அவனதிகாரம் - 57
அன்று
காலை முதல் ஆரணி பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தாள். டைனிங் ஹாலில் அமர்ந்தபடி
தன் இரு கன்னங்களையும் கைகளால் தாங்கியபடி யாழினி வைத்த கண் எடுக்காமல் ஆரணியையே
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
யாழினியின்
கன்னங்களை தாங்கிய கைகளை ஆரியன் அவள் எதிர்பாராத விதம் தட்டி விட டேபிளில்
இடித்துக்கொண்ட யாழினி, “ஸ்ஸ்... ஆ... லூசு, அறிவு இருக்கா
உனக்கு கொஞ்சமாவது” என்று தன் தாடையை தேய்த்தபடி
திட்டினாள்.
“இப்படி ‘ஆ’ னு உட்கார்ந்துகிட்டு என்ன
வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க”.
“நான் ஒன்னும் வேடிக்கை பார்க்கல.
இங்க பாரேன், இன்னைக்கு ஆரணி ரொம்ப வித்தியாசமா இருக்கா இல்ல. ஏன் ரொம்ப டென்ஷனா
பரபரப்பா இருக்கா” என்றாள் ஆரணியை பார்த்துக்
கொண்டே யோசனையாக.
“ஓ.. அதுவா.. மேடம் இன்னைக்கு
காலேஜ் அட்மிஷனுக்கு போறாங்க அதான்”.
யாழினி
ஆரணியை பார்த்து சோகமாக, “பாவம் ஆரி”.
“எதுக்கு?”.
“ஆமா அவ முகமே சரியில்ல பாரு.
எல்லாம் உங்களால தான். ஏன் இப்படி படிக்க சொல்லி அவளை போட்டு தொந்தரவு பண்றீங்க”.
“யாரு.. நாங்க தொந்தரவு பண்றோமா.
இது அவளுடைய ஆசை. இந்த படிப்பு தான் படிப்பேன்னு மேடம் ஒத்த கால்ல நிக்கிறாங்க.
நாங்க என்ன பண்றது. இப்போ பாரு, ம்ம்.. ஆரணி.. ஒருவேளை நீ கேக்குற டிபார்ட்மென்ட்
உனக்கு கிடைக்கலைனா என்ன பண்ணுவ”.
ஆரணி
அவசரமாக, “அடப்பாவி! போய் முதல்ல வாயை
கழுவு. நானே டென்ஷனா கிளம்பிட்டு இருக்கேன். இப்போ பார்த்து அபசகுணம் மாதிரி
கிடைக்காதுன்னு சொல்ற. உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா”.
“நீ ஏன் ஆரணி டென்ஷன் ஆகுற.
இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு என்ன பண்ண போற. பேசாமல வீட்டிலேயே ஜாலியா இருக்கலாம்ல”.
“வீட்ல.. ஜாலியா வா.. அதுவும்
இவங்க கூடவா” என்று தன் அம்மாவையும்,
பாட்டியையும் காட்டியவள், “இவங்க கூட ஜாலியா இருந்தா
என்னையும் இவங்கள மாதிரியே ஆக்கிடுவாங்க”.
மீரா, “நாங்க என்னடி பண்ணோம் உன்னை”.
“மாம்... வீட்டிலேயே இருந்துகிட்டு
சமைச்சுக்கிட்டு இப்படியே இருப்பதெல்லாம் ரொம்ப போர் மாம். என்னோட ட்ரீமே வேற.
நல்லா படிச்சு அண்ணா மாதிரி என்னோட ட்ரீம் கம்பெனியை நான் ஆசைப்பட்ட மாதிரி
ஸ்டார்ட் பண்ணனும்”.
இவர்களின்
பேச்சு வார்த்தைகள் அனைத்தையும் கவனித்தபடி இவர்களை நோக்கி வந்த அபிமன்யு, “ஆல் த பெஸ்ட் ஆரணி” என்றான்.
“தேங்க் யூ சோ மச் அண்ணா”.
“நீ டென்ஷன் ஆக வேண்டிய தேவையே
இல்லை. உனக்கு கண்டிப்பா நீ எதிர்பார்க்குற மாதிரி எல்லாம் நடக்கும்”.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. இப்போ தான்
நிம்மதியா இருக்கு. காலையிலேயே இந்த ஆரி வாயை வச்சுட்டான்”.
“ஓகே லீவ். கிளம்பு நானே உன்னை
காலேஜ்ல ட்ராப் பண்றேன்”.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. நான்
ரெடியா தான் இருக்கேன் போகலாம்”.
“என்ன பாத்துட்டு இருக்க. நீயும்
கிளம்பு”.
யாழினி
திகைப்பாக, “நானுமா..? நான் எதுக்கு”.
“படிக்க தான் மாட்டேன்னு
சொல்லிட்ட. அட்லீஸ்ட் காலேஜ் எல்லாம் எப்படி இருக்கும்னாவது வந்து பார்க்கலாம்ல.
சும்மா ஒரு டைம் பாஸ்க்கு”.
“ஓ..” என்ற படியே சிறிது நேரம் சிந்தித்தவள், “சரி” என்று ஒப்புக் கொண்டாள்.
பிறகு,
மூவரும் கிளம்பி காலேஜ்ற்கு செல்ல, ஆரணி எதிர்பார்த்தபடி அவளிற்கு கம்ப்யூட்டர்
சயின்ஸ் டிபார்ட்மெண்ட் கிடைத்தது.
அதே
மகிழ்ச்சியோடு, “அண்ணா நீங்க சொன்ன மாதிரியே
நடந்திடுச்சு. நான் ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்
டிபார்ட்மெண்ட் கிடைச்சிடுச்சு”.
“சூப்பர்”.
யாழினி,
“வாவ்! கங்கிராட்ஸ் ஆரணி. நீ
எங்களுக்கு எல்லாம் கண்டிப்பா ட்ரீட் கொடுக்கணும்”.
ஆரணி
மகிழ்ச்சியில் யாழினியைக் கட்டிக்கொண்டு சுற்றியவள், “குடுத்துட்டா போச்சு. நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன்
தெரியுமா”.
அபிமன்யு
யாழினியைப் பார்த்து, “உனக்கு இந்த காலேஜ்
பிடிச்சிருக்கா?”.
யாழினி
ஒரு முறை சுற்றி முற்றி பார்த்தவள், “நல்லா
தான் இருக்கு. அங்க பாருங்க எவ்வளவு பெரிய கேன்டீன்”.
“நான் காலேஜ் பத்தி கேட்டா,
கேண்டினை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க”.
“அதுவும் காலேஜ் குள்ள தான இருக்கு”.
“உன்கிட்ட கேட்டது என்னோட தப்பு
தான்”.
பிறகு,
வீட்டிற்கு செல்ல. அங்கே அனைவரிடமும் ஆரணி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள்.
இப்படியே
இரண்டு நாட்கள் கழிந்து விட, காலை அலுவலகம் செல்வதற்காக தயாராகி கீழே வந்த
அபிமன்யு யாழினியைப் பார்த்து, “என்ன.. ஆஃபீஸ் வர ஐடியாவே
இல்லையா. அதான் டுடேஸ் பிரேக் எடுத்துக்கிட்டல்ல. போதும் கிளம்பு”.
“சரி” என்றவள் அவனோடு கிளம்பி விட்டாள்.
அலுவலகத்தினுள்
நுழையும் போதே அபிமன்யுவிற்கு ‘குட் மார்னிங்’ சொன்னவர்கள் அனைவரும் யாழினிக்கும்
கூறினர்.
அதில்,
பிரியா மட்டும் யாழினியை ஏளனமாக பார்த்ததோடு குட் மார்னிங் கூறவில்லை. இதை யாழினி
கவனிக்காவிட்டாலும், அபிமன்யுவின் பார்வையில் இந்த விஷயம் தப்பவில்லை.
பிரியாவிடம்
எதுவோ சரி இல்லை என்று எண்ணியவன். என்ன என்று கண்டுபிடிக்க வேண்டி அவளை தன்
அறைக்கு அழைத்தான்.
அறையினுள்
நுழையும் போதே பிரியா, “மே ஐ கம் இன் சார்” என்று அனுமதி வாங்கியபடி உள்ளே
நுழைந்தாள்.
மீண்டும்
அதே ஏளன பார்வையும், நக்கல் சிரிப்பும் யாழினியை நோக்கி வீசினாள். அதை கவனித்த
அபிமன்யுவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சட்டென
தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “ஐ
ஹேவ் எ இம்போர்டண்ட் கால். நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க. இதோ வந்துடறேன்” என்று கூறிவிட்டு இருவருக்கும் தனிமையை
கொடுத்து அறையை விட்டு வெளியேறினான்.
யாழினி
தனிமையில் சிக்கும் சமயத்திற்காகவே காத்திருந்த பிரியா யாழினியிடம், “ஹலோ மேடம்.. எப்படி இருக்கீங்க” என்று நலம் விசாரித்தாள்.
யாழினி
பிரியாவின் கேள்விக்கு வெள்ளந்தியாக, “நான்
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என்று பதில் அளிக்க.
“பாத்தியா என் நிலைமையை” என்று நக்கலாக சிரித்தாள்.
யாழினி
எதுவும் புரியாமல் பிரியாவை பார்க்க.
பிரியா,
“என்னோட படிப்பு என்னனு உனக்கு
தெரியுமா. நான் எம்பிஏ கோல்ட் மெடலிஸ்ட். சாரி.. சாரி.. எம்பிஏனாலே உனக்கு என்னனு
தெரியாது. உன்கிட்ட போய் கோல்ட் மெடல் பத்தி எல்லாம் பேசிட்டு இருக்கேன் பாரு.
இவ்வளவு படிச்ச நான் ஆஃப்ட்ரால் ஸ்கூல் மட்டும் தான் படிச்சிருக்க உன்னை போய்
மேடம்னு கூப்பிடுற மாதிரி இருக்கு பாத்தியா என்னோட நிலைமை” என்று முகத்தை சுழித்தாள்.
யாழினிக்கு
பெரும் அவமானம் ஆகிப்போனது. அவமானத்தில் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.
“நான் கேட்கிறேன்னு தப்பா
நினைச்சுக்காத. உனக்கு படிப்பும் இல்லை, அறிவும் இல்லை எதை வச்சு சார் உன்ன
கல்யாணம் பண்ணார். அப்படி என்ன செஞ்சு அவரை மயக்கின”.
யாழினி
கோபமாக, “பார்த்து பேசுங்க. தேவையில்லாத
பேச்சு எல்லாம் என்கிட்ட வேண்டாம்”.
“ஓ.. உனக்கு கோபம் கூட வருமா..
வராதா பின்ன.. நீ தான் இந்த கம்பெனி ஓனரோட பொண்டாட்டியாச்சே.. ஆனா, உனக்கு ஒன்னு
தெரியுமா. இப்போ நீ இருக்க இடம் நான் இருக்க வேண்டியது”.
ப்ரியாவின்
வார்த்தையில் யாழினி ஸ்தம்பித்து விட்டாள், ‘என்ன கூறுகிறாள் இவள்’.
“என்ன முழிக்கிற. நான் என்ன
சொல்றேன்னு புரியலையா. அபிமன்யுவை கல்யாணம் பண்ணிக்குறதுக்கான முழு தகுதியும்,
திறமையும், அழகும் என்கிட்ட தான் இருக்கு. நீ எல்லாம் அவருக்கு கொஞ்சம் கூட மேட்ச்
ஆக மாட்ட. உன்னை போய் எப்படி அவர் கல்யாணம் பண்ணி இருக்கார். அது தான் என்னால
கொஞ்சம் கூட ஜீரணிச்சிக்கவே முடியல. அவர் எங்க.. நீ எங்க.. ச்ச..” முகத்தை திருப்பினாள்.
“அண்ட் ஒன் மோர் திங்,
இதுவரைக்கும் அபி இதை பத்தி உன்கிட்ட சொல்லி இருக்காரா என்னன்னு எனக்கு தெரியல.
நானும், அபியும் லவ் பண்றோம். எங்களுக்குள்ள ஒரு சின்ன மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்.
அதனால் நான் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு பேசாம இருந்தேன். என் மேல இருந்த
கோபத்தில் தான் அவர் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கார்”.
“என்ன உளறுற நீ. அப்படி எல்லாம்
எதுவும் கிடையாது”.
“பின்ன.. அவர் உன்னை விரும்பி
கல்யாணம் பண்ணிக்கிட்டாரா. உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணாரா?”.
“அவர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணல. ஆனா,
அவர் என்னை விரும்புனாருன்னு எனக்கு தெரியும்”.
“அது எப்படி.. உன்கிட்ட சொல்லாமலே
உன்னை விரும்புனாருன்னு சொல்ற”.
“எங்க வீட்ல எல்லார்கிட்டயும்
சொன்னார்”.
யாழினியின்
பதிலைக் கேட்டு சத்தமாக சிரித்த பிரியா, “ஆர் யூ ஜோக்கிங். நீ என்ன லூசா? அவர் உண்மையாவே உன்னை
விரும்பி இருந்தா.. உன்கிட்ட தான முதல்ல சொல்லி இருப்பார். உன் வீட்ல இருக்குறவங்க
எல்லாரையும் கூட்டம் கூட்டி, நான் உங்க பொண்ண விரும்புறேன்னு சொல்லிட்டு, கடைசி
வரைக்கும் உன்கிட்ட சொல்லாமலே இருப்பாரா. ஏதோ சிச்சுவேஷன் சரியில்லாம
இருந்திருக்கும். அதான் அப்படி பொய் சொல்லி இருப்பாரு. அவரும், நானும் தான் டூ
இயர்ஸா லவ் பண்றோம்”.
பிரியாவின்
வார்த்தை யாழினிக்குள் குழப்பத்தை கொடுக்க. பிரியாவிற்கோ யாழினியின் குழப்பமான
முகத்தை பார்க்கையில் திருப்தியாக இருந்தது.
குழம்பிய
குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும் என்று எண்ணிய பிரியா, “ரெடியா இரு. எப்போ வேணும்னாலும் நீ இந்த
இடத்தை விட்டு போக வேண்டியது வரலாம்”
என்று கூறி விட்டு வெளியேறி விட்டாள்.
யாழினியின்
மனதிற்குள் பிரியாவின் வார்த்தைகளே ஓடிக் கொண்டிருந்தது.
“இவ சொல்றதெல்லாம் எப்படி நம்ப
முடியும். அதுவும் அந்த சிடுமூஞ்சி லவ் பண்ணுச்சுன்னு சொல்றா. கொஞ்சம் கூட நம்புற
மாதிரியே இல்லையே.
இவள லவ் பண்ணி
இருந்தா, ஏன் என்னை விரும்பி கல்யாணம் பண்ணேன்னு எங்க வீட்டில் சொல்ல போறாரு.
ஒருவேளை, அன்னைக்கு அக்கா அப்படி பேசுனதால் சொல்லி இருப்பாரோ. அப்போ நிஜமாவே இவங்க
ரெண்டு பேரும் லவ் பண்றாங்களா.
இப்படி
தான் அன்னைக்கு ஷைலஜா வந்து சொன்னாங்க. இப்போ இந்த பொண்ணு வந்து சொல்றா. என்ன..
ஆளாளுக்கு.. இவரையே லவ் பண்றேன்னு சொல்றாங்க. அப்படி இவர் கிட்ட என்ன தான்
இருக்கு. நம்ம கண்ணுக்கு தான் எதுவும் தெரிய மாட்டேங்குது. சரி, எதுக்கு
தேவையில்லாம நாமலே யோசிச்சு யோசிச்சு குழப்பிக்கணும். பேசாம அவர்கிட்டயே
கேட்டுடுவோம்”.
பிரியா
வெளியே சென்ற உடனே அறைக்குள் நுழைந்த அபிமன்யு, யாழினியின் முகத்தில் யோசனையோடு
வந்து போகும் பல்வேறுபட்ட உணர்ச்சிகளை பார்த்து ரசித்தவாறு அப்படியே நின்று
விட்டான்.
தனக்குள்
சிந்தித்தவள் ஒரு முடிவோடு நிமிர்ந்து பார்க்க. அபிமன்யு இவளையே குறுகுறுவென
பார்த்தபடி மெல்லிய புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
அபிமன்யுவை
இங்கே எதிர்பாராத யாழினி திடுக்கிட்டு தன் நெஞ்சின் மீது கையை வைத்து தேய்த்தவாறு,
“உஃப்... கொஞ்சமாவது அறிவு இருக்கா
உங்களுக்கு.. இப்படி தான் பேய் மாதிரி வந்து பயமுறுத்துவீங்களா”.
“என்ன கேட்ட.. கம் அகைன்” என்று யாழினியை நோக்கி ஒரு அடி
முன்னெடுத்து வைத்தான்.
பதட்டமாக
எழுந்து நின்ற யாழினி, “சாரி.. சாரி.. ஏதோ டென்ஷன்ல
அப்படி பேசிட்டேன்”.
“ஆஃபிஸ் டைம்ல கேம்
விளையாடிக்கிட்டு இருக்க உனக்கு என்ன டென்ஷன் இருக்க போகுது”.
“ஏன் இருக்காது.. கல்யாணத்துக்கு
முன்னாடி வரைக்கும் டென்ஷன்னா என்னனு கேக்குற அளவுக்கு ஜாலியா இருந்தேன். எப்போ
உங்கள கல்யாணம் பண்ணேனோ.. அப்போலருந்து டென்ஷன் தான். ஒன்னு மாத்தி ஒன்னு ஏதாவது
ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு”
என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
யாழினியின்
பேச்சில் கோபம் துளிர்விட அபிமன்யு, “இப்போ
நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு என்ன நடந்தது?”.
யாழினி
கோபமாக, “உங்களை பத்தி எல்லா உண்மையும்
எனக்கு தெரிஞ்சிடுச்சு. வெளியில எல்லார்கிட்டயும் கோவமா இருக்கிற மாதிரி பேச
வேண்டியது. ஆனா பொண்ணுங்க கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுறீங்களா”.
அபிமன்யு
கோபமாக, “என்ன லூசு மாதிரி உளறிகிட்டு
இருக்க. என்ன உண்மை தெரிஞ்சிடுச்சு இப்போ”.
யாழினிக்கு
அபிமன்யுவின் கோபமான குரலில் அழுகை வந்துவிட, “பண்றதெல்லாம் பண்ணிட்டு என்கிட்ட கோபப்படுறீங்களா. போச்சு..
எல்லாம் போச்சு.. நானும் எங்க பக்கத்து வீட்டு பரமு அக்கா மாதிரி புருஷன் இல்லாம
தான் தனியா அம்மா வீட்டில் இருக்கணும் போலருக்கு” என்று கூறி ஒப்பாரி வைத்தாள்.
“ஸ்டுப்பிட்.. ஷெட்டப். ஏன் இப்படி
கத்துற. இது ஆஃபிஸ். யாருக்காவது கேட்டா என்ன நினைப்பாங்க”.
“யாருக்கும் தெரியாம தான இப்படி
எல்லாம் பண்றீங்க. வீட்ல ஷைலஜா அக்கா, இங்க பிரியா. இன்னும் இந்த மாதிரி எத்தனை
பேரு வந்து என்ன சொல்ல போறாங்களோ தெரியல”
என்றாள் விசுப்பிய படி.
“பிரியா என்ன சொன்னா?”.
“ஏன்.. எனக்கு எல்லா உண்மையும்
தெரிஞ்சிடுச்சுன்னு பயமா இருக்கா”.
“சரி, என் கூட வா” என்று கூறிவிட்டு அவளின் பதிலை
எதிர்பார்க்காமல், அவளின் கையைப் பிடித்து தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியே
சென்று விட்டான்.
கலங்கிய
கண்களுடன் கோபமாக அபிமன்யுவை பின்தொடர்ந்து செல்லும் யாழினியை பார்த்த
ப்ரியாவிற்கு உள்ளுக்குள் குதூகலமாக இருந்தது.
ப்ரியா,
‘பரவாயில்ல. நம்ம நினைச்ச
மாதிரியே எல்லாம் பர்பெக்ட்டா நடக்குது. சீக்கிரம் அபிமன்யு எனக்கு கிடைச்சிடுவார்’ என்று மனதிற்குள் நினைத்தபடி
புன்னகைத்தாள்.
அபிமன்யு
சாவகாசமாக சாரின் பின்னே சாய்ந்த படி தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு யாழினியைக்
கூர்மையாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அபிமன்யுவின்
பார்வையில் சற்று தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றி முற்றி
யாரேனும் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“என்ன திருதிருனு முழிச்சிட்டு
இருக்க. இப்போ சொல்லு. என்ன விஷயம்”.
யாழினி
அபிமன்யுவின் கூர் பார்வையில் சற்று தடுமாற்றத்துடன், “என்கிட்ட சொல்லாம நீங்க எப்படி பிரியாவை லவ் பண்ணலாம்”.
“ஓ.. அப்போ.. உனக்கு பிரச்சனை நான்
பிரியாவை லவ் பண்றது கிடையாது. உன்கிட்ட சொல்லாம பண்றது தான் பிரச்சனையா? சரி,
அப்போ இனிமே சொல்லிட்டு பண்றேன்”.
அபிமன்யுவின்
வார்த்தையில் அதிர்ச்சியான யாழினி மனதிற்குள், ‘அப்போ பிரியா சொன்னதெல்லாம் உண்மை தானா. இவரும் சேர்ந்து தான்
லவ் பண்றாரா’ என்று யோசித்தபடி.
“உங்களுக்கு எவ்வளவு தைரியம்
இருந்தா என்கிட்டயே பிரியாவை லவ் பண்றேன்னு சொல்றீங்க. அப்போ.. அப்போ.. வீட்ல
ஷைலஜா அக்கா சொன்னதும் உண்மை தானா”.
அபிமன்யு
யாழினியை மேலும் சீண்டி பார்க்க எண்ணியவன், “ஆமா. நான் அவங்க ரெண்டு பேரையுமே லவ் பண்றேன்”.
“அது எப்படி.. ஒரே ஆளு ரெண்டு பேரை
லவ் பண்ண முடியும்”.
“அது என்னோட பிராப்ளம். என்னால
முடியுது பண்றேன். உனக்கு என்ன வந்துச்சு”.
“இல்ல.. நீங்க பொய் சொல்றீங்க”.
“உனக்கு இப்போ என்ன தான் பிரச்சனை”.
“சரி, அவங்கள கல்யாணம் பண்ணாம, ஏன்
என்னை கல்யாணம் பண்ணிங்க?”.
“வெறி சிம்பிள். உன் பேமிலியை பழி
வாங்க தான் உன்னை கல்யாணம் பண்ணேன்”.
அபிமன்யுவின்
வார்த்தையில் யாழினியின் எண்ணம் எங்கெங்கோ செல்ல, என்ன கூறுவது என்று தெரியாமல்
அதிர்ந்து அமர்ந்திருந்தாள். யாழினியின் முகத்தருகே அபிமன்யு சொடக்கிட்டதும்
திடுக்கிட்டு நிமிர்ந்தவள்.
“அப்போ என்னை லவ் பண்றேன்னு ஸ்வேதா
கல்யாணத்துல எல்லார் முன்னாடியும் சொன்னீங்களே” என்றாள் யோசனையோடு.
“ஆமா.. உன்னையும் தான் லவ் பண்றேன்”.
“எப்படி ஒரு ஆள் மூணு பேரை லவ்
பண்ண முடியும்”.
“இப்போ நான் பண்ணிகிட்டு
இருக்கேன்ல அப்படி தான்”.
யாழினிக்கு
அபிமன்யுவின் பதில்கள் பெரும் கோபத்தை தர. எழுந்து நின்றவள், “என்னாலெல்லாம் உங்கள மாதிரி ஆளை லவ் பண்ண
முடியாது. நான் உங்களை டைவர்ஸ் பண்ண போறேன்”.
யாழினி
கூறிய கடைசி வாக்கியத்தை மட்டுமே கேட்டபடி இவர்களின் அருகில் வந்த பிரியாவிற்கு
முகம் கொள்ளா புன்னகை.
மனதிற்குள்,
“இவ்வளவு சீக்கிரம் டைவர்ஸ்
வரைக்கும் போகும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. தேன்க் காட்” என்று கடவுளுக்கு நன்றி செலுத்தியபடி, “ஹலோ சார்” என்று கூறியவாறு அபிமன்யுவிற்கு அருகில் இருக்கும்
இருக்கையில் அமர சென்றாள்.
அபிமன்யு
அவளின் எண்ணத்தை புரிந்த படி, “எஸ்.. டேக் யுவர் சீட்” என்று அவனுக்கு எதிரே இருக்கும்
இருக்கையை கை காட்ட. முகம் வாடி போய் எதிரே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
அபிமன்யுவிடம்
கோபமாக பேசிக் கொண்டிருந்த யாழினி பிரியாவை இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை.
யாழினியை
நோக்கி செடக்கிட்ட அபிமன்யு, “என்ன.. இப்படியே நின்னுகிட்டே
இருக்க போறியா.. வந்து உட்காரு” என்று தன் அருகில் இருக்கும்
இருக்கையை காட்ட. எதுவும் கூறாமல் அபிமன்யுவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அபிமன்யு
நேருக்கு நேராக ப்ரியாவை கூர்மையாக பார்த்தவன், “எனக்கு சுத்தி வளைச்சு பேசுறதெல்லாம் பிடிக்காது. யாழினி
கிட்ட என்ன சொன்ன?” என்று வெளிப்படையாக கேட்டான்.
அபிமன்யு
இப்படி நேருக்கு நேர் கேட்பான் என்று எதிர்பாராத பிரியா தடுமாற, “சார்.. அது வந்து..” என்று இழுத்தாள்.
அபிமன்யு
கோபமாக, “லுக் பிரியா.. உங்களுக்கும்,
எனக்கும் இருக்க ரிலேஷன்ஷிப் நீங்க என் கம்பெனியோட ஸ்டாஃப், நான் உங்களோட பாஸ்.
அவ்வளவு தான்! நீங்க ஏன் தேவையில்லாமல் என் வைஃப் கிட்ட தப்பான ரூமரை க்ரீயேட்
பண்ண ட்ரை பண்ணிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா..?”.
பிரியாவின்
ஒரு தலை காதலை பற்றி தெரிய வருமா...?
கருத்துகள்
கருத்துரையிடுக