அவனதிகாரம் - 75

 

 

அதிகாரம் – 75

 

அபிமன்யு வெளியேறியதும் கிருஷ்ணமூர்த்தி யாழினியை பார்த்து, பாத்தியா... உன் துணிமணி எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு ரெடியா இரு. இன்னைக்கு தான் உனக்கு இங்க கடைசி நாள். நாளையிலிருந்து என் பேரன் நான் ஆசைப்பட்டபடி வாழப் போறான்.

 

அபிமன்யுவின் செயலில் யாருக்குமே அபிமன்யுவிற்கு சப்போர்ட் செய்து பேசத் தோன்றவில்லை.

 

வள்ளியம்மை பாட்டி, ஒருவேளை இந்த ஆளு ஏதாவது பேசி அவனோட மனசை மாத்தி இருப்பாரோ என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார்.

 

ஆரியன், தாத்தா தேவையில்லாம பேசாதீங்க. நாளைக்கு இவளுக்கு கடைசி நாளா.. இல்ல, உங்களோட ஆசைக்கு கடைசி நாளானு பார்ப்போம்.

 

நீ ஏன்டா இப்படி இருக்க? உங்க அண்ணன் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான். ஆனா, நீ பெரியவங்க சின்னவங்கன்ற மரியாதை இல்லாம பேசுற.

 

மரியாதை வயசுக்கு இல்ல தாத்தா. அவங்க நடந்துக்குறதை பார்த்து தானா வரணும்.

 

நான் இப்போ சந்தோஷமா இருக்கேன். உன் கிட்ட பேசி அதைக் கெடுத்துக்க விரும்பல என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார்.

 

மீரா, ஒருவேளை யாழினியை அவனோட ரூம்ல தங்க வைக்க இப்படியெல்லாம் பண்றானோ? என்று சிந்தித்தபடி திரும்பிப் பார்க்க. யாழினி அபிமன்யு கூறிச் சென்ற அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் அப்படியே சிலை என அமர்ந்திருந்தாள்.

 

மீரா யாழினியின் தோளில் தட்டியவர், யாழினி இங்க பாரு, என்ன ஆச்சு? அப்பா பேசுறதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத.

 

யாழினி கோபமாக, உங்க அப்பா மட்டும் தான் பேசிட்டு போறாரா? உங்க பையனும் தான் பேசிட்டு போறாரு. ஏன்.. நாளைக்கு தான் அவருடைய முடிவை சொல்லுவாரா.. இன்னைக்கு சொன்னா என்ன.. உலகம் அழிஞ்சிடுமா? எப்பயுமே அவருக்கு இதுதான் வேலை என்று குரல் தழுதழுக்க உரைத்தாள்.

 

ஆரியன், நீ இப்போ பீல் பண்ற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கல. அண்ணாவோட மனசுல நீ மட்டும் தான் இருக்க, அது உனக்கே தெரியும். நீ ஏன் இவ்வளவு காம்ப்ளிகேட் பண்ணிக்குற.

 

விசாலாட்சி, தேவை இல்லாம அவளுக்கு ஹோப் கொடுக்காத ஆரியன். அப்புறம் நாளைக்கு அபி அவளை பிடிக்கலைனு சொன்னதும் அதை ஏத்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். அவளே அவளோட மனசை இப்போவே மாத்திக்க முயற்சி பண்றா. நீ ஏன் அவளை மாத்த ட்ரை பண்ற.

 

அத்த உங்க பொண்ணே ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தவனை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா என்று அழுத்தமாக கூறினான்.

 

அவ ஏதோ டிப்ரஷன்ல இருக்கா. அதனால தான் இப்படி எல்லாம் சொல்லி இருக்கா. அவளுக்கு அபியை ரொம்ப பிடிக்கும். எப்படி அவனை போய் கட்டிக்க மாட்டேன்னு சொல்லுவா. என் பொண்ணை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு தெரியும். முதல்ல இவளை எப்படி இங்க இருந்து வெளியில் அனுப்புறதுனு யோசிங்க என்று விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார்.

 

செல்லும் வழியில், என்ன ஆச்சு இந்த ஷைலுக்கு எல்லார் முன்னாடியும் இப்படி பேசிட்டு போறா என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

 

யாழினி, அத்த, இனிமே நான் என் ரூம்ல தான் தங்குவேன். இதனால என்னோட படிப்புக்கு எந்த பிரச்சனையும் வந்துடாது நீங்க கவலைப்படாதீங்க. நான் ஆரணி ரூம்ல தங்குறதால நடக்குற விஷயத்தை எல்லாம் பார்க்கும் போது தான் என் படிப்புக்கு பிரச்சனை வரும். அதனால ப்ளீஸ் அத்தை வேண்டாம்னு சொல்லாதீங்க.

 

நான் ஏன் வேண்டாம்னு சொல்லப்போறேன் யாழினி. உன்னோட இஷ்டம் தான் என்று அவளின் தலையை கோதியவாறு மீரா கூற.

 

நாளைக்கு உங்க புள்ள மட்டும் ஏதாவது ஏடா கூடமா பேசட்டும், அப்புறம் நான் என்ன பண்ணுவன்னே தெரியாது என்று விட்டு அறைக்கு சென்று விட்டாள்.

 

ஆரணி, மாம், யாழினி இவ்வளவு கோவமா பேசி நான் பார்த்ததே இல்ல. தேவையில்லாம இந்த அத்த ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க. அவங்க ஏன் இன்னும் இங்கேயே இருக்காங்க.

 

நாம எப்படி ஆரணி அவங்களை போங்கனு சொல்ல முடியும்?.

 

அப்பாகிட்ட பேசுங்க மாம். கடைசியில நம்ம குடும்பத்தையே பிரிச்சிட்டு போயிடுவாங்க போலருக்கு.

 

கிருஷ்ணமூர்த்தியின் அழைப்பை ஏற்று விசாலாட்சி அவரின் அறைக்கு செல்ல.

 

என்ன நடக்குது விசாலம்? உன் பொண்ணு ஏன் இப்படி மாத்தி பேசுறா. இரண்டாம் தாரம் அது இதுனு பேசுறா. அபி மனசு எவ்வளவு கஷ்டப்படும். வேண்டாம்னு விலகி போனவனை பின்னாடியே போய் பேசி பேசி.. இப்போ அவன் மனசு மாறுனதும் உன் பொண்ணு முரண்டு பிடிக்கிறாளா? என்றார் கோபமாக.

 

இல்ல மாமா. அவ ஏன் இப்படி பேசுனானு எனக்கும் தெரியல. நான் அவ கிட்ட பேசுறேன். அபியே சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் என்ன கவலை இருக்கு. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்.

 

நாளைக்கு அபி சரினு சொல்லும் போது உன் பொண்ணு திரும்பவும் இப்படி ஏதாவது பேசுனா நானே உன் பொண்ணு வேண்டாம்னு சொல்லி வேற பொண்ணு பார்க்க வேண்டி இருக்கும்.

 

அபியின் மனதில் இருக்கும் எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் இவர்கள் இங்கு அவர்களுக்கு தகுந்தார் போல் திட்டம் திட்டிக் கொண்டிருக்க.

 

அங்கே ஷைலஜா, சாரி அபி, நான் அப்படி பேசுனதுக்கு நீ ஒன்னும் தப்பா நினைக்கலையே.

 

இதுல நான் தப்பா நினைக்க என்ன இருக்கு? நீ சொன்ன மாதிரி நான் கல்யாணம் ஆனவன் தானே.

 

வேற என்ன காரணம் சொன்னாலும் எங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்க. உனக்கு ஆப்போசிட்டா சொல்ற மாதிரி எந்த காரணமும் இல்லை. இது ஒன்னு தான் யாராலயும் மறுக்க முடியாத காரணமா இருக்கும். அதான் சொன்னேன். நீ ஏன் அபி அப்படி சொன்ன. யாழினி பாவம், ரொம்ப கவலைப்பட்டு இருப்பா.

 

இது எங்களுக்குள்ள நடக்குற விஷயம் ஷைலு. நீ கண்டுக்காத விடு.

 

ஆனாலும், உனக்குள்ள இப்படி ஒரு அபி இருப்பான்னு நான் நினைச்சு கூட பார்க்கல. எப்பவுமே உர்ருனு சுத்திக்கிட்டு இருப்ப. எப்போ யாழினி உன் லைஃப்ல வந்தாளோ, அப்போலருந்து நீ டோட்டலா சேஞ்ச் ஆகிட்ட.

 

அப்படியா! எனக்கு ஒன்னும் தெரியலையே. நீ அப்போலாம் என்னை லவ் பண்றேன்னு சுத்தினதால உன்கிட்ட சரியா பேசாமல் இருந்தேன். இப்போ ஃப்ரண்டா இருக்குறதால நல்லா பேசுறேன் அவ்வளவு தான்.

 

நோ அபி. எனக்கு உன்கிட்ட இருக்க டிஃப்ரன்ஸ் நல்லாவே தெரியுது. என்கிட்ட பேச மாட்ட சரி, நீ உங்க வீட்ல கூட நல்லா பேச மாட்டியே... இப்போ தான பேமிலி கூடவே டைம் ஸ்பென்ட் பண்ற.

 

உண்மையை சொல்லனும்னா நான் என்ன தான் எல்லா விஷயத்துலயும் ஃபர்ஸ்டா இருந்தாலும், எனக்குள்ள ஒரு லோன்லினஸ் இருந்துகிட்டே இருக்கும். என்னை சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் நான் மட்டும் தனியா இருக்க மாதிரி இருக்கும்.

 

ஏதோ ஒரு டிப்ரஷன்.. என்னை சுத்தி இருந்துகிட்டே இருந்துச்சு. நீ சொல்றதும் சரி தான். எப்போ யாழினி என் லைஃப்ல வந்தாளோ, அப்போவே எனக்கு ஏதோ ஒரு பாசிட்டிவ் வைப்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கு. நான் எவ்வளவோ அவளை ஹர்ட் பண்ணி இருக்கேன். அப்புறமா ரியலைஸ் பண்ணி சாரி கேட்டு இருக்கேன். எவ்வளவு ப்ராப்ளம்ஸ் வந்தாலும், அவ என்னை விட்டு போனதே கிடையாது. எனக்கே தெரியாம என்னை மொத்தமா மாத்திட்டா என்றான் புன்சிரிப்புடன்.

 

ஷைலஜா ஆச்சரியமாக, வாவ் அபி! வெட்கப்படுறியா.... ஓ காட்... யாழினி பத்தி பேசும்போதே இப்படி வெட்கப்படுற. எங்க அபியா இது.... ரியல்லி ஷி இஸ் அ ட்ரெஷர் யூ காட்.

 

எஸ் ஷி இஸ்.

 

அபிமன்யுவை கிண்டல் செய்து கொண்டிருக்கும் பொழுது சட்டென்று கதவை திறந்து கொண்டு கிஷோர் உள்ளே நுழைந்தான்.

 

இவர்கள் இருவரும் பேசி சிரித்தபடி அமர்ந்திருப்பதை பார்த்த கிஷோர் அபிமன்யுவிடம், சார் நீங்க தான் இவளை பிடிக்கலைனு சொல்லிட்டீங்கல்ல. இவகிட்ட நீங்க எப்பயும் போல பேசுங்க சார். இப்படி சிரிச்சுலாம் பேசாதீங்க. அப்புறம் மனசு மாறிட போறா என்றான் பாவமாக.

 

ஷைலஜா கிஷோரை பார்த்து முறைக்க.

 

அபிமன்யு சத்தமாக சிரித்தான், ஏன் கிஷோர் உங்க கேர்ள் பிரண்ட் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?.

 

அய்யய்யோ! சார், என்னை மாட்டி விட பார்க்காதீங்க. என் செல்லத்து மேல எனக்கு நம்பிக்கை இல்லாம இருக்குமா.

 

வெளியில் வாடா உனக்கு இருக்கு.

 

அபிமன்யு, கிஷோர் நாளைக்கு மறக்காம உங்க பேமிலியை கூப்பிட்டுக்கிட்டு வந்துடுங்க.

 

சரி என்று இருவரும் விடை பெற.

 

அபிமன்யு, எவ்வளவு கோவம் வருது உனக்கு. நான் கூட எதிர்பார்க்கல. நீ எனக்காக இவ்வளவு கோவப்பட்டு பேசுவனு. என் தாத்தா கிட்டயே சண்டைக்கு போற பயங்கரமான ஆளு தான். நான் தான் உன்னை குறைத்து எடை போட்டுட்டேன். ஸ்டார்டிங்ல பனிஷ்மென்டா நினைச்சு உன்ன ஆரணி ரூம்ல தங்க சொல்லிட்டேன்.

 

ஆனா, நாள் போக போக என்னால முடியல. நீயே திரும்பி நம்ம ரூமுக்கு வரணும். ஐ திங்க் இன்னைக்கு நீ நம்ம ரூமுக்கு வந்துடுவனு நினைக்கிறேன். அதுக்கு தான் இன்னைக்கு அப்படி சொன்னேன். ஷைலஜா சொன்ன மாதிரி என்னை மொத்தமா மாத்திட்ட டி பேபிடால். உன்னை திரும்பி வர வைக்க என்ன எல்லாம் பண்ண வேண்டியது இருக்கு என்று நினைத்துக் கொண்டு தனக்குத்தானே சிரித்தபடி அமர்ந்திருந்தான்.

 

யாழினி அவசர அவசரமாக தன்னுடைய உடைமைகளை ஆரணியின் அறையில் இருந்து அபிமன்யுவின் அறைக்கு மாற்றிக் கொண்டிருந்தாள்.

 

யாழினி, ஆரணி இது எல்லாத்தையும் இங்கே எடுத்து வை என்று மூன்றாவது முறையாக இடம் மாற்றினாள்.

 

ஆரணி சலிப்பாக, இதுவே நல்லா தான இருக்கு யாழ். எத்தனை இடத்துல தான் மாத்தி மாத்தி வைப்ப.

 

ஆரியன், ஏன் யாழினி, எல்லாத்தையும் கொண்டு வந்து இங்க வச்சுட்டியா? என்றான் கேள்வியாக.

 

ம்ம்.

 

ஒருவேளை அண்ணா நைட் வந்து நீ ஆரணி ரூம்லையே தங்குனு சொன்னா என்ன பண்ணுவ?.

 

யாழினி அவனை கோபமாக முறைத்தவள், நீ பேசாத ஆரி. உன்னால தான் எல்லாமே தப்பு தப்பா நடக்குது. நீ காலையில வாயை வச்ச நேரம் தான் உங்க அண்ணன் என்ன சொல்லிட்டு போனார் பாரு. இப்போ திரும்பவும் இப்படி சொல்ற.

 

ஆரணி, டேய் போதும்டா. பாவம்டா அவ. இன்னிக்கு புல்லா நீ அவளை ரொம்ப டென்ஷன் பண்ற.

 

எல்லாத்துக்கும் நாம ரெடியா இருக்கணும்ல. ஒருவேளை, அண்ணா நான் சொல்ற மாதிரி சொல்லிட்டா.

 

ஒருவேளை, அவர் அப்படி சொல்லிட்டார்னா என்னால போக முடியாது, இது தான் என்னோட ரூம்னு படுத்து தூங்கிடுவேன். வேணும்னா, நீங்க போங்கனு சொல்லி அவரை வெளியே அனுப்பிடுவேன்.

 

ஆரியன் யோசித்துக் கொண்டு, அப்போ இதான் சாக்குனு அண்ணா ஷைலஜா ரூம்க்கு போயிட்டா என்ன பண்ணுவ?.

 

யாழினி அதிர்ந்த பார்வையுடன் வாயடைத்து போய் நின்று விட்டாள்.

 

ஆரியன், என்ன இப்படி முழிக்கிற, அப்படி செஞ்சிட்டா என்ன பண்றது?.

 

ஆரணி, ஆரி போதும்.. ப்ளீஸ் ஸ்டாப். நீ தேவையில்லாம அவளை போட்டு குழப்பாத என்றாள் கோபமாக.

 

ஓகே ஓகே.. கூல் யாழ். நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன். அண்ணா அப்படியெல்லாம் பண்ண மாட்டார்.

 

யாழினி கோபமாக, உன்னை... உன்னை... என்ன பண்றேன்னு பாரு... என்று கூறியவள் சுற்றி முற்றி தேட, கையில் எதுவும் கிடைக்காமல் தலையணை மட்டுமே சிக்கியது.

 

அதை எடுத்து அவன் மேல் எறிய, அவனோ லாவகமாக கீழே குனிந்து தப்பினான். ஆனால், அறையனுள் நுழைந்த அபிமன்யுவின் முகத்தில் தலையணை பட்டென்று அடித்து கீழே விழுந்தது.

 

ஆரியனும், ஆரணியும் கப்சிப் என்று ஆகிவிட்டனர்.

 

யாழினிக்கும் பதட்டம் தான், என்ன கூறப்போகிறானோ என்று.

 

அபிமன்யு, நீங்க எல்லாம் இங்க என்ன பண்றீங்க? என்றான் மூவரையும் பார்த்து.

 

ஆரியன், யாழினி தான்ணா எங்களை ஹெல்ப்புக்கு கூப்பிட்டா. சரி யாழினி, அதான் வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சே நாங்க கிளம்புறோம் என்று விடை பெற்றனர்.

 

அடப்பாவிங்களா! இப்படி தனியா மாட்டி விட்டுட்டு போறீங்களே என்று பாவமாக பார்க்க.

 

ஆரியன் ஒற்றைக் கண்ணை சிமிட்டி கேலி செய்துவிட்டு கிளம்பி விட்டான்.

 

அவர்கள் சென்றதும் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாமல், நீ இங்க என்ன பண்ற? என்றான் யாழினியைப் பார்த்து நேர்பார்வையாக.

 

யாழினிக்கு உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும், வெளியே அது எதையும் காட்டாமல், இந்த ரூம் எனக்கும் சொந்தம் தான். ஏன்... நான் இங்கே வரக்கூடாதா? என்றாள் கோபமாக.

 

தாராளமா வரலாமே என்றபடி தன் கோட்டை கழட்டிக் கொண்டே மாற்று உடை எடுக்க கப்போர்டைத் திறந்தான்.

 

என்ன டி இது? கப்போர்டு ஃபுல்லா உன் டிரஸ் அடுக்கி வச்சிருக்க. இங்க இருந்த என் திங்ஸ் எல்லாம் எங்க?.

 

அதெல்லாம் பக்கத்து கப்போர்டுல வச்சிருக்கேன்.

 

எதுக்கு இப்படி சேன்ஞ் பண்ணி வச்சிருக்க? நான் சொன்னேனா சேன்ஞ் பண்ணுனு. உன்னோட திங்ஸ் எல்லாம் எதுக்கு கொண்டு வந்து இங்க வச்சிருக்க?.

 

இங்க எனக்கும் எல்லாத்துலயும் ஈக்வல் ரைட்ஸ் இருக்கு. இந்த ரூம்லயும் இருக்கு, இந்த கபோர்டுலயும் இருக்கு என்றாள் அழுத்தமாக.

 

அபிமன்யு யாழினியின் பதிலில் உண்டான சிரிப்புடன், உனக்கு என்ன ஆச்சு இன்னைக்கு? ஏன் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க? நீ ஆரணி ரூம்ல தான தங்கி இருந்த.

 

ஆமா. ஆனா, இனிமே நான் இந்த ரூம்ல தான் தங்க போறேன். இந்த கப்போர்டு எனக்கு. அந்த கப்போர்ட் உங்களுக்கு.

 

என்ன திடீர்னு? என்றான் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி.

 

பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி என்னையே கேள்வி கேட்கிறார் என்று முணுமுணுக்க.

 

கொஞ்சம் சத்தமா சொன்னா என் காதிலும் விழும் என்றபடி யாழினியின் அருகில் வந்து நிற்க.

 

இதை எதிர்பாராத யாழினி பதட்டமாக அருகில் இருந்த தலையணையை எடுத்து அபிமன்யுவை அடிக்கத் தொடங்கினாள்.

 

உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி எல்லாம் பண்ணுவீங்க. என்ன, ஆரணி ரூமுக்கு போனவ இனிமே இங்க வரவே மாட்டானு நினைச்சிட்டீங்களா? என்று விடாமல் அடித்தபடி கேள்வி கேட்க.

 

என்ன டி பண்ற? கொஞ்ச நேரம் பிரேக் விட்டா தான கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியும்.

 

எல்லாரும் கேட்டப்போ கீழேயே பதில் சொல்லி இருக்க வேண்டியது தான. அப்போ எல்லாம் வாயை மூடிக்கிட்டு நாளைக்கு பதில் சொல்றேன்னு போனீங்க. இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்க? என்று நிறுத்தாமல் அடித்துக் கொண்டே இருந்தாள்.

 

யாழினியின் கோபம் அவளின் தாக்குதலிலே தெரிந்தது. அபிமன்யுவிற்கு சற்று சிரமமாக தான் இருந்தது அவளின் கையை பிடித்து தடுக்க. ஒரு வழியாக அவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான். மூச்சு வாங்க, கோபத்தில் முகம் சிவக்க சோர்ந்து போய் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் யாழினி.

 

அபிமன்யு, என்ன இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க? என்று கேட்க.

 

இவனின் எந்த ஒரு வார்த்தையும் அவளின் கோபத்தை தணிக்கவில்லை.

 

எதுக்கு காலையில் கேட்கும் போது கீழ எதுவுமே சொல்லாம ஆபீஸ்க்கு போனீங்க. என்னைப் பார்த்தா உங்களுக்கு என்ன லூசு மாதிரி தெரியுதா? உங்க தாத்தாவும், அத்தையும் பேசியதெல்லாம் கேட்டீங்கல்ல. எப்படி அப்படியே போக உங்களுக்கு மனசு வந்துச்சு. அப்போ அவங்க சொன்ன மாதிரி நீங்க ஷைலஜாவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? என்று நேரடியாகவே கேட்டாள்.

 

அபிமன்யு சோகமான முகத்துடன், நான் என்ன பண்றது யாழினி? என.

 

யாழினி, அபிமன்யுவின் சோகமான குரலை கேட்டு அவன் தனக்காக தான் வருந்துகிறான் என்று எண்ணியவள், என்னாச்சு? ஏன் இப்படி சோகமா இருக்கீங்க?.

 

அபிமன்யு தன் குரலை செறுமி கொண்டு, நான் என்ன பண்றது யாழினி. நம்ம மட்டும் ஆசைப்பட்டா போதுமா. ஷைலஜா தான் என்னை இரண்டாம் தாரமா கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளே. ஒருவேளை, நமக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா, அவ என்னை கல்யாணம் பண்ணி இருப்பா என்று அதே சோகமான குரலில் கூற. யாழினிக்கு கோபத்தில் முகம் மேலும் சிவந்தது.

 

இதற்கு யாழினியின் எதிர்வினை என்னவாக இருக்கும்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5