அவனதிகாரம் - 52

 

 

அதிகாரம் – 52

 

அபிமன்யுவை முதல் முறையாக உடைந்து பார்த்த வள்ளியம்மைக்கு மனம் தாங்கவில்லை. ஒருபுறம், தன் கணவரின் சதி. அந்த சதியால் பிரிந்து போன இரு குடும்பங்கள்.

 

மற்றொருபுறம், எதுவும் அறியாத அபிமன்யுவின் களங்கம் இல்லாத மனம் முற்றிலுமாக நஞ்சு கலக்கப்பட்டிருக்கிறது.

 

அந்த தோட்டத்து திண்ணையின் மேல் அமர்ந்திருந்த அக்கா, தங்கைகளுக்குள் சற்று நேரம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை. முற்றிலுமாக அமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது.

 

என்ன பேசுவது என்று தெரியாத மனநிலையில் வள்ளியம்மை.

 

தன் நிலையை எண்ணி உள்ளுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் மரகதம் பாட்டிக்கோ, வள்ளியம்மைக்கு சமாதானம் கூறுவதா, அல்லது தனக்கு தானே சமாதானம் கூறிக் கொள்வதா என்று புரியாத நிலை.

 

அபிமன்யுவிடம் பேசிவிட்டு வந்த யாழினி இவர்கள் இருவரையும் தேடிக்கொண்டு தோட்டத்திற்கு வர, இரு பாட்டிகளும் அமர்ந்திருந்த நிலையே கூறியது அவர்களின் மனவருத்தத்தை.

 

இவ்வளவு காலங்கள் சிறு பெண்ணாக நினைத்து மற்றவர்கள் இவளுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். முதல் முறையாக மற்றவர்களுக்காக சிந்திக்கும் இடத்தில் தான் இருக்கிறோம் என்ற பொறுப்பு யாழினிக்கு வந்தது.

 

பாட்டிகளின் அருகில் சென்று அமர்ந்தவள். இருவரையும் இலகுவாக்கும் பொருட்டு, என்ன ஆச்சு? ஏன் இப்போ ரெண்டு பேரும் இப்படி கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க என்றாள் சாதாரண குரலில்.

 

அப்போதும் இருவருக்கும் இடையே எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை அமைதி மட்டுமே.

 

மரகதம் பாட்டியின் கை மேல் தன் கையை வைத்த யாழினி, பாட்டி இங்க பாரு என்று தன் மற்றொரு கையால் அவரின் கன்னத்தின் மேல் கை வைத்து தன் பக்கம் திருப்பினாள்.

 

எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக திரும்பிய பாட்டியிடம், இங்க பாரு, அவர் பேசியதெல்லாம் நினைச்சு நீங்க ரெண்டு பேரும் இப்படி உட்கார்ந்து இருந்தா, அடுத்து என்ன பண்றதுன்னு எப்படி நாம யோசிக்கிறது.

 

மரகதம், இனிமே யோசிக்குறதுக்கும், பேசுறதுக்கும் என்ன இருக்கு யாழினி. உண்மையை சொல்லியே அவன் நம்பல. இனிமே என்ன சொல்ல சொல்ற.

 

அவருக்கு எந்த உண்மையும் தெரியாதே பாட்டி. அதான் அப்படி பேசிட்டார். யாரு என்ன சொன்னாலும், உண்மை என்னனு தெரியாம முடிவு செய்ய மாட்டார். நீங்க ரெண்டு பேரும் சொன்னது பத்தி கண்டிப்பா யோசிப்பாரு கவலைப்படாதீங்க.

 

வள்ளியம்மை, எனக்கும் அபி பத்தி தெரியும் யாழினி. அப்படி எந்த முடிவையும் யோசிக்காம எடுக்க மாட்டான். ஆனா, மத்த விஷயம் மாதிரி இது கிடையாது. சின்ன வயசுல இருந்து அவன் மனசுல இவங்க மேல தான் தப்புன்ற எண்ணம் ஊறிப் போய்டுச்சி. அதை அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது.

 

இன்னைக்கு, நேத்து கிடையாது. அவனோட சின்ன வயசுல இருந்து அவன் மனசுல என் வீட்டுக்காரர் சொன்ன பொய் ஆணி அடிச்ச மாதிரி உட்காந்திடுச்சு. இப்போ இத்தனை வருஷமா நாம உண்மைனு நினைச்சுட்டு இருந்த ஒரு விஷயம் பொய்னு அவன் உணருவது அவ்வளவு சுலபம் கிடையாது. இது பொய்னு அவன் நம்புறதுக்கு முன்னாடி, பொய்ன்ற ஒரு விஷயம் அவனுக்கு தோணுமானே தெரியல.

 

எவ்வளவு காலம் பொய்யை நம்ப வைக்க முடியும் பாட்டி. இவ்வளவு நாளா நல்லவர், பொய் சொல்ல மாட்டாருன்னு நினைச்சுட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி தாத்தாவை, விசாலாட்சி அம்மா கூடவும், ஷைலஜா அக்கா கூடவும் சேர்ந்து தப்பு பண்ணதை உங்க பேரன் தானே கண்டுபிடிச்சு எல்லார் முன்னாடியும் சொன்னார்.

 

நம்ம யாரும் சொல்லலையே. அவரோட தாத்தா மேல தப்பு இருக்குன்னு அவரே கண்டுபிடிச்சார்ல. அதே மாதிரி, இந்த விஷயத்தையும் அவர் கண்டிப்பா கண்டுபிடிப்பார். நீங்க வேணும்னா பாருங்க.

 

வள்ளியம்மை, நீ சொல்றதெல்லாம் கேட்க நல்லா இருக்கு யாழினி. நடந்தா ரொம்ப சந்தோஷப்படுறது நான் தான். உண்மை என்னனு தெரிஞ்சும், இத்தனை வருஷமா வெளியில் சொல்ல முடியாம மனசுக்குள்ளயே வச்சு, இப்போ உண்மையை சொல்லியும் எந்த பிரயோஜனமும் இல்லாம போயிடுச்சு என்றார் கலங்கிய கண்களுடன்.

 

இவர்களின் உரையாடலில் தன்னை சற்று தேற்றிக் கொண்டார் மரகதம்.

 

வள்ளியம்மையிடம், நீ கவலைப்படாத வள்ளி. எனக்கும் யாழினி சொல்றது சரியா இருக்கும்னு தான் தோணுது. கண்டிப்பா அபி என்ன உண்மைனு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவான் பார். அப்படி அவன் முயற்சி பண்ணனும்னு நினைச்சாலே போதும். கண்டிப்பா அவன் நடந்ததை கண்டுபிடிச்சிடுவான். நம்ம மேல எந்த தப்பும் இல்லைனு புரிஞ்சுப்பான்.

 

இந்த விஷயத்துல இதுக்கு மேல நம்ம என்ன பண்ண முடியும்னு எனக்கு தெரியலக்கா.

 

நடந்த உண்மையை சொல்லிட்டோம். இதுக்கு மேல சொல்றதுக்கோ, செய்றதுக்கோ நம்மகிட்ட எதுவும் இல்ல வள்ளி. இனிமே கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு, அபிக்கு எல்லா உண்மையும் சீக்கிரம் தெரிய வைக்கணும்னு வேண்டிக்கிறதை தவிர, நமக்கு வேற வழி இல்ல. பார்க்கலாம்... இன்னும் எவ்வளவு நாள் அவர் நம்மள சோதிக்கணும்னு நினைக்கிறார்னு என்று பெருமூச்சுடன் கூறி முடித்ததும்.

 

இரு பாட்டிகளும் அவரவர் மனதில் இரு வேறு வேண்டுதல்களை வைத்தனர்.

 

சரி சரி போதும். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கவலைப்பட்டு முடிச்சிட்டீங்களா. இப்போ கிளம்புங்க. ஸ்வேதா வீட்டுக்கு நலங்கு வைக்க போனும்ல.

 

மரகதம், உன் தோழிக்கு கல்யாணம்ன்னதும் உனக்கு தான் ரொம்ப குஷியா இருக்கு.

 

ஆமா.. பின்ன... நான் தானே பெண் தோழி. நானும், ஸ்வேதாவும் ஏற்கனவே இது பேசி வச்சது தான். எனக்கு அவ தான் பெண் தோழி. அவளுக்கு நான் தான் பெண் தோழி. என்ன பண்றது, எனக்கு தான் இதெல்லாம் எதுவுமே நடக்கல. ஆனா, அவளோட கல்யாணத்துக்கு நான் சொன்ன மாதிரி கரெக்டா பெண் தோழியா போய் நிக்கணும்ல. சீக்கிரம், சீக்கிரம் கிளம்புங்க மணி ஆகுது என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

 

ஏன் கா ஒருவேளை அபி சொன்ன மாதிரி, நம்ம திடுதிப்புன்னு கல்யாணம் செஞ்சு வச்சுட்டோம்னு யாழினி மனசுல கவலை இருக்கோ.

 

ஏன் அப்படியெல்லாம் கேட்குற.

 

இல்லகா. யாழினி இப்போ சொல்லிட்டு போனாளே. அவளுக்கு தான் இப்படி நலங்கு வைக்கிறதெல்லாம் பண்ணலைனு. அப்போ அவ மனசுல கவலை இருக்குன்னு தானே அர்த்தம்.

 

இங்க பாரு வள்ளி. நம்ம கையில் எதுவும் இல்ல. நம்ம நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு ஆயிடுச்சு. அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும். கடவுள் என்ன முடிவு பண்ணி இருக்காரோ அது படி தானே நடக்கும். அபிக்கு யாழினி தான்னு ஏற்கனவே முடிச்சு போட்டு இருக்கார். அதான் இப்படி எல்லாம் நடந்து போச்சு.

 

அக்கா அவளுக்கு வாழ்க்கையில நடக்க வேண்டிய மத்த சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் சிறப்பா பண்ணிடலாம். யாழினிக்கு வளைகாப்பு, அவ குழந்தைக்கு பெயர் வைக்கிறது, இப்படி எல்லாமே கரெக்டா பண்ணனும் எதையும் விட்டுடக்கூடாது.

 

அதுக்குள்ள புள்ள பொறக்குற வரைக்கும் போயிட்டியா நீ. சரி சரி எல்லாம் நடக்கும் போது நல்லபடியா நடக்கும். அவ திரும்பி வந்து பார்க்கும் போது நாம இப்படியே உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தா அவ்வளவு தான் ஆட ஆரம்பிச்சிடுவா. சீக்கிரம் போய் கிளம்புவோம்.‌

 

அபிமன்யுவிடம் ஊருக்கு கிளம்புவதற்கு சம்மதம் தெரிவித்து வந்தவள். அவன் இலகுவாகுவதற்கு சற்று அவகாசம் கொடுத்து மீண்டும் அறையினுள் நுழைந்தாள்.

 

அபிமன்யுவின் முகம் முன்பை விட நன்கு தெளிந்திருந்தது. கட்டிலில் சாய்ந்த படி மடிக்கணினியில் எதுவோ பார்த்துக் கொண்டிருந்தவன், யாழினி அறையினுள் நுழைந்ததும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் மடிக்கணினியில் மூழ்கினான்.

 

அபிமன்யுவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்த யாழினிக்கு அவனே எடுத்துக் கொடுக்கும்படி, என்ன.. ஏதாவது சொல்லனுமா? என்றான் மடிக்கணினியில் இருந்து பார்வையை அகற்றாமல்.

 

ம்ம்.. ஆமா. ஸ்வேதாவுக்கு இன்னைக்கு நலங்கு வைக்கிறாங்க. அதான் அவங்க வீட்டுக்கு போகணும்.

 

அபிமன்யுவின் கைகள் சட்டென்று ஒரே நிலையில் ஒரு நிமிடம் நிலைத்து விட்டு, மீண்டும் தன் பணியை தொடர்ந்தது.

 

ஓகே.

 

யாழினிக்கு இவன் எதற்கு சரி என்று கூறுகிறான் என்று ஒன்றும் புரியவில்லை.

 

தான் சொன்ன செய்திக்கு சரி என்று கூறுகிறானா அல்லது, போய் வரலாம் என்று சம்மதித்திற்காக சரி என்று கூறுகிறானா என்று புரியாமல் குழப்பமாக பார்த்திருந்தாள்.

 

அவளின் குழப்பமான மனதை புரிந்து கொண்ட அபிமன்யு நிமிர்ந்து அவளை பார்த்து, சரி போயிட்டு வா என்றான் தெளிவாக.

 

மீண்டும் யாழினி தயக்கமாக நிற்க.

 

என்ன.. அதான் போயிட்டு வானு சொல்லிட்டேன்ல.

 

இல்ல.. எல்லாருமே போறோம்.. நீங்களும் வந்தா.. என்று இழுத்தாள்.

 

ஓகே என்றான்.

 

யாழினி நம்ம என்ன சொல்றோம்னு புரிஞ்சுதா இல்லையானு தெரியலையே என்று யோசித்தபடி இருக்க.

 

கிவ் மீ 10 மினிட்ஸ். நானும் ரெடி ஆகிட்டு வந்துடறேன்.

 

யாழினிக்கு தான் கேட்பது உண்மை தானா என்று தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

 

எப்படி..? என்றாள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில்.

 

என்ன எப்படி?.

 

இல்ல.. நான் போறதுக்கு என்ன சொல்லுவீங்களோன்னு நினைச்சேன். இப்போ நீங்களும் வாங்கனு சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டீங்க.

 

அதற்கு யாழினியைப் பார்த்து மெலிதாக சிரித்தவன், கல்யாணம் முடிஞ்சதும் நான் ஊருக்கு போயிடலாம்னு சொன்னதும் நீ ஓகே சொன்னல்ல. எனக்காக நீ ஓகே சொல்லும் போது உனக்காக நானும் ஓகே சொல்றது தானே கரெக்ட்டா இருக்கும்.

 

யாழினிக்கு தலை தானாக ஆமாம் என்பது போல் ஆடியது.

 

பட், ஒன் கண்டிஷன். என்னால நைட் ஸ்டே அங்க பண்ண முடியாது.

 

அது ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க நைட்டு தூங்குறதுக்கு மட்டும் வீட்டுக்கு வந்துடுங்க.

 

வாட்.. நான் மட்டும் வீட்டுக்கு வரணுமா, நீயும் என் கூட தான் வரணும்.

 

,நானா....

 

ஆமா, ஏன் வரமாட்டியா? என்றான் ஒற்றை புருவத்தை ஏற்றி.

 

எங்கே மீண்டும் இவன் முருங்கை மரம் ஏறிவிட்டால், அவனை இறக்குவது பெரும்பாடாகி போய்விடுமே என்று எண்ணிய யாழினி, ச்ச.. ச்ச.. அதுக்காக சொல்லல. இன்னைக்கு தானே லாஸ்ட் நைட். அதனால, நாங்க எல்லாம் ஸ்வேதா கூட ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சோம்.

 

டே ஃபுல்லா அங்க தான இருக்கோம். அப்போ நல்லா என்ஜாய் பண்ணிக்கோங்க. நைட்ல நீ என் கூட தான் வரணும். தனியா படுத்தா எனக்கு தூக்கம் வராது.

 

நான் ஸ்வேதா கூட இருக்கேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டேனே.

 

தட்ஸ் யுவர் ப்ராப்ளம் என்று கூறிவிட்டு தயாராக சென்று விட்டான்.

 

எனக்கு மட்டும் ஏன் இப்படி டிசைன் டிசைனா பிரச்சனை வருதுன்னு தெரியல. ஒரு வழியா ஸ்வேதா வீட்டுக்கு போக சம்மதிச்சிட்டார். நைட் இவர் கூடவே வரணும்னு சொல்றார். அவகிட்ட எப்படி இதை சொல்றது. சொன்னா, அவ வேற கத்துவாளே என்று புலம்பியபடி தயாராகினாள். அனைவரும் கிளம்பி ஸ்வேதாவின் வீட்டிற்கு நலங்கு வைக்க சென்றனர்.

 

அன்றைய நாளும், மறுநாளும் ஸ்வேதாவின் வீட்டிலே விசேஷங்களில் கழிந்தது. ஆனால், அபிமன்யு கூறியது போல் இரவு மட்டும் யாழினியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டிற்கு கிளம்புவதற்குள் ஸ்வேதாவுக்கும், யாழினிக்கும் நடுவில் பெரிய போராட்டமே நடந்து விட்டது.

 

ஸ்வேதா, என்ன விளையாடுறியா.. இன்னைக்கு நைட்டு என்கூட ஸ்டே பண்றன்னு தான சொல்லி இருந்த. போ.. போய்.. உன் ஹஸ்பண்ட் கிட்ட வர முடியாதுன்னு சொல்லு.

 

ஆரணி, என்னடி அவ தான் இவ்வளவு ஆசை படுறால்ல. ஒன் டே தான. அண்ணா கிட்ட கேட்டு பாரேன்.

 

யாழினி, ஆரணி.. நீயும் ஸ்வேதா மாதிரி பேசுற. உனக்கு உங்க அண்ணனை பத்தி தெரியாதா.

 

ஸ்வேதா, சரி, நீ ஒன்னும் கேட்க வேண்டாம். நானே கேட்கிறேன்.

 

வேண்டாம் டி. அவர் வரும்போதே என்கிட்ட சொல்லி தான் கூப்பிட்டு வந்தார். அதான் டே டைம் ஃபுல்லா உன் கூட தானே இருக்கேன். நைட் மட்டும் தான, தூங்க தான போறோம். எங்க படுத்தா என்ன.. திரும்ப மார்னிங் சீக்கிரமா வந்துடுறேன்.

 

அதற்குள் ஸ்வேதா ஆரணியிடம் இருந்து அபிமன்யுவின் போன் நம்பரை வாங்கி அவனுக்கு தொடர்பு கொண்டு இருந்தாள்.

 

யாழினி, வேண்டாம் டி சொன்னா கேளு. ஆரணி சொல்லு என்று ஆரணியையும் சப்போர்ட்டுக்கு அழைத்தாள்.

 

அதற்குள் மறுபக்கம் அபிமன்யு அழைப்பை ஏற்று விட, ஹலோ அண்ணா. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நாங்க ரூம்ல தான் இருக்கோம். கொஞ்சம் வரிங்களா.

 

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, ம்ம் ஓகே என்று கூறி அழைப்பை துண்டித்தவள் யாழினியிடம், வரேன்னு சொன்னாங்க.

 

யாழினி, நீ இப்போ தேவையில்லாம ரிஸ்க் எடுக்குற ஸ்வேதா.

 

ஸ்வேதா, ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.

 

இவர்களின் பேச்சுகளுக்கு நடுவே அபிமன்யு வந்துவிட.

 

ஸ்வேதா, அண்ணா.. உள்ளே வாங்க.

 

அபிமன்யு, என்ன யாழினி கிளம்பலாமா.

 

அண்ணா ஒரு நிமிஷம். இன்னைக்கு யாழினி எங்க கூடவே ஸ்டே பண்ணட்டுமே.

 

அபிமன்யுவின் பார்வை யாழினியிடம் சென்றது.

 

யாழினி உடனே, நான் கிளம்புறேன்னு தாங்க சொன்னேன். இவ தான் என்று ஸ்வேதாவை கை காட்டினாள்.

 

அவ வீட்டுக்கு கிளம்பிட்டா. நாங்க தான் எங்க கூட ஸ்டே பண்ண சொல்லி கம்பெல் பண்ணிகிட்டு இருக்கோம். ப்ளீஸ் அண்ணா, இன்னைக்கு ஒன் டே தான.

 

அபிமன்யு, நாங்க மார்னிங் சீக்கிரமா வந்துடரோம்.

 

யாழினி, அதான் காலையில் சீக்கிரமா கூட்டிட்டு வரேன்னு சொல்றாருல்ல. விடேன் டி

 

எங்கே நாளை வர வேண்டாம் என்று கூறி விடுவானோ என்ற பதட்டத்தில் அபிமன்யுவிற்கு ஏற்றார் போல் கூறினாள்.

 

ஸ்வேதா, நீ பேசாத. ஒன் டே நைட் தான என் கூட ஸ்டே பண்ண முடியாதா. உன் ஹஸ்பண்ட் கூட தான் தூங்குவியா. ஏன்.. எங்க கூட தூங்க மாட்டியா?.

 

யாழினி, சொன்னா கேளு ஸ்வேதா. அவருக்கு என் கூட படுத்தா தான் தூக்கம் வரும். நான் இல்லைனா தூக்கம் வராது டி.

 

யாழினி தான் என்ன கூறுகிறோம் என்று யோசிக்காமல் சட்டென்று கூறி விட.

 

அவளின் வார்த்தையில் அனைவருக்கும் புன்னகை அரும்பியது. அபிமன்யுவிற்கோ இப்படி அனைவரின் முன்பும் போட்டு உடைத்து விட்டாளே என்று அங்கே நிற்கவே முடியவில்லை.

 

ஆரணி முதல் முறை தன் அண்ணன் வெட்கப்பட்டு பார்க்கிறாள். ஆச்சரியம் தாளவில்லை ஆரணிக்கு. ஃபர்ஸ்ட் இதை ஆரியன் கிட்ட சொல்லணும், சொன்னா நம்புவானானு தெரியலையே என்று தன் மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்தாள் ஆரணி.

 

ஸ்வேதா சிரிப்பினோடு, அண்ணாவால தனியா தூங்க முடியாதா.. இல்ல, உன்னால தனியா தூங்க முடியாதா.. சும்மா அண்ணாவை வச்சு சாக்கு சொல்லாத.

 

நிஜமா தான் டி சொல்றேன். அவர் தான் கிளம்பும் போதே சொன்னார். தனியா படுத்தா தூக்கம் வராது, அதனால டே ஃபுல்லா இருந்தாலும், நைட் மட்டும் என்கூட வந்துடனும்னு சொல்லி தான் கூப்பிட்டுகிட்டு வந்தார். வேணும்னா நீயே கேளு.

 

ஆரணி, அண்ணா... என்ன இதெல்லாம். அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி தனியா தூங்குனீங்க. இப்போ மட்டும் யாழினி இல்லைனா தூக்கம் வராதா என்று கிண்டல் செய்தாள்.

 

அபிமன்யுவிற்கோ இப்போ இந்த எக்ஸ்பிளநேஷன்ஸ் எல்லாம் ரொம்ப முக்கியம் என்று நொந்து கொண்டு இருந்தான்.

 

ஸ்வேதா அபிமன்யுவிடம், என்னண்ணா யாழினி இல்லாம நீங்க தூங்க மாட்டீங்களா என்று அபிமன்யுவை கிண்டல் செய்ய.

 

அபிமன்யு விரைப்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டவன், நாட் லைக் தட் என்று என்ன கூறுவது என்று தெரியாமல் இழுக்க.

 

அதற்குள் ஸ்வேதா, அப்போ இன்னைக்கு ஒன் டே மட்டும் எங்க கூட விட்டுட்டு போங்க.

 

அபிமன்யு, ஓகே என்று முடித்துக் கொண்டான்.

 

ஸ்வேதாவும், ஆரணியும், ஹே... என்று ஒரே நேரத்தில் குதூகலமாக கத்த.

 

நீ என்கூட வா என்று யாழினியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

 

வெளியே இழுத்து வந்தவன் அருகில் இருந்த அறையினுள் யாழினியை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். யாழினி அபிமன்யு தன்னை இங்கே தங்க சம்மதித்து விட்டான் என்ற மகிழ்ச்சியான மனநிலையில் சென்று கொண்டிருந்தாள்.

 

அறையினுள் நுழைந்த அபிமன்யு, வேறு யாரேனும் அறையில் இருக்கிறார்களா என்று ஒரு முறை சுற்றிப் பார்த்தவன். யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு கதவை தாழிட்டு விட்டு யாழினியின் அருகில் வந்தான்.

 

கொஞ்சமாவது அறிவு இருக்கா டி உனக்கு. இப்படி தான் அவங்க கிட்ட பேசுவியா. என் தங்கச்சியும் கூட அங்க நிக்குறா. அது கூட உன் கண்ணுக்கு தெரியலையா. அவ என்னை பத்தி.. என்ன நினைப்பா...

 

யாழினிக்கு எதுவும் புரியவில்லை. அப்படி நாம் என்ன தவறாக கூறிவிட்டோம் என்று எண்ணியவள், நான் என்ன பேசினேன்? என்றாள் எதுவும் அறியாமல்.

 

பண்றது எல்லாம் பண்ணிட்டு. இப்படி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வச்சிக்காத. எதுக்கு உன் கூட படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும்னு நான் சொன்னதை இவங்க கிட்ட சொன்ன.

 

அப்படி சொன்னா தான் வீட்டுக்கு போக சரினு சொல்லுவானு தான் சொன்னேன்.

 

பாரு.. அவங்க ரெண்டு பேரும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்க.  எல்லாம் உன்னால தான். போ டி என்று கூறி விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

 

கிண்டல் பண்ணாங்களா.. எப்போ?.

 

ஆமா.. உனக்கு ஒண்ணுமே தெரியாது. இடியட்.. என்று சற்று நேரம் புலம்பினான்.

 

அபிமன்யுவின் புலம்பலில் யாழினி அமைதியாக இருந்தாள்.

 

அபிமன்யு மீண்டும் யாழினியிடம் திரும்பியவன், இப்போ நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. நீ என் கூட தான் நைட் தூங்கணும்.

 

யாழினிக்கு மீண்டும் முதலில் இருந்தா என்று ஐயோ என்று இருந்தது.

 

நீங்க தான அவங்க கிட்ட இங்க ஸ்டே பண்ண ஓகே சொன்னீங்க.

 

பின்ன வேற என்ன பண்ண சொல்ற என்னை. நீ தான் அவங்க முன்னாடி என்னென்னமோ உளறி வைக்கிறியே. அதனால தான் நான் அப்படி சொன்னேன். இப்போ நான் அங்க வரமாட்டேன். எனக்கு உன் பிரண்டை போன் பண்ண விடாம பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு புரிஞ்சுதா...

 

நீங்க ஓகே சொல்லிட்டு, நான் எப்படி ஸ்டே பண்ண முடியாதுன்னு சொல்றது. அவ ஒத்துக்க மாட்டாளே.

 

ஸ்டாப் சேயிங் சில்லி ரீசன்ஸ் யாழினி. உனக்கு 10 மினிட்ஸ் தான் டைம். அதுக்குள்ள நீ போய் பாய் சொல்லிட்டு வந்துடனும். அதுக்கு மேல ஒரு நிமிஷம் ஆனாலும், இங்க நடக்குறதே வேற என்று கூறிவிட்டு விறுவிறுவென வாசலை நோக்கி சென்று விட்டான்.

 

யாழினி என்ன செய்ய போகிறாள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5