அவனதிகாரம் - 46

 

 

அதிகாரம் – 46

 

கிருஷ்ணமூர்த்தி, நான் உங்க பாட்டிக்காக எங்க போன வருஷ கல்யாண நாளுக்கு அன்பளிப்பா கொடுத்தது அந்த நகை. எனக்கு அது வேணும் அபி. எங்க வச்சிருக்கான்னு அவ கிட்ட கேட்டு சொல்லு.

 

அபிமன்யு யாழினியைப் பார்த்து முறைத்தவன், என்னை பாரு.. என்றான்.

 

யாரின் பேச்சையும் காதில் வாங்காமல் பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்த யாழினியின் தாடையை பிடித்து நிமிர்த்தியவன்.

 

என்னை பாரு என்றான் சற்று அதட்டலாக.

 

அதில் திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தவள் போல் அபிமன்யுவை பார்த்து மலங்க மலர்ந்த விழித்தாள்.

 

அபிமன்யு, நீ எதுக்காக பாட்டி ரூமுக்கு போன?.

 

யாழினிக்கு இருக்கும் தற்போதைய மனநிலையில் பேசவே நா எழவில்லை. அபிமன்யுவின் கோபமான பேச்சில் அனைவருக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ள.

 

வள்ளியம்மை பாட்டி தானாக முன்வந்து, அபி அவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாப்பா. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.

 

நான் என் பொண்டாட்டி கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன். இதில் யாரும் தலையிடாதீங்க என்றவன் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் யாழினியிடமே வந்து நிலைத்தது அவனுடைய பார்வை. 

 

சொல்லு டி! என்றான் குரலை உயர்த்தி அதட்டலாக.

 

அது.. அது வந்து.. ரூமை.. கிளீன் பண்ண போனேன் என்றாள் திக்கி திணறி.

 

ரூம் க்ளீன் பண்ண பட்டம்மா இருக்காங்க. நீ எதுக்காக ரூமை கிளீன் பண்ண போன.

 

அபிமன்யுவின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள் யாழினி.

 

உன்னை தான் டி கேட்குறேன் சொல்லு. உன்னை யாரு கிளீன் பண்ண போக சொன்னா என்றான் கத்தியபடி.

 

அபிமன்யுவின் கோபத்திலும், அதட்டலான பேச்சிலும் யாழினிக்கு வார்த்தையே எழவில்லை.

 

மீரா, அபி ஒரு நிமிஷம்.. அவளை எதுவும் சொல்லாத. தப்பு எங்க மேல தான் இருக்கு. ஒரு வாரமா நீ ஆபீஸில் பிஸியானதால உன்கிட்ட எதுவும் சொல்ல முடியல. உன்னோட அத்தையும், ஷைலஜாவும் தான் அவளுக்கு தினமும் வேலை சொன்னாங்க. நாங்க வேண்டாம்னு சொன்னதுக்கு அப்பாவும் இந்த குடும்பத்து பொண்ணுன்னு பொறுப்பு வரணும்னா இதெல்லாம் அவளே செய்யணும்னு சொல்லிட்டார். அதனால என்னாலயும் எதுவும் சொல்ல முடியல. சாரி அபி என்றார் கண்களில் கண்ணீருடன்.

 

அபிமன்யுவிற்கு யாரை குறை சொல்லி என்ன செய்வது. அனைத்தும் நடந்து முடிந்து விட்டது என்று எண்ணியவன், கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, ஏன் தாத்தா ஆள் ஆளுக்கு வேலை வாங்குறதுக்கு நான் ஒன்னும் இந்த வீட்டுக்கு ஒரு வேலைக்காரியை கூப்பிட்டுகிட்டு வரல. இவ இந்த வீட்டோட மருமக. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் உங்களால இவகிட்ட வேலை சொல்ல முடியாது. அதுக்கு முதல்ல என்கிட்ட பர்மிஷன் வாங்கணும் என்றான் நேருக்கு நேராக பார்த்தபடி.

 

கிருஷ்ணமூர்த்தியால் நம்பவே முடியவில்லை. என் அபியா இது? என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் ஒப்புக் கொள்பவன். இன்று என்னையே எதிர்த்து கேள்வி கேட்கிறானே. இது அனைத்திற்கும் காரணம் யாழினி தான் என்று யாழினியின் மீது தேவையில்லாத பகையை வளர்த்துக் கொண்டார்.

 

கிருஷ்ணமூர்த்தி, அபி நான் எது செஞ்சாலும் அது இந்த குடும்பத்தோட நல்லதுக்காக தான் இருக்கும். இவ கிராமத்தில் இருந்து வந்தவ, அது மட்டும் இல்லாம நம்ம அளவுக்கு அந்தஸ்து, கௌரவம் எதுவும் இவங்களுக்கு தெரியாது. நம்ம பாட்டுக்கு சூழ்நிலையால கல்யாணம் பண்ணி கொண்டு வந்துட்டு அவ இஷ்டத்துக்கு விட முடியாது இல்லப்பா. நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, கௌரவம் இருக்கு. அதை நமக்கு அடுத்து இவ தான காப்பாத்தணும்‌. அதுக்காக தான் இப்படி சொன்னேன். இவ இப்படி நகையை திருடிட்டு வந்து நிற்பான்னு நான் என்ன கனவா கண்டேன் என்றார் எரிச்சலாக.

 

மேலும் தொடர்ந்தவர், இதுக்கு முன்னாடி எல்லாம் நீ என்கிட்ட இப்படி கேள்வி கேட்டது இல்லையே. தாத்தா எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு நம்புன. இப்போ அந்த நம்பிக்கை இல்ல போலருக்கே.. தாத்தாவையே கேள்வி கேட்குற.

 

அபிமன்யு, யாரா இருந்தாலும் தப்பு தப்பு தான் தாத்தா என்றான் நேர் பார்வையாக பார்த்தபடி.

 

அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன். உன் பொண்டாட்டிக்கு வேலை கொடுத்தது தப்பா என்று எகிறினார்.

 

கண்டிப்பா தப்பு தான் தாத்தா. உங்களுக்கு அவளை பிடிக்குதா, பிடிக்கலையா என்பது எனக்கு முக்கியம் இல்ல. எனக்கு பிடிச்சிருக்கு. அதனால நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீங்க வேற எதையோ மனசுல வச்சுக்கிட்டு அவகிட்ட இப்படி ரூடா பிஹேவ் பண்ணி இருக்குறது ரொம்ப தப்பு. அதுக்கும் மேல, அவ இப்படி நகையை திருடி இருக்கான்னு பொய் சொல்லி இருக்கிறது ரொம்பபபப.. பெரிய தப்பு!.

 

கிருஷ்ணமூர்த்திக்கு அபிமன்யுவின் கடைசி வாக்கியத்தில் தூக்கி வாரி போட்டது, “என்ன... என்ன அபி சொல்ற. நான் பொய் சொன்னனா.

 

கண்டிப்பா தாத்தா, இவ்வளவு நாள் என் தாத்தா பொய் சொல்லுவார்னு எனக்கு தெரியாது. அவர் சொல்றது எல்லாமே உண்மை மட்டும் தான்னு நான் நினைச்சுகிட்டு இருந்தேன்.

 

என்ன அபி சொல்ற. இவ்வளவு நாள் இருந்த நம்பிக்கை இப்போ இல்லாம போயிடுச்சா. உன் பொண்டாட்டி பண்ண தப்பை மறைக்க தேவையில்லாம என்னெல்லாமோ பேசிகிட்டு இருக்காத என்றார் ஏளனமாக.

 

தப்பு பண்ணா தானே மறைக்க முயற்சி பண்ணனும். அவ எந்த தப்பும் பண்ணல என்றான் அழுத்தமாக.

 

அப்போ அந்த நகை எங்க போச்சு. கால் முளைச்சு நடந்து போயிடுச்சா.

 

கால் முளைச்சு நடந்து போகல. ரெண்டு கால் முளைச்ச ஒருத்தவங்க எடுத்துக்கிட்டு போயிருக்காங்க என்றான் விசாலாட்சியை பார்த்து.

 

விசாலாட்சிக்கு உள்ளுக்குள் திக்கென்றது.

 

விசாலாட்சி, இவன் என்ன வெத்தலையில மை தடவி பார்த்த மாதிரி எல்லாத்தையும் கரெக்டா சொல்றான் என்று மனதிற்குள் நினைத்தவர். வெளியே சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்.

 

கிருஷ்ணமூர்த்தி, இப்போ எதுக்காக அபி பேச்சை மாத்துற. இவ தான் நகையை திருடி இருக்கா.

 

எனஃப் தாத்தா..! ப்ளீஸ், ஸ்டாப் இட்..! என்று அந்த வீடே அதிரும்படி கத்தினான்.

 

தன் வாழ்நாளில் இதுவரை தன் தாத்தாவை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசிடாத அபிமன்யுவே இன்று இப்படி பேசவும், அனைவரும் வாயடைத்து போய் பார்த்துக் கொண்டு நின்றனர்.

 

யாழினிக்கோ அதிர்ச்சியின் உச்சம்..! அதுவும் தனக்காக அவன் தாத்தாவை எதிர்த்து பேசுகிறானே என்று. தன் அம்மாவின் வாழ்க்கையை காப்பாற்றிய தாத்தாவை தெய்வமாக நினைத்த அபிமன்யுவா இன்று இப்படி பேசுகிறான் என்று வள்ளியம்மை பாட்டி தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அபிமன்யு, இங்க பாருங்க தாத்தா. இந்த தப்பை பண்ணது யாழினி கிடையாது. அதை ஆதாரத்தோட என்னால நிரூபிக்க முடியும். அது இப்போ விஷயம் இல்ல. ஆனா, நீங்க ஏன் தாத்தா பொய் சொல்றீங்க என்றான் குரல் இறங்கி போய்.

 

அவனின் குரலிலேயே வருத்தம் மேலோங்கி ஒலித்தது. அபிமன்யு, யாழினி தான் எடுத்தா. யாழினி தான் திருடினு இவ்ளோ பேசுறீங்களே இதை பாருங்க.. நல்லா பாருங்க தாத்தா.. யார் எடுத்து இருக்காங்கன்னு இதில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்று கிருஷ்ணமூர்த்தியின் முன்னே தன் ஃபோனை நீட்டினான்.

 

அதில், விசாலாட்சி யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்தபடி வள்ளியம்மையின் அறையினுள் நுழைந்து, அவரின் நகையை எடுத்து தன் புடவை முந்தானையில் ஒளித்து வைத்தபடி அறையை விட்டு வெளியேறியது வரை முழுவதும் ஒன்று விடாமல் படமாக ஓடியது. அதிர்ந்து போய் பார்த்த கிருஷ்ணமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.

 

எப்படி இது சாத்தியம். இந்த வீடியோ எப்படி அபி கையில்.. யார் எடுத்தது என்று குழம்பி போய் அதிர்ச்சியில் பேச்சற்று நின்றார். குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த காட்சியை பார்த்ததும், வள்ளியம்மை பாட்டிக்கு ஆத்திரம் தாளவில்லை.

 

வள்ளியம்மை, விசாலாட்சி வயசுக்கு தகுந்த காரியமா செஞ்சிருக்க நீ. என்ன காரியம் பண்ணி இருக்க. தகுதி தகுதின்னு பேசுனியே... இதான் உன்னோட தகுதியா.. அடுத்தவங்க நகையை திருடி வச்சுக்கிட்டு மத்தவங்க மேல பழி போடுறது தான் கௌரவமா.. அசிங்கமா இல்ல உனக்கு.

 

ஏற்கனவே, அபிமன்யுவின் ருத்ரதாண்டவத்தில் அதிர்ந்து கப்சிப் என்று நின்று இருந்த விசாலாட்சி, மேலும் மாட்டிக் கொண்டோமே என்று எதுவும் பேச முடியாமல் பேச்சற்று நின்றார்.

 

கிருஷ்ணமூர்த்தி, என்ன இது அபி. உனக்கு எப்படி இந்த வீடியோ கிடைச்சது.

 

வீடியோ எப்படி கிடைச்சிருந்தா என்ன தாத்தா. அதில், இருக்க விஷயம் தானே நமக்கு தேவை. வீடியோல அத்தை தான் நகையை எடுத்தாங்கன்னு தெளிவா தெரியுது. உங்க கண்ணுக்கு எப்படி தாத்தா அத்தை யாழினி மாதிரி தெரிஞ்சாங்க என்றான் நக்கல் கலந்த பார்வையுடன்.

 

கிருஷ்ணமூர்த்தி இனி மறைத்து பிரயோஜனம் இல்லை என்று எண்ணியவர், “அது... என்று ஆரம்பிக்கும் போது.

 

அதற்குள் ஷைலஜா, இது யாரோ வேணும்னு எங்க அம்மாவை மாட்டிவிடுறதுக்காக மார்ஃபிங் பண்ணி இருக்காங்க. இதில் இருக்குறது எங்க அம்மாவே கிடையாது. யாழினிக்கு பதிலா எங்க அம்மா இருக்க மாதிரி யாரோ செட் பண்ணி இருக்காங்க என்றாள் படபடப்பாக.

 

ஆரணி, இந்த ஏமாத்துறது, ஆளை மாத்தி பழி போடுறதெல்லாம் எங்களுக்கு உங்க அளவுக்கு பண்ண தெரியாது ஷைலஜா என்றாள் அவளை முறைத்துப் பார்த்தபடி.

 

அபிமன்யு, தாத்தா உங்களுக்கு ஞாபகம் இருக்கா. ஒரு தடவை பிசியோதெரபி டாக்டர் சரியா ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டிக்குறாருன்னு என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணீங்கல்ல. நெக்ஸ்ட் டே வேற டாக்டர்க்கு அரேஞ்ச் பண்ணதும் நான் தான் இந்த மைக்ரோ கேமராவை உங்க ரூம்ல செட் பண்ணேன். அவர் கரெக்டா ட்ரீட்மென்ட் கொடுக்குறாரான்னு பார்க்க தான் செட் பண்ணேன். பட், இப்போ அந்த கேமராவால் தான் யாழினி எந்த தப்பும் பண்ணலைனு ப்ரூஃப் பண்ண முடிஞ்சது.

 

இனி என்ன சொல்லியும் தப்பிக்க முடியாது என்று தெள்ள தெளிவாக புரிந்தது கிருஷ்ணமூர்த்திக்கு.

 

அபிமன்யு, ஏன் தாத்தா பொய் சொன்னீங்க? என்றான் வெளிப்படையாக.

 

கிருஷ்ணமூர்த்தி சிறிது நேரம் மௌனம் காத்தவர், எனக்கு இவ இந்த வீட்டு மருமகளா வந்தது சுத்தமா பிடிக்கல. இவளை எப்படி வெளியே அனுப்புறதுன்னு தெரியாம தான் இப்படி பண்ணேன். இவ நம்ம குடும்பத்துக்கு வேணாம் அபி. நீ வெளியில போக சொல்லு.

 

அபிமன்யு, இதுக்கு பதில் ஏற்கனவே நான் உங்ககிட்ட சொல்லிட்டேன் தாத்தா. திரும்பத் திரும்ப என்னால ஒரே விஷயத்தை பத்தி ஆர்க்யூ பண்ண முடியாது. இவ தான் இந்த வீட்டோட மூத்த மருமகள். இதில் எந்த மாற்றமும் கிடையாது. அதனால தேவை இல்லாம இப்படி எதுவும் ட்ரை பண்ணாதீங்க. தட் இஸ் வேஸ்ட் ஆப் யுவர் டைம். இந்த வீடியோ சாட்சி இல்லைனாலும் நான் இவளை நம்பி இருப்பேன். ஆனா, உங்க எல்லார் முன்னாடியும் ப்ரூஃப் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால தான் இந்த வீடியோவை காட்டுனேன். என் பொண்டாட்டி மேல ஏற்பட்ட கலங்கத்தை சரி பண்ண வேண்டியது ஆஸ் அ ஹஸ்பண்டா என்னோட கடமை தானே. ஆம் ஐ ரைட் பாட்டி என்றான் வள்ளியம்மையை பார்த்து.

 

கண்களில் ஆனந்த கண்ணீருடன் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தார் வள்ளியம்மை பாட்டி‌.

 

ஒன் மோர் திங், வாயை மூடிக்கிட்டு உங்க வேலையை மட்டும் பார்க்கிறதா இருந்தா இந்த வீட்ல இருக்கலாம். இல்லைனா ஒரு செகண்ட் கூட இந்த வீட்டில் இருக்க கூடாது என்று ஷைலஜாவையும், விசாலாட்சியையும் பார்த்து கூறியவன்.

 

மாம் ரொம்ப பசிக்குது. டின்னர் எடுத்து வைங்க என்று கூறிவிட்டு யாழினியின் கையையும் பிடித்து அவளையும் தன்னுடன் சேர்த்து அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்று விட்டான்.

 

ஆரணி வேண்டும் என்றே சத்தமாக, வாவ் ஆரி அண்ணா.. பாத்தியா, அபி அண்ணா செம கெத்துல. எப்படி எல்லா விஷயத்தையும் ஈசியா சால்வ் பண்ணிட்டார்.

 

ஆரியன் சோகமான முகத்துடன் நின்று இருக்க.

 

ஆரணி, என்ன ஆச்சுண்ணா ஏன் ஒரு மாதிரி இருக்க.

 

ஆரியன் சோகமாக, இந்த ஷைலஜாவுக்கு எவ்வளவு திமிரு பாத்தியா ஆரணி. என்னை பப்பி ஷேமா வீடியோ எடுத்து காட்டி என் மானத்தை வாங்கிட்டா என்றான் வருத்தமாக.

 

சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு என்று கூறி சிரித்தவள், நீ ஏன் இப்படி நினைக்கிற. இப்படி ஒரு விஷயம் நடந்ததால தான ஷைலஜா உன்னை லவ் பண்றான்னு தெரிஞ்சுது என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

 

ஆரியன் அவசரமாக, வாயை மூடு ஆரணி. விளையாட்டுக்கு கூட இப்படி எல்லாம் சொல்லிடாத. அந்த பிசாசு கூட எல்லாம் என்னால குடும்பம் நடத்த முடியாது. நான் சாப்பிட போறேன் என்று டைனிங் ஹாலுக்கு ஓடி விட்டான்.

 

இவன் கூறுவதை கேட்ட ஷைலஜாவிற்கு காதில் புகை வராத குறை தான். ஷைலஜாவை பார்த்து நக்கலாக சிரித்தபடி ஆரணியும் சாப்பிட சென்றாள்.

 

ஷைலஜா, பாத்தியா மாம், எல்லாம் உன்னால தான். இப்படி ஒரு கேவலமான ப்ளானை போய் போட்டியே என்று தன் தாயை திட்டினாள்.

 

எனக்கு என்னடி தெரியும். யாழினியை வெளியில அனுப்புற கையோட உனக்கும், ஆரியனுக்கும் நிச்சயத்த முடிச்சிடலாம்னு பார்த்தேன். இப்படி எல்லா பிளானும் சொதப்பும்னு நான் என்ன கனவா கண்டேன். நான் நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு ஆயிடுச்சு. சரி வா ரூமுக்கு போவோம்.

 

அனைவரும் டைனிங் ஹாலுக்கு சென்றதும், கிருஷ்ணமூர்த்திக்கு தான் முகத்தில் ஆடவில்லை. தன் வார்த்தையையும் மீறி அபிமன்யு செய்யும் முதல் காரியம் இது.

 

ஏதேதோ பிளான் பண்ணி இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டுட்டோமே என்ற அவமானமும் சேர்ந்து கொள்ள இரவு உணவை தவிர்த்து விட்டு அறைக்கு சென்று விட்டார்.

 

ஒருவழியாக அனைத்து பிரச்சனையும் முடிந்த திருப்தியில் வீட்டினர் அனைவரும் இருக்க. யாழினியால் அங்கே அமரவே முடியவில்லை. சட்டென நாற்காலியில் இருந்து எழுந்தவள், அப்புறமா சாப்பிடுறேன் என்று யாரின் முகத்தையும் பார்க்காமல் கூறிவிட்டு தோட்டத்தை நோக்கி விரைந்து விட்டாள்.

 

அவளுக்கு சற்று தனிமையை கொடுக்க நினைத்த அபிமன்யுவும் எதுவும் வற்புறுத்தவில்லை. தோட்டத்திற்கு சென்று அமர்ந்தவளின் மனது ஒரு நிலையிலேயே இல்லை.

 

இன்று நடந்த விஷயங்கள் அனைத்தும் சேர்ந்து மனதை பாரமாக எதுவோ அழுத்துவது போல் உணர்ந்தாள். இங்கே இருப்பதும், அனைவரையும் பார்ப்பதுமே மூச்சு முட்டுவது போல் இருந்தது யாழினிக்கு.

 

மீரா யாழினியை தேடி தோட்டத்திற்கு வந்தவர். யாழினியின் தோளில் கை வைக்க. அவரை திரும்பிப் பார்த்த யாழினிக்கு அழக்கூடத் தெம்பில்லை.

 

அவரின் இடுப்போடு சேர்த்து கட்டி அணைத்தவள் அமைதியாக கண்களை மூடி சற்று நேரம் இருந்தாள். யாழினியின் நிலையை உணர்ந்த மீராவும் எதுவும் கூறாமல் அவளின் தலையை கோதிய படி சற்று நேரம் அமைதி காத்தார்.

 

பிறகு மீரா, சாப்பிட போலாம் டா. டைம் ஆகுது.

 

அதே நிலையில் இருந்தவாறு யாழினி, எனக்கு பசிக்கல அத்த.

 

சரி ஒரு நிமிஷம் இரு. நான் இதோ வந்திடுறேன் என்றவர் வீட்டினுள் சென்று தட்டில் உணவுடன் யாழினியை நோக்கி வந்தார். 

 

ம்ம்... ஆ காட்டு.

 

இல்ல வேண்டாம் அத்த.

 

மீரா அதட்டலாக, எதுவும் பேசக்கூடாது. ஆ காட்டு என்றதும் டக்கென்று வாயைத் திறந்தாள்.

 

உணவு முழுவதையும் ஊட்டி முடித்ததும் மீரா, எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. உனக்கு ஒன்னுனா நாங்க யாரும் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம். அதுவும், அபி பத்தி சொல்லவே வேண்டாம். நீயே இன்னைக்கு பாத்தல்ல. உனக்கு ஒன்னுனா அவன் யாரையும் சும்மா விட மாட்டான். அதனால நிம்மதியா போய் தூங்கு என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.

 

நடப்பது அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மரகதம் பாட்டிக்கு மனநிறைவாக இருந்தது.

 

அறைக்கு சென்ற யாழினிக்கு அபிமன்யு என்ன வைத்து கார்த்திருக்கிறானோ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5