அவனதிகாரம் - 60
அதிகாரம் – 60
கயல்விழி,
“பாத்தியாம்மா எதுக்கு
வந்தாங்கன்னு கேட்கிறார். இதெல்லாம் நமக்கு தேவையா”.
“நீ கொஞ்ச நேரம் சும்மா இரு கயல்” என்று அதட்டினார்.
மரகதம்
பாட்டி, “இங்க பாரு கயல், உனக்கு இங்க
இருக்க விருப்பம் இருந்தா இரு. இல்லைனா மாப்பிள்ளையை கூப்பிட்டுகிட்டு நீ நம்ம
காரிலேயே ஊருக்கு கிளம்பு. நாங்க பொறவு வரோம்” என்று கூறிவிட்டு கயல்விழியின் பதிலை எதிர்பாராமல் யாழினி
நோக்கி சென்றவர்.
“இப்போ என்ன தான் பிரச்சனை. நீங்க
பொறுமையா துணி எடுங்க. நாங்க அப்படியே இந்த இடத்தை சுத்தி பார்த்துகிட்டு
இருக்கோம். நாங்களும் இந்த மாதிரி கடைக்கு எல்லாம் வந்தது இல்லைல”.
யாழினி
தன் தந்தையை பார்க்க, அவரும் சம்மதமாய் தலையசைக்கவும், “சரி பாட்டி” என்று ஒப்புக் கொண்டாள்.
பின்பு,
ஒருபுறம் ஆரணி அவளுக்கு துணிகளை எடுத்து குவிக்க. மறுபுறம், அபிமன்யு யாழினிக்காக
பார்த்து பார்த்து துணிகளை எடுத்தான்.
அதை
பார்த்த யாழினியின் குடும்பத்தினர் அனைவருக்கும் மனநிறைவாய் இருக்க. கயல்விழிக்கு
மட்டுமே புகைச்சலாக இருந்தது.
“எவ்வளவு அதிகமான விலையில் துணி
எடுக்கிறார். இவ்வளவு விலையில நம்மளே இதுவரைக்கும் துணி போட்டது கிடையாது.
யாழினிக்கு நல்ல வாழ்வு தான்” என்று முணுமுணுத்தவாறு
இருந்தாள்.
மகேஷ்
கயல்விழியிடம், “என்ன கயல் ஏதோ சொல்லிக்கிட்டே
இருக்க”.
“ஒன்னும் இல்லங்க. அங்க
பாத்தீங்களா எவ்வளவு காஸ்ட்லியா டிரஸ் வாங்கி தரார்” என்று அபிமன்யுவை கண்களால் காட்டியபடி கூற.
“நம்மகிட்ட என்ன இருக்கோ அதை வச்சு
நாம சந்தோஷமா வாழனும் கயல். அவர்கிட்ட இருக்கு வாங்கி தரார்”.
கயல்விழி
மகேஷின் பதிலில் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அனைத்து
வேலைகளும் முடிந்து கடையிலிருந்து கிளம்புகையில் சுப்பிரமணி மீராவிடம், “சரி மா. அப்போ நாங்க கிளம்புறோம். ஊருக்கு
எல்லாரும் ஒரு நாள் வாங்க”.
“என்ன அண்ணா! கடைக்கு வந்துவிட்டு
அப்படியே கிளம்புறீங்களே வீட்டுக்கு வராம”.
“இல்லைமா புள்ளையை பாக்கணும் போல
இருந்துச்சு அதான் வந்தோம். சரி, கடையில் இருக்கீங்கன்னு சொன்னதால் அப்படியே
இங்கேயே வந்து பார்த்துட்டு போயிடலாம்னு வந்தோம். அதான் பாத்துட்டோமே, நாங்க
இப்படியே கிளம்புறோம்மா”.
“அண்ணா அன்னைக்கு உங்க வீட்டில்
நடந்ததெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு தான் நீங்க இப்படி பேசுறீங்களா. இப்படியே
கிளம்புனா அது நல்லா இருக்காதுண்ணா. வீட்டுக்கு வந்துட்டு போங்க. என்ன தான்
பிரச்சனை வந்தாலும், போனாலும் உங்க பொண்ணு வீட்டுக்கு நீங்க வராமல் போயிடுவீங்களா”.
அதற்கு
சுப்ரமணி பதில் எதுவும் கூறாமல் அபிமன்யுவை பார்க்க. அவன் நீங்கள் வந்தால் எனக்கு
என்ன, வரவில்லை என்றால் எனக்கு என்ன என்பது போல் நின்று கொண்டிருந்தான்.
தன்
தந்தையின் எண்ணத்தை புரிந்து கொண்ட யாழினிக்கு, ‘ஐயோ நான் பேசுறதுக்கே விட மாட்டேங்குறார். இப்போ இவர் சொல்லாம
அப்பா வீட்டுக்கு வர மாட்டார். இவரை எப்படி அவங்களை வீட்டுக்கு வாங்கனு கூப்பிட
வைக்கிறதுன்னு தெரியலையே. ஒவ்வொரு தடவையும் இவங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு
முழிக்கிறதே நமக்கு பொழப்பா போச்சு’
என்று சலித்தபடி வெளியே அபிமன்யுவின் கையை சுரண்டினாள்.
‘நோ வே. இந்த தடவை நீ என்ன
செஞ்சாலும் நான் ஏமாற மாட்டேன். உன்னை பார்க்கவே மாட்டேன்’ என்று நினைத்தபடி வேறெங்கோ பார்த்தபடி நின்றான்.
யாழினிக்கு
தான் அழைப்பது இவனுக்கு தெரியவில்லையோ என்று தோன்ற, “மாமா” என்று அழைத்தபடி அவன் கையை
சுரண்டினாள்.
“இவளுக்கு வேலை ஆகணும்னா மட்டும்
மாமா.. மாமானு கூப்பிடுவா. இந்த தடவை நீ என்ன பண்ணாலும் நான் அசரமாட்டேன்” என்று முணுமுணுத்தபடி தன் செல்போனை
எடுத்து அதில் தீவிரமாக எதையோ பார்ப்பது போல் பாவனை செய்தான்.
யாழினி
இது வேலைக்காகாது என்று எண்ணியவள் அனைவரின் முன்பும் சத்தமாக, “சரிங்க மாமா, நான் அப்பாகிட்ட
சொல்லிடுறேன்” என்று அபிமன்யுவை பார்த்து
கூறிவிட்டு.
தன்
தந்தையிடம், “அப்பா.. உங்க எல்லாரையும் மாமா
வீட்டுக்கு வந்துட்டு கிளம்ப சொல்றாங்க. அன்னைக்கு நடந்ததை எதுவும் மனசுல வச்சுக்க
வேண்டாமாம். அவங்க நேரடியா சொல்ல கூச்சப்படுறாங்க போலருக்கு” என்று சிரித்தபடி கூறி சமாளித்தாள்.
ஆரியன்,
“என்னது மாமாவா! இது எப்போலருந்து” என்றான் ஷாக்காக.
ஆரணி, “எனக்கும் அதே டவுட்டு தான் டா!”.
வள்ளியம்மை
பாட்டி யாழினியின் சமாளிப்பை உணர்ந்தவர், “அவ புருஷனை அவ எப்படி கூப்பிட்டா உங்களுக்கு என்ன.
அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். இதெல்லாம் நோண்டிக்கிட்டு இருக்க கூடாது” என்று சிறியவர்களை அங்கிருந்து
அகற்றிவிட்டவர்.
சுப்ரமணியை
பார்த்து, “அதான் அபி இவ்வளவு தூரம்
கூப்பிடுறான்ல வீட்டுக்கு எல்லாரும் வந்துட்டு போங்கப்பா” என்று அழைத்தார்.
அபிமன்யு
கோபத்தில் யாழினியை முறைத்துக் கொண்டிருக்க. அதையெல்லாம் கண்டு கொள்ளும்
மனநிலையில் அவள் இல்லை எப்படியாவது இவர்களை சமாதானம் செய்ய வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்தாள்.
சுப்ரமணி,
“சரி” என்று ஒப்புக்கொள்ள.
அனைவரும்
வீடு நோக்கி புறப்பட்டனர்.
யாரும்
அறியாத வண்ணம் யாழினியின் கையைப் பிடித்து பின் இழுத்த அபிமன்யு பல்லை கடித்த படி
கோபமாக, “என்னடி நினைச்சுட்டு இருக்க நீ.
யாரை கேட்டு இப்படி எல்லாம் செய்யுற. நான் உன்கிட்ட சொன்னேனா இவங்களை வீட்டுக்கு
கூப்பிடுன்னு எதுக்கு பொய் சொன்ன”.
“எதுவா இருந்தாலும் வீட்டுக்கு
போய் பேசிக்கலாம். எல்லாரும் பாக்குறாங்க”.
தாங்கள்
இருக்கும் சூழலை உணர்ந்த அபிமன்யு அனைவருக்கும் தாங்கள் காட்சி பொருளாக ஆக
வேண்டாம் என்று எண்ணி, அவளின் கையை விடாமல் அவளையும் தன்னுடன் சேர்த்து அழைத்துக்
கொண்டு புறப்பட்டு விட்டான்.
வீட்டிற்குள்
சென்றதும் ஆரணியும், ஆரியனும் யாழினியின் இரு கைகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு
தோட்டத்து பக்கம் சென்று விட்டனர்.
“என்ன பண்றீங்க ரெண்டு பேரும்.
விடுங்க கையை எல்லாரும் வந்திருக்காங்கல்ல”.
இவர்கள்
செல்வதை பார்த்த கயல்விழி இவர்களை பின்தொடர்ந்து தோட்டத்திற்கு வந்தாள்.
ஆரணி, “அதெல்லாம் இருக்கட்டும் அப்புறம்
பாத்துக்கலாம். என்ன நடக்குது உனக்கும் அண்ணாவுக்கும் நடுவுல. இவ்வளவு நாள் அண்ணா
உன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு தானே இருந்தாங்க. இப்போ என்ன நீ அவரை மாமானு
கூப்பிடுற. அவரும் எதுவும் சொல்லாம அமைதியா நிக்கிறார்”.
யாழினி
சிரித்தபடி சமாளிக்க.
ஆரியன்,
“இந்த மழுப்புற வேலை எல்லாம் எங்க
கிட்ட வேண்டாம். இவங்க ரெண்டு பேரும் இப்போ கொஞ்சம் நாளா சரியே இல்லை ஆரணி. நம்ம
தான் சரியா கவனிக்காம விட்டுட்டோம். இவகிட்ட நம்ம அண்ணா ஆரம்பத்துல எவ்வளவு
கோபப்பட்டார். இப்போ எப்படி மாறிட்டார் பாத்தியா. இவளுக்காக ஷாப்பிங் பண்ண கடைக்கு
வரார். இவ என்னடானா மாமானு கூப்பிடுறா. என்ன பண்ணி எங்க அண்ணனை உன் கைக்குள்ள
வச்சிருக்கன்னு ஒழுங்கா சொல்லிடு”.
“என்ன உளறுற உங்க அண்ணாவை போய்
யாராவது கைக்குள்ள வச்சிருக்க முடியுமா. அவர் எவ்வளவு பெரிய ஆளு”.
ஆரியன்,
“அதை தான் நானும் கேட்கிறேன்.
அவ்வளவு பெரிய ஆளை நீ எப்படி இவ்வளவு ஈஸியா மாத்திட்ட”.
ஆரணி, “எனிவேஸ், உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா
பார்க்க எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு யாழ்” என்று யாழினியை அணைத்துக் கொண்டாள், “ஐ அம் சோ ஹாப்பி ஃபார் யூ போத். யூ கைஸ்
ஆர் மேட் ஃபார் ஈச் அதர்”.
“நம்ம அண்ணனை இவ இப்படி மாத்தி
இருக்கா நீ கோபப்படாம சந்தோஷப்படுற. இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு
இருந்தா தானே நமக்கு நல்லா எண்டர்டைன்மென்ட்டா இருக்கும்”.
“ஏன் டா உனக்கு டைம் பாஸ் பண்ண
நாங்க தான் கிடைச்சோமா” என்று வெளியே அவனை திட்டியவள்.
மனதிற்குள், ‘நான் சொன்ன பொய்க்கு என்ன பண்ண
போறாரோ... தனியா சிக்கும் போது தான் எனக்கே தெரியும். அது தெரியாம இவங்க ரெண்டு
பேரும் நாங்க ஏதோ ஒன்னு சேர்ந்துட்ட மாதிரி பேசுறாங்க. சரி, இப்படியே மெயின்டைன்
பண்ணிப்போம்’.
ஆரியன்,
“சரி சரி.. என்ன இருந்தாலும் நீ
என்னோட அண்ணனோட வைஃப். சந்தோஷமா இருந்துட்டு போங்க” என்று கூற.
மூவரும்
ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து சிரித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்க்கும் பொழுது
கயல்விழிக்கு ஏனோ பிடிக்கவில்லை. தனக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை யாழினிக்கு
அமைந்துள்ளது என்று தோன்றியது. கயல்விழி தன்னுடைய நாத்தனாரை தன் அருகிலேயே சேர்க்க
மாட்டாள்.
ஒரே
பெண் பிள்ளை என்பதால் அவளின் மாமியார் வீட்டில் அனைவரும் அவளுடைய நாத்தனாரை பாசமாக
நடத்துவது கயல்விழிக்கு சிறிது பொறாமையாக தான் இருக்கும்.
அதனால்
அவளுடன் ஒட்டாமல் தள்ளியே இருப்பாள். அவளே வலிய பேச வந்தாலும் இவள் கேட்பதற்கு
மட்டும் பதில் கூறிவிட்டு நகர்ந்து விடுவாள். இப்பொழுது, யாழினி அவளுடைய நாத்தனார்
உடன் தோழி போல் பேசுவது கயல்விழிக்குள் மேலும் பொறாமையை தூண்டியது.
இவர்கள்
இங்கே பேசி சிரித்தவாறு இருக்க. இவர்களின் பின்னே, “இங்க என்ன நடக்குது?” என்ற அபிமன்யுவின் குரலில் மூவரும் கப்சிப் என்று
ஆகிவிட்டனர்.
ஆரணி, “ஒன்னும் இல்லைண்ணா. சும்மா தான்
பேசிக்கிட்டு இருந்தோம்”.
“சரி, நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம்
உள்ள போங்க. நா இவகிட்ட கொஞ்சம் பேசணும்”.
யாழினிக்கு
இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கியது. மாட்டப் போறோம் என்று பதறியவள்.
ஆரணியும்,
ஆரியனும் அங்கிருந்து புறப்பட. அவர்களோடு தானும் தப்பிக்க முற்பட்டவளை கையைப்
பிடித்து இழுத்து தன் அருகில் நிற்க வைத்துக் கொண்டான்.
அவர்கள்
சென்றவுடன் அபிமன்யு, “என்ன நினைச்சிட்டு இருக்க நீ உன்
மனசுல. உன் இஷ்டத்துக்கு உங்க வீட்டில் என்னென்னமோ சொல்ற. அதுவும் உங்க வீட்டு
ஆளுங்களை நான் எங்க வீட்டுக்கு கூப்பிட்டேன்னு சொல்ற. உனக்கு எவ்வளவு திமிரு” என்றான் அடி தொண்டையில்.
அபிமன்யுவின்
குரலில் யாழினிக்குள் சற்று படபடப்பு ஏற்பட, “சாரி” என்றாள் மெல்லிய குரலில்.
“பண்றது எல்லாம் பண்ணிட்டு சாரியா...
சாரி... எல்லாத்துக்கும் சாரி சொல்லி சரி பண்ணிட முடியாது. நான் சொல்லாததை
சொன்னேன்னு சொல்லி உன் வீட்டு ஆளுங்களை மொத்தமா இங்க கொண்டு வந்தல்ல. அதே மாதிரி
இனிமே நான் என்ன சொல்றேனோ அது தான் நீ கேட்கணும். காட் இட்” என்று கூறிய பின் அவளின் பதிலை
எதிர்பாராமல் அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடு கூடத்திற்கு சென்றான்.
அபிமன்யு,
“அம்மா, பாட்டி உங்க
எல்லார்கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லணும்”.
இவன்
புறம் திரும்பிய மீரா, இவன் யாழினியின் வீட்டு ஆட்களை ஏதேனும் கூறிவிடுவானோ என்ற
பதட்டத்துடன், “என்ன அபி எதுவா இருந்தாலும்
அப்புறமா பேசிக்கலாம்” என்றார் சமாளிப்பாக.
“இல்ல மாம். நீங்க பயப்படுற மாதிரி
எதுவும் கிடையாது. எல்லாம் ஹாப்பி நியூஸ் தான்”.
அபிமன்யுவின்
வார்த்தையில் அனைவரும் மகிழ்ச்சியாக பார்க்க. யாழினி பதட்டமாக அபிமன்யுவை
பார்த்தாள். நமக்கு தெரியாம என்ன குட் நியூஸ்னு தெரியலையே என்று நினைத்தபடி.
மீரா, “குட் நியூஸா! என்னப்பா அது?”.
“அதை உங்க மருமகளே சொல்லுவா”.
யாழினி
திருதிருவென விழித்தபடி, ‘அடப்பாவி! என்ன விஷயம்னே தெரியல.
என்னை இப்படி கோர்த்து விடுறானே. ஏதோ பெருசா செய்ய போறான்னு மட்டும் தெரியுது.
ஆனா, என்னனு தான் தெரியல. சரி, எதுவாயிருந்தாலும் எப்படியாவது சமாளிச்சிடு யாழினி.
இது என்ன உனக்கு முதல் தடவையா’ என்று தன்னை தானே தேற்றிக்கொண்டு
நின்றாள்.
அனைவரின்
கவனமும் யாழினி புறம் திரும்ப.
“அவ உங்ககிட்ட எல்லாம் எப்படி
சொல்றதுன்னு வெட்கப்படுறா போலருக்கு. நானே சொல்றேன்”.
அனைவரும்
எதிர்பார்ப்போடு அபிமன்யுவை பார்க்க.
யாழினி
குழப்பத்துடனும், பதட்டத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“யாழினி காலேஜ்ல ஜாயின் பண்ணி
இருக்கா”.
அனைவருக்கும்
மகிழ்ச்சியாக இருந்தாலும், நம்ப முடியவில்லை.
யாழினிக்கோ
பெரும் அதிர்ச்சி. தான் கேட்ட விஷயம் உண்மை தான் என்று ஏற்றுக்கொள்ள முடியாமல்
அபிமன்யுவை அதிர்ந்த பார்வை பார்த்தாள். யாழினியின் பார்வையில் ஏதோ சரி இல்லை
என்று அனைவருக்கும் தோன்ற.
வள்ளியம்மை
பாட்டி, “என்ன சொல்ற அபி நிஜமாவா? யாழினி
எங்க கிட்ட இதை பத்தி எதுவுமே சொல்லலையே”
என்றார் சந்தேகமாக.
“அப்ளை பண்ணி டென் டேஸ் ஆகுது
பாட்டி. ஃபோர் டேஸ்ல காலேஜ் ஓபன் பண்ண போறாங்க. கன்ஃபார்ம் ஆனதுக்கு அப்புறம்
சொல்லலாம்னு தான் சொன்னேன். உங்களுக்கும் சர்ப்ரைஸா இருக்கும்ல”.
ஆரியன்,
“வாவ் அண்ணா! செம்ம சர்ப்ரைஸ். இதை
நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. சூப்பர் யாழினி” என்று யாழினிக்கு கைகுலுக்கியவன், “எந்த காலேஜ்ல ஜாயின் பண்ண போற?” என்றான் கேள்வியாக.
யாழினி
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல்
திருதிருத்தப்படி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அபிமன்யு,
“ஆரணி ஜாயின் பண்ணி இருக்க காலேஜ்ல
தான் ஆரி”.
ஆரணி, “நிஜமாவா அண்ணா. என்கிட்ட கூட சொல்லவே
இல்லையே. அப்போ இனிமே நானும் யாழும் டெய்லி ஒன்னா காலேஜ் போக போறோமா ஜாலி” என்று குதூகலமானாள்.
யாழினிக்கு
தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உறைந்து நின்று
விட்டாள். இப்போது என்ன செய்வது.. என்ன செய்ய முடியும்..
இவர்களிடம்
இல்லை என்றும் கூறமுடியாது. வசமாக அபிமன்யுவிடம் சிக்கி விட்டோம் என்று
எண்ணியவளிற்கு வார்த்தைகளே எழவில்லை. தான் எப்படி.. அதுவும் கல்லூரிக்கு...
கயல்விழி,
“என்ன யாழினி இப்படி பாக்குற..
உனக்கே இந்த விஷயம் இப்போ தான் தெரியும் போலருக்கு” என்றாள் சந்தேக பார்வையுடன்.
கயல்விழியின்
கேள்வியில் சுதாரித்த யாழினி, “ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம் இல்ல.
அட்மிஷனுக்கு நானும் தான் கூட போயிருந்தேன். அப்புறமா சொல்லிக்கலாம்னு தான்
யார்கிட்டயும் சொல்லல”.
கயல்விழி
அதே சந்தேக பார்வையுடன், “அப்படியா! உனக்கு தான் படிக்க
விருப்பம் இல்லையே.. அப்புறம் எப்படி திடீர்னு காலேஜ்ல ஜாயின் பண்ண?”.
அபிமன்யு,
“ஜாயின் பண்றதும், பண்ணாததும்
அவளுடைய விருப்பம். உங்களுக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல”.
மரகதம்
பாட்டி, “ஏய் கயலு, அவ எவ்வளவு சந்தோஷமான
விஷயத்தை சொல்லி இருக்கா. அவளுக்கு வாழ்த்து சொல்லாம எதுக்கு இப்படி தேவையில்லாம
கேள்வி கேட்டுகிட்டு இருக்க. அவ எதுக்காக இந்த முடிவு எடுத்திருந்தாலும்
படிக்கணும்னு அவ எடுத்த முடிவு நல்ல முடிவு தானே”.
மகேஷ், “ஆமா கயல். பாட்டி சொல்றது சரி தான். நீ
ஏன் இந்த விஷயத்துல தேவையில்லாம கேள்வி கேக்குற”.
ஷைலஜா, “இப்போ இவ படிக்கிறது தான் ரொம்ப முக்கியமா
மாம். இதெல்லாம் ஒரு விஷயம்னு கூட்டம் கூடி பேசிகிட்டு இருக்காங்க”.
விசாலாட்சி,
“நீ வா ஷைலு. இவங்களுக்கு எல்லாம்
வேற வேலை இல்ல” என்றபடி அறையனுள் சென்று
விட்டார்.
சுப்பிரமணி,
“ரொம்ப சந்தோஷம்மா. நல்ல படியா படி”.
பிறகு,
அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை யாழினிக்கு தெரிவிக்க. வேறு வழி இன்றி இன்முகமாக
அனைத்தையும் ஏற்றுக்கொண்டாள்.
பிறகு,
சிறிது நேரம் இருந்துவிட்டு அனைவரும் ஊருக்கு கிளம்புகையில் லட்சுமி யாழினியின்
கையில் ஒரு பையை கொடுத்து, “இந்தாமா இது உனக்காக தான்
வாங்கிட்டு வந்தோம்” என்றார்.
யாழினி
அதை ஆவலோடு வாங்கி பிரித்தபடி, “என்னம்மா இது?”.
லட்சுமி,
“உன்கிட்ட பேசாம மனசுக்கு ரொம்ப
கஷ்டமா இருக்கு. அதான் அப்பாகிட்ட சொல்லி உனக்கு ஒரு ஃபோன் வாங்கி தர சொன்னேன்”.
கயல்விழி
மனதிற்குள், “ஃபோனா... என்கிட்ட கூட தான் போன்
இல்ல. ஆனா, என்கிட்ட பேசணும்னு யாருக்குமே தோணலையா. அப்படி இவ மட்டும் என்ன
பண்ணிட்டானு இப்படி கவனிக்கிறாங்க”.
அனைவரும்
யாழினியிடம் காட்டும் அன்பால் கயல்விழிக்கு பொறாமை குணம் தலைதூக்க தொடங்கியது.
தன்
வாயை அடக்க அரும் பாடுபட்டும் முடியாமல் கயல்விழி, “என்னமா இது? அவளுக்கு மட்டும் புது போன். என்கிட்ட கூட தான்
ஃபோன் இல்ல. உனக்கு எனக்கு வாங்கி தரணும்னு தோணலையா”.
கயல்விழியின்
பேச்சு மகேஷுக்கு அனைவரின் முன்பும் அவமானமாக இருந்தது.
மகேஷ், “அத்தை நீங்க எல்லாம் பேசிட்டு வாங்க.
நாங்க காரில் வெயிட் பண்றோம்” என்றபடி கயல்விழியின் கையை
பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.
அபிமன்யு
கோபமாக, “என்ன இதெல்லாம்.. என்னால என்
பொண்டாட்டிக்கு ஒரு ஃபோன் கூட வாங்கி தர முடியாதுன்னு நினைச்சிட்டீங்களா. யார்
கேட்டா உங்க கிட்ட இப்போ இதெல்லாம்”
என்றான் சீற்றமாக.
யாழினி
மேல்படிப்பு படிக்க சம்மதிப்பாளா...?
இதில்
வெல்லப் போவது யார்...?
கருத்துகள்
கருத்துரையிடுக