வீடு முழுவதையும் சுத்தம் செய்த
யாழினி, வள்ளியம்மை பாட்டியின் அறைக்கு செல்லுகையில் அவர் குளிக்க சென்று
இருந்தார்.
கிருஷ்ணமூர்த்தி
ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். நகையை காணும் என்று வள்ளியம்மை கூறும்
போது அனைவரும் தேடிப் பார்க்க அது கிடைக்காத காரணத்தினால் விசாலாட்சி, ஷைலஜா,
கிருஷ்ணமூர்த்தி மூவரும் சேர்ந்து யாழினியின் மேல் திருட்டு பட்டம் கட்டி
விட்டனர்.
ஆனால்
அப்போது சாட்சி என்று ஏதும் இல்லை. இப்பொழுது கிருஷ்ணமூர்த்தி தான் பார்த்ததாக
கூறுவது அனைவருக்கும் புதிய விஷயம். எனவே, மொத்த குடும்பத்தினரும் திகைத்துப்
பார்க்க.
யாழினிக்கோ,
‘அவ்வளவு தான் எல்லாம் முடிந்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தியின் மேல் அபிமன்யுவிற்கு
பெரும் நம்பிக்கையும், அன்பும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இனி, யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டான்.
இப்படி ஒரு பழியுடன் தன் வீட்டிற்கு செல்வதை விட, ஷைலஜா கூறியது போல்
அபிமன்யுவிற்கு தன்னை பிடிக்காமல் விவாகரத்து கொடுத்திருந்தால் கூட மேல்’ என்று
தோன்றியது.
பயத்தில்
அபிமன்யுவின் கையுடன் சேர்ந்து இருந்த தன் கையை மெல்லமாக பிரித்து எடுத்துக்
கொண்டாள். தன் தாத்தா கூறுவதையும், யாழினியின் செயலையும் சற்று நேரம் சிந்தித்த
அபிமன்யு.
தன்
போனை எடுத்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். வள்ளியம்மை பாட்டிக்கு எப்படி
திடீரென விசாலாட்சியும், ஷைலஜாவும் இங்கே வந்தார்கள் என்பது கிருஷ்ணமூர்த்தியின்
பேச்சிலேயே புரிந்தது.
இவர்கள்
மூவரும் சேர்ந்து ஏதோ சதி செய்துள்ளனர் என்பதை புரிந்து கொண்டவர் அபிமன்யுவிடம், “அபி நான் சொல்றதை கொஞ்சம் கேளுப்பா.
யாழினி இப்படி தப்பு பண்ற பொண்ணு இல்ல. எதுவா இருந்தாலும் நல்லா விசாரிச்சிட்டு
முடிவு எடுப்பா” என்றார் இறைஞ்சலாக.
கிருஷ்ணமூர்த்தி,
“என்ன பேசுற வள்ளி நீ. இவளுக்கு
போய் சப்போர்ட் பண்ணுறியா. கிராமத்துல வளர்ந்தவ முன்ன பின்ன வைரத்தை
பார்த்திருப்பாளா.. அதான், இங்க பார்த்ததும் ஆசை வந்திடுச்சு. யாருக்கும்
தெரியாதுன்னு நினைச்சு எடுத்துட்டா. ஆனா, நான் பார்ப்பேன்னு கொஞ்சம் கூட நினைச்சு
பார்த்திருக்க மாட்டா. திருடி..” என்றார் அழுத்தமாக யாழினியை
பார்த்து.
எதற்கும்
யாழினி தலை நிமிரவே இல்லை. தலை குனிந்தபடி அழுது கொண்டே நின்றாள்.
ஷைலஜா, “இது மட்டும் இல்ல பாட்டி. இவ பண்ண இன்னொரு
விஷயத்தை சொன்னா. அபி இந்த வீட்டை விட்டே அவள அடிச்சு துரத்திடுவான்”.
யாழினிக்கு
இதை விட பெரிய பழி என்ன இருக்கிறது. முடிந்தவரை அவமானப்படுத்தி விட்டார்கள்.
இனிமேல் எதுவாக இருந்தால் என்ன என்று சோர்ந்து போய்விட்டாள்.
மீரா, “தேவையில்லாம யாழினி பத்தி பேசாத ஷைலஜா.
உனக்கு என்ன தெரியும் அவளை பத்தி”.
ஷைலஜா, “இப்போ கூட நீங்க இவளை தான் நம்புறீங்களா
அத்தை. அப்போ உங்க அப்பா மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”.
மீராவால்
எதுவும் பேச முடியவில்லை மௌனமாக நின்று விட்டார். யாழினியின் மேல் நம்பிக்கை
இருந்தாலும், தன் தந்தை கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இரு
தலைக்கொல்லி எறும்பாய் தவித்தார்.
ஆரணி, “இப்போ என்ன புது கதை சொல்ல போற” என்றாள் ஷைலஜாவை பார்த்து.
ஷைலஜா, “அதை நான் எப்படி சொல்லுவேன். என்னால இவ
பண்ண காரியத்தை ஜீரணிக்கவே முடியல. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி ஒரு
காரியத்தை இவ செய்வான்னு நான் நினைச்சு கூட பாக்கல”.
ஆரியன்,
“முதல்ல விஷயம் என்னனு சொல்லிட்டு
அப்புறமா பீல் பண்ணு” என்றான் வெடுக்கென்று.
விசாலாட்சி,
“என்ன பேசுற ஆரியா. உனக்காக தான்
என் பொண்ணு இவ்வளவு பீல் பண்ணிக்கிட்டு இருக்கா. விஷயத்தை தெரிஞ்சதிலிருந்து நைட்
சரியா தூங்குறது இல்ல தெரியுமா. சரியா சாப்பிடுறது இல்ல. ரொம்ப கவலைப்படுறா”.
“என்ன நினைச்சு பீல் பண்றதுக்கு
உங்க பொண்ணுக்கு என்ன இருக்கு. அப்படி என்ன பண்ணிட்டா யாழினி” என்றான் கேள்வியாக.
விசாலாட்சி,
“சின்ன பொண்ணு.. சின்ன பொண்ணுனு
நினைச்சு நீங்க எல்லாம் இவளுக்கு ஓவரா இடம் கொடுக்குறீங்க. ஆனா, இவ உங்க அண்ணனை
கல்யாணம் பண்ணிட்டு உன்னை சைட் அடிச்சுக்கிட்டு இருக்கா”.
இவர்
கூறுவதை கேட்ட யாழினிக்கு தான் கேட்ட செய்தி உண்மை தானா என்று தன் காதுகளையே நம்ப
முடியவில்லை. அவ்வளவு கீழ் தனமாகவா தன்னை நினைத்து விட்டார்கள்.
அதுவும்
ஆரியனோடு ஒப்பிட்டு பேசி விட்டார்களே. ஆரியனை உடன்பிறவா அண்ணனை போல் அல்லவா
நினைத்தோம் என்று உள்ளுக்குள் குமுறினாள். வெளியே வார்த்தைகள் எழவில்லை.
அபிமன்யு,
“ஸ்டாப் இட் திஸ் நான்சென்ஸ். ஹவ்
டேர் யூ டு டாக் லைக் திஸ்” என்றான் கர்ஜனையாக.
விசாலாட்சி,
“நாங்க சொன்னா நீ நம்ப மாட்டேன்னு
எங்களுக்கு தெரியும் பா. நாங்க ஒன்னும் சும்மா சொல்லல, என்கிட்ட ஆதாரம் இருக்கு”.
ஆரியன்,
“மரியாதையா பேசுங்க. அப்படி என்ன
ஆதாரம் இருக்கு உங்க கிட்ட”.
விசாலாட்சி,
“இங்க பாரு..” என்று ஒரு வீடியோவை காண்பிக்க அதை
பார்த்து ஷாக்காக நின்று விட்டான் ஆரியன்.
அபிமன்யுவால்
கோபத்தை அடக்க முடியாமல், ஆரியனின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்த
வீடியோவை பார்த்தவனிற்கு கோபம் ஏகத்துக்கும் ஏறியது.
குடும்பத்தில்
இருந்த அனைவரும் அதை பார்த்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்த நம்ப முடியாத
சம்பவங்களால் யாழினிக்கு எதுவும் புரியவில்லை, தலையே சுற்றுவது போல் இருந்தது.
தனியே
எங்கோ இருட்டில் சென்று மாட்டிக்கொண்டதை போல் உணர்ந்தாள். அந்த வீடியோவில் ஆரியன்
குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் கண்ணாடியின் முன்பு நின்று சிகையை
கோதிக்கொண்டு இருந்தான்.
அவனை
வளைத்து வளைத்து படம் பிடித்திருந்தது அந்த வீடியோ காட்சி. அதைப் பார்த்த
யாழினிக்கு தன் மேல் இப்படி ஒரு பழி வந்து விட்டதே என்று தன் மேலேயே அருவருப்பாக
உணர்ந்தாள்.
அபிமன்யு,
“இந்த வீடியோவை யாழினி தான்
எடுத்தான்னு உனக்கு யாரு சொன்னா?”.
ஷைலஜா
கண்களை துடைத்தவாறு, “எனக்கு ஆரியனை ரொம்ப பிடிக்கும்.
சும்மா பிராங்க் பண்றதுக்காக யாழினி கிட்ட அபிமன்யு உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை
கல்யாணம் பண்ணிக்க போறான்னு சொன்னேன்”.
இவளின்
வார்த்தையில் அனைவரும் கோபமாக பார்க்க.
“ஆனா, அவகிட்ட வருத்தமா எந்த ஒரு
ரியாக்ஷ்னுமே இல்ல. அதனால எனக்கு அவ மேல சந்தேகம் வந்துச்சு. அப்போ தான்
சந்தேகப்பட்டு அவளோட செல்போன் எடுத்து பார்த்தப்போ இந்த வீடியோ எனக்கு
கிடைச்சுச்சு. என்னால இதை தாங்கிக்கவே முடியல. ஆரியன் எனக்கு மட்டும் தான்
சொந்தம்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் போது இவ இப்படி பண்ணுவானு நான் கொஞ்சம் கூட
நினைக்கல” என்று முகத்தை மூடி குலுங்கி
குலுங்கி அழுதாள்.
ஆரியனோ
இது என்ன புது கதை என்று பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த நிமிடம் என்ன நடந்தது
என்று யாருக்குமே தெரியவில்லை. ‘பளார்..’ என்னும் சத்தம் மட்டுமே கேட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில்
அனைத்தும் நடந்தேறிவிட்டது.
ஷைலஜா, “அம்மா...!” என்ற அலறலுடன் கீழே விழுந்து கிடந்தாள்.
வலது
கண்ணம் பன் போல் வீங்கி இருந்தது. அனைவரும் சுதாரிப்பதற்குள் இப்படி ஒரு விஷயம்
நடந்து விடவே, யாராலும் தடுக்க முடியவில்லை. அபிமன்யுவின் அவதாரத்தை பார்த்த
கிருஷ்ணமூர்த்தி கூட ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார்.
விசாலாட்சி,
“ஏய்... ஏன்டா என் பொண்ண அடிச்ச” என்று கத்தியபடி ஓடிச் சென்று ஷைலஜாவை
தூக்கி நிறுத்தினார்.
அபிமன்யு
கர்ஜனையாக கைவிரல்களை இறுக்கி மூடியபடி, “அடிச்சதோடு விட்டனேனு சந்தோஷப்படுங்க. இல்ல, கொன்னு இருப்பேன்” என்றான் கழுத்து நரம்புகள் புடைக்க.
விசாலாட்சி,
“உன் பொண்டாட்டி பண்ண தப்புக்கு
என் பொண்ண ஏன்டா போட்டு அடிக்கிற. இவளோட ஓடிப்போன அக்காவே சொன்னா, படிக்கிற
வயசுலேயே கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தணும்னு ஆசைப்பட்டவ தான இவ. பின்ன இவ கிட்ட
எல்லாம் வேற என்ன எதிர்பார்க்க முடியும். போய் அவளை கேளு” என்றார் யாழினியை முறைத்துப் பார்த்தபடி.
அபிமன்யு
ஷைலஜாவை அடிப்பான் என்று எதிர்பாராத யாழினிக்கோ கை, கால்கள் எல்லாம்
வெளிப்படையாகவே வெடவெடக்க தொடங்கியது.
அபிமன்யு
ஷைலஜாவை அடித்ததும் யாழினி மேல் எந்த தவறும் இருக்காது என்பதை உணர்ந்த மீரா,
யாழினி அருகில் சென்று நின்றார் அவளின் கைகளை பிடித்தவாறு. அபிமன்யு இந்த விஷயம்
குறித்து யாழினியிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
அபிமன்யு
எரிப்பது போல் ஷைலஜாவை பார்த்தவன், “எந்த
போன்ல இருந்து இந்த வீடியோவை எடுத்த”
என்றான் மீண்டும்.
விசாலாட்சி,
“அவ தான் சொல்றால்ல உன் பொண்டாட்டி
போன்ல இருந்து தான் எடுத்து இருக்கா. போய் அவளை கேளு” என்றார் சவாலாக.
அபிமன்யு
பற்களை கடித்தபடி, “வயசுல பெரியவங்களா
இருக்கீங்களேன்னு பார்க்கிறேன். இல்ல, அவளுக்கு விழுந்த அடி உங்க கன்னத்துல
விழுந்திருக்கும். என் பொண்டாட்டி கிட்ட செல்போனே கிடையாது. அப்படி இருக்கும் போது
எப்படி அவ வீடியோ சூட் பண்ணி இருப்பா”.
அபிமன்யுவின்
வார்த்தைகளை கேட்டதும் தாய்க்கும், மகளுக்கும் முகமே இருண்டுவிட்டது.
கிருஷ்ணமூர்த்தியின் மனம் பதைபதைதைக்க தொடங்கி விட்டது.
“இதெல்லாம் தேவையா. லூசுங்க..
என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருந்தா நானே சொல்லி இருப்பேனே அவ கிட்ட போன் இல்லைனு.
போட்ட பிளானை மட்டும் செய்யாமல எக்ஸ்ட்ராவா என்னென்னமோ பண்ணி சொதப்பிடுச்சிங்களே” என்று பரிதவிப்பாக நடப்பவற்றை பார்த்துக்
கொண்டிருந்தார்.
ஆரணி, “அண்ணா இந்த வீடியோ யாரு எடுத்தாங்க,
எப்படி ஷைலஜா கிட்ட போச்சுன்னு எனக்கு தெரியும். ஒரு நிமிஷம் இந்த வீடியோவை
பாருங்க” என்று தன் செல்போனை அபிமன்யுவின்
முன்னாள் நீட்டினாள்.
அதில்
ஷைலஜா கையில் செல்போனுடன் ஆரியனின் அறைக்குள் தலையை விட்டபடி எதையோ வீடியோ
எடுத்துக் கொண்டிருப்பதை ஆரணி பின்னால் இருந்து இவளின் போனில் வீடியோ
எடுத்திருந்தாள்.
ஆரணி, “இவ என்ன பண்றா அண்ணாவோட ரூம்லனு எனக்கு
அப்போவே டவுட் வந்துச்சுன்னா. அதான் எதுக்கும் இருக்கட்டும்ன்னு வீடியோ எடுத்தேன்.
நல்ல வேளை, இப்போ அது ரொம்ப யூஸ்ஃபுல்லா போச்சு” என்றபடி யாழினி அருகில் சென்று நின்றவள்.
“யார் என்ன சொன்னாலும் எதுக்கு
இப்படி அழுதுகிட்டே நிக்கிற. நீ பண்ணலைனு வாயை திறந்து சொல்ல மாட்டியா” என்றாள் யாழினியை பார்த்து கோபமாக.
நடப்பது
எதற்கும் எதிர்வினையாற்றும் நிலையில் யாழினி இல்லை ஸ்தம்பித்து போய் நின்று கொண்டு
இருந்தாள்.
அபிமன்யு,
“வேற யாராவது இந்த இடத்தில்
இருந்திருந்தா. கழுத்தை பிடிச்சு ரோட்ல தள்ளி இருப்பேன். என் அப்பாவுக்கு கூட
பிறந்த தங்கச்சியா போயிட்டிங்களேனு பாவம் பார்த்து விடுறேன். இது தான் உங்களுக்கு
லாஸ்ட் வார்னிங். இனிமே என் பொண்டாட்டியை பத்தி ஏதாவது தப்பா பேசுனீங்க
அம்மாவுக்கும், பொண்ணுக்கும் சேர்த்து பல்லை பேத்துடுவேன்” என்றான் எச்சரிக்கை விடுப்பது போல்.
இருவரும்
‘கப்சிப்’ என்று வாயை மூடி அமைதியாக நின்றனர். யாழினிக்கு இப்படி ஒரு
கீழ் தரமான பழியை தன் மீது போட்ட பிறகு திருட்டுப்பழி கூட பெரிதாக தெரியவில்லை.
கிருஷ்ணமூர்த்தியோ,
“சரி அபி. அதான் வீடியோ இவ
எடுக்கலைனு தெரிஞ்சிருச்சே. என்ன இருந்தாலும், அவங்க இந்த வீட்டு பொண்ணு. இப்படி
எல்லாம் பேசுறது ரொம்ப தப்பு. நீ அந்த நகையை இவ எதுக்காக எடுத்தானு கேட்டு வாங்கி
கொடு”.
அபிமன்யு,
“அதுக்காக யார் வேணும்னாலும், என்ன
வேணும்னாலும் பேச இவ யாரோ கிடையாது. இந்த அபியோட வைஃப். ‘மிஸஸ். யாழினி அபிமன்யு ஆரியன்’” என்றான் தாத்தாவை பார்த்து அழுத்தமாக.
ஆரியனோ
மனதிற்குள், “ஓ.. அடுத்து தாத்தாவுக்கா” என்று சுவாரசியமாக நடப்பதை பார்த்துக்
கொண்டிருந்தான்.
கிருஷ்ணமூர்த்திக்கான
அபிமன்யுவின் பதில் என்னவாக இருக்கும்...?
கருத்துகள்
கருத்துரையிடுக