அவனதிகாரம் - 72
அதிகாரம் – 72
கிஷோர்
பதட்டமாக பொது தேர்வின் முடிவுக்காக கார்த்திருக்கும் மாணவன் போல் ஷைலஜாவையே
பார்த்த படி அமர்ந்திருந்தான்.
இவ்வளவு
பதட்டத்திலும் கண் சிமிட்டாமல் ஷைலஜாவின் ஒவ்வொரு அசைவையும் தன் மனதினுள் பதிவு
செய்த படி அமர்ந்திருந்தான்.
ஷைலஜாவிற்கு
இது என்ன மாதிரியான உணர்வு என்று பிரித்தறிய முடியவில்லை. காதல் என்று
அபிமன்யுவின் பின் சுற்றிய பொழுதுகளில் கூட, அவள் இப்படி உணர்ந்ததில்லை.
தன்
அதிகாரத்தினாலேயே அபிமன்யுவை அடைய நினைத்தாலே தவிர, அபிமன்யுவை எண்ணும் பொழுது
எழாத ஏதோ ஒரு உணர்வு கிஷோரை பற்றி எண்ணும் பொழுது தோன்றுகிறது.
அது
என்ன என்று பிரித்தறிய முடியாமல் அந்த உணர்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு
மனம், கிஷோர் வேண்டும் என்றும் மற்றொரு மனம், கிஷோர் வேண்டாம் என்றும் கூற.
இரண்டிற்கும்
நடுவில் சிக்கிக் கொண்டு முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.
பொறுத்து
பொறுத்து பார்த்தவன் எந்த ஒரு பதிலும் வராததால், “என்ன ஆச்சுங்க? இவ்வளவு நேரம் யோசிக்கிறீங்க. ஒருவேளை
உங்களுக்கு என்னை பிடிக்கலையா?”.
ஷைலஜா
பதட்டமாக, “ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம்
எதுவும் இல்லை”.
“அப்போ உங்களுக்கு என்னை
பிடிச்சிருக்கா?” என்றான் ஆவலாக.
இதற்கு
என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. கிஷோரை பற்றி எண்ணும் பொழுதெல்லாம் தன்
தாயின் முகமும் மனக்கண் முன் வந்து மிரட்டியது.
தன்னால்
இவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயமும் இருக்க, அமைதியாக
அமர்ந்திருந்தாள்.
கிஷோர்
அவளின் அமைதியை கண்டு, “ஓகே, உங்களுக்கு என்னைப்
பிடிக்கலைனு புரியுது. இனிமே நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சாரி” என்று சோகமே உருவமாக எழுந்தான்.
ஷைலஜா
அவசரமாக, “இல்ல.. அது வந்து.. எப்படி
சொல்றதுன்னு தெரியல”.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க.
எந்த பிராப்ளமா இருந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து பேஸ் பண்ணலாம்”.
தன்
தாயைப் பற்றி அடுத்தவரிடம் எப்படி குறை கூறுவது என்று ஷைலஜாவின் மனம் முரண்டு
பிடிக்க. சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் நின்றிருந்தாள்.
“பரவாயில்ல விடுங்க. உங்களுக்கு
பிடிக்கலைனா கூட பிடிக்கலைனு சொல்லிடுங்க. அதுக்கப்புறம் நான் உங்களை டிஸ்டர்ப்
பண்ண மாட்டேன். ஆனா, என்னை பிடிக்கலைனு சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.
ஏன்னா, உங்க மனசுல என்ன இருக்குன்னு உங்க முகத்திலேயே தெரியுது.
அது
உங்களுக்கும் தெரியும். இத்தனை நாளில் நான் எத்தனையோ தடவை உங்க வீட்டுக்கு வந்து
இருக்கேன். ஒரு தடவை கூட என்னை பார்க்கும் போது உங்களுக்கு எந்த ஒரு பீலிங்க்ஸும்
வரலையா? என்னோட கெஸ்ஸிங் கரெக்ட்னா நீங்க தயங்குவதற்கு காரணம் உங்க அம்மாவா தான்
இருப்பாங்க”.
கிஷோரின்
சரியான கணிப்பில் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த ஷைலஜா, “எப்படி.. உங்களுக்கு எப்படி தெரியும்?”.
கிஷோர்
சிரித்தபடி, “உங்களைப் பற்றி எல்லாமே எனக்கு
தெரியும். இதைக் கண்டுபிடிக்கிறது என்ன அவ்வளவு பெரிய கஷ்டமா”.
கிஷோருக்கு
என்ன காரணம் என்று தெரிந்ததில், ஷைலஜாவிடம் இருந்த தயக்கம் சற்று தளர்ந்தது.
“ஆமா நீங்க சொல்றது கரெக்ட் தான்.
இருந்தாலும், என்னால எங்க அம்மாவை யார் முன்னாடியும் விட்டுக் கொடுக்க முடியல.
அதான் எப்படி உங்க கிட்ட சொல்றதுனு யோசிச்சுகிட்டு இருந்தேன். அவங்களுக்கு என் மேல
ரொம்ப பாசம் அதிகம்.
அதான்
நான் நல்லா வசதியான குடும்பத்துல வாழனும்னு ஆசைப்படுறாங்க. என்ன பண்றது, அவங்க ஆசை
நிறைவேறாதுனு எனக்கும் தெரியும்.. அவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும், அவங்களால்
அதை ஏத்துக்க முடியல”.
“வசதியான இடத்துல பொண்ண வாழ
வைக்கணும்னு நினைக்கிறது அவங்களுடைய ஆசை மட்டும் தானா?”.
“நீங்க என்ன கேட்க வரீங்கனு எனக்கு
புரியுது. நான் சின்ன வயசுல இருந்தே வசதியாக வாழ்ந்தவ தான். அதுக்காக வசதிக்காக
இன்னொருத்தரை இரண்டாவது திருமணம் செஞ்சுக்க எனக்கு விருப்பமில்லை. அது மட்டும்
இல்ல, ஆரியன் மேலயும் எனக்கு பெருசா எந்த ஒரு இன்ட்ரஸ்ட்டும் இல்லை. என் மேல
உண்மையான அன்பு வச்சிருக்கவரை தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்”.
“அப்போ நம்ம கல்யாணத்துக்கு ஓகே
சொல்றீங்களா?” என்றான் மகிழ்ச்சியாக.
ஷைலஜா
வெட்கத்துடன், “இன்னைக்கு நான் போட்டு இருக்க
டிரஸ் பார்த்தாலே உங்களுக்கு தெரியலையா?”
என்று கூறிவிட்டு திரும்பி கடகடவென வீட்டிற்கு சென்று விட்டாள்.
ஆம், ஷைலஜா
இன்று அணிந்திருப்பது அன்று கிஷோர் இவளிற்கு அழகாக இருந்தது என்று கூறிய அதே
வெள்ளை நிற குர்தி தான். அவளாலேயே இதை நம்ப முடியவில்லை. அனைவரிடமும் திமிராகவே
நடந்து கொள்ளும் தான் எப்படி இவனிடம் மட்டும் இப்படி தனிந்து பேசுகிறோம்.
காதல்
ஒருவரின் சுயத்தை கூட இழக்க செய்யுமா..!
முதல்
முறை ஒருவர் மேல் உண்மையான காதல் உணர்வை உணர்கிறாள் ஷைலஜா..!
கிஷோருக்கு
பெரும் மகிழ்ச்சி. என்ன சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஷைலஜா அபிமன்யுவை
பார்க்க வரும் பொழுதெல்லாம் இவன் ஷைலஜாவை பார்த்திருக்கிறான். பார்த்த முதல்
பார்வையிலேயே பிடித்து விட, அவளை பற்றி விசாரிக்க தொடங்கினான்.
அவள்
அபிமன்யுவை விரும்புகிறாள் என்று தெரிந்ததும், தன் மனதில் இருக்கும் ஆசையை
யாரிடமும் கூறாமல் தனக்குள்ளேயே புதைத்து விட்டான்.
ஆனால்,
அபிமன்யுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்ததும் மீண்டும் ஷைலஜாவை பற்றிய
எண்ணம் இவனுக்குள் துளிர்விடத் தொடங்கியது.
பிறகு,
மீண்டும் அவளை பற்றி விசாரிக்க தொடங்கினான். அதில், இவளின் அம்மாவின்
விருப்பத்திற்காக தான் இவள் அபிமன்யுவின் பின்னும், ஆரியனின் பின்னும் சுற்றுவது
தெரிந்தது.
எனவே,
தன் காதலை தைரியமாக அவளிடம் வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு விட்டான்.
அன்று
பார்க்கில் ஷைலஜா பேசிவிட்டு சென்ற பிறகு கிஷோரும், ஷைலஜாவும் தொலைபேசியின்
வாயிலாக மணி கணக்கில் பேச தொடங்கினர்.
இருவரும்
உணவு மறந்து, தூக்கம் மறந்து, நாள் கிழமை மறந்து தங்களின் காதலில் மூழ்கி
போயிருந்தனர்.
அப்பொழுது
கிஷோர், “சரி, உங்க அம்மா கிட்ட நம்ம
லவ்வுக்கு எப்படி சம்மதம் வாங்குவது?”.
“அதான் பயமா இருக்கு கிஷோர். எங்க
அம்மாவை பத்தி உனக்கே தெரியும்ல. அவங்க வசதியான இடத்துல தான் என்னை வாழ
வைக்கணும்னு நினைக்கிறாங்க. பேசாம நம்ம ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாமல்
ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா”.
“நோ வே ஷைலு. நான் உன்னை ஊர் அறிய
எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். இப்படி
திருட்டுத்தனமா கிடையாது. அது மட்டும் இல்ல, உங்க அம்மா என்ன தான் பேராசை
பிடிச்சவங்களா இருந்தாலும், உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க. நம்ம கல்யாணத்தை
அவங்க சம்மதத்தோட இரண்டு குடும்பமும் சேர்ந்து சந்தோஷமா நடத்தணும்னு நான்
ஆசைப்படுகிறேன்”.
“நம்ம ஆசைப்பட்டா மட்டும் போதுமா
கிஷோர். இது நடக்கணுமே”.
சற்று
நேரம் யோசித்தவன், “நீ ஒன்னும் கவலைப்படாத. உங்க
அம்மா சம்மதத்தோட தான் நான் உன்னை கல்யாணம் பண்ணுவேன் அது என்னோட பொறுப்பு. நீ
உனக்கு கொடுத்திருக்க வேலையை மட்டும் கரெக்டா பார்த்தால் போதும்”.
“வேலையா.. என்ன வேலை?”.
“இப்போ பார்த்துகிட்டு இருக்கியே
இந்த வேலையை தான் சொன்னேன். என்னை லவ் பண்ற வேலையை மட்டும் நீ சரியா பார்த்தால்
போதும். கல்யாண வேலையை நான் பார்த்துக்கிறேன்”.
இவர்களின்
காதல் ஒவ்வொரு நாளும் இங்கே வலுப்பெறுவதை அறியாத விசாலாட்சி ‘எப்படி ஆரியனிற்கு தன் மகளை மணம் முடித்து
தருவது’ என்று வெகுவாக சிந்தித்துக்
கொண்டிருந்தார்.
கிருஷ்ணமூர்த்தி,
“நீ சொல்றதெல்லாம் சரிப்பட்டு
வராது. வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாரு”.
விசாலாட்சி,
“இங்க பாருங்க, நீங்க சொன்னதைக்
கேட்டு தான் உங்க பெரிய பேரனுக்கு என் பொண்ண கட்டி கொடுக்கணும்னு நான் ஆசைப்பட்டு
ரொம்ப அவமானப்பட்டேன். திரும்ப திரும்ப என்னால் அதே மாதிரி அவமானப்பட்டுக்கிட்டு
இருக்க முடியாது.
என்
பெண்ணை எப்படியாவது இந்த வீட்டு மருமகள் ஆக்கணும். அந்த யாழினி, அவளுக்கு என்ன
தகுதி இருக்கு. அவளே இந்த வீட்டுக்கு மருமகளா வந்து இருக்கா. என் பொண்ணுக்கு என்ன
குறைச்சல்? சொந்த அத்தை பொண்ணு வேற, என் பொண்ணுக்கும், ஆரியனுக்கும் தான் கல்யாணம்
பண்ணனும்”.
“இங்க பாரு விசாலாட்சி, நான் உன்
பொண்ண அபிக்கு கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டது அந்த யாழினியை விரட்ட தான். கடைசியில்
அதை பண்ண முடியாமல் போயிடுச்சு. ஆரியன் இனிமே தான் வேலைக்கு போக போறான். அதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் பண்ணுங்கனு
என்னால் கேட்க முடியாது. உனக்கு வேணும்னா நீயே ஏதாவது செஞ்சு அவங்க கல்யாணத்தை
நடத்திக்கோ, நான் தடுக்க மாட்டேன். ஆனா, இந்த விஷயத்துல என்னோட உதவியை
எதிர்பார்க்காத”.
“ஓ..! எல்லாருக்குமே நானும், என்
பொண்ணும் இளக்காரமா போயிட்டோமா. இந்த கல்யாணத்தை யாரோட தயவும் இல்லாம எப்படி
நடத்தணும்னு எனக்கு தெரியும். நான் நடத்திக் காட்டுறேன்” என்று கோபமாக அறையை விட்டு வெளியேறி விட்டார்.
ஆரியன்
டைனிங் ஹாலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருப்பதை பார்த்த விசாலாட்சி அவனிடம்
சென்று, “இந்தாங்க மாப்ள இன்னொன்று
வச்சுக்கோங்க” என்று அவன் தட்டில் மேலும் ஒரு
சப்பாத்தியை அடுக்கினார்.
தன்
அத்தையின் ‘மாப்பிள்ளை’ என்னும் அழைப்பில் ஏதோ விவகாரம்
இருக்கின்றது என்பதை உணர்ந்த ஆரியன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“மாப்ள! வேற ஏதாவது வேணுமா?”.
“ஆமா”.
“என்னனு சொல்லுங்க மாப்ள. நான்
கொண்டு வரேன்”.
“இந்த மாப்ள மாப்ளனு கூப்பிடுவதை
நிறுத்தினால் போதும்”.
விசாலாட்சிக்கு
முகத்தில் அடித்தது போல் இருந்தது ஆரியனின் பதில்.
“ஏன், நான் உங்களை மாப்ளனு
கூப்பிடக்கூடாதா?” என்றார் சற்று சத்தமாக.
இவரின்
குரல் உயர்வில் மீரா, மகேந்திரன், பாட்டி, ஆரணி, யாழினி என அனைவரும் வெளியே
வந்தனர், ஷைலஜா உட்பட.
“தாராளமா கூப்பிடலாம் அத்த. ஆனா,
வாய் வார்த்தையா மட்டும் இருக்குற வரைக்கும் சந்தோஷம். வேற ஏதாவது எண்ணத்தோடு
கூப்பிட்டா, அதை இப்போவே மறந்துடுங்க. நீங்க நினைக்கிறது என்னைக்குமே நடக்காது”.
விசாலாட்சிக்கு
அனைவரின் நிராகரிப்பும் சேர்ந்து கோபம் பெருக்கெடுக்க. அதே கோபத்தோடு, “என்ன என் பொண்ணு உங்க எல்லாருக்கும்
அவ்வளவு கேவலமா போயிட்டாளா. ஆளாளுக்கு வேண்டாம்னு சொல்லுறீங்க. சின்ன வயசுல
இருந்து என் அண்ணன் குடும்பத்தில் தான் உன்னை கட்டிக்கொடுக்க போறேன்னு அவ மனசுல
ஆசையை வளர்த்துட்டேன்.
இப்போ
மாத்திக்க சொன்னா அவளால் எப்படி முடியும்? அவளோட மனசைப் பற்றி நீங்க யாருமே
புரிஞ்சுக்கவே மாட்டீங்களா. அப்படி அவ என்ன தப்பு பண்ணிட்டானு அண்ணனும், தம்பியும்
சேர்ந்து இப்படி பண்றீங்க. உங்க அண்ணனுக்கு கட்டி வைக்கலாம்னு பார்த்தேன். அவன்
யாரோ ஒரு பட்டிக்காட்டை கட்டி கூப்பிட்டு வந்துட்டான். இப்போ நீ என்னடானா பேச்சு
ஆரம்பிக்கும் போதே இப்படி வெட்ற மாதிரி பேசுற. அத்தை என்ற மரியாதை கொஞ்சமாவது
மனசுல இருக்கா இல்லையா?”.
ஆரியன்,
“அத்தை நான் என்னைக்குமே உங்கள
மரியாதை குறைவா நினைச்சதே இல்ல. அத்தை என்ற மரியாதை உங்க மேல எனக்கு எப்பவுமே
இருக்கு. அதுக்காக உங்க பொண்ண கட்டிக்க முடியாது” என்றான் நேரடியாக.
மகேந்திரன்,
“என்ன பேச்சு இதெல்லாம்? சின்ன
பையன் கிட்ட நேரடியா பேசுற விஷயமா இது?”.
விசாலாட்சி,
“என்னை வேற என்ன பண்ண சொல்ற அண்ணா.
உன்கிட்ட பேசி தான் அபி விஷயத்துல எதுவுமே வேலைக்கு ஆகலையே”.
இவர்களின்
வாக்குவாதத்திற்கு நடுவே அபிமன்யு அலுவலகத்திற்கு தயாராகி கீழே வந்து விட.
விசாலாட்சி
கோபமாக, “இதோ வரானே உன் பையன், இவன் தான்
என் பொண்ண கட்டிப்பான்னு அவளோ ஆசையா இருந்தேன். எல்லார்கிட்டயும் இவனுக்கு தான்
கட்டிக் கொடுக்க போறேன்னு வேற சொல்லிட்டேன். இவன் என்னடானா வேற யாரையோ கல்யாணம்
பண்ணி கூப்பிட்டு வந்துட்டான். இப்போ, ரெண்டாவது பையனும் கட்டிக்க முடியாதுன்னா
என் பொண்ண நான் வேற யாருக்கு கட்டி வைக்கிறது?”.
மகேந்திரன்,
“அவன் இப்போ தான் வேலைக்கு போகப்
போறான். அதுக்குள்ள அவன் கிட்ட போய் கல்யாண பேச்சு பேசுறீங்களே. கொஞ்சம் நாள்
ஆகட்டும்”.
“நான் ஒன்னும் இப்போவே கட்டிக்க
சொல்லல. கொஞ்சம் நாள் கழிச்சு கட்டிக்கிறேன்னு எனக்கு உத்திரவாதம் தர சொல்லு.
உங்கள நம்பி என் பொண்ண காக்க வைக்க முடியாது”.
ஆரியன்
கோபமாக, “உங்க பொண்ண இங்க யாரும்
காத்துகிட்டு இருக்க சொல்லல அத்த. தாராளமா நீங்க வேற ஏதாவது ஒரு மாப்பிள்ளைக்கு
கட்டி குடுங்க. கண்டிப்பா நான் உங்க பொண்ண கட்டிக்க மாட்டேன்!”.
“அதான் ஏன்னு கேக்குறேன்? என்
பொண்ணுக்கு என்னடா குறைச்சல். சொல்லு, இதோ நிக்கிறாளே இந்த வீட்டு பெரிய மருமக.
இவளை விட என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்? அழகுல குறைச்சலா.. அறிவுல குறைச்சலா..
இல்ல, வசதியில் குறைச்சலா.. எதுக்கு அவளை வேண்டாம்னு சொல்றீங்க?”.
அதற்குள்
ஷைலஜா தன் அம்மாவிடம் வந்தவள், “ப்ளீஸ் மாம். ஏன் இப்படி எல்லார்
முன்னாடியும் கத்திக்கிட்டு இருக்கீங்க. உள்ள வாங்க” என்று அறைக்கு அழைத்தாள்.
“நீ சும்மா இரு ஷைலு. உனக்கு
ஒன்னும் தெரியாது. உன் மனசுல ஆசையை வளர்த்தது என் தப்பு தான்”.
அபிமன்யு
தன் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டியவாறு விசாலாட்சியை நேற்பார்வை
பார்த்தவன், “ஆரியனை கட்டிக்க உங்க பொண்ணுக்கு
சம்மதமானு கேளுங்க”.
“இது என்ன கேள்வி? அவளுக்கு இதில்
முழு சம்மதம் தான்!”.
அபிமன்யு
மீண்டும், “அதை உங்க பொண்ணு கிட்ட கேட்டுட்டு
சொல்லுங்க”.
விசாலாட்சி
ஷைலஜாவைப் பார்த்து, “ஷைலு நீயே உன் வாயால் இவங்க காதுல
விழுற மாதிரி நல்லா சத்தமா சொல்லுமா”
என்று கூற.
ஷைலஜா
எந்த பதிலும் கூறாமல் அமைதியாக நின்று இருந்தாள்.
“நான் ஏதோ வற்புறுத்தி உன்னை
இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிற மாதிரி எல்லாரும் பேசுறாங்க. நீயும்
கேட்டுகிட்டு அமைதியா இருக்க. உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு. அப்போ தானே
இவங்களுக்கெல்லாம் தெரியும்”.
அபிமன்யு,
“சொல்லு ஷைலஜா. உனக்கு ஆரியனைக்
கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”.
அதற்கு
ஷைலஜா ‘இல்லை’ என்னும் விதமாக மறுப்பாக தலை அசைத்தாள்.
விசாலாட்சி,
“இங்க யாருக்கும் நீ பயப்பட
வேண்டாம்” என்று அபிமன்யுவை முறைத்து
பார்த்தபடி கூறியவர், “தைரியமா சொல்லு, அம்மா நான்
இருக்கேன். உன்னை யாராலும் இங்க ஒன்னும் பண்ண முடியாது”.
“எனக்கு.. எனக்கு ஆரியனை கல்யாணம்
பண்ணிக்க விருப்பம் இல்லை”.
இந்த
பதில் ஆரியனிற்கே ஷாக் தான். தன் அம்மாவின் பேச்சை கேட்டு நம்மை எவ்வளவு தொந்தரவு
செய்தாள்.
இப்பொழுது
அவளின் அம்மா முன்னிலையில் விருப்பமில்லை என்று கூறுகிறாளே என்று ஆச்சரியமாக
பார்த்தவன். ‘எப்படியோ நம்ம தப்பிச்சிட்டோம்’ என்று மனதிற்குள் ஆனந்தப்பட்டான்.
மகேந்திரன்,
“இங்க பாரு விசாலம். நீ ஏன் இப்படி
சின்ன பசங்களை போட்டு கஷ்டப்படுத்துற? உன் பொண்ணே விருப்பம் இல்லைனு சொல்றா.
அப்புறம் ஏன் இப்படி அவளை போர்ஸ் பண்ற”.
“அண்ணா அவளுக்கு இதில் விருப்பம்
தான். ஆனா, இவங்க எல்லார் முன்னாடியும் சொல்ல பயப்படுறா”.
ஆரியன்,
“யாரு உங்க பொண்ணுக்கு பயமா. ஏன்
அத்தை விளையாடுறீங்க. உங்க பொண்ண பார்த்து தான் நாங்க எல்லாரும் பயப்படனும்”.
விசாலாட்சி
அவனை முறைத்து விட்டு மீண்டும் ஷைலஜாவிடம், “இங்க பாரு ஷைலு, ஏன் இப்படி மாத்தி பேசுற. உனக்கு விருப்பம்
தான. ஏன் இப்போ விருப்பம் இல்லைனு சொல்ற?”.
“மாம் ப்ளீஸ்.. இந்த பேச்சை இதோட
விட்டுடுங்க. நான் ஆரியனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!”.
“அப்போ உன் மனசுல இன்னும் அபி தான்
இருக்கானா?” என்றார் பட்டென்று அனைவரின்
முன்னிலையிலும்.
“எனக்கு தெரியும். நீ அபியை தானே
முதலில் விரும்புன. அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிந்தும் கூட உன்னால் அவனை
மறக்க முடியலைல?”.
அனைவருக்குமே
விசாலாட்சியின் கேள்வி அருவருப்பாக தோன்றியது. ஏற்கனவே, திருமணம் முடிந்தவரை பற்றி
இப்படி கூறுகிறாரே.
அவரின்
மகளின் குணத்தை அவரே இப்படி அனைவரின் முன்னிலையிலும் இறக்கி காட்டுவது போல்
கூறுவது அனைவருக்கும் சரி இல்லை என்று பட்டது.
யாழினிக்கோ
பெரும் அதிர்ச்சி. என்ன இவர் இப்படி கேட்கிறார். விசாலாட்சியின் வார்த்தையை
கேட்டும் அபிமன்யு எதுவும் கூறாமல் அமைதி காப்பது யாழினிக்குள் இன்னும் கோபத்தை
மூட்ட. கோபத்தில் அபிமன்யுவை பார்த்து முறைத்தபடி நின்றிருந்தாள்.
அபிமன்யுவிற்கு
விசாலாட்சியின் வார்த்தையில் கோபம் எழுவதை விட, யாழினியின் ரியாக்ஷ்னில் பெரும்
மகிழ்ச்சியாக உணர்ந்தான்.
சிறிது
காலங்களாக யாழினி தன்னை விட்டு சற்று தள்ளி இருப்பது போல் உணர்ந்த அபிமன்யுவிற்கு
யாழினியின் கோப பார்வை பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
யாழினிக்கோ
அபிமன்யுவின் மேல் கோபம் ஒரு புறம் இருந்தாலும், எங்கே ஷைலஜா ‘ஆமாம்’ என்று கூறிவிடுவாளோ என்ற பதட்டத்தில் நின்று கொண்டிருந்தாள்.
ஷைலஜாவின்
பதில் என்னவாக இருக்கும்..?
அவளின்
காதல் கைகூடுமா..?
கருத்துகள்
கருத்துரையிடுக