அவனதிகாரம் - 73
அதிகாரம் – 73
யாழினிக்கு
இந்த சூழலில் யாரின் மீது கோபப்படுவது என்றே தெரியவில்லை. விசாலாட்சியின் மீது
கோபப்படுவதா.... அல்லது ஷைலஜாவின் மீது கோபப்படுவதா....
ஆனால்,
இவர்கள் இருவருக்கும் மேல் அபிமன்யுவின் மீது தான் ஏனென்றே தெரியாமல் ஏகத்திற்கும்
கோபம் எகிரியது யாழினிக்கு.
“கல்யாணம் ஆகி பொண்டாட்டி நான்
இங்க குத்துக்கல்லு மாதிரி நின்னுக்கிட்டு இருக்கேன். இந்த அம்மா என்னடானா என்
புருஷனை விரும்புறியானு அவங்க பொண்ணுகிட்ட கேட்குறாங்க. அதுக்கு இவரும் வாயை
மூடிக்கிட்டு நிக்கிறாரே.
அந்த
பொண்ணு மட்டும் ‘ஆமா’னு சொல்லிட்டா... சொன்னா மட்டும்... இனிமே என்ன பண்ண முடியும்?
அவருக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே. ஒருவேளை, நாம இங்க ஆரணி ரூம்ல தங்க
வந்ததுக்கு அப்புறம் அவங்களுக்குள் ஏதாவது நடந்திருக்குமோ?.
இவர்
மனசு மாறி அவங்களை பிடிச்சிருக்குனு சொல்லி இருப்பாரோ. எல்லாம் இந்த அத்தையால்
வந்தது. அத்தை பேச்சைக் கேட்டு நாம இங்க தங்குனது தப்பா போச்சு. இப்படி தான நம்ம
பக்கத்து வீட்டு ருக்கு அக்காவோட புருஷனும் அவங்க தங்கச்சியும் ருக்கு அக்கா
பிரசவத்துக்கு போயிருக்கும் போது யாருக்கும் தெரியாம காதலிச்சாங்கனு எல்லாரும்
சொன்னாங்க.
ஒருவேளை,
இவரும் நான் இல்லாததை சாக்கா வச்சிக்கிட்டு அப்படி ஏதாவது பண்ணிட்டாரா? அடப்பாவி!
இப்படி பண்ணிட்டியே” என்று அவளே மனதிற்குள்
கேள்வியும் கேட்டு, அதற்கு பதிலும் கூறி புலம்பிக் கொண்டும், குழம்பிக் கொண்டும்
நின்றிருந்தாள்.
ஒவ்வொரு
நிமிடமும் கண்களாலேயே தன் மனைவியின் மனதை ஸ்கேன் செய்தபடி பற்களை கடித்து தன்
சிரிப்பை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருந்தான் அபிமன்யு.
ஆனால்,
அவனும் யாழினி விசாலாட்சி கூறியதற்காக தான் கோபமாக இருக்கிறாள் என்று எண்ணிக்
கொண்டிருக்க. இவளோ மனதிற்குள் ஏதேதோ குழப்பத்தினால் ஏற்பட்ட சந்தேக கேள்விகளினால்
குழம்பிக் கொண்டிருக்கிறாள் என்பதை சத்தியமாக அறியவில்லை. அதை அறியும் தருணம்
எப்படி இருக்குமோ..
இது
தான் சந்தர்ப்பம் என்று எண்ணிய கிருஷ்ணமூர்த்தி கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், “ஒருவேளை உன் மனசுல அபி இருந்தா தைரியமா
சொல்லுமா” என்று மேலும் ஷைலஜாவை தூண்டும்
படி கூறினார்.
மகேந்திரன்,
“மாமா! என்ன பேச்சு பேசுறீங்க
நீங்க.. அதுவும் யாழினியை வச்சிக்கிட்டு. வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க. அபிக்கு
ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு மறந்துட்டீங்களா? இப்போ, ஷைலஜாவே பிடிச்சிருக்குனு
சொன்னா மட்டும் என்ன பண்ணிட முடியும்?”
என்றார் கோபமாக.
“இங்க பாருங்க மாப்பிள்ளை, ரெண்டு
மனசும் ஒன்னா சேர்ந்து குடும்பம் நடத்துறதுக்கு பெயர் தான் கல்யாணம். இங்க ஒன்னும்
அப்படி நடக்குற மாதிரி தெரியலையே. இவங்க ரெண்டு பேரும் அவங்களுக்குள்ள ஏதோ ஒத்து
வராம தானே பிரிஞ்சு இருக்காங்க” என்று யாழினியையும், அபியையும்
காட்டி பேசியவர்.
“இவங்க ஒன்னா இருந்து மட்டும் என்ன
பண்ண போறாங்க? பிடிக்காத இரண்டு பேரை வற்புறுத்தி இருக்க வைக்குறதை விட, பிடிச்சவங்களை
சேர்த்து வைக்கிறது தான் நல்லது. ஒருவேளை அபிக்கும், ஷைலஜாவுக்கும் விருப்பம்
இருந்தா அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் சரியா வரும்”.
இவர்கள்
அனைவரின் பேச்சையும் விட அபிமன்யுவின் அமைதியே யாழினியை கோபப்படுத்தியது. ‘இவ்வளவு பேசுறாங்க வாயை மூடிக்கிட்டு
கல்லு மாதிரி நிக்கிறார். அப்போ, இவங்க சொல்ற எல்லாத்துக்கும் சரினு தான அர்த்தம்’ என்று யாழினி ஒருபுறம் மனதிற்குள்
கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.
ஷைலஜா
நேராக அபிமன்யுவிடம் சென்றவள், “அபி எனக்கு உன்னோட ஆஃபீஸ்ல ஒரு
ஜாப் வேணும்” என்றாள்.
விசாலாட்சி,
“என்னடி சம்மந்தம் இல்லாம லூசு
மாதிரி பேசிகிட்டு இருக்க. இங்க நாங்க என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீ என்ன
பண்ணிக்கிட்டு இருக்க?”.
அபிமன்யு
சாதாரணமாக, “ஓகே.. இன்னைக்கே வந்து ஜாயின்
பண்ணிக்கோ” என்று ஷைலஜாவிடம்
கூறியவன்.
தன்
தாயிடம், “மாம் பசிக்குது. ஆபீஸ்க்கு டைம்
ஆயிடுச்சு” என்று விட்டு டைனிங் டேபிளில்
அமர்ந்து கொண்டான்.
யாழினி ‘புசுபுசு’வென்று மூச்சை விட்டவாரு கோபமாக அறைக்கு சென்று விட்டாள்.
ஆரணி
சற்று நேரத்தில் வந்து பார்க்கும் பொழுது அறையே தலைகீழாக இருந்தது.
“என்னடி இதெல்லாம்? எதுக்கு திங்ஸ்
எல்லாம் இப்படி கலைச்சு போட்டு வச்சிருக்க?”.
“என்னை பார்த்தா உன்னோட அண்ணனுக்கு
எப்படி தெரியுது? உங்க அத்தை என்னை வச்சிக்கிட்டே அவங்க பொண்ணுக்கும், அவருக்கும்
கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொல்றாங்க. அவரும் அமைதியா நிக்கிறார். இப்போ
என்னடானா அவங்கள ஆபீஸ்ல வேலைக்கு அப்பாயிண்ட் பண்ணி இருக்கார். இங்க என்ன
நடந்துகிட்டு இருக்கு?”.
“என்கிட்ட கேட்டா எனக்கு என்ன
தெரியும். நீ இதை அண்ணா கிட்ட தான் கேட்கணும். ஆனா, நீ நினைக்கிற மாதிரி தப்பா
எதுவும் இருக்காது”.
“எதுக்கு ஷைலஜா திடீர்னு உங்க
அண்ணன்கிட்ட வேலை கேட்குறாங்க. இவரும் உடனே வந்து ஜாயின் பண்ணுனு சொல்றார்”.
ஆரணி
சிந்தித்தவாறு, “எனக்கும் அது தான் குழப்பமா
இருக்கு. என்ன நடந்திருக்கும்?” என்றாள் இவளிடமே.
யாழினி
கோபமாக, “கடுப்பேத்தாத ஆரணி” என்று கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
“எனக்கே என்ன நடக்குதுனு ஒன்னும்
புரியல. தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு” என்று தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள்.
“இன்னைக்கு அத்தை கொஞ்சம் ஓவரா
தான் பேசிட்டாங்க யாழினி. நீ ஏன் வாயை மூடிக்கிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு
நின்னுகிட்டு இருந்த. கட்டின பொண்டாட்டி நான் இருக்கும் போது எப்படி நீங்க என்
புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு நல்லா கேட்க வேண்டியது தான. அதை
விட்டுட்டு இங்க வந்து கத்திக்கிட்டு இருக்க. சரி விடு, இங்க பாரு, ரிலாக்ஸ்... நீ
நினைக்கிற மாதிரி எதுவும் பெருசா இருக்காது. எதுவா இருந்தாலும், அண்ணா கிட்ட பேசி
கிளியர் பண்ணிக்கலாம்”.
“எல்லாம் என்னோட தப்பு தான். அத்தை
பேச்சைக் கேட்டு உன் ரூம்ல வந்து தங்குனது தான் இப்போ தப்பா போயிடுச்சு. நான்
அவருடைய ரூம்லையே இருந்திருந்தா, அவரை கரெக்டா வாட்ச் பண்ணி இருப்பேன்” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் புலம்பி
கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஆரணி,
யாழினியைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி திரும்ப. வாசலில் தன் இரு கைகளையும்
மார்புக்கு குறுக்கே கட்டியபடி கதவின் மீது சாய்ந்த படி நின்று இருந்தான்
அபிமன்யு.
ஆரணி, “அண்ணா..” என்றபடி எழுந்து நிற்க.
யாழினி
அபிமன்யுவை கவனிக்காமல், “ஆமா, உங்க அண்ணா தான்
எல்லாத்துக்குமே காரணம். அந்த பொண்ணு என்ன சொன்னாலும் இவருக்கு எங்க போச்சு
புத்தி. இவரும் வாயை மூடிக்கிட்டு கல்லு மாதிரி நிக்கிறார் பார்த்தியா ஆரணி. இவர்
மட்டும் ஏதாவது தப்பா செஞ்சாருனா, அப்புறம் நான் உங்க அண்ணனுக்கு சாபம்
விட்டுடுவேன். உனக்கு தெரியாதுல.. எனக்கு கருநாக்கு. நான் என்ன சொன்னாலும் அது
அப்படியே பளிச்சிடும்” என்று திட்டிக் கொண்டே
அமர்ந்திருந்தாள்.
அபிமன்யு
கண்களாலேயே ஆரணியை வெளி வருமாறு சைகை செய்ய. அவள் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.
பிறகு, யாழினியின் அருகில் வந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்
அபிமன்யு.
“உங்க அண்ணனுக்கு கொஞ்சம் கூட
அறிவே இல்லை ஆரணி” என்று கூறியபடி திரும்பி
பார்க்க.
அங்கே
ஜம்பமாக நின்று கொண்டிருந்தான் அபிமன்யு. அவனை பார்த்து ஒரு நிமிடம் ஜெர்க்
ஆகியவள், சட்டென்று எழுந்து நிற்க.
அபிமன்யுவை
பார்த்த பதட்டத்தில் தன் கோபங்கள் மொத்தத்தையும் மறந்து விட்டாள், “நீங்க எப்போ வந்தீங்க?” என்று யாழினி கேட்க.
“நீ என்னை திட்ட ஆரம்பிக்கும்
பொழுதே வந்துட்டேன்” என்று அவளிற்கு மறந்த விஷயத்தை
எடுத்து கொடுத்தான்.
யாழினிக்கு
போன கோபம் மீண்டும் ஞாபகம் வர, “ஆமா, நீங்க பண்ணதுக்கு திட்டாம
வேற என்ன பண்ணுவாங்க? இதே என் இடத்தில் வேற யாராவது இருந்திருந்தா சண்டையே போட்டு
இருப்பாங்க”.
“இப்படி கோவப்படுற அளவுக்கு, சண்டை
போடுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?”.
“உங்களை மாதிரி தான் எங்க பக்கத்து
வீட்டு பரமு அக்காவுடைய வீட்டுக்காரர் அவங்க பிரசவத்துக்காக போயிருக்கும் போது
அவங்களுடைய தங்கச்சியவே காதலிச்சிட்டார்”.
யாழினியின்
கதையில் இடைப்புகுந்த அபிமன்யு, “அப்படியா! இது எப்போ நடந்துச்சு?
நீ என்கிட்ட இதைப் பத்தி முன்னாடி சொல்லவே இல்லையே. அப்புறம் என்ன நடந்துச்சு?
அவங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?”.
யாழினிக்கு
அபிமன்யுவின் கேள்வியில் கோபம் வர, “ஏன்,
கல்யாணம் பண்ணலைனா நீங்க போய் பண்ணி வைக்க போறீங்களா? பரமு அக்காக்கு உண்மை
தெரிஞ்சதும் கோவப்பட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க”.
“ஓ.. அவங்க ரெண்டு பேருக்கும்
நடுவுல இடைஞ்சலா இருக்கக் கூடாதுனு அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு, அதான்
போய்ட்டாங்க. ரொம்ப நல்லவங்களா இருக்காங்கல்ல. சரி, எனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆகுது
நான் கிளம்புறேன்”.
யாழினி
அவனுக்கு முன்னே சென்று கதவை திறக்க முடியாத படி மறைத்து நின்றாள்.
“என்னடி வேணும் உனக்கு? எதுக்கு
இப்படி என்னை டிஸ்டர்ப் பண்ற. எனக்கு லேட் ஆகுது”.
யாழினி
கடகடவென ஓடியவள் அருகில் இருந்த சிறிய நாற்காலியை கொண்டு வந்து அபிமன்யுவின்
அருகில் போட்டு அதன் மீது ஏறி நின்றாள்.
அபிமன்யு,
“என்ன பண்ற நீ?” என்று புரியாமல் பார்க்க.
அதற்கு
பதில் கூறாமல் அவனின் தலையிலேயே கொட்டியவள், “இவ்வளவு பெருசா வளர்ந்திருக்கீங்களே அதான் ஸ்டூல் போட்டு அது
மேல ஏறி கொட்ட வேண்டியதா இருக்கு”.
நாற்காலியின்
மீது நின்றவள், தன் கையை நீட்டி மிரட்டியபடி, “என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல. நீங்க என்ன
பண்ணாலும் பார்த்துகிட்டு நான் அமைதியா இருப்பேன்னு நினைச்சுக்கிட்டீங்களா.
எதுக்காக ஷைலஜா அக்காவுக்கு உங்க ஆபீஸ்லயே வேலை கொடுத்தீங்க?”.
“அவ என் கூடவே இருந்து வேலை
பார்க்கணும்னு ஆசைப்படுறா அதனால் தான் கொடுத்தேன். அதில் உனக்கு என்ன பிரச்சனை?”.
“எனக்கு தான் பிரச்சனை. பின்ன வேற
யாருக்கு பிரச்சனை. நீங்க என்னை ஏமாத்தலாம்னு நினைக்காதீங்க. நான் ஒன்னும் பழைய
யாழினி கிடையாது. இப்போ காலேஜ் எல்லாம் போறேன். எனக்கு நிறைய விஷயம் தெரியும்.
வெளியில் அவங்க அம்மா அவ்வளவு பேச்சு பேசுறாங்க. நீங்க என்னடானா எதுவுமே காதில்
விழாத மாதிரி அமைதியா நிக்கிறீங்க. அப்போ, அவங்க சொன்னது எல்லாமே உண்மையா?” என்று கோபமாக கேட்டாள்.
நாற்காலியில்
நின்றிருந்தவளை தன் இரு கைகளில் தாங்கியவன், “இப்போ என்கிட்ட கேட்குற இந்த கேள்வியை நீ அவங்க கிட்ட
கேட்டிருக்கனும். என் புருஷனுக்கு நீங்க எப்படி கல்யாணம் பண்ணி வைப்பிங்கனு
கேட்டிருக்கனும்?” என்றவன்.
அவளின்
நெற்றியில் முட்டியடி, “ரொம்ப யோசிக்காத.. இந்த குட்டி
மூளையும் அப்புறம் வேலை செய்யாம போயிடும். போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு” என்று கூறிவிட்டு அவளை இறக்கிவிட்டு
சென்று விட்டான்.
யாழினி
மீண்டும், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம
எங்க போறீங்க”.
கதவின்
அருகில் சென்றவனின் காதில் யாழினியின் கேள்வி விழ.
.
திரும்பியும்
பாராமல், “என்னோட மனசுல அப்போ இருந்து இப்போ
வரைக்கும் ஒருத்தி மட்டும் தான் இருக்கா. அவள் யாருனு உனக்கும் தெரியும்!” என்றுவிட்டு வெளியேறி விட்டான்.
அபிமன்யுவின்
வார்த்தையில் யாழினிக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனாலும், ‘தான்’ தான் என்று அவன் வெளிப்படையாக
கூறவில்லையே. என் பெயரை குறிப்பிட்டால் தானே முழு திருப்தியாக இருக்கும் என்று
அபிமான்யுவை திட்டியபடி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றாள்.
அலுவலகத்தில்
அபிமன்யுவின் அறைக்குள் நிசப்தம் மட்டுமே நிலவி இருந்தது. அபிமன்யு கோபமாக, “உங்களை தான் கேட்குறேன். எப்போ பதில்
வரும்?” என்றான் கோபமாக.
கிஷோர்,
“அது வந்து.. நானும், ஷைலஜாவும்
லவ் பண்ணிக்கிட்டு இருக்கோம்”.
“அது எனக்கு தெரியும். வீட்ல பேசி,
மேரேஜ் பண்ண வேண்டியது தான. எதுக்காக இப்படி தள்ளி போட்டுக்கிட்டு இருக்கீங்க?”.
“அபி உனக்கு தான் அம்மாவை பத்தி
தெரியும்ல”.
“அதுக்காக உங்க அம்மாவை பத்தி
யோசிச்சுக்கிட்டே உன்னோட லைஃப்பை ஸ்பாயில் பண்ணிக்க போறியா. அது மட்டும் கிடையாது,
நீ மேரேஜ் பண்ணிக்குற வரைக்கும் உங்க அம்மா திரும்ப திரும்ப உன்னையும், என்னையும்
சேர்த்து வச்சு ஏதாவது பேசிகிட்டு தான் இருப்பாங்க.
அவங்க
பேச்சை கேட்கவே எனக்கு இரிட்டேடிங்கா இருக்கு. உங்க எல்லார்கிட்டயுமே நான் ஓபனா
சொல்லிட்டேன். என் மனசுல யாழினி மட்டும் தான் இருக்கா. எனக்கும், அவளுக்கும் நான்
நினைச்ச மாதிரி கல்யாணமும் நடந்திடுச்சு.
இன்னமும்
எதுக்காக உன்னையும், என்னையும் சேர்த்து வச்சு உங்க அம்மா பேசுறாங்க. இந்த மாதிரி
தேவையில்லாத பேச்சை எல்லாம் நம்ம அவாய்ட் பண்ணனும்னா நீயும், கிஷோரும் சீக்கிரமா
மேரேஜ் பண்றது தான் இதற்கு ஒரே வழி”
என்று கூறியவன்.
‘தேவையில்லாமல் இவங்க பேசுற
பேச்சுக்கெல்லாம், அந்த குட்டி சாத்தான் கிட்ட நான் கொட்டு வாங்க வேண்டியதா
இருக்கு’ என்று தன் தலையை தடவி விட்டபடி
முணுமுணுத்தான்.
“நானும் வீட்ல பேசலாம்னு தான் சார்
சொல்றேன். இவ தான் பயப்படுறா. நீங்க தான் சார் எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்”.
“நெக்ஸ்ட் வீக் சண்டே உன் பேரன்ஸ்
கூட நீ எங்க வீட்டுக்கு ஷைலஜாவை பொண்ணு கேட்டு வா மத்ததை நான் பார்த்துக்குறேன்”.
“ரொம்ப தேங்க்ஸ் சார்”.
“தேங்க் யூ சோ மச் அபி” என்று தங்கள் காதல் கைக்கூடப் போகும்
மகிழ்ச்சியில் இருவரும் விடை பெற்றனர்.
வகுப்பறையில்
வர்ஷினி யாழினியைப் போட்டு உலுக்கிக் கொண்டு இருந்தாள்.
“என்ன ஆச்சு யாழ். காலையிலிருந்து
இப்படியே உம்முனு இருக்க கடுப்பா இருக்கு. ஏதாவது பேசு”.
“நானே மூட் அப்செட்ல இருக்கேன்.
சும்மா இரு”.
“நம்ம க்ளாஸ் டாப்பரே நீ தான்.
நீயே இப்படி உம்மென்று இருந்தா, அப்போ நாங்க எல்லாம் என்ன பண்றது?” என்றான் ரவி.
வர்ஷினி,
“சரி யாழ், நாளைக்கு நாங்க எல்லாம்
உன்னோட வீட்டுக்கு குரூப் ஸ்டடிஸ்க்கு வரலாம்னு இருக்கோம்” என்று யாழினியின் மூடை மாற்றுவதற்காக பேச்சு கொடுக்க. அது
நன்றாகவே வேலையும் செய்தது.
யாழினி,
“நிஜமாவா சொல்றீங்க. சரி, சரி
வாங்க”.
அஸ்வின்,
“நீயே உங்க அத்தை வீட்டில் தங்கி
படிச்சுக்கிட்டு இருக்க. நாங்க எல்லாம் வந்தா அவங்க ஏதும் தப்பா நினைக்க
மாட்டாங்களா?”.
“ச்ச.. ச்ச.. அவங்க எல்லாருமே
ரொம்ப நல்லவங்க. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே நினைக்க மாட்டாங்க”.
கல்லூரியின்
முதல் நாள் முதலே அஸ்வினுக்கு யாழினியின் மேல் ஒரு வித ஈர்ப்பு இருந்து கொண்டே
இருக்கிறது. அதைப்பற்றி அவன் யாரிடமும் இதுவரை கூறவில்லை. இருப்பினும், அவனின்
மனதிற்குள் மற்றவர்களை விட யாழினிக்கே முதலிடம்.
அபிமன்யு,
யாழினி கல்லூரி செல்லவிருப்பதால் அவளுக்காக மெல்லிய சங்கிலியில் தாலியை மாற்றி
தரும்படி தன் தாயிடம் கூறினான்.
அதற்கு
வள்ளியம்மை பாட்டி, “இந்த ஃபங்க்ஷனையாவது கொஞ்சம்
பெருசா செய்யலாமே அபி” என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும்
அவன் மறுத்து விட்டான்.
எனவே,
சிறிய அளவில் இவர்களே மெல்லிய சங்கிலியில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை
செய்து முடித்தனர். ஆகையால், கல்லூரியில் யாருக்கும் யாழினிக்கு திருமணம் நடந்த
விஷயம் தெரியாது.
அவளும்
இதுவரை சொல்லும் சந்தர்ப்பம் வராததால் அப்படியே விட்டு விட்டாள். இது தெரியாமல்
அஸ்வினின் மனதிற்குள் யாழினியின் மேல் நட்பிற்கும், காதலிற்கும் நடுவே ஒரு உறவு
வலுப்பெற்று வந்தது.
அஸ்வினின்
எண்ணம் தெரிய வரும் பொழுது, யாழினியின் மனநிலை எப்படி இருக்கும்..?
இதனால்
யாழினிக்கும், அபிமன்யுவிற்கும் நடுவே ஏதேனும் விரிசல் ஏற்படுமா..?
கருத்துகள்
கருத்துரையிடுக