அவனதிகாரம் -
அதிகாரம் – 56
ஆரியன்,
“என்ன ஆச்சு யாழினி. ஏன் இப்படி
ஓடி வர. அண்ணா எங்க?”.
யாழினி
மூச்சு வாங்க திணறியபடி, “ஆரி.. ஆரி.. சீக்கிரம் வா போகலாம்” என்று கூறியபடி ஆரியனின் கையை பிடித்து
இழுத்தாள்.
ஆரியனிற்கு
யாழினியின் பின்னால் வந்த இருவரையும் பார்க்கையில் ஏதோ சரியில்லை என்று தோன்ற.
“முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு.
யார் இவங்க ரெண்டு பேரும். எதுக்கு உன்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு வராங்க”.
“தெரியல” என்றாள் பதட்டமாக.
“ஹலோ.. யாரு நீங்க. என்ன வேணும்
உங்க ரெண்டு பேருக்கும். எதுக்காக இவ பின்னாடி இப்படி வரிங்க” என்று அந்த இருவரையும் பார்த்து
கேட்டான்.
இருவரில்
ஒருவன், “இது விஐபிங்களுக்கான ரிசார்ட்
ஏரியா. இந்த மாதிரி அடிக்கடி பொண்ணுங்க வந்து பிரச்சனை பண்ணுவாங்க சார். இந்த
பொண்ணு ரொம்ப நேரமா தனியா உட்கார்ந்து இருந்துச்சு. அதான் என்ன, ஏதுன்னு
கேட்டுகிட்டு இருந்தோம். கேட்டுட்டு இருக்கும் போதே ஓட ஆரம்பிச்சிடுச்சு.
நாங்களும் சந்தேகப்பட்டு பின்னாடியே ஃபாலோ பண்ணிக்கிட்டு வந்தோம்”.
ஆரியனோ
கோபமாக, “வாட் நான்சென்ஸ். இவங்க என்னோட
அண்ணி. என் அண்ணாவும் இவங்களும் தான் ஒன்னா வந்து இருக்காங்க. உங்க ரிசார்ட்க்கு
வந்த கஸ்டமர் கிட்ட இப்படி தான் பிஹேவ் பண்ணுவீங்களா” என்று எகிறினான்.
அதில்
பயந்து போன இருவரும், “சாரி சார். நாங்க மேடம் கிட்ட
விசாரிச்சோம். ஆனா, அவங்களுக்கு எந்த ரூம்னு கூட தெரியல. அதான்
சந்தேகப்பட்டுட்டோம்” என்றான் கைகளை பிசைந்தபடி.
“இருங்க.. இப்போவே உங்க
மேனேஜர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்றேன்”.
இருவரும்
பயந்தபடி, “சார்.. சார்.. ப்ளீஸ் சார்..
அப்படி எதுவும் பண்ணிடாதீங்க சார். எங்க வேலையே போயிடும். ஏதோ, தெரியாம
செஞ்சுட்டோம். இந்த ஒரு தடவை எங்கள மன்னிச்சிடுங்க சார்” என்று மாற்றி மாற்றி கெஞ்சவும்.
“பிரச்சனை வேண்டாம் ஆரி. நம்ம
வீட்டுக்கு போகலாம் வா” என்று கூறி கையைப் பிடித்து
இழுத்தாள் யாழினி.
அவளின்
கைகளின் நடுக்கமே கூறியது, அவள் எவ்வளவு பயந்து போய் இருக்கிறாள் என்று.
“சரி சரி... வீட்டுக்கு போகலாம்.
நீ டென்ஷன் ஆகாத. ஃப்ரீயா விடு”.
ஆரியன்
அவர்கள் இருவரையும் பார்த்து, “இதுதான் உங்களுக்கு ஃபர்ஸ்ட்
அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமே, இந்த மாதிரி நீங்க பிஹேவ் பண்றதை பார்த்தேன்னா
வேலையே போற மாதிரி பண்ணிடுவேன்” என்ற மிரட்டலுடன் அவர்களை விட்டான்.
இருவரும்
இவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட.
ஆரியன்
யாழியிடம், “சரி அண்ணா எங்க? நீ மட்டும்
எதுக்கு தனியா சுத்திக்கிட்டு இருக்க. உன்னை விட்டுட்டு பிசினஸ் விஷயமா எங்கேயாவது
வெளியில போயிட்டானா”.
அதற்கு
எந்த பதிலும் கூறாதா யாழினி, “வீட்டுக்கு போகலாமே ப்ளீஸ்.
எனக்கு இந்த இடமே பிடிக்கல”.
யாழினி
தன் கேள்வியை தவிர்ப்பதிலே இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்ட ஆரியன்
அபிமன்யுவை பற்றி மேலும் எந்த கேள்வியும் கேட்டு யாழினியை தொந்தரவு செய்யாமல்
விட்டு விட்டான்.
இவ்வளவு
நேரம் நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அபிமன்யு ஆரியனும், யாழினியும்
கிளம்புவதை பார்த்தவன். “ஒரு நிமிஷம்..” என்றான்.
இருவரும்
திரும்பி பார்க்க, தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி இவர்களை
நோக்கி வந்தான்.
ஆரியன்
அவசரமாக, “அண்ணா எங்க போன நீ. இவ்வளவு நேரம்
என்ன நடந்துச்சுன்னு தெரியுமா. யாரோ யாழினியை ஃபாலோ பண்ணிகிட்டு வந்தாங்க. பாவம்
ரொம்ப பயந்துட்டா. நல்ல வேலையா நான் இங்க வந்தேன். நீ எங்க இருந்த இவ்வளவு நேரம்” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே
போனான்.
அவனுடைய
கேள்விகள் எதையுமே சட்டை செய்யாத அபிமன்யு, யாழினியைப் பார்த்து, “எங்க போற?”.
யாழினி
கோபமாக முகத்தை தூக்கி வைத்தபடி, “வீட்டுக்கு..”.
“யாரோட வீட்டுக்கு?” என்றான் தன் புருவத்தை உயர்த்தி
கேள்வியாக.
இதற்கு
யாழினியிடம் பதில் இல்லை.
“சொல்லு.. யாரோட வீட்டுக்கு போற.
என் வீட்டுக்கா? இல்ல, உன் வீட்டுக்கா?”.
“நம்ம வீட்டுக்கு” என்றாள் தயக்கமாக.
அபிமன்யு
சிரித்தபடி, “நம்ம வீட்டுக்கா? நம்ம வீடுனு நீ
என் வீட்டையா சொல்ற. உனக்கு தான் என்னை பிடிக்காதே. விருப்பம் இல்லாம தான என் கூட
இருக்க. நான் தான் இனி உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன், உன் இஷ்டப்படி வாழ்ந்துகோனு
சொல்லிட்டேனே. அப்புறம் எதுக்கு எங்க வீட்டுக்கு வர”.
“அண்ணா நீ பேசுறதெல்லாம் ரொம்ப
தப்பு. என்ன பேசுற நீ. நம்ம வீடுனா அது அவளுக்கும் வீடு தான. நம்ம கூட வராம, வேற
எங்க போவா?”.
“ஜஸ்ட் ஷெட் அப் ஆரியன்.
இவங்களுக்கு என் கூட இருக்க விருப்பம் இல்லைனு சொல்லிட்டு தான் வெளியில வந்தாங்க.
இப்போ நம்ம வீட்டுக்கு வந்தா என் கூட தான இருந்தாகணும். பிடிக்காதவங்களை நம்ம
வீட்டுக்கு கூப்பிட்டு போய் கட்டாயப்படுத்தி இருக்க வைக்கிறதுல எனக்கு
விருப்பமில்லை. அதனால, அவங்க எங்க இருக்கனும்னு நினைக்கிறாங்களோ அங்க போகட்டும்” என்றான் விடாமல்.
இவர்கள்
இருவருக்குள்ளும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிப் போனான் ஆரியன்.
அபிமன்யு,
“என்ன.. இன்னும் இங்கேயே
நின்னுகிட்டு இருக்க கிளம்பு”.
அபிமன்யு
வார்த்தைகளில் யாழினிக்கு கோபமும், அழுகையும் ஒன்றாக வர கலங்கிய கண்களுடன் கோபமாக,
“போ.. போனா.. எங்க போறது? நான்
எங்கேயும் போக மாட்டேன்”.
அபிமன்யு
அவளையே கூர்மையாக பார்த்தபடி, “ஏன்?”.
“எப்படி எங்க வீட்டுக்கு போறது.
எங்க அக்கா ஓடிப்போனதுக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ நானும் ஒரு காரணம் ஆயிட்டேன்.
இப்போ எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு நான் அங்க போறது. அவ கேக்குற கேள்விக்கு
எல்லாம் என்கிட்ட பதில் இல்லை. நான் அங்க போக மாட்டேன்”.
யாழினியின்
பதிலிலும், அபிமன்யு எதிர்பார்த்த பதில் வராததாலும் சற்று ஏமாற்றத்துடன், “அப்போ.. எனக்காக நீ எங்க வீட்டுக்கு
வரலையா?” என்றான் கூர்மையாக பார்த்தபடி.
இவர்களின்
வாக்குவாதத்தில் டயர்ட் ஆன ஆரியன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து விட்டான்.
யாழினிக்கோ அபிமன்யுவின் கேள்விகள் தலை சுற்றுவது போல இருந்தது.
சற்று
நேரத்திற்கு முன்பு வரை கோபமாக இருந்தவன். இப்பொழுது அன்பாக இருப்பது போல்
பேசுகிறான். இதில், எது நிஜம்.
ஏன்
இப்படி மாற்றி மாற்றி பேசுகிறான் என்று குழப்பமாக பார்த்தாள். ஆனால், அவனின் கோபமே
யாழினியின் அன்பு கிடைக்காததால் தான் என்பதை மறந்து விட்டாள்.
யாழினி கோபத்தில்
வேண்டுமென்றே, “அது என்னோட அத்தை வீடு. நான்
எப்போ வேணும்னாலும் வருவேன். உங்களுக்காக மட்டும் தான் நான் அந்த வீட்டுக்கு
வரணும்னு அவசியம் இல்லை. உங்கள தவிர அந்த வீட்டில் நிறைய பேர் இருக்காங்க”.
அபிமன்யுவும்
விடாமல், “கரெக்ட் தான். ஆனா.. நீ இப்போ
அங்க வரர்து என்னோட மாமா பொண்ணா இல்லையே.. என்னோட பொண்டாட்டியா தான வர போற.. என்னை
பிடிக்காம எல்லாம் நீ அந்த வீட்டுக்கு வர வேண்டாம்”.
மீண்டும்
ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான் அபிமன்யு.
ஆரியன்
மனதிற்குள், ‘என்னடா இது.. இப்போதைக்கு
முடியாது போலருக்கு. திரும்ப திரும்ப ஒரே இடத்தில் ரவுண்டு அடிச்சுக்கிட்டு
இருக்காங்க. சரி, நம்ம போய் ஜூஸ் குடிச்சிட்டு வந்து தெம்பா இந்த சண்டையை
பார்ப்போம்’ என்று எழுந்து சென்று விட்டான்.
அவன்
செல்வதை கூட கவனிக்காமல் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்.
அபிமன்யுவின் மனதில் இருக்கும் எண்ணத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் யாழினிக்கு
இல்லை.
அதை
உணர்ந்திருந்தால் இருவருக்கும் நடுவில் வாக்குவாதமே ஏற்பட்டிருக்காது.
அபிமன்யுவிற்கோ அதை உணரும் அளவிற்கு பொறுமை இல்லை. எப்படியாவது அவளின் அன்பை பெற
வேண்டும் என்று நினைத்தானே தவிர, தான் காட்டும் அன்பு அவளிடம் முழுமையாக சென்று
சேர்கிறதா என்பதை சிந்திக்காமல் விட்டு விட்டான்.
அனைத்தையும்
அதிரடியாகவே செய்து கொண்டிருந்த அபிமன்யு, அன்பையும் அதிரடியிலே காட்டிக்
கொண்டிருந்தான். முன்பை காட்டிலும் ஓரளவு யாழினி அபிமன்யு விஷயத்தில்
பக்குவப்பட்டு இருந்தாலும், அவனின் அதிரடியான அன்பை உணரும் பக்குவம் இன்னும்
அவளுக்கு வரவில்லை. இவனை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் யாழினிக்கு தலை
சுற்றியது.
யாழினிக்கு
மிக முக்கியமான ஒரு விஷயம் என்றால், அது அபிமன்யுவின் மனதில் தன் குடும்பத்தாரை
பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது தான்.
எனவே,
அவன் வழியிலே சென்று அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு
அபிமன்யுவிடம், “நீங்க தான சொன்னீங்க. அவங்க
எல்லாம் கெட்டவங்க. என்னைக்கா இருந்தாலும் என்னை வேண்டாம்னு விட்டுடுவாங்கன்னு.
இப்போ நீங்களும் அதை தானே பண்றீங்க. என்னை
திரும்பவும் அங்கேயே போக சொன்னா நான் எப்படி போறது. சரி, இப்போ உங்களுக்கு என்ன
வேணும். நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாது அவ்வளவு தான. சரி.. நான் வரமாட்டேன்.
உங்க அம்மாவுக்கு வள்ளியம்மை பாட்டியும், கிருஷ்ணமூர்த்தி தாத்தாவும் கிடைச்ச
மாதிரி, எனக்கும் யாராவது கிடைப்பாங்க. நான் வேற எங்கேயாவது போறேன்” என்று கூறிவிட்டு வெளியேற சென்றாள்.
அவசரமாக
யாழினியின் கையை பற்றிய அபிமன்யு, “எங்கேயாவது
போறேன்னா.. எங்க டி போக போற?” என்றான் பதட்டம் கலந்த கோபமாக.
“நான் எங்க போன உங்களுக்கு என்ன.
அதான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டீங்கல்ல. யாருக்குமே என்னை
பிடிக்கல, நான் எங்க வீட்டுக்கு போனாலும் பிரச்சனை. உங்க வீட்டுக்கு வந்தாலும்
பிரச்சனை. அப்போ நான் எங்க போறது.. வேற எங்கேயாவது தான போகணும்” என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.
யாழினியின்
வார்த்தைகள் அபிமன்யுவை அசைத்துப் பார்க்க.
அவளைப்
பற்றி இருந்த கையில் இறுக்கத்தை கொடுத்தவன், “நீ எங்கேயும் போக வேண்டாம்! என் கூடவே இரு..”.
“தேவையில்லை.. அப்புறம் என்
வீட்டுக்கு ஏன் வந்த.. அப்படி இப்படினு பேசுவீங்க. எதுக்கு தேவையில்லாம பிரச்சனை”.
அபிமன்யு
அதட்டலாக, “சொன்னா கேட்க மாட்டியா நீ. அதான்
எங்கேயும் போக வேண்டாம்னு சொல்றேன்ல. நான் தான உன்னை பார்த்துக்குறேன்னு கல்யாணம்
பண்ணி கூட்டிட்டு வந்தேன். நீ என் கூட தான் இருக்கணும் வீட்டுக்கு போகலாம்” என்று கூறிவிட்டு அவளின் கையை பிடித்து
பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றான்.
இவர்களின்
சண்டையை காண தெம்பாக சிற்றுண்டி உண்டு விட்டு வந்த ஆரியன், இவர்கள் இருவரும்
கைகோர்த்தபடி கிளம்புவதை பார்த்து, ‘என்னடா
இது.. அதுக்குள்ள சண்டை முடிஞ்சிடுச்சா.. இவங்க பேசுன பேச்சுக்கு ரெண்டு பேரும்
தனித்தனியா போவாங்கன்னு பார்த்தா.. கையை புடிச்சுகிட்டு ஜோடியா போறாங்க. இதுக்கு
தான் இந்த கல்யாணமானவங்க பிரச்சனையில நம்ம மூக்கை நுழைக்க கூடாதுன்னு சொல்றது.
ச்சச...’ என்று தலையை இரு பக்கமும்
ஆட்டியவாறு அவர்களை பின்தொடர்ந்தான்.
“அண்ணா நில்லுங்க. நானும்
வந்துடுறேன்” என்று குரல் கொடுத்த படி
ஓடினான்.
யாழினி,
‘கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல..
சைக்கோ.. சைக்கோ.. ரூமை விட்டு வெளியில போனு துரத்திட்டு. இப்போ வீட்டுக்கு வானு
கூப்பிட்டு போறார். நான் லூசா இல்ல இவர் லூசானு தெரியலையே. இப்படியே போனா, கொஞ்சம்
நாள்ல நான் கண்டிப்பா லூசு ஆயிடுவேன்’
என்று வாய்க்குள் முணுமுணுத்த படி வந்தாள்.
ஆரியன்
யாழினி அருகில் வந்து, “எப்படி உங்களுக்குள்ள சண்டை
சமாதானம் ஆச்சு. நான் போகும் போது அப்படி அடிச்சுக்கிட்டு இருந்தீங்க”.
“நாங்க சண்டை போடுறது
இருக்கட்டும். நீ எங்க போன. எனக்கு ஹெல்ப் பண்ண வந்துட்டு, இப்படி விட்டுட்டு
போறியே.. இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்கா”.
“உங்க சண்டை முடியும்னு பார்த்தா
முடியுற மாதிரி தெரியல. அதை பாக்குறதுக்கு எனக்கு தெம்பு வேணாமா. அதான் போய்
லைட்டா சாப்பிட்டு வந்தேன்”.
“என்ன சாப்பிட்டு வந்தியா. நான்
இன்னும் சாப்பிடாம இருக்கேன் தெரியுமா. இப்படி தனியா போய் சாப்பிட்டு வரியே.
அண்ணன், தம்பி எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கீங்க” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஆரியன்
மனதிற்குள், ‘என்ன இவ.. சம்பந்தம் இல்லாம
பேசுறா.. சாப்பிட்டது ஒரு குத்தமா’
என்று எண்ணியவாறு அமைதியாக இவர்களை பின் தொடர்ந்தான்.
அனைவரும்
வீடு வந்து சேர நள்ளிரவை நெருங்கி விட்டது. பயண கலைப்பில் ஆரியனும், யாழினியும்
காரிலேயே தூங்கி விட.
ஆரியனை
அடித்து எழுப்பிய அபிமன்யு, “போடா.. உள்ள போய் படு”.
அபிமன்யுவின்
எதிர்பாராத அடியில், “ஆ..!” என்று கத்தியபடி எழுந்த ஆரியன் தன் முதுகை தேய்த்தபடி, “என்னண்ணா! வர வர வயலன்ஸ் ரொம்ப அதிகமா
இருக்கு” என்று கேட்டுக் கொண்டே
வீட்டிற்குள் சென்று விட்டான்.
யாழினியின்
தூக்கம் கலையாதவாறு அபிமன்யு அவளை தன் இரு கரங்களில் ஏந்தியவன், தன் அறையை நோக்கி
நடந்தான். இதனை பார்த்த ஆரியனிற்கு நெஞ்சு வலியே வருவது போல் இருந்தது.
“நானும் தானடா தூங்கிகிட்டு
இருந்தேன். என்னை மட்டும் அடிச்சு எழுப்புன. அவ என்ன குழந்தையா.. தூக்கிக்கிட்டு
போற” என்று முணுமுணுத்தபடி அறைக்கு
சென்று விட்டான்.
தன்
அறைக்கு வந்த அபிமன்யு கட்டிலில் யாழினியைக் கிடத்தியவன்.
அவளின்
முகத்தை மறைத்தபடி இருந்த முடி கற்றையை ஒதுக்கி விட்டவாரே, “சாரி பேபி டால்.. உன்னை நான் ரொம்ப
கஷ்டப்படுத்துறேன்ல. எனக்கு புரியுது.. ஆனா, எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியல. என்னோட லவ்வை நீ புரிஞ்சுக்காம
நடந்துக்கும் போதெல்லாம் எனக்கு கோவத்துல என்ன பண்றேன்னே தெரியாம என்னென்னமோ
பேசிடுறேன். உன்னை ஹர்ட் பண்ற மாதிரி நடந்துக்கிறேன்.
ஐ அம்
சாரி.. பட், இனிமே நமக்குள்ள எந்த பிராப்ளமும் வராது. நீ தான் இப்போ என்னை
புரிஞ்சுக்க ஸ்டார்ட் பண்ணிட்டல்ல. உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் தப்பானவங்கன்னு
உனக்கே தெரிஞ்சிடுச்சு. இனிமே நமக்குள்ள எந்த பிரச்சனையும் வராது” என்று கூறிவிட்டு அவளின் நெற்றியில்
சலுகையாக ஒரு முத்தத்தையும் வைத்தான்.
மறுநாள்
விடியல் அனைவருக்கும் அழகானதாக அமைய. யாழினிக்கோ அதிர்ச்சிகளுடன்
விடிந்தது. கலைப்பின் காரணமாக தாமதமாக எழுந்த யாழினி மணியை பார்க்க, அது
ஒன்பது என்று காட்டியது.
‘இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே’ என்று அவசரமாக எழுந்தவள். தன் காலை
கடன்கள் அனைத்தையும் முடித்துவிட்டு கீழே செல்ல எத்தனிக்க. அபிமன்யு கையில் ஒரு
பேப்பருடன் அறையினுள் நுழைந்தான்.
அவனை
கடந்து செல்ல முற்பட்ட யாழினியை தடுத்த அபிமன்யு, “இந்தா இதில் சைன் பண்ணிட்டு போ”.
யாழினி
குழப்பமாக, “என்ன இது?”.
“ம்ம்.. அப்ளிகேஷன்”.
“அப்ளிகேஷனா.. எதுக்கு”.
“உனக்காக கீழே பாட்டி சூடா காபி
போட்டு வச்சிட்டு வெயிட் பண்றாங்க. சூடு ஆறுறதுக்குள்ள குடிக்கணும்ல, இதில் சைன்
பண்ணிட்டு போ”.
“இதை முதல்ல சொல்லி இருக்க
வேண்டியது தான. காபி ஆறிட போகுது” என்று அவசர அவசரமாக அபிமன்யு
கையில் இருந்த பேப்பரை வாங்கி கையெழுத்திட்டவள், “இந்தாங்க புடிங்க”
என்று அவனிடம் கொடுத்துவிட்டு கீழே ஓடி விட்டாள்.
“பரவாயில்லையே இந்த ட்ரிக்ஸ்
இவகிட்ட நல்லா தான் ஒர்க் ஆகுது. இனிமே இதையே யூஸ் பண்ணிக்கலாம். நான் கூட சைன்
வாங்குறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன். பட், இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிடுச்சு” என்று எண்ணியவாறு தன் அலுவலகம் நோக்கி
சென்று விட்டான்.
தன்னுடைய
காலேஜ் அட்மிஷனிற்காக தான் அபிமன்யு தன்னிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறான்
என்பதையே அறியாத யாழினி கீழே அனைவரிடமும் வாயாடிக் கொண்டிருந்தாள்.
ஏனெனில்,
நேற்றைய நிகழ்விற்கு பின் வீடே அமைதியாகிவிட்டது. அதை சரி செய்யும் பொருட்டு
யாழினி அனைவரையும் சகஜ நிலைக்கு மாற்றிக் கொண்டிருந்தாள்.
மீரா, “நீ நிஜமாவே சந்தோஷமா இருக்கியா யாழினி.
கல்யாணத்துல என்ன என்னமோ நடந்து போச்சு. அதெல்லாம் உனக்கு வருத்தம் இல்லையா”.
“எனக்கு என்ன வருத்தம் அத்தை.
நீங்க எல்லாம் என்னை நல்லா பாத்துக்குறீங்க. நான் ஏன் வருத்தப்படனும். எங்க அப்பா
எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தா கூட இந்த மாதிரி ஒரு குடும்பம்
அமைந்திருக்குமானு தெரியல. எதேர்ச்சையா எல்லாம் நடந்திருந்தாலும், நல்லதா தானே
நடந்திருக்கு”.
வள்ளியம்மை
பாட்டி, “அதுக்கு இல்ல யாழினி. உனக்கு
விருப்பம் இருக்கானு கூட தெரியாம இப்படி கல்யாணம் பண்ணிட்டோம். அதான்..” என்று வருத்தமாக இழுத்தார்.
அவரின்
கைகளை பிடித்த யாழினி, “எனக்கு எந்த வருத்தமும் இல்ல
பாட்டி. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சு” என்றாள் சிரித்த முகமாக.
மகேந்திரன்,
“மீரா.. அவளே சந்தோஷமா தான்
இருக்கா. நீங்க எல்லாம் பேசி பேசி அவளை வருத்தப்பட வைக்காதீங்க. நம்ம வீட்டில்
ஆரணி எப்படியோ அப்படி தான் யாழினியும். அது அவளுக்கே புரியுது. உங்களுக்கு
புரியலையா”.
“அதுக்கு இல்லைங்க. அபிமன்யு மனசுல
இப்படி எல்லாம் எண்ணம் இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல. அவன் மனசுல இருக்க
எண்ணம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, யாழினியையே பொண்ணு கேட்டு இருக்கலாமே.
எதுக்காக தேவை இல்லாம இதுக்கு நடுவுல கயல்விழியை இழுத்து, தேவையில்லாத பிரச்சினை
தான”.
மகேந்திரன்,
“நடக்கணும்னு இருந்திருக்கு
நடந்திருக்கு. திரும்ப திரும்ப பழசை பத்தி பேசுறதால எதுவும் மாறப் போறது இல்ல.
சரி, ஆரணி காலேஜ்க்கு அப்ளிகேஷன்லாம் போட்டுடியா”.
“எஸ் டாட்... 2, 3 காலேஜ்க்கு
அப்ளை பண்ணி இருக்கேன். பட், நான் கேட்ட குரூப் கிடைக்குமானு தான் டவுட்டா இருக்கு”.
“கண்டிப்பா கிடைக்கும் கவலைப்படாத.
நீ நல்ல மார்க்ஸ் தான ஸ்கோர் பண்ணி இருக்க”.
யாழினி
மனதிற்குள், ‘ஆரணி நம்மள மாதிரி, ஸ்வேதா மாதிரி
இல்ல போலருக்கு. நல்லா படிக்கிறா.. படிப்பு விஷயத்துல இவ கூட நம்மளால செட் போட
முடியாது’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்
போதே.
மகேந்திரன்,
“யாழினி.. உனக்கும் காலேஜ்ல
அப்ளிகேஷன் போட்டுடலாமா”.
மகேந்திரனின்
கேள்வியில் யாழினிக்கு தூக்கி வாரி போட்டது.
“மாமா...” என்று பதட்டமாக ஆரம்பித்தவள். பிறகு, சூழ்நிலையை உணர்ந்து
சிரித்தபடி, “ஹி.. ஹி... அதெல்லாம் தேவையில்ல.
அதான் கல்யாணம் ஆயிடுச்சே, இனிமே.. படிச்சு.. நான் என்ன பண்ண போறேன்”.
“ஏன் மா அப்படி சொல்ற. உனக்கு
படிக்கணும்னு விருப்பம் இருந்தா சொல்லு. கல்யாணம் ஆனா என்ன. எப்போ வேணும்னாலும்
படிக்கலாம்”.
‘அய்யோ இவர் விடமாட்டார் போலருக்கே’ என்று மனதிற்குள் நொந்து போனவள். “இல்ல நான் அத்தை கூட வீட்ல தான் இருப்பேன்” என்று மீராவுடன் நின்று கொண்டாள்.
மீரா
அவளின் தலையை தடவியவாறு, “சரி நீ உனக்கு என்ன தோணுதோ அதை
பண்ணு. இன்னும் 2 டேஸ் டைம் எடுத்துக்கோ. நல்லா யோசிச்சு சொல்லு. காலேஜ்
படிக்கணும்னு ஆசை இருந்தா சேர்ந்துக்கலாம் சரியா”.
ஆரியன்,
“அம்மா நீங்க நினைக்கிற மாதிரி
எல்லாம் உங்க மருமக கிடையாது. அவ படிக்காமல் ஒபி அடிக்கலாம்னு பார்க்கிறா” என்று யாழினியை கிண்டல் செய்ய, யாழினி
அவனை பார்த்து முறைத்தாள்.
வள்ளியம்மை
பாட்டி, “சும்மா இருடா. பாவம்.. அவளை ஏன்
கிண்டல் பண்ற. அவளுக்கு விருப்பம் இல்லைனா படிக்கணும்னு அவசியம் இல்ல. அதான்
அவளுக்கும் சேர்த்து அபி படிச்சிருக்கான்ல”.
“அதான.. உங்க அக்கா பேத்தியாச்சே..
நீங்க விட்டுக் கொடுப்பீங்களா”.
இவர்கள்
இங்கே பேசிக் கொண்டிருக்கும்போதே அபிமன்யு யாழினிக்கு காலேஜில் அட்மிஷன் போட்டு
விட்டான் என்பதை அறியாத குடும்பத்தினர், யாழினிக்கு சிந்தித்து சொல்ல அவகாசம்
கொடுத்தனர்.
உண்மை
தெரிந்தால் யாழினி நிலை என்னவாக இருக்கும்..?
கருத்துகள்
கருத்துரையிடுக