அவனதிகாரம் - 74
அதிகாரம் – 74
அன்று
சனிக்கிழமை காலையிலேயே யாழினி அந்த காட்சியை பார்த்துவிட்டு வயிற்றெரிச்சலுடன்
ஹாலில் அமர்ந்திருந்தாள்.
ஆரியன்,
“என்ன யாழினி, மூஞ்சியை ஏன் இப்படி
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிருக்க”.
யாழினி
அவனை முறைத்துப் பார்த்தாள்.
“வேண்டாம்.. வேண்டாம்.. இப்படி
எல்லாம் பார்க்காத. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அவளை மேலும் கிண்டல் செய்தான்.
“என்ன தப்பிச்சிட்டோம்னு சந்தோஷமா
இருக்கா?” என்றாள் பற்களை கடித்த படி.
ஆரியன்
அவளின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், யோசிப்பது போல் பாவனை காட்டியபடி, “நீ என்ன சொல்றனு புரியலையே. நான் என்ன
தப்பிச்சிட்டேன்?”.
யாழினி,
“அங்க பாரு” என்று கண்களால் காட்ட.
அதை
பார்த்த ஆரியனுக்கு பெரும் மகிழ்ச்சி.
“அப்பாடா..! ஒரு வழியா நான்
தப்பிச்சேன்”.
யாழினி
அவனின் முதுகில் அடித்தவள், “ஒழுங்கா நீ அவளை காதலிச்சிருந்தா
அவள் இப்படி உங்க அண்ணன் பின்னாடி சுத்துவாளா” என்று கேட்டாள்.
“இங்க பாரு யாழினி, லவ் எல்லாம்
தானா வரணும். இப்படி போர்ஸ் பண்ணி வர வைக்க முடியாது”.
“உன்னால இப்போ என் வாழ்க்கையே
இப்பவோ, அப்பவோனு அந்தரத்துல தொங்கிக்கிட்டு இருக்கு”.
“உன்னைப் பார்த்தாலும் பாவமா தான்
இருக்கு யாழினி. இருந்தாலும், உனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
யாழினிக்கு
மேலும் கோபம் அதிகரிக்க, “உனக்கெல்லாம் நல்ல பொண்டாட்டியே
கிடைக்க மாட்டாடா. கல்யாணம் பண்ணி கஷ்டப்பட போற பாரு. தினமும் உன் பொண்டாட்டி
கையால ஒரு அடியாவது வாங்குவ”.
ஆரியன்
அதிர்ச்சியாக பார்த்தபடி, “இங்க பாரு யாழினி, நீ வேற எந்த
விஷயத்துல வேணும்னாலும் சாபம் விடு. ஆனா, என் பொண்டாட்டியைப் பத்தி பேசுற வேலை
வச்சுக்காத. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்”.
“அப்படி தான்டா சொல்லுவேன் என்ன
பண்ணுவ? என் புருஷனை கோர்த்து விட்டல்ல அப்படி தான் பேசுவேன்” என்றாள் விடாமல்.
“பரவாயில்ல என் பொண்டாட்டி தானே
அடிக்கிறா. அவ அடிச்சாலும் சந்தோஷமா ஏத்துப்பேன். ஆனா, உன்னோட நிலைமை தான் ரொம்ப
பாவம் போலருக்கே. அங்க பாரு, இரண்டு பேரும் எப்படி ஜாலியா நடு ஹாலில்
உட்கார்ந்துகிட்டு சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்காங்க. அவ்வளவு தான் அண்ணன் அவ
பக்கம் விழுந்துட்டாருன்னு நினைக்கிறேன்”
ஆரியனின்
வார்த்தை யாழினியின் தலையில் கல்லை தூக்கி போட்டது போல் இருந்தது, “அடப்பாவி..! ஏன்டா இப்படி வாயை வைக்கிற”.
அப்போது
அங்கே வந்த ஆரணி, “என்ன யாழினி அபி அண்ணாவும்,
ஷைலஜாவும் ஏதோ சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்காங்க?” என்று யாழினியிடம் கேட்க.
ஆரியன்
சத்தமாக சிரித்தான்.
ஆரணி
புரியாமல் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி, “என்ன ஆச்சு? நான் இப்போ என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி
சிரிச்சுகிட்டு இருக்க?” என ஆரியனிடம் கேட்டாள்.
“இவ்வளவு நேரம் நாங்களும் அதை பத்தி
தான் பேசிகிட்டு இருந்தோம். கரெக்டா நீயும் வந்து அதையே கேட்டியா, அதான் சிரிப்பு
வந்திடுச்சு. எப்படி ஒரே மாதிரி யோசிக்கிறோம்ல, இது தான் ப்ளட் ரிலேஷன்னு சொல்றது”.
யாழினி
முகத்தை தூக்கி வைத்தபடி உம்மென்று சோபாவில் அமர்ந்தாள்.
ஆரணி, “என்ன ஆச்சு?” என்று மெதுவாக ஆரியனிடம் கேட்க.
ஆரியனும்
அதே போல் மெதுவாக, “இவ புருஷனை அந்த ஷைலஜா கரெக்ட்
பண்ண பார்க்குறாளாம். அதான் மேடம் கடுப்பா உட்கார்ந்து இருக்காங்க”.
“அண்ணா ஏன் இப்படி எல்லாம் பண்றார்?
பாரு, யாழினி எவ்வளவு கவலைப்படுறா”.
“அண்ணா பண்ணா ஏதாவது அர்த்தம்
இருக்கும் ஆரணி. இல்லைனா ஷைலஜா கிட்ட இவ்வளவு சாதாரணமா பேச மாட்டாரே. வேற என்னமோ
இருக்கு” என்றான் அவளை பார்த்தபடி
யோசனையோடு.
அப்பொழுது
மீரா கிச்சனிலிருந்து வெளிவந்தவர், “யாழினி,
ஆரணி, ஆரி எல்லாம் சாப்பிட வாங்க” என்று குரல் கொடுத்தார்.
ஆரியன்,
“சரி, சரி வா சாப்பிட்டுட்டு
தெம்பா அவங்களை எப்படி போட்டு தள்ளலாம்னு யோசிக்கலாம். இப்படி சாப்பிடாமல்
உட்கார்ந்து இருந்தா பசியில் எந்த யோசனையும் வராது”.
யாழினி,
“நான் ஒன்னும் வரல” என்று உணவருந்தியபடியே பேசிக்
கொண்டிருக்கும் அபிமன்யுவையும், ஷைலஜாவையும் பார்த்து கடுப்பாக கூறினாள்.
ஆரியன்,
“இங்க பாரு யாழினி. இப்படியே அவங்க
ரெண்டு பேரையும் பார்த்து நீ ஒதுங்கி ஒதுங்கி போனினா, அதுக்கு என்ன அர்த்தம்
தெரியுமா?” என்று சீரியஸாக கூறுவது போல்
கேட்டான்.
யாழினி
இவன் உண்மையாகவே எதுவோ கூறப்போகிறான் என்று எண்ணியவள், “என்ன?” என்றாள் ஆர்வமாக.
“அப்புறம் நீயே உன் புருஷனை
அவளுக்கு விட்டுக் கொடுத்த மாதிரி ஆயிடும். நீயே ஒதுங்கிட்டனு நினைப்பாங்க.
இதெல்லாம் தேவையா?”.
யாழினியும்
ஒருவேளை ஆரியன் கூறியது உண்மையாக இருக்குமோ என்று யோசித்தவள், “சரி, வாங்க சாப்பிடலாம்” என்று முன்னே நடந்தாள்.
ஆரணி
ஆரியனிடம், “ஏன்டா இப்படி எல்லாம் அவளை போட்டு
குழப்புற?”.
ஆரியன்,
“எல்லாம் ஒரு ஃபன்னு தான். பாரு,
இப்போ அடுத்து என்ன நடக்கப்போகுதுனு ரொம்ப சுவாரசியமா இருக்குல, அதுக்காக தான்
அப்படி சொன்னேன்”.
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது
ஆரி. அவங்களுடைய லைப் உனக்கு காமெடியா இருக்கா. பாவம் யாழினி” என்ற படி யாழினியை பின் தொடர்ந்தாள்.
பிறகு,
இவர்கள் மூவரும் அவர்கள் இருவருக்கும் எதிரே இருக்கும் இருக்கையில் அமர. அபிமன்யு,
யாழினி அவனுக்கு எதிரே வந்து அமரும் அரவம் உணர்ந்தாலும், எந்த ஒரு ரியாக்ஷனும்
கொடுக்காமல் அமர்ந்திருந்தான்.
அவளை
நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அது யாழினிக்கு இன்னும் கோபத்தை அதிகரிக்க. அவனை
முறைத்தபடியே அமர்ந்திருந்தாள்.
விசாலாட்சி
ரூமில் இருந்து வெளியே வந்தவர் தன் மகளும், அபியும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும்
காட்சியை பார்த்ததும் அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
உடனே
கிருஷ்ணமூர்த்தியின் அறைக்குள் ஓடியவர், “இங்க பாருங்க மாமா. நான் உங்ககிட்ட சொன்னேன்ல அவங்க ரெண்டு
பேரு மனசுலயும் ஏதோ எண்ணம் இருக்கு. இல்லனா, அபி ஏன் சம்பந்தமில்லாம என் பொண்ணு
கூட உட்கார்ந்து சாப்பிட போறான். சிடுசிடுன்னு இருந்தவன் இப்போ சிரிச்சு சிரிச்சு
பேசுறான். நீங்களே வந்து பாருங்க. இன்னைக்கே இதுக்கு என்ன ஏதுன்னு பேசி ஒரு முடிவு
எடுக்கணும்”.
“என்ன உளறுற நீ. அன்னைக்கும்
இப்படித்தான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசுனேன். அவன் ஒரு வார்த்தை கூட அதை பத்தி
பேசாம போயிட்டான். இப்போ திரும்பவும் என்னை வந்து அசிங்கப்பட சொல்றியா. நான்
வரமாட்டேன்”.
“ஐயோ மாமா! அப்போ இருந்தது வேற,
இப்போ வந்து பாருங்க. அவங்க ரெண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து சிரிச்சு சிரிச்சு
பேசிக்கிட்டே சாப்பிடுறாங்க. எனக்கு என்னமோ அபி மனசு மாறிடுச்சுனு தான் தோணுது”.
கிருஷ்ணமூர்த்திக்கும்
அபியின் மனது மாற வேண்டும் என்பது தானே எண்ணம். ‘ஒருவேளை இவள் சொல்றது நிஜமா இருக்குமோ?’ என்று எண்ணியவர் விசாலாட்சியுடன்
ஹாலிற்கு வந்தார். அவருக்கும் இந்த காட்சியைப் பார்த்து பெரும் மகிழ்ச்சியே.
கடகடவென
அவர்களை நோக்கி சென்ற விசாலாட்சி அபிமன்யுவிடம், “மாப்ள இன்னொரு இட்லி வைக்கவா?” என்று கேட்டார் இன்முகமாக.
அவரைப்
பார்த்து நெருப்பை கக்கும் விழிகளால் முறைத்த அபிமன்யு மீண்டும் உணவருந்த
தொடங்கினான்.
ஆனால்,
விசாலாட்சி அதை எல்லாம் உணராமல், “மாப்பிள்ளை
இது வேண்டுமா, மாப்பிள்ளை அது வேண்டுமா”
என்று அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஷைலஜா, யாழினியைப் பார்த்தவள்.
யாழினி
கோபமாக இருப்பதை உணர்ந்து தன் அம்மாவிடம், “மாம் என்ன பண்றீங்க நீங்க. அவனுக்கு வேணும்னா அவனே வச்சு
சாப்பிடுவான். அவன் என்ன குழந்தையா? இது வேணுமா, அது வேணுமானு கேட்டுகிட்டு
இருக்கீங்க”.
விசாலாட்சி
சிரித்தபடியே, “சும்மா இருடி, இனிமே மாப்ளயை நீ
அவன், இவன் எல்லாம் கூப்பிடக்கூடாது. மரியாதையா தான் கூப்பிடனும்”.
ஷைலஜா
யாழினியின் நிலையை இப்பொழுது நன்றாகவே உணர்ந்தாள். ஏனென்றால், அவளும் இப்பொழுது
காதல் வசப்பட்டு இருக்கிறாளே.
‘கிஷோரை பற்றி யாராவது இப்படி
எல்லாம் பேசினால் தனக்கு எப்படி இருக்கும், அப்படி தானே யாழினிக்கும் இருக்கும்’ என்று எண்ணியவள், “மாம்..” என்றாள் பல்லைக் கடித்த படி.
“என்னடி சம்மந்தமில்லாமல்
கோவப்படுற. இப்போ நான் என்ன சொல்லிட்டேன். மாப்ளயை கவனிக்கிறது ஒரு தப்பா”.
“இப்போ எதுக்கு நீங்க அபியை மாப்ளனு
கூப்பிடுறீங்க. எப்பயும் போல பெயர் சொல்லியே கூப்பிடுங்க. கேட்கவே ஒரு மாதிரி
இருக்கு” என்றாள் முகத்தை திருப்பிக்
கொண்டு.
“இதுக்கு முன்னாடி எப்படி வேணும்னாலும்
கூப்பிட்டு இருக்கலாம். ஆனா, இப்போ இவர் நம்ம குடும்பத்து மாப்பிள்ளையாக
போகிறார்ல. மாப்பிள்ளைனு கூப்பிடாம பெயர் சொல்லி கூப்பிட்டா நல்லாவா இருக்கும்”.
“என்ன மாம் பேசுறீங்க நீங்க? யாரு
யாருக்கு மாப்பிள்ளை ஆக போறார்?”.
“நம்ம அபி தான் டி. உன்னை கல்யாணம்
பண்ணிக்க போறான்ல” என்று கூறவும்.
யாழினிக்கு
தலையில் இடியே விழுந்தது போல் ஆனது. அதிர்ச்சியாக அபிமன்யுவை திரும்பிப் பார்த்தாள்.
அவனோ
யாரோ எதையோ பேசுகிறார்கள் என்பது போல் ‘தான்
உண்டு, தன் வேலை உண்டு’ என்று சாப்பிட்டுக் கொண்டு
இருந்தான்.
அவன்
இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமர்ந்திருப்பது யாழினிக்கும் சந்தேகத்தை
தூண்ட. கூடவே, பெரும் கோபத்தையும் தூண்டியது.
இதற்கு
மேல் பொறுத்திருந்தால் தன் வாழ்க்கை இன்றே பறிபோகிவிடும் என்று எண்ணியவள். நாம்
தான் இதற்கு ஏதாவது முடிவெடுக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்.
கோவமாக
எழுந்து நின்றவள், “என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க
நீங்க உங்க மனசுல? ஏன், உங்களுக்கு இந்த ஊரில் வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா. என்
புருஷன் தான் கிடைச்சாரா.. எப்போ பார்த்தாலும் அவரையே உங்க பொண்ணுக்கு கல்யாணம்
பண்ணி வைக்க போறதா பேசிகிட்டு இருக்கீங்க. அதான் அவருக்கும், எனக்கும் கல்யாணம்
ஆயிடுச்சுல்ல, எத்தனை தடவை தான் ஒரு ஆளுக்கு கல்யாணம் பண்ணுவீங்க?” என்றாள் வெடுக்கென்று.
இதை
யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏன் அபிமன்யுவிற்கும் கூட பெரும் ஆச்சரியமாக
இருந்தது.
மீரா
கிச்சனிலிருந்து கோபமா பேசும் யாழினியின் குரலை கேட்டு வெளியே ஓடி வர. அதே போல்
தான் வள்ளியம்மையும் ரூமில் இருந்து வெளிவந்து பார்த்தார்.
ஆரியன்
ஆரணியின் காதில், “நான் சொன்னேன் பார்த்தியா,
இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு” என்று கூறி சிரித்தான்.
“ஷட் அப் ஆரி. எல்லாம் உன்னால
தான். சும்மா இருந்தவளை நல்லா ஏத்தி விட்டு வச்சிருக்க”.
“அவள் புருஷன இன்னொருத்தி கட்டிக்க
போறேன்னு சொன்னா, பார்த்துகிட்டு சும்மா இருப்பாளா. இவ பேசுறது தான் கரெக்ட். நீ
கொஞ்சம் சும்மா இரு ஆரணி” என்று கூறிவிட்டு நடப்பவற்றை
சுவாரசியமாக பார்க்கத் தொடங்கினான்.
கிருஷ்ணமூர்த்தி,
“நான் அன்னைக்கு சொன்னது தான்
இன்னைக்கும். இரண்டு பேருக்கும் பிடிச்சு நடக்குற கல்யாணத்துக்கு தான் மதிப்பு
இருக்கு. அபி நடந்துக்குறதை பார்த்தாலே தெரியல, அவனுக்கு உன்னை பிடிக்கலைனு”.
“அவர் உங்ககிட்ட சொன்னாரா என்னை
பிடிக்கலைனு. எதை வச்சு சொல்றீங்க அவருக்கு என்னை பிடிக்கலைனு?”.
“பிடிக்காம தான் உன்னை விட்டு அவன்
பிரிஞ்சு இருக்கான். அதிலேயே தெரியலையா? உன்னை அவனுக்கு பிடிக்கலைன்னு”.
யாழினி,
மீராவை பார்த்து, “அத்தை நீங்க தானே சொன்னீங்க.
காலேஜ் முடியுற வரைக்கும் ஆரணி ரூம்ல தங்குனு. இப்போ பாருங்க, இவங்க எல்லாம் தப்பா
புரிஞ்சுகிட்டு இருக்காங்க. நீங்களே சொல்லுங்க”.
யாழினியைப்
பார்க்க மீராவிற்கும் பாவமாக இருந்தது.
“அப்பா தேவையில்லாம பேசாதீங்கப்பா.
நான் தான் ஆரணி ரூம்ல தங்க சொன்னேன். அவ ஸ்டடிஸ்ல கான்சன்ட்ரேட் பண்றதுக்காக
சொன்னேன். நீங்க ஏன் எதுக்கும் எதுக்கும் சம்பந்தப்படுத்தி பேசுறீங்க?”.
“இங்க பாரு மீரா, நீ சொல்றதெல்லாம்
சும்மா ஒரு காரணம் தான். நம்ம எல்லாருக்குமே தெரியும். அபி ஒரு தடவை முடிவு
பண்ணிட்டா அவன் அதை மாத்திக்கவே மாட்டான். அவன் மனசுல உண்மையாவே யாழினியை
பிடிச்சிருக்குனா யாருக்காகவும் அவளை இப்படி பிரிஞ்சு இருக்க ஒத்துக்க மாட்டான்.
அது நீயா இருந்தாலும் சரி தான்” என்று மீராவிடம் கூறியவர்.
மீண்டும்
யாழினியை பார்த்து, “நீ இவ்வளவு பேசுற. ஆனா, அபி
ஏதாவது உனக்கு சப்போர்ட் பண்ணி பேசுறானா பார்த்தியா. அவன் மனசுல இப்போ ஷைலஜா தான்
இருக்கா”.
ஷைலஜா, “நீங்க எல்லாரும் தான் தப்பா
புரிஞ்சுகிட்டு பேசுறீங்க. அபி மனசுல எப்பயுமே யாழினி மட்டும் தான் இருப்பா. என்
மனசுலயும், அபி மனசுலயும் எந்த ஒரு தப்பான எண்ணமும் கிடையாது. நாங்க ஜஸ்ட்
பிரெண்ட்ஸ் மாதிரி தான் பழகிட்டு இருக்கோம்”.
விசாலாட்சி
கோபமாக, “என்ன உளறுற ஷைலு?” என்றார் பற்களை கடித்தபடி.
“இங்க பாருங்க மாம், எத்தன தடவ
நீங்க திரும்ப திரும்ப கேட்டாலும் இது தான் என்னோட பதில். ஏற்கனவே கல்யாணமான
ஒருத்தவனை இரண்டாம் தாரமா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று கோபமாக கூறிவிட்டு, “அபி நான் கார்ல வெயிட் பண்றேன்” என்று வெளியே சென்று விட்டாள்.
விசாலாட்சி
செல்லும் ஷைலஜாவை பார்த்து, “உனக்கு என்ன பைத்தியமா
பிடிச்சிருக்கு ஷைலு. அபி மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நீ எவ்வளவு லக்கியா இருந்து
இருக்கணும். இரண்டாம் தாரமா இருந்தா என்ன.. மூன்றாம் தாரமா இருந்தா என்ன..”.
ஷைலஜா
திரும்பி தன் தாயை அருவருப்பான பார்வை பார்த்தவள், கண்ணீர் நிறைந்த கண்களுடன்
வெளியேறி விட்டாள்.
கிருஷ்ணமூர்த்தி
அனைவரின் முன்புமே, “இங்க பாரு விசாலாட்சி என் பேரனே
அமைதியா இருக்கான். அதுக்கு என்ன அர்த்தம், உன் பொண்ண கட்டிக்க அவனுக்கே சம்மதம்னு
தான் அர்த்தம். உன் பொண்ணு ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறாளோ தெரியல. உன் பொண்ண நீ
தான் பேசி மாத்தணும். அவ மட்டும் சரினு சொல்லிட்டா, அடுத்த முகூர்த்தத்திலேயே
கல்யாணத்தை முடிச்சிடலாம்”.
அனைவருமே
அதிர்ச்சியாக பார்க்க. ஆனால், அபிமன்யுவிடம் இதற்கும் எந்த ஒரு ரியாக்ஷ்னும்
இல்லை. அனைவருக்குமே அபிமன்யுவின் செயலில் குழப்பமாக இருக்க.
“அப்பா நீங்க பேசுறது மட்டும்
அவருக்கு தெரிஞ்சா ரொம்ப கோவப்படுவார். இதெல்லாம் தேவையில்லாத பேச்சு. இதை இதோட விடுறது
தான் நல்லது”.
“எனக்கு என் பேரனோட வாழ்க்கை தான்
முக்கியம். அவனுக்காக நான் யாரை வேணும்னாலும் எதிர்த்து நிற்பேன்”.
மீரா
ஆற்றாமையுடன், “அபி இங்க இவ்வளவு பேசிக்கிட்டு
இருக்காங்க. நீ பாட்டுக்கு அமைதியா சாப்பிட்டுகிட்டு இருக்க. அப்போ அப்பா
சொல்றதெல்லாம் உண்மையா?” என்றார் சந்தேகமாக.
அனைவருக்குமே
அபி என்ன கூற போகிறான் என்பதை கேட்க ஆவலாக இருக்க.
யாழினிக்கு
அபிமன்யுவை பார்த்தாலே கோபத்தின் அளவு ஏறிக்கொண்டே போனது.
இவ்வளவு
தூரம் அனைவரும் பேசியும், அபிமன்யு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றவில்லையே. ஏன்,
யாழினிக்கு கூட சப்போர்ட்டாக எதுவும் பேசவில்லையே என்ற கோபத்தோடு பார்த்துக்
கொண்டிருந்தாள்.
அபிமன்யு
கையை கழுவி விட்டு எழுந்து நின்றவன், “மாம்
எனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆகுது. என்னுடைய முடிவை நாளைக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு வெளியேறி விட்டான்.
ஆரியனுக்கு
அபிமன்யுவின் செயலில் ‘புஸ்’ என்று ஆகிவிட்டது. கிருஷ்ணமூர்த்திக்கு மிக்க மகிழ்ச்சி.
மீராவிற்கு
குழப்பம்.
யாழினிக்கோ
பதட்டம், குழப்பம், சந்தேகம், வருத்தம் என ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு
வந்தது.
அபிமன்யுவின்
செயல் என்னவாக இருக்கும்..?
கருத்துகள்
கருத்துரையிடுக