அவனதிகாரம் - 71

 

 

அதிகாரம் – 71

 

ஆரணி கல்லூரி வகுப்பு முடிந்து மரத்தடி பெஞ்சில் வெகு நேரமாக காத்துக் கொண்டிருக்கிறாள் யாழினிக்காக, என்ன இவளை இன்னும் காணும்? என்று அவளின் டிபார்ட்மென்ட் வாசலை எட்டிப் பார்த்தபடி அமர்ந்திருக்க.

 

யாழினி தன்னுடன் நான்கு பேரை அழைத்துக் கொண்டு ஆரணியை நோக்கி வந்தாள்.

 

ஆரணி கோபமாக எழுந்து யாழினியின் அருகில் அவசரமாக சென்றவள், என்னாச்சு யாழினி? மறுபடியும் இவனுங்க ஏதாவது பிரச்சனை பண்றாங்களா?.

 

ஆம், யாழினி உடன் வந்தது வேறு யாரும் அல்ல. அந்த மூன்று வானர படைகளும் தான், உடன் வர்ஷினியும்.

 

யாழினி, இரு இரு அவசரப்படாத. இவங்க எல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ்.

 

ஆரணி குழப்பமாக பார்த்தபடி, என்ன சொல்ற நீ.. இவனுங்க உனக்கு பிரண்ட்ஸ? காலையில் நம்ம கிட்ட வம்பு பண்ணவங்க தான இவனுங்க.

 

ஆமா. ஆனா நாங்க இப்போ பிரண்ட்ஸ் ஆயிட்டோம்.

 

ஆரணிக்கு இதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை. நம் யாழினியா இது..!

 

காலையில் பயந்து பயந்து வகுப்பறைக்கு சென்றவள், இப்பொழுது இவர்களை அழைத்து வந்து நண்பர்கள் என்று கூறுகிறாளே என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

எப்படி இதெல்லாம் நடந்தது? என்றாள் ஆச்சரியம் மாறாத குரலில்.

 

நான் காலையில் கிளாஸ்க்கு போனதும் என்ன நடந்துச்சு தெரியுமா என்று அங்கு நடந்ததை விவரிக்க தொடங்கினாள்.

 

காலையில் மொத்த வகுப்பறையும் இவர்களையே பார்த்துக் கொண்டிருக்க. யாழினிக்கு சங்கடமாக இருந்தது.

 

வர்ஷினி என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் யாழினியிடம், என்ன ஆச்சு யாழினி? ஏதாவது ப்ராப்ளமா.. உனக்கு இவங்களை முன்னாடியே தெரியுமா?.

 

அந்த வானர படைகளில் ஒருவன் வர்ஷினியை நோக்கி சொடக்கிட்டு, ஹலோ மேடம், நீங்க யாரு புதுசா இருக்கீங்க. காலையில் வேற ஒருத்தவங்க கூட வந்தாங்க. இப்போ நீங்க கூட வந்திருக்கீங்க. யார் நீங்க? என்று விசாரித்தான்.

 

வர்ஷினி, நான் இவளோட ஃப்ரெண்ட். நானும் இந்த கிளாஸ் தான் என்றாள் அவர்களை முறைத்து பார்த்தபடி.

 

அப்போ இனிமே நாம எல்லாம் பிரண்ட்ஸா என்றான் அவன்.

 

யாழினி புரியாமல் விழிக்க, யாழினியிடம் கையை நீட்டியவன், என் பேரு அஸ்வின். இவங்க ரெண்டு பேரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ், ரவி‌ அப்புறம் அசோக்.

 

இருவரும் ஹாய் என்று கை காட்ட. யாழினியும், வர்ஷினியும் திரு திருவென விழித்துக் கொண்டு நின்றனர்.

 

அஸ்வின், என்ன ரெண்டு பேரும் இப்படி முழிக்கிறீங்க. இனிமே நாம எல்லாம் பிரண்ட்ஸ்.

 

வர்ஷினி, ஹலோ உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. எப்படி உங்க கூட பிரண்ட் ஆகுறது?

 

ரவி, எதுவும் தெரியாம பேசுறவங்க தான் மா பிரண்ட்ஸ். நம்ம எல்லாம் ஒரே டிபார்ட்மெண்ட், சோ பிரண்ட்ஸா இருக்கிறது தப்பில்லையே.

 

அஸ்வின், என்ன சிவில் இன்ஜினியர். எங்க கூட பிரண்டா இருக்க மாட்டீங்களா?.

 

அவன் நீட்டிய கையை குலுக்கிய யாழினி, ஃபிரண்ட்ஸ்.. என்றாள் சிரித்த முகமாக.

 

இவள் கூறிய கதையை கேட்ட ஆரணி, அதுக்குள்ள உனக்கு பிரெண்ட்ஸ் கேங் கிடைச்சிடுச்சா. எனக்கு தான் பெருசா ஒன்னும் பிரண்ட்ஸ் செட் ஆகல.

 

ரவி, அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும் ஐயாச்சாமி என்று ஆரணியை கிண்டல் செய்ய.

 

ஆரணி அவனைப் பார்த்து முறைத்த படி, நீங்களும் ஃபர்ஸ்ட் இயர் தான. எதுக்காக காலையில் எங்களை ராக் பண்ணீங்க?.

 

அசோக், எங்களை யாரும் ராக் பண்ணிட கூடாதுல. அதான் ஒரு சேஃப்டிக்கு சீனியர் மாதிரி நடந்துக்கிட்டோம்.

 

ஆரணி அவனைப் பார்த்து தலையசைத்து பெருமூச்சு விட்டபடி, ஓகே யாழ், கெட்டிங் லேட் கிளம்பலாமா?.

 

யாழினி, ம்ம் ஓகே கிளம்பலாம். பாய் ஃப்ரெண்ட்ஸ்.

 

ஆரணி, வர்ஷினி உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க. நாங்க வேணும்னா டிராப் பண்றோம்.

 

வர்ஷினி, நான் டே ஸ்காலர் இல்ல. இங்க தான் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இருக்கேன்.

 

ஆரணி, ஓகே ஓகே.

 

அசோக், நாங்களும் யாழினியோட ப்ரெண்ட்ஸ் தான். எங்களை வேணும்னா டிராப் பண்ணுங்க.

 

ஆரணி அவனை பார்த்து முறைத்தவள், ஏன், காலேஜுக்கு வந்த உங்களுக்கு திரும்பி போக தெரியாதா?.

 

அஸ்வின், சாரிங்க. அவன் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டான். சரி வாங்க டா டைம் ஆயிடுச்சு நாமலும் கிளம்புவோம். பை யாழினி என்று அனைவரும் விடைபெற்றதும்.

 

யாழினி, ஆரணி நாம இப்போ எப்படி வீட்டுக்கு போறது?.

 

கேப் புக் பண்ணி போகலாம். சரி, என்கிட்ட ஒரு விஷயம் சொல்லு. காலையில் வரும் போது அப்படி பயந்துகிட்டு வந்த. எப்படி இவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் புடிச்ச.

 

அதான் நடந்தது என்னனு உன்கிட்ட சொன்னேனே. நான் எங்க ஃபிரண்ட்ஸ் புடிச்சேன். அவங்களே எனக்கு பிரிண்ட் ஆயிட்டாங்க.

 

ம்ம்.. என்று அவளை ஒரு மாதிரி பார்த்தவள், உன்கிட்ட என்னமோ இருக்கு யாழ். உன்கிட்ட யாரு பேசுனாலும் உடனே அவங்க உனக்கு பிரண்ட் ஆயிடுறாங்க. நானும் அப்படி தானே ஃபர்ஸ்ட் லுக்கிலேயே உனக்கு பிரண்ட் ஆனேன். உனக்கு மாட்டாத ஒரே ஆளு என்னோட அண்ணா மட்டும் தான் என்று நகைத்தாள்.

 

யாழினி ஆரணியை பார்த்து முறைத்தபடி, சரி, சரி டைம் ஆகுது. சீக்கிரம் புக் பண்ணு என்று இருவரும் பேசியபடி வாசலிற்கு வந்து பார்க்க, ஒரு நிமிடம் இருவருமே ஷாக்காகி நின்றனர்.

 

ஆரணி தான் பார்க்கும் காட்சி உண்மை தானா என்று தலையை குலுக்கி விட்டு மீண்டும் பார்க்க.

 

ஆம், உண்மை தான். நம் அண்ணன் தானே இது. எப்படி இது சாத்தியம். நமக்காகவா.. என்று யோசித்தபடி இருவரும் அபிமன்யுவின் கார் அருகே சென்று நிற்க.

 

அண்ணா என்ன இங்க வந்து நிக்கிறீங்க. எப்போ வந்தீங்க?.

 

இப்போ தான்.. உங்களை பிக்கப் பண்ணலாம்னு வந்தேன்.

 

பரவாயில்லண்ணா நாங்களே கேப் புக் பண்ணி போயிடுவோம். இதுக்காக ஏன் நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணி வந்தீங்க?.

 

இட்ஸ் ஓகே ஆரணி. ஃபர்ஸ்ட் டே காலேஜ் எப்படி போச்சு?.

 

நல்லா போச்சுண்ணா.

 

பிறகு, யாழினியைப் பார்த்தவன், உனக்கு?.

 

ம்ம் நல்லா போச்சு.

 

உனக்காக தான் ஆரணி வந்தேன். ஃபர்ஸ்ட் டே காலேஜ்ல அதான் உன்னை பிக்கப் பண்ணலாம்னு வந்தேன்.

 

ஆரணி சரி என்று தலையசைக்க. மூவரும் வீடு நோக்கி புறப்பட்டனர்.

 

யாழினி மனதிற்குள், ஆரணிக்காக தான் வந்தாராம். அப்போ நான் முக்கியம் கிடையாதா என்று அபிமன்யுவை வறுத்தெடுத்த படி வீடு வந்து சேர்ந்தாள்.

 

இந்த முறை அபிமன்யு முன் பக்க கதவை திறந்துவிட்டும் அவன் மேலிருந்த கடுப்பில் யாழினி பின் பக்கத்தில் ஏறிக்கொண்டாள். அதில், கடுப்பான அபிமன்யு யாழினியை கண்ணாடியினோடு பார்த்து முறைத்துக் கொண்டே வந்தான்.

 

இருவரின் முகமுமே சரியில்லாததால் ஆரணி எதுவும் வாய் திறக்காமல் அமைதியாக வீடு வந்து சேர்ந்தாள்.

 

இவர்களை இறக்கி விட்டு விட்டு அபிமன்யு காரை திருப்பிக் கொண்டு ஆஃபீஸ் கிளம்புகையில் ஒரு ஃபைலின் ஞாபகம் வர, இறங்கி வீட்டினுள் நுழைந்தான். இவன் அலுவலகம் சென்று விட்டான் என்று எண்ணிய ஆரணி வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

அவளைப் பார்த்த ஆரியன், வந்துட்டீங்களா ரெண்டு பேரும். இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் எப்படி போச்சு?.

 

நல்லா போச்சுடா என்றாள் சாதாரணமாக.

 

யாழினி உனக்கு எப்படி போச்சு?.

 

நல்லா போச்சு என்றாள் சிரித்த முகமாக.

 

காலையில் முகமே சரியில்ல சாயந்திரம் வரும்போது அழுதுகிட்டே வருவன்னு பார்த்தேன். என்ன சிரிச்சுக்கிட்டே வர?.

 

ஆரணி, டேய், நம்ம நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. அவங்க பெரிய ஆள் ஆயிட்டாங்க. அதுக்குள்ள ஒரு பிரண்ட்ஸ் கேங்கே சேர்த்துட்டாங்க தெரியுமா?.

 

ஆரியன், என்ன ஆரணி சொல்ற ஒரே நாள்ல ஃபிரண்ட்ஸ் கேங் கிடைச்சிடுச்சா?.

 

ஆமா இன்னைக்கு காலையில் இருந்து என்ன நடந்துச்சு தெரியுமா? அங்க உட்காரு சொல்றேன் என்று டைனிங் ஹாலில் மூவரும் அமர, கதையை கூற ஆரம்பித்தாள்.

 

கிச்சனிலிருந்து வெளிவந்த மீராவும், பாட்டியும் இவர்களுடன் இணைந்து கொள்ள.

 

ஆரணி, அம்மா, பாட்டி நீங்களும் கதையை கேட்டுக்கோங்க. அப்புறம் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சொல்ல மாட்டேன். காலையில் நாங்க போனதும் எங்களை மூணு பேர் ராக் பண்ணாங்க.

 

ஆரியன் கோபமாக, என்னது ராக் பண்ணாங்களா.. அந்த காலேஜ்ல ராகிங் எல்லாம் கிடையாதே. நீங்க கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது தான.

 

சொல்றதை ஃபுல்லா கேளுடா. எங்களை கூப்பிட்டு வச்சு ராக் பண்ணாங்க. யாழினி கையில் ஒரு ரோஸ் கொடுத்து ஒரு பையன் கிட்ட ப்ரொபோஸ் பண்ண சொன்னாங்க தெரியுமா.

 

ஆரணி கதையை கூற ஆரம்பிக்கும் போதே ஹாலிற்கு வந்த அபிமன்யு இவர்களின் கதையை கேட்டு அப்படியே நின்று விட்டான்.

 

ஆரியன், என்ன ஆரணி சொல்ற. ப்ரொபோஸ் பண்ண சொன்னாங்களா. இது மட்டும் அண்ணனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்.

 

பாட்டி, என்ன சொல்ற ஆரணி ஒன்னும் புரியலையே.

 

ஆரணி, ஐயோ பாட்டி உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது என்று சிந்தித்தவள், ஆங்.. கிண்டல் பண்ணாங்க பாட்டி என்றாள்.

 

பாட்டி, கடைசியில் யாழினி சொன்ன மாதிரி தான் நடந்திருக்கு.

 

ஆரணி, பாட்டி இதெல்லாம் சும்மா ஒரு ஃபன் தான் பாட்டி.

 

பாட்டி, இதுல என்ன ஜாலி இருக்கு. படிக்கப் போனா படிக்கிற வேலையை மட்டும் தானே பார்க்கணும். இது என்ன தேவை இல்லாத வேலை.

 

ஆரணி, காலேஜ்னா அப்படி தான் இருக்கும். இதெல்லாம் பெருசு பண்ண கூடாது.

 

ஆரியன், சரி, சரி அதெல்லாம் விடு. அப்புறம் என்ன நடந்துச்சுனு சொல்லு. யாழினி ப்ரொபோஸ் பண்ணிட்டாளா. எப்படி பண்ணா?.

 

அபிமன்யுவிற்கு இவர்களின் உரையாடலை கேட்க கேட்க பிபி ஏறிக் கொண்டிருந்தது. கோபத்தில் கையை மூடியவாறு நின்றிருந்தான்.

 

ஆரணி, ப்ரொபோஸ் பண்ண போறதுக்குள்ள எங்க ஒரிஜினல் சீனியர் வந்துட்டாங்க.

 

ஆரியன், ஒரிஜினல் சீனியரா? என்ன சொல்ற நீ.. ஒண்ணுமே புரியல.

 

ஆமாண்டா எங்களை ராக் பண்ணது சீனியரே கிடையாது. அவங்களும் ஃபர்ஸ்ட் இயர் தான். ஜூனியர் பசங்க.

 

ஆரணி கூறியதை கேட்ட ஆரியன் சத்தமாக சிரிக்க.

 

ஆரணி, கடுப்பேத்தாத ஆரி. காலையில் எனக்கு செம்ம கடுப்பாயிடுச்சு இந்த பசங்களால் தெரியுமா.

 

ஆரியன் ஒருவாறு தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவன், சரி அவங்களும் ஃபர்ஸ்ட் இயர் தான. உங்களை ஏன் ராக் பண்ணாங்க?.

 

அதை தான்டா நானும் கேட்டேன். ஒருத்தன் சொல்கிறான், எங்களை யாரும் ராக் பண்ணிடக்கூடாதுனு நாங்க உங்களை ராக் பண்ணோம். அப்போ தானே எங்களை எல்லாம் சீனியர்னு நினைச்சுப்பாங்கனு சொல்றான் டா.

 

ஆரியன், சூப்பர் பிளானா இருக்கே. அப்புறம் என்ன ஆச்சு?.

 

அப்புறம் என்ன அவ்வளவு தான். சீனியர் அண்ணா வந்து அவனுங்களை திட்டி அனுப்பி விட்டுட்டாங்க. இதைவிட ஹைலைட் என்ன தெரியுமா?.

 

ஆரியன் ஆர்வமாக, என்ன.. என்ன.. சொல்லு.

 

எங்களை ராக் பண்ண அந்த பசங்க யாழினியோட கிளாஸ்மெட்ஸ்.

 

வாட்! யாழினியோட கிளாஸ்மெட்ஸ்ஸா?.

 

ஆமா டா. அது மட்டும் இல்ல. அவங்க கூட தான் இப்போ இவ பிரண்டா இருக்கா என்று யாழினியை காட்டினாள்.

 

ஆரியன், என்ன யாழினி அவங்க கூட நீ ஏன் பிரெண்ட் ஆன?.

 

யாழினி, சும்மா விளையாட்டுக்கு தான் ஆரி அப்படி பண்ணாங்க. சீரியஸா எல்லாம் எதுவும் இல்லை. அப்புறம் கிளாசுக்கு போனதும் அந்த பசங்களே பிரண்ட்ஸாகலாம்னு கேட்டாங்க சரினு ஃபிரண்ட் ஆயிட்டோம்.

 

ஆரியன், எல்லாம் எப்படி எப்படியோ பிரண்டாவாங்க. ஆனா, நீங்க எப்படி பிரண்டாகி இருக்கீங்க பார்த்தியா.

 

அது மட்டும் இல்ல. எனக்கு இன்னொரு பிரண்டும் கிடைச்சிருக்கா. அவ பேரு வர்ஷினி.

 

ஆரியன், பரவாயில்லையே ஃபர்ஸ்ட் டேவே நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க உனக்கு.

 

அபிமன்யு இதையெல்லாம் கேட்டுவிட்டு கோபமாக தன் அறைக்கு செல்ல, அவன் காலடி ஓசையில் யாரென்று திரும்பி பார்த்த ஆரணி, அண்ணா போறாரு. எல்லா விஷயமும் கேட்டு இருக்குமோ? என்றாள் பதட்டமாக.

 

மீரா உள்ளுக்குள் சிரித்தபடி, கேட்டா கேட்கட்டும். இதுல என்ன இருக்கு?.

 

ஆரணி, என்ன மாம் இப்படி சொல்றீங்க? அப்புறம் யாழினி கிட்ட கோவப்பட மாட்டாங்களா?.

 

மீரா, மாட்டான் என்று விட்டு கிச்சனிற்குள் சென்று விட்டார்.

 

அறைக்கு சென்ற அபிமன்யு கோபமாக, அவன் ப்ரொபோஸ் பண்ண சொன்னா. நீ உடனே ப்ரொபோஸ் பண்ண போறியா. அவனுங்க கிட்ட போய் பிரண்ட்ஸாகி இருக்க. அவனுங்க ஆள் சரியில்லாதவனுங்க மாதிரி தெரியுது. நீ என்ன குழந்தையா.. இவ்வளவு வயசு ஆகுதுல. யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கனு கண்டுபிடிக்க தெரியாதா உனக்கு என்று யாழினியை திட்டியபடி தன் ஃபைலை தேடிக் கொண்டிருந்தான்.

 

யாழினி தன்னை சுத்தம் செய்துவிட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே வந்து அமர்ந்த ஷைலஜாவும் டிவியை பார்க்க. ஷைலஜாவை பார்த்து சினேகமாக புன்னகைத்த யாழினி தன் கவனத்தை டிவியில் செலுத்தினாள்.

 

அப்பொழுது வாசலில் மேடம் என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த யாழினி கிஷோர் நின்று இருப்பதை பார்த்து, வாங்க அண்ணா என்று அழைத்தாள்.

 

கிஷோர் ஷைலஜாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு யாழினியிடம், மேடம், சார் கிட்ட இந்த ஃபைலை காட்டணும் அதான் வந்தேன். சார் எங்க இருக்காங்க? என்று கேட்க.

 

யாழினி, தெரியலையே. அவங்களுக்கே கால் பண்ணி கேட்டுக்கோங்க என்று மீண்டும் டிவியை பார்க்க தொடங்கி விட்டாள்.

 

கிஷோர் கண்களால் ஷைலஜாவிற்கு அழைப்பு விடுத்து விட்டு தோட்டத்து பக்கம் தன் போனை எடுத்துக் கொண்டு அபிமன்யுவிற்கு கால் செய்வது போல் சென்றான்.

 

யாழினியின் கவனத்தை தீண்டாதபடி ஷைலஜாவும் கிஷோரின் பின்னே செல்ல. அபிமன்யுவிற்கு கால் செய்துவிட்டு கிஷோர் திரும்புகையில் ஷைலஜாவை பார்த்தான்.

 

எப்போ எனக்கு பதில் சொல்ல போறீங்க?.

 

சுற்றி முற்றி பார்த்த ஷைலஜா, ஈவினிங் பார்க்ல வெயிட் பண்றேன். வந்துடுங்க என்று விட்டு வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

 

ஈவினிங் தான் எனக்கு ரிசல்டா. கடவுளே! ரிசல்ட் எனக்கு சாதகமா இருக்கணும் என்ற வேண்டுதலுடன் அபிமன்யுவை பார்க்க சென்று விட்டான்.

 

கிஷோர் வருவதற்கு முன்பாகவே பார்க்கிற்கு வந்து சேர்ந்த ஷைலஜா படபடப்பாக அமர்ந்திருந்தாள். எவ்வளவு பாடுபட்டும் வேகமாக துடிக்கும் தன் இதயத்தை கட்டுக்குள் அவளால் கொண்டு வர முடியவில்லை.

 

ஏன் என்றே தெரியாமல் தவிப்பும், படபடப்புமாக உணர்ந்தாள். அவனை பார்க்கிற்கு வர சொல்லி விட்டோம். இப்பொழுது என்ன பதில் கூறுவது. சரி என்று ஒப்புக் கொண்டால் தன் தாய்க்கு என்ன பதில் கூறுவது.

 

அவர் எப்படியும் தன் நிலையை புரிந்து கொள்ள மாட்டாரே. அவருக்கு என்னை விட சொத்து தானே முக்கியம். இப்பொழுது என்ன செய்வது, கிஷோருக்கு நம்பிக்கை அளித்து ஏமாற்றவும் முடியாது என்று சிந்தித்த படி இருந்தாள்.

 

அவளின் அருகில் வந்த கிஷோர், வந்து ரொம்ப நேரம் ஆச்சா? என்ற படி அவளின் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

 

இல்ல இப்போ தான்.

 

சரி சொல்லுங்க.

 

அது வந்து.. என்று இழுக்க.

 

எதுவாயிருந்தாலும் ஓபனா சொல்லிடுங்க. இல்ல, இன்னும் கொஞ்சம் டைம் வேணும்னாலும் எடுத்துக்கோங்க.

 

ஷைலஜாவின் பதில் என்னவாக இருக்கும்...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5