அவனதிகாரம் - 66

 

 

அதிகாரம் – 66

 

மீரா தனக்குத் தெரிந்து இதுவரை அபிமன்யு இப்படி மனம் விட்டு சிரித்து அவர் பார்த்ததே இல்லை. ஏதோ ஒரு இறுக்கத்துடன் பரபரப்பாகவும், சிடுசிடுப்பாகவுமே பார்த்து பழகியவருக்கு இந்த அபிமன்யு புதியவன்..

 

இமைக்க மறந்து தன் மகனின் சிரித்த முகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் மற்றவர்களும் கூட அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஆனால், யாழினிக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அவ்வப்பொழுது மெல்லிய சிரிப்புடன் அபிமன்யுவை பார்த்திருக்கிறாள். ஆனால், இப்படி வாய்விட்டு சிரித்து பார்ப்பது இதுவே முதல் முறை என்றாலும் அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

 

அபிமன்யு தன்னை தானே கிண்டல் செய்து சிரிக்கிறான். அந்த கோபத்தில் இதை கவனிக்க தவறிவிட்டாள். அபிமன்யுவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு அறையில் இருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்து பார்க்க. அவருக்குமே இது பெரிய ஆச்சரியம் தான்.

 

கிருஷ்ணமூர்த்தி மனதிற்குள், அபிமன்யு இப்படி சிரிக்க மாட்டானே. என்ன செஞ்சாங்கன்னு தெரியலையே. இந்த அளவுக்கு சிரிக்கிறான்.

 

அறையினுள் ஷைலஜா விசாலாட்சியிடம், மாம் அபி சிரிக்கிற மாதிரி சவுண்ட் கேக்குதுல்ல. வாங்க போய் என்னனு பார்ப்போம். இவ்வளவு சத்தமா அபி சிரிச்சு நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்று ஆவலாக எழுந்து வெளியே ஓட எத்தனித்தவளின் கையை பிடித்து தடுத்த விசாலாட்சி, அவன் சிரிச்சா உனக்கு என்ன.. சிரிக்கலைனா உனக்கு என்ன.. நீ ஆரியனை மட்டும் பார்த்தா போதும். அபியை இல்ல.. உன்கிட்ட பலமுறை சொல்லிட்டேன் ஷைலு. திரும்ப திரும்ப நீ தேவை இல்லாம இந்த அபி பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாம ஆரியனை மட்டும் பாரு.

 

ஷைலஜா, மாம் ப்ளீஸ்.. நீங்க சொன்னீங்களேனு அந்த ஆரியன் பின்னாடி போய் நான் பலமுறை அவமானப்பட்டுட்டேன். அவன் என்னை நோஸ் கட் பண்ற மாதிரி பேசுறான் மா. அபி கூட இந்த அளவுக்கு பேசுனது கிடையாது. அபி எப்போவாவது தான் என்னை இன்சல்ட் பண்ற மாதிரி பேசுவான்.

 

மத்த நேரத்துல இக்னோர் பண்ணிட்டு போயிடுவான். பட், ஆரியன் அப்படி கிடையாது. நான் எப்போ அவன் கிட்ட போனாலும், என்னை இன்சல்ட் பண்ணுறான் மா. யாரு இருக்காங்க இல்லைனு பார்க்க மாட்டேங்குறான்‌. எல்லார் முன்னாடியும் என்னை இன்சல்ட் பண்ற மாதிரி பேசுறான். எனக்கு அவனை பிடிக்கல மா.

 

அடிச்சு பல்லை கழட்டிடுவேன் ஷைலு இன்னொரு தடவை நீ இப்படி பேசுனா. உன் மேல நல்ல இம்ப்ரஷன் வர மாதிரி நீ தான் நடந்துக்கணும். இப்படி மத்தவங்களை குறை சொல்லிக்கிட்டே காலத்தை ஓட்டாத.

 

ஷைலஜா சோர்வாக கட்டிலில் சென்று அமர்ந்தவள், இது எதுவுமே வேண்டாம். ஏன் நீங்க உங்க அண்ணன் பசங்களை தான் நான் கட்டனும்னு அடம் பிடிக்கிறீங்க.

 

லூசு மாதிரி பேசாத ஷைலு. சுத்திப்பாரு இந்த ரூமை. கெஸ்ட் ரூமே எப்படி ரிச்சா இருக்குன்னு பாரு. உன் அப்பாவை நான் விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க ரிலேடிவ் தான் அவர். ஆனா, எங்களுடைய வசதியை காப்பாத்துற அளவுக்கு அவருக்கு திறமை இல்ல.

 

எல்லாத்தையும் செலவு பண்ணி ஆடம்பரமான வாழ்க்கையில் அழிச்சிட்டார். இப்போ இருக்க கொஞ்ச நஞ்ச வசதியை வச்சுக்கிட்டு உனக்கு இந்த மாதிரி நல்ல வசதியான இடத்துல மாப்பிள்ளை பார்க்க முடியுமா வெளியில. என் அண்ணன் பசங்களையே நீ கட்டினா சொந்தத்தில் கட்டின மாதிரியும் இருக்கும். நல்லா வசதியான மாப்பிள்ளை கிடைச்ச மாதிரியும் இருக்கும். அதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற.

 

ஷைலஜா, நீங்க சொல்றதெல்லாம் எனக்கும் புரியுது மாம். அதுக்காக தான் நீங்க சொல்றபடி எல்லாம் கேட்டு நானும் நடந்துகிட்டேன். முதலில் அபியை கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க. நானும் அவனை விரும்பினேன். ஆனா, அவன் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான்.

 

இப்போ ஆரியனை லவ் பண்ண சொல்றீங்க. சரின்னு நானும் ஆரியன் பின்னாடி தான் போனேன். ஆனா, அவனும் என்னை இக்னோர் பண்றான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாம். நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லாத ஆளா மாம். யாருமே என்னை கண்டுக்க மாட்டேங்குறாங்க. எனக்கு ரொம்ப டிப்ரஸ்டா இருக்கு. இந்த ஃபேமிலியே வேண்டாம்னு தோணுது மாம்.

 

ஆம், ஆரம்பத்தில் பணத்திற்காக தன் தாயின் சொல் பேச்சை கேட்டு அபியை விரும்பிய ஷைலஜா, அவனுக்கு திருமணம் முடிந்ததும் தன் தாயின் அறிவுரைப்படி ஆரியனை விரும்ப தொடங்கினாள்.

 

ஆனால் அவனுமே இவளை கண்டுகொள்ளாமல் நிராகரிக்கவும், இவளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது.

 

இப்பொழுது ஷைலஜாவின் மனதிற்குள் யாருமே இல்லை. அபியும் கிடையாது, ஆரியனும் கிடையாது. தன் தாய்க்காக ஆரியனின் பின்னால் சுற்றுகிறாளே தவிர, அவளின் மனதிற்குள் ஆரியனும் கிடையாது. அபி மேல் முன்பிருந்த கொஞ்ச நஞ்ச காதலும் அவனின் திருமணத்திற்கு பிறகு முற்றிலுமாக போய்விட்டது.

 

இருந்தும், யாழினி அபியை விட்டு சென்று விட்டாள் அபியையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற காரணமும் அவளின் தாய் தான்.

 

ஏனெனில், அபியை விட ஆரியன் பொது இடங்களில் ஷைலஜாவை அவமானப்படுத்துவதால் அவளுக்கு ஆரியனிற்கு அபியே மேல் என்று தோன்றிவிட்டது.

 

தன் தாய்க்கு யாரேனும் ஒரு அண்ணன் மகனை கட்ட வேண்டும் அவ்வளவு தானே. அது அபியாக இருந்தால் என்ன, ஆரியனாய் இருந்தால் என்ன. ஆரியனுக்கு அபியே மேல்.

 

திட்டுவானே தவிர, அனைவரின் முன்பும் அசிங்கப்படுத்த மாட்டான். எனவே, யாழினி சென்றால் அபியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று யாழினியிடம் அப்படி கேட்டாளே தவிர, அவளின் மனதிற்குள் அபியின் மீதும் எந்த ஒரு காதல் உணர்வும் கிடையாது.

 

தன் மகளின் மனதை புரிந்து கொள்ளாமல் அவளை கஷ்டப்படுத்துகிறோம் என்று உணராமலே செய்து கொண்டிருக்கிறார் விசாலாட்சி.

 

அவருக்கு தேவை வசதியான வாழ்க்கை. அதை தன் அண்ணன் மகன்கள் மூலமாக அடைய விரும்பியே இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார். தான் இவ்வளவு தூரம் கூறியும் தன் தாய் தன் மனதை புரிந்து கொள்ளாமல் அவரின் சுயநலத்திலேயே இருக்கிறாரே என்பதை எண்ணி ஷைலஜாவின் மனம் நொந்து போனது.

 

எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறி விட்டாள். வெளியே வந்தவளின் கண்ணில் பட்டது அபிமன்யு யாழினியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் காட்சி தான்.

 

யாழினியை பார்த்த ஷைலஜாவுக்குமே சிரிப்பு எழ யாழினியிடம், வாட் இஸ் திஸ் யாழினி? என்றாள் சிரிப்பினோடு.

 

யாழினி, மானம் போகுதே. சாமி கும்பிட்டது ஒரு குத்தமா. இப்படி குடும்பமா பார்த்து சிரிக்கிறாங்க என்று எண்ணியபடி, ஹி.. ஹி.. ஒன்னும் இல்ல. சும்மா தான் என்று சமாளித்தாள்.

 

கிருஷ்ணமூர்த்தி, நல்லா பாரு அபி. இப்போ நீ இவளை பார்த்து சிரிக்கிற மாதிரி தான் வெளியில் எல்லாரும் உன்னை பார்த்து சிரிக்கிறாங்க. எல்லாத்துக்கும் காரணம் இவ தான். இப்படி எல்லாம் இவ பிஹேவ் பண்ணா உன்னை எப்படி வெளியில் மதிப்பாங்க என்று கிடைக்கும் சந்தர்ப்பத்தில் யாழினியைப் பற்றி தவறாக பேசினார்.

 

அபி, தாத்தா, இப்போ இவ என்ன தப்பு பண்ணிட்டானு நீங்க இவளை பிளேம் பண்ணுறீங்க.

 

மீரா, அப்பா அவ ஒன்னும் தப்பான விஷயம் எதுவும் பண்ணலையே.

 

கிருஷ்ணமூர்த்தி, எல்லாரும் இவளை தலையில் தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறீங்க. ஒரு நாள் எல்லாரும் அவமானப்பட்டு நிப்பீங்க இவளால். அப்போ தெரியும் நான் சொன்னதெல்லாம் உண்மைனு என்று கோபமாக கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.

 

யாழினிக்கு முகம் வாடிவிட்டது.

 

வள்ளியம்மை பாட்டி யாழினியிடம், அவர் கிடக்குறார் விடு மா. உனக்கு தான் அவரை பத்தி தெரியும்ல. வயசாகிடுச்சுல அதான் இப்படி ஏதாவது பேசிகிட்டு இருக்கார்.

 

ஆரியன், நீங்க ரொம்ப சின்ன வயசா பாட்டி என்று கிண்டல் செய்ய.

 

வள்ளியம்மை, ஏன்டா எனக்கு என்ன அவ்வளவு வயசா ஆயிடுச்சு என்று இருவரும் மாற்றி மாற்றி வளவளத்துக் கொண்டிருந்தனர்.

 

யாழினி மீராவிடம், நான் ரூமுக்கு போறேன் அத்த என்று கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.

 

அபிமன்யு அறைக்கு வரும் பொழுது யாழினி சோகமே உருவமாக தன் முகத்தை கழுவி விட்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்.

 

அறைக்குள் நுழைந்தவன் சற்று இலகுவான உடைக்கு மாறி தன்னை சுத்தம் செய்துவிட்டு யாழினியின் அருகில் வந்து அமர்ந்தான், என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்படி டல்லா இருக்க.

 

ஒன்னும் இல்ல.

 

தாத்தா பேசுனதை நினைச்சு கவலைப்படுறியா.

 

அதற்கு யாழினி எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்க.

 

அவருக்கு உங்க பேமிலியை பிடிக்காது. அதனால உன்கிட்டயும் அதே மாதிரி நடந்துக்குறார். போக போக உன்னுடைய கேரக்டரை புரிஞ்சுப்பாரு. அவரும் மாறுவாரு. நீ ஏன் கவலைப்படுற.

 

அதுக்கு மட்டும் இல்ல. ஒருவேளை அவர் சொன்ன மாதிரி என்னால உங்களுக்கு அவமானம் ஆயிடுச்சுனா.

 

அபிமன்யு புரியாத பார்வை பார்த்தபடி, என்ன சொல்ற நீ. உன்னால எனக்கு என்ன அவமானமாக போகுது.

 

யாழினி தலை குனிந்தவாறு மெதுவான குரலில், எனக்கு ரொம்பலாம் படிப்பு வராது. பாஸ் பண்றதே கஷ்டம். இப்போ காலேஜ்ல வேற சேர்த்து விட்டுட்டீங்க. அங்க போய் நான் சரியா படிக்காம பெயில் ஆயிட்டா. அப்புறம் உங்க தாத்தா சொன்ன மாதிரி என்னால உங்க எல்லாருக்கும் அவமானம் ஆயிடாதா.

 

அபிமன்யு யாழினியின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன், நான் இருக்க வரைக்கும் நீ எதுலையும் ஃபெயிலாக விட மாட்டேன். உனக்கு நான் சொல்லி கொடுக்குறேன் போதுமா.

 

நீங்க சொல்லிக் கொடுத்தாலும் நான் நல்லா படிக்கணும்ல. எனக்கு படிப்புல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.

 

இங்க பாரு யாழினி. முதல்ல உன்னோட தாட்ஸை மாத்து. பொண்ணுங்கனா கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை பெத்துக்கிட்டு, வீட்டோட இருக்கணும்னு உன் மனசுல நல்லா பதிஞ்சிருக்கு. அதனால தான் உனக்கு படிப்பு மேல இன்ட்ரஸ்ட் வர மாட்டேங்குது.

 

படிப்பை நீ ஒரு விஷயமாவே நினைக்க கூட மாட்டேங்குற. ஆனா, நீ நினைக்குற மாதிரி கிடையாது. பொண்ணுங்களுக்கும் வெளியுலகம் தெரியணும். படிப்பறிவு கண்டிப்பா வேணும். ஒரு குடும்பத்தையே மேனேஜ் பண்ற பொண்ணுக்கு படிப்பறிவு ரொம்ப முக்கியம் யாழினி.

 

படிக்கிறது வேலைக்கு போவதற்காக மட்டும் கிடையாது. உன்னோட அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் தான். அதனால கண்டதையும் யோசிக்காத. உனக்கு படிப்புல என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னை கேளு நான் உனக்கு பண்றேன். என் தாத்தா சொல்றதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்குற. ஆனா, நான் சொல்றதை கேட்க மாட்டியா.

 

யாழினியின் தலை தானாக சரி என்று ஆடியது.

 

குட்! கண்டதை யோசிச்சு மனசை குழப்பிக்காம ஃப்ரீயா விடு. காலேஜ் டேஸ் நம்மளுடைய லைஃப்லையே ரொம்ப மெமரபில் டேஸா மாறும். நிறைய நியூ பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. நீ கண்டிப்பா என்ஜாய் பண்ணுவ பாரு.

 

அப்போ உங்களுக்கும் உங்க காலேஜ் லைஃப்ல மறக்க முடியாத விஷயங்கள் நிறைய நடந்திருக்கா.

 

நிறைய நடந்திருக்கு என்ற உடனே அவனின் முகம் ஒரு நிமிடம் கடுமையாக மாற.

 

யாழினி, என்ன ஆச்சு?.

 

அபிமன்யு பழைய நினைவுகளில் இருந்து மீண்டவன், ஒன்னும் இல்ல. காலேஜ் லைஃப் பத்தி கேட்டல. எனக்கு காலேஜ்ல நிறைய பொண்ணுங்க ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க.

 

யாழினி கலகலவென சிரித்தவள், சும்மா விளையாடாதீங்க. உங்களுக்கு போய் யாராவது ப்ரொபோஸ் பண்ணுவாங்களா.

 

ஏன்? ப்ரொபோஸ் பண்ற அளவுக்கு நான் வொர்த் இல்லைனு நினைக்கிறியா.

 

யாழினி அபிமன்யுவை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்தவள், என் கண்ணுக்கு பெருசா ஒன்னும் தெரியல. ஆனா, மத்தவங்க எல்லாருமே ப்ரொபோஸ் பண்ற அளவுக்கு உங்ககிட்ட என்ன இருக்குன்னு தான் எனக்கு புரியல. காலேஜ் படிக்கும் போது நீங்க எல்லார்கிட்டயும் நல்லா சிரிச்சு பேசுவீங்களா.

 

அபிமன்யு, அப்படி எல்லாம் இல்லையே. இப்போ இருக்க மாதிரி தான் இருப்பேன்.

 

யாழினி, இப்போ இருக்க பொண்ணுங்களுக்கெல்லாம் சிரிச்சு பேசுற பசங்களை விட, சிடுமூஞ்சி மாதிரி இருக்கவங்களை தான் புடிச்சிருக்கு போலருக்கு. இல்லைனா, உங்களையே எல்லாரும் ஏன் ப்ரொபோஸ் பண்ண போறாங்க.

 

அப்படியா.. அப்போ உனக்கும் என்னை பிடிச்சிருக்கா.

 

நான் மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது. சிடுமூஞ்சியா இருந்தாலும் எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திடுவேன்.

 

அபிமன்யு தன்னை அறியாமலே யாழினியிடம் தன் இயல்பை மாற்றிக் கொண்டான். யாழினியிடம் மட்டுமல்ல, மற்றவர்களிடமும் அவ்வப்பொழுது சிரித்த முகமாக பேசத் தொடங்கினான். அனைவருக்குமே ஆச்சரியம் தான். இது நம் அபி தானா என்று.

 

அன்று காலை ஷைலஜா வழக்கம் போல் தன் தாயின் பேச்சைக் கேட்டு ஆரியனிடம், மாமா என்னை கொஞ்சம் மாலில் டிராப் பண்ணுறீங்களா?.

 

ஆரியன், மாமாவா.. யாரு.. நான் உனக்கு மாமாவா.. நீ எப்பயும் போல பேரை சொல்லி கூப்பிடு. இந்த மாமா எல்லாம் வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல் கூறி விட ஷைலஜாவிற்கு அவமானம் ஆகிப்போனது.

 

உனக்கு எங்கேயாவது போகணும்னா ஆட்டோல போ. இல்லைனா டிரைவரை கூப்பிட்டுகிட்டு காரில் போ. சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணாத. நான் உன்கிட்ட பல தடவை சொல்லி இருக்கேன். எனக்கு உன் மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் கிடையாது. தேவை இல்லாம ட்ரை பண்ணாத என்று விட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

 

ஷைலஜாவிற்கு தன் கையாலாகாத தனத்தால் அழுகை பீரிட்டு கிளம்பியது. தன் தாயினால் மற்றவர்களின் முன்பு இப்படி அவமானப்பட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே.

 

என்ன சொன்னாலும் அவர் புரிந்து கொள்ள போவதில்லை என்ற விரக்தியில் ஏதேதோ யோசித்தபடியே அருகில் இருந்த பூங்காவிற்கு நடந்தே சென்று விட்டாள்.

 

அப்பொழுது எதிரே வாக்கிங் போவதற்காக வந்து கொண்டிருந்த கிஷோரின் மீது தெரியாமல் ஷைலஜா இடித்து விட, சாரி என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.

 

கிஷோர், ஹலோ எப்படி இருக்கீங்க?.

 

ஷைலஜா யார் என்று புரியாமல் பார்க்க.

 

என்ன என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா.

 

அதற்கு இல்லை என்னும் விதமாக தலையசைத்தாள் ஷைலஜா.

 

உங்க கசின் அபிமன்யுவோட பிஏ தான் நான்.

 

அதற்கு ஷைலஜாவிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல், ஓ... ஓகே என்று விட்டு அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள்.

 

கிஷோரும் அவள் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன், என்ன ஆச்சு ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க.

 

கிஷோரின் கேள்வி அழுகையை கொடுக்க.

 

சாரி நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா. உங்களுக்கு விருப்பம் இருந்தா என் கூட ஷேர் பண்ணிக்கோங்க.

 

எனக்கு எதுவுமே பிடிக்கல. எனக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை செய்ய சொல்லி கம்பெல் பண்றாங்க. என்னால பண்ண முடியாதுனு சொன்னாலும் பண்ணி தான் ஆகணும்னு போர்ஸ் பண்றாங்க என்றாள் கலங்கிய கண்களுடன்.

 

யாரு?.

 

ஷைலஜா எதுவும் கூறாமல் அமைதிகாத்தாள்.

 

சரி உங்களுக்கு சொல்ல வேண்டாம்னா சொல்ல வேண்டாம்.

 

சற்று நேர அமைதிக்கு பின், நான் அழகா தான இருக்கேன். நல்லா படிச்சிருக்கேன். ஆனா, என்னை ஏன் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது.

 

யார் சொன்னா உங்களை யாருக்குமே பிடிக்காதுன்னு. உங்களையும் பிடிச்ச ஒருத்தர் இருக்கார்.

 

ஷைலஜா டக்கென்று கிஷோரை பார்க்க.

 

ஆமா. நீங்க அபி சாரை பார்க்க அடிக்கடி ஆஃபீஸ் வரும் போது நான் உங்களை நோட் பண்ணி இருக்கேன். அப்போலருந்து நான் உங்களை ஒன் சைடா லவ் பண்றேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை பத்தின எல்லா டீடைல்ஸும் எனக்கு தெரியும். நீங்க அபி சாரை விரும்புனது. இப்போ உங்க அம்மா ஆரியனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்களை கம்பெல் பண்றது. எல்லாமே எனக்கு தெரியும்.

 

ஷைலஜா அதிர்ச்சியாக கிஷோரை பார்த்தாள்.

 

இதுவரைக்கும் நீங்க என்னை நோட் பண்ணது கிடையாது. நான் உங்களை பற்றி எல்லாமே நோட் பண்ணி இருக்கேன். இப்போ நீங்க பழைய மாதிரி இல்லைல. ரொம்ப மாறி இருக்கீங்க என்று மென்னகை செய்தவன்.

 

எனக்கு தெரிஞ்சு இப்போ உங்க மனசுல யாருமே இல்ல. அந்த ஸ்பேஸை நான் பில் பண்ணனும்னு நினைக்கிறேன், உங்களுக்கு ஓகேனா.. உங்க அம்மா எதிர் பாக்குற அளவுக்கு நான் பரம்பரை பணக்காரனோ, கோடீஸ்வரனோ கிடையாது.

 

ஆனா, உன்னை சந்தோஷமா வச்சுக்குற அளவுக்கு, உன்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேத்துற அளவுக்கு என்கிட்ட ஒரு நல்ல வருமானம் இருக்கு. உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று நேரடியாக தன் காதலை தெரிவித்தான்.

 

ஷைலஜா அதிர்ச்சியாக இவன் கூறுவதை கேட்டபடியே அமர்ந்திருந்தாள்.

 

யாருக்கு யார் என்பது நம் கையில் இல்லையே..

 

இனி என்ன நடக்கும்...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5