அவனதிகாரம் - 78

 

 

அதிகாரம் – 78

 

அபிமன்யு கூறியதைக் கேட்டு விசாலாட்சிக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் இருந்த மற்ற அனைவருக்குமே அதிர்ச்சி தான். அதுவும், ஷைலஜா போய் எப்படி கிஷோரை விரும்பி இருப்பாள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது.

 

யாழினி, ஐ ஜாலி..! ஆரி இங்க பார்த்தியா.. ஷைலஜா வேற யாரையோ லவ் பண்றாளாம் என்றாள் வாய் நிறையப் பற்களாக.

 

ஆரியன், என்னாலும் இதெல்லாம் கொஞ்சம் கூட நம்பவே முடியல. எப்படி இதெல்லாம் நடந்திருக்கும். ஷைலஜா எப்படி கிஷோரை லவ் பண்ணி இருப்பா? அவளுக்கு அபி அண்ணாவை தான ரொம்ப பிடிக்கும் என்று சந்தேகமாக கேட்க.

 

அவனை முறைத்து பார்த்த யாழினி, அவளே வேண்டாம்னு சொன்னாலும், நீயே உங்க அண்ணனுக்கும், அவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுவ போலருக்கு என்று கோபமாக கேட்டாள்.

 

என் அண்ணனுக்கு எது விருப்பமோ அதை மட்டும் தான் நான் செய்வேன். ஏன்னா, நான் ஒரு பாசக்கார தம்பி.

 

அடப்பாவி! உன்ன போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு. இனிமே என்கிட்ட நீ பேசாத.

 

நம்ம பிரச்சனையை அப்புறமா பார்த்துக்கலாம். முதல்ல இங்க என்ன நடக்குதுனு பார்ப்போம்.

 

யாழினிக்கு ஷைலஜா அபிமன்யுவை விரும்பவில்லை என்று தெரிந்ததுமே மனம் திருப்தியாகிவிட்டது. இப்பொழுது நடப்பதை நிம்மதியாகப் பார்க்க தொடங்கினாள்.

 

ஷைலஜா தன் அன்னையின் வார்த்தைகளை கேட்டு, மாம்..! என்று அறையின் வாயிலில் இருந்து சத்தமாக அழைத்த படி தன் அன்னையைப் பார்க்க.

 

விசாலாட்சி அவசரமாக ஷைலஜாவின் அருகில் ஓடியவர், ஷைலு.. ஷைலுமா.. இங்க வாடா.. பாரு, இந்த அபி உன்னை பத்தி என்ன சொல்றான்னு பாரு. நீ போய் இவனை லவ் பண்றியாம். நீயே சொல்லு, இவன் சொல்றது எல்லாம் பொய்னு இவங்க எல்லார் முன்னாடியும் சொல்லு.

 

ஷைலஜா எதற்கும் பதில் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

 

இங்க பாரு ஷைலு. யாரையும் பார்த்து நீ பயப்பட வேண்டாம் என்று அபியை முறைத்தபடி கூறியவர், இவங்க சொல்றதெல்லாம் பொய்னு சொல்லு. யாராவது உன்னை ஏதாவது சொல்லி பிளாக்மெயில் பண்றாங்களா. எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு ஷைலு என்று ஷைலஜாவைப் பிடித்து குலுக்கினார்.

 

மாம் அபி சொன்னதெல்லாம் உண்மை தான். நானும், கிஷோரும் லவ் பண்றோம்.

 

ஷைலஜா கூறியதைக் கேட்ட விசாலாட்சிக்கு உலகமே தலைகீழாக சுழல்வது போல் தோன்றியது. நிலை தடுமாறி அருகில் இருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தார்.

 

ஷைலஜா அதிர்ச்சியாக, மாம்.. என்ன ஆச்சு? என்று பதட்டமாக கேட்க.

 

விசாலாட்சி பதட்டமான குரலில் அவசரமாக, ஷைலு நீ சொன்னதெல்லாம் பொய் தான. எப்படி ஷைலு நீ போய் இவனை... ச்ச... நினைச்சுப் பார்க்கவே அசிங்கமா இருக்கு என்று முகம் சுழித்தவர்.

 

இந்த மிடில் கிளாஸை கட்டிக்கிட்டு நீ எப்படி சந்தோஷமா வாழ முடியும். அதுவும் இவன் அபிக்கு கீழ வேலை பார்க்குறவன். உன்னை நான் இந்த வீட்டோட முதலாளி ஆக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா, நீ இவனுக்கு கீழ வேலை பார்க்குறவனை போய் காதலிக்கிறேன்னு சொல்ற.

 

ஷைலஜா கண்ணீர் நிறைந்த கண்களுடன், மாம் ஆரம்பத்திலிருந்து நீங்க சொல்றதை கேட்டு நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன். விருப்பம் இல்லாதவங்கள நாம காதலிக்க சொல்லியோ, கல்யாணம் பண்ணிக்க சொல்லியோ ஃபோர்ஸ் பண்ண முடியாது மாம்.

 

எனக்கு என்ன மாம் குறைச்சல். விருப்பம் இல்லாதவங்க பின்னாடி சுத்துறது தான் எனக்கு அசிங்கமா இருக்கு மாம். என்னை கிஷோர் ரொம்ப லவ் பண்றான். என்னை நல்லா பார்த்துப்பான் மாம். கிஷோர் பெரிய பணக்காரனா இல்லாம இருக்கலாம். ஆனா, என்னை நல்லா பார்த்துக்குற அளவுக்கு அவன் கிட்ட ஒரு நல்ல வருமானம் இருக்கு. அவன் கூட இருந்தா நான் சந்தோஷமா இருப்பேன் மாம் என்றாள் தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு.

 

விசாலாட்சி வெடுக்கென்று அவளின் கையை உதறியவர், உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு. ஏன் இப்படி லூசு மாதிரி பேசுற. இப்படி எல்லாம் உன்னால எப்படி நினைச்சுப் பார்க்க முடியுது. போயும், போயும் இவனை போய் லவ் பண்றேன்னு சொல்ற என்று அருவருப்பான பார்வையுடன் கிஷோரை பார்த்தவர்.

 

இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன் ஷைலு. எனக்கு நீ ஒரே பொண்ணு, இப்படி மாச சம்பளத்துக்கு வேலை பார்க்குறவனுக்கு உன்னை கட்டி கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. நான் ஆசைப்படுற மாதிரி நீ வசதியான வாழ்க்கை வாழனும். ஒன்னு அபியை கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைனா ஆரியனை கல்யாணம் பண்ணிக்கோ என்று தன் பிடியிலேயே நின்றார்.

 

மாம் கல்யாணம்ன்றது இரண்டு பேருமே பிடிச்சு பண்ணனும். விருப்பம் இல்லாதவங்கள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண முடியாது. அப்படியே நம்ம கட்டாயப்படுத்தி, மிரட்டி கல்யாணம் பண்ணாலும் அந்த வாழ்க்கையில சந்தோஷம் இருக்காது மாம்.

 

கடைசி வரைக்கும் அவங்களுடைய உண்மையான அன்பு நமக்கு கிடைக்காது. அபியையும், ஆரியனையும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. என்னை எனக்காக மட்டும் விரும்புறவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். எனக்கு கிஷோர் தான் பிடிச்சிருக்கு மாம். ப்ளீஸ் ஒத்துக்கோங்க.

 

மீரா, அண்ணி ஷைலஜா தான் கிஷோரை விரும்புறேன்னு சொல்லுறாளே. கிஷோரும் ஒன்னும் கெட்டவன் கிடையாது. ரொம்ப நல்ல பையன் தான். குணமானவன். நல்லா கை நிறைய சம்பாதிக்கிறான். நல்ல குடும்பம். வேற என்ன வேணும் உங்களுக்கு. ஏன் இப்படி திட்டுறீங்க?.

 

நீ உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு. இது என் பொண்ணோட வாழ்க்கை. மாச சம்பளத்துக்கு வேலை பார்க்குறவனுக்கு எல்லாம் என் பொண்ண கட்டி கொடுக்க முடியாது. என் பொண்ணு ராணி மாதிரி வாழுறதுக்காகவே பிறந்தவ. நீ ஒழுங்கா உன் பையனுக்கு என் பொண்ணை கட்டி இருந்தா, இந்த பிரச்சனை எல்லாம் வந்து இருக்குமா. எல்லாத்துக்கும் காரணமே நீங்க எல்லாரும் தான். இப்போ நல்லவங்க வேஷம் போடுறீங்களா என்றார் கோபமாக .

 

கிருஷ்ணமூர்த்தி அறையில் இருந்து வெளியே வந்தவர் நடப்பதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியாக நின்று விட்டார். இந்த இரண்டு நாட்களில் மனதிற்குள் எப்படி எல்லாம் கனவு கண்டு விட்டார். இந்த யாழினியைத் துரத்தி விட்டு அபியின் வாழ்க்கையை தனக்கு பிடித்தது போல் அமைக்க வேண்டும் என்று.

 

அப்படி செய்தால் வேலுச்சாமியின் குடும்பத்துடனான தொடர்பு முற்றிலுமாக தடைப்பட்டு விடும் என்று எவ்வளவு மனக்கணக்கு போட்டார். இப்பொழுது அவரின் கனவெல்லாம் இப்படி கலைந்து விட்டதே என்று அதிர்ந்துப் போய் நின்று விட்டார்.

 

கோபமாக அபியை நோக்கி விரைந்து சென்ற விசாலாட்சி, இங்க பாரு அபி, நீ என் பொண்ணுகிட்ட எவ்வளவு சிரிச்சு சிரிச்சு பேசுன. உனக்கு அவளை பிடிச்சிருக்கு தான. ஷைலஜா ஏதோ உளறுரா. அவ பேசுறதெல்லாம் நீ எதுவும் மனசுல வச்சுகாத. அவளை உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறது என்னோட பொறுப்பு என்றார் எப்படியாவது தன் மகளை இந்த குடும்பத்தில் கட்டிக் கொடுத்து விட வேண்டும் என்று.

 

யாழினி இவரின் பேச்சைக் கேட்டு இவர் என்ன லூசா? என்று பார்த்தாள்.

 

இவங்க பொண்ணு வேற ஒரு பையனை காதலிக்கிறேன்னு சொல்றா. இவங்க என்னடானா என் புருஷனை கட்டிக்க சொல்லி கேட்குறாங்க என்று வந்தவர்களின் முன்பு எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்று இருந்தாள்.

 

அபிமன்யு கோபமாக, அத்தை ப்ளீஸ்.... போதும்.... எனக்கும், ஷைலஜாவுக்கும் நடுவுல இருக்கிறது ஒரு நல்ல பிரண்ட்ஷிப் மட்டும் தான். நீங்க இப்படி எல்லாம் பேசுனா, வந்திருக்கவங்க உங்க பொண்ண பத்தி என்ன நினைப்பாங்க. உங்க பொண்ணோட குணத்தை பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா.

 

விசாலாட்சி கிஷோரின் குடும்பத்தினரை இளக்காரமாக பார்த்தபடி, இவங்க எல்லாம் ஒரு ஆளா. என் பொண்ண பத்தி தப்பா நினைக்க இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு.

 

கிஷோரின் பெற்றோர் எழுந்து நின்று அபிமன்யுவிடம், தம்பி எங்கள தப்பா நினைச்சுக்காதீங்க. எங்க பையன் விரும்புறான்னு சொல்லி பொண்ணு கேட்க தான் கூப்பிட்டு வந்தான். இவங்க பேசுறது எல்லாம் பார்த்தா ஏதோ தப்பா இருக்கு. இந்த கல்யாணம் சரியா வரும்னு எங்களுக்கு தோணல மன்னிச்சிடுங்க தம்பி.

 

ஷைலஜாவிற்கு தன் தாயின் எண்ணம் ஏன் இப்படி எல்லாம் போகிறது என்று அழுகையாக வந்தது. கிஷோரை பார்த்து கண்களாலேயே மன்னிப்புக் கூற. கிஷோர் தன் கண்களை மூடித் திறந்து அவளுக்கு நம்பிக்கையூட்டினான்.

 

அபிமன்யு, சார் ஒரு நிமிஷம். அவங்க பேசுனதுக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆரம்பத்தில் இருந்து என்ன நடக்குதுனு உங்களுக்கு கிளியரா நான் எக்ஸ்பிளைன் பண்றேன். இவங்க என்னுடைய சொந்த அத்தை தான். இந்த குடும்பத்துல அவங்க பொண்ண கட்டி கொடுக்கணும்னு ஆசைப்படுறாங்க.

 

அவங்க பொண்ணும், உங்க பையனும் விரும்புறதை அவங்களால ஏத்துக்க முடியல. அதான் இவ்வளவு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க இவங்கள பத்தி யோசிக்காதீங்க. அவ கிஷோரை ரொம்ப விரும்புறா. அவ பணத்துக்கு ஆசைப்படல. கிஷோர் உடைய குணத்தை பார்த்து தான் காதலிக்கிறா. அவளுக்காக கொஞ்சம் அமைதியா உட்காருங்க சார்.

 

அப்பொழுது மகேந்திரன் உள்ளே நுழைய. அபிமன்யு ஷைலஜா, கிஷோரின் காதலைப் பற்றி மகேந்திரனிடம் எடுத்துரைத்தான்.

 

மகேந்திரன் ஷைலஜாவிடம், அபி சொல்றதெல்லாம் உண்மையா மா. உனக்கு இதுல முழு சம்மதமா?.

 

ஆமாம் மாமா. நானும், கிஷோரும் லவ் பண்றோம். நான் கிஷோரை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்.

 

அண்ணா இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். என் பொண்ணு இவனை கல்யாணம் பண்ணிக்குறதுல எனக்கு விருப்பமில்லை. நான் உன் பசங்களுக்கு தான் என் பொண்ணை கட்டி கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். இவங்க எல்லாரையும் இங்க இருந்து போக சொல்லு.

 

மகேந்திரன், ஷைலஜா தான் கிஷோரை விரும்புறேன்னு சொல்லுறாளே. அப்புறம் எப்படி என் பசங்களுக்கு கட்டி கொடுக்க முடியும். அது மட்டும் இல்லாம, ஆரியனுக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியாவே இல்ல. சொன்னா கேளு, உனக்கு 2 டேஸ் டைம் தரேன். அதுக்குள்ள உன் மனசை நீயே மாத்திக்கோ. ஷைலுவுக்கு இதுல விருப்பம் இருக்குன்னும் போது நான் வேற எதை பத்தியும் யோசிக்க மாட்டேன். உன் வீட்டுக்காரரை ஊரில் இருந்து வர வச்சி ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம்.

 

நினைத்தது எதுவுமே கைக்கெட்டாமல் போகின்றது என்ற ஆத்திரம் மேலோங்க.

 

என் பொண்ணுடைய வாழ்க்கையை தயவுசெஞ்சு அழிச்சுடாதீங்க. உன் பையனுக்கு கட்டி கொடுக்கலைனாலும் பரவாயில்ல. வேற ஒரு வசதியான இடமா பார்த்து நான் என் பொண்ண கட்டி கொடுக்கிறேன். இவனுக்கு வேண்டாம் என்றார் மீண்டும்.

 

கிஷோர், மேடம் நான் ரொம்ப வசதியான குடும்பத்துல பிறக்காதவன் தான். ஆனா, உங்க பொண்ண கஷ்டப்படாம பார்த்துப்பேன். என்கிட்ட நல்ல வருமானம் இருக்கு. என்னால இதை விட இன்னமும் நல்ல வருமானம் வர அளவுக்கு ஹார்ட் வொர்க் பண்ண முடியும். என்னை நம்பி உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுங்க. நான் அவளை சந்தோஷமா பார்த்துப்பேன். நீங்க உங்க பொண்ணுக்கு என்ன மாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும்னு ஆசைப்படுறீங்களோ. அதை நான் கண்டிப்பா அமைத்துக் கொடுப்பேன்.

 

விசாலாட்சி கோபமாக கிஷோரை பார்த்து, பேசாதடா.. என்னமோ பேசி என் பொண்ணு மனச இப்படி கெடுத்து வச்சிருக்க. நீ பேசாத... நான் ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கையை உன் வாழ்நாள் முழுக்க நீ அவளுக்கு அமைத்துக் கொடுக்கவே முடியாது. நான் யாருக்கு என் பொண்ண பொண்டாட்டி ஆக்கனும்னு நினைச்சேனோ அவனுக்கு கீழ வேலை செய்யுறவன் நீ. எப்படி என் பொண்ண வசதியா வச்சு பார்த்துப்ப.

 

மாம் ப்ளீஸ் போதும். நீங்க ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கலைனாலும் நான் கிஷோரை தான் கல்யாணம் பண்ணிப்பேன். இது தான் என்னுடைய முடிவு. நீங்க என்ன பண்ணாலும் என் மனசு மாறாது என்று கூறிவிட்டு.

 

கிஷோரின் அம்மா, அப்பாவிடம், எங்க அம்மா நடந்துக்கிட்டதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று மன்னிப்பு வேண்டினாள்.

 

கிஷோரின் அம்மா, பரவாயில்ல மா இருக்கட்டும். இருந்தாலும், உங்க அம்மாவுக்கு விருப்பம் இல்லாம நாம எப்படி கல்யாணம் பண்ண முடியும்?.

 

உங்களுக்கு என்னை உங்க வீட்டு மருமகளா ஆக்க சம்மதமா ஆன்ட்டி? என்றாள் நேரடியாக.

 

கிஷோரின் தாய் அவரின் கணவரின் முகத்தை பார்க்க.

 

அவர் தலையசைக்கவும் கிஷோரின் தாய், எங்களுக்கு சம்மதம் தான்.

 

அப்போ எவ்வளவு நாள் ஆனாலும் எங்க அம்மாவுடைய சம்மதத்துக்காக நான் கார்த்துகிட்டு இருக்கேன் ஆன்ட்டி. அவங்க சம்மதம் சொன்னதும் நாங்க கல்யாணம் பண்ணிக்குறோம்.

 

விசாலாட்சி கோபமாக அறைக்கு சென்று விட்டார்.

 

விசாலாட்சியின் முடிவு என்னவாக இருக்கும்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5