அவனதிகாரம் - 79

 

 

அதிகாரம் – 79

 

விசாலாட்சி கோபமாக அறைக்குள் சென்ற பிறகு கிஷோரின் வீட்டு ஆட்களை மீராவும், வள்ளியம்மை பாட்டியும் உபசரித்தனர்.

 

அபிமன்யு தன் வீட்டு ஆட்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்று அனைவரையும் அறிமுகப்படுத்தினான். சற்று தள்ளி நின்றிருந்த ஆரியனை காட்டி என் தம்பி என்று அறிமுகப்படுத்த.

 

அவன் அருகில் இருந்த யாழினியைப் பார்த்த கிஷோரின் அம்மா, இவங்க தான் உங்களுடைய தங்கச்சியா? என்று யாழினியின் தலையில் குண்டை போட்டார்.

 

அதைக்கேட்ட ஆரியன் சத்தமாக சிரிக்க.

 

அபிமன்யுவிற்கும் சிறப்பு வந்துவிட்டது, யாழினியின் கோபமான முகத்தை பார்த்து.

 

கோபத்தில் யாழினி ஆரியனின் காலை மிதிக்க.

 

வலி பொறுக்க முடியாமல், ஸ்ஸ்.. ஆஆ.. ராட்சசி... என்று கத்தினான் ஆரியன்.

 

கிஷோரின் குடும்பத்தார் புரியாமல் பார்க்க. யாழினி கோபமாக அபிமன்யுவின் அருகில் வந்தவள்.

 

அபிமன்யுவின் கையில் கிள்ளியவாறு, நான் உங்களுக்கு தங்கச்சியா? என்றாள் கோபமாக.

 

கிஷோரும், கிஷோரின் குடும்பத்தினரும் ஆச்சரியமாக பார்த்தனர். கிஷோர் இதுவரை அபிமன்யுவை இப்படி சகஜமாக பேசி பார்த்ததே இல்லை.

 

ஷைலஜாவுடன் நட்புறவாடி பார்த்து இருக்கிறானே தவிர, இப்படி அபிமன்யுவிடம் யாரும் நடந்து கொண்டு அவன் பார்த்ததே இல்லை. எனவே, ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அபிமன்யு, நானா சொன்னேன். இவங்க தான கேட்டாங்க.

 

அவங்க கேட்டா, இல்லைனு நீங்க சொல்ல வேண்டியது தான. வாயை மூடிக்கிட்டு நிக்குறீங்க.

 

எல்லாரும் பாக்குறாங்க டி. எதுக்கு இப்படி கத்துற. ஆன்ட்டி இவ என்னோட வைஃப்.

 

கிஷோரின் தாய், ஓ.. சாரிமா. அபி தம்பிக்கு ஒரு தங்கச்சி இருக்குனு சொன்னாங்க. அதான் அவரோட தங்கச்சியோனு நினைச்சிட்டேன்.

 

யாழினி, பரவாயில்லங்க என்று முடித்துக் கொண்டாள்.

 

அது ஒன்னும் இல்லைங்க. இவளுக்கு நடந்தது ஒரு குழந்தை திருமணம். அதான் உங்களுக்கு இவளை பார்த்ததும் தங்கச்சி மாதிரி தெரிஞ்சிருக்கு. ஏற்கனவே, ஒரு தங்கச்சியை வச்சே சமாளிக்க முடியல. இதுல இன்னொரு தங்கச்சி எல்லாம் வேண்டாம் ஆன்ட்டி. இருக்குற ஒன்னே போதும் என்று ஆரியன் கூறி முடிக்கவும்.

 

அங்கே கலகலவென சிரிப்பொலி எழுந்தது. யாழினி ஆரியனை கோபமாக முறைத்துப் பார்க்க.

 

போதும்.. அங்க மிதிச்சதே இன்னும் வலிக்குது. கோவமா முறைச்சு பார்த்து கண்ணாலேயே என்னை பொசுக்கிடாத.

 

கிருஷ்ணமூர்த்திக்கு இங்கே நடப்பவை எதுவும் சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் ஒன்று நினைக்க, நடந்தது ஒன்றாக ஆகிப்போனது. விருப்பம் இல்லாமல் வெறுப்பாக அமர்ந்திருந்தார்.

 

கிஷோரின் உறவுக்கார பெண் ஒருவர் அபிமன்யுவையும், யாழினியையும் பார்த்து, உங்க ரெண்டு பேரையும் பார்த்தா மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருக்கு. நீங்க லவ் மேரேஜா? என்று கேட்டார்.

 

ஆரியன், என்னது மேட் ஃபார் ஈச் அதரா.. இவங்க ரெண்டு பேருமா.. ஏங்க நீங்க வேற.. எங்க அண்ணனை போட்டு பாடா படுத்துறா. இவ எப்படி இருந்த மனுஷனை இப்படி ஆக்கிட்டானு தெரியுமா. உங்க பையன்கிட்டயே கேட்டுப்பாருங்க.

 

எங்க அண்ணனுக்கு சிரிப்புனாலே என்னனு தெரியாது. இப்போ தினமும் சிரிக்கிறார். எது சொன்னாலும் கோவப்படுறவார். இப்போ, என்ன சொன்னாலும் கோபமே பட மாட்டேங்குறார். எப்படி இருந்தவரை இப்படி மாத்தி வச்சிருக்கா. இவளை போய் மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்றீங்களே.

 

கிஷோரின் உறவுக்காரப் பெண், எப்படி இருந்த உங்க அண்ணன் இந்த பொண்ணுக்காக இப்படி மாறி இருக்காரே. அதில் இருந்தே தெரியலையா உனக்கு. உங்க அண்ணன் இந்த பொண்ணு மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கார்னு. அதனால தான் இவங்களை மேட் ஃபார் ஈச் அதர்னு சொன்னேன்.

 

வள்ளியம்மை பாட்டி, கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா.

 

கிஷோரின் அப்பா, அப்போ நாங்க கிளம்புறோங்க. நீங்க கலந்து பேசிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க.

 

மகேந்திரன், சரிங்க, நாங்க கலந்து பேசிட்டு தேதி முடிவு பண்ணி சொல்றோம். அப்போ நிச்சயம் வச்சுக்கலாம். என் தங்கச்சி பேசுனதை நீங்க எதுவும் மனசுல வச்சுக்க வேண்டாம். வாழப் போறது இவங்க ரெண்டு பேரும் தான். இவங்க ரெண்டு பேருக்குமே இதுல முழு சம்மதம் என்னும் போது, அவளை பத்தி நீங்க பெருசா எடுத்துக்காதீங்க.

 

கிஷோரின் அப்பா, சரிங்க சார். நாங்க கிளம்புகிறோம் என்று விட்டு கிஷோரின் குடும்பத்தார் விடை பெற்றனர்.

 

அவர்கள் கிளம்பியதும், அபிமன்யு யாழினியிடம், சரி, நாம கிளம்பலாமா டைம் ஆகுது.

 

யாழினி கோபமாக, நான் எங்கேயும் உங்களோட வரமாட்டேன். நான் தனியா தான் போக போறேன். நீங்க ஒன்னும் என் கூட வரத் தேவையில்ல.

 

அபிமன்யு பாவமாக, நான் என்ன டி பண்ணேன்?.

 

அவங்க பேசுனதை கேட்டு சிரிச்சிங்கல்ல.

 

அவங்க திடீர்னு அப்படி கேட்டதும் உன்னோட ஃபேஸ் ரியாக்ஷ்னை பார்த்து சிரிப்பு வந்துடுச்சு. அதுக்காக என்கிட்ட கோவிச்சுப்பியா.

 

ஆமா கோவிச்சுப்பேன். எங்க அம்மா வீட்டுக்கு தானே போகணும். நான் பாட்டி கூட போய்க்கிறேன். நீங்க ஒன்னும் வர தேவையில்ல என்று கூறிவிட்டு கோபமாக அறையை நோக்கி செல்ல.

 

ஏய் ப்ளீஸ் டி. ரொம்ப பண்ற நீ. சரி, இனிமே சிரிக்க மாட்டேன். நான் சொல்றதை கேளு என்று யாழினியின் பின்னே கெஞ்சிக் கொண்டு சென்றான் அபி.

 

ஹாலில் இருந்த மற்ற குடும்பத்தினர் அனைவரும் இங்கே நடக்கும் காட்சியை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

என்ன இது அபி யாழினியிடம் கெஞ்சிக் கொண்டு செல்கிறான். யாழினி கோபமாக செல்கிறாளே. அனைத்தும் தலைகீழாக நடக்கிறதே என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

 

கிருஷ்ணமூர்த்தி தாத்தாவுக்கு இதை எல்லாம் பார்க்கும் பொழுது எரிச்சலாக வந்தது, என் பேரனை‌ நல்லா கைக்குள்ள போட்டுக்கிட்டு இப்படி மாத்திட்டா. எல்லாம் என் தப்பு தான். என்னை சொல்லணும், கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கக் கூடாது. ச்ச.... என்று தன்னைத் தானே நொந்தபடி அறைக்கு சென்று விட்டார்.

 

மீரா, பாட்டி, மகேந்திரன் என அனைவருக்கும் அபிமன்யுவின் மாற்றத்தை பார்த்து பெரும் மகிழ்ச்சி.

 

மீரா மகேந்திரனிடம், அபி ரொம்ப மாறிட்டான்ல மகி என்றார் ஆனந்த கண்ணீருடன்.

 

ஆமாம் மீரா. பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் தான் என்றார் சந்தோஷமாக.

 

பாட்டிக்கும் மகிழ்ச்சியில் கண்ணீர் துளிர்விட. அதே மகிழ்ச்சியான மனநிலையோடு ஊருக்கு கிளம்ப சென்றார்.

 

கிருஷ்ணமூர்த்தி தாத்தா கடுகடுவென அமர்ந்திருந்தார்.

 

வள்ளியம்மை பாட்டி, ஏங்க நான் அபி கூட ஊருக்கு போயிட்டு வரேன்.

 

ஊருக்கா.. எங்க?.

 

என்னோட அக்கா வீட்டுக்கு.

 

என்ன வள்ளி, என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன் மனசுல. கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே தலைக்கு மேல ஏறி உட்கார்ந்துப்ப. அவங்களுடைய உறவே இருக்க கூடாதுனு நான் சொல்றேன். நீ என்னடானா அக்கா வீட்டுக்கு போறேன்னு சொல்ற.

 

இது என்னோட முடிவு இல்லை. அபி தான் யாழினியை கூப்பிட்டுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போறதா சொன்னான். அதான் நானும் கூட வரேன்னு சொன்னேன்.

 

கிருஷ்ணமூர்த்தி நம்ப முடியாமல், அபியா.. அபி எதுக்கு அங்க போறான்? என்றார் அதிர்ச்சியாக.

 

இது நல்ல கதையா இருக்கே. அவனோட மாமியார் வீட்டுக்கு அவன் போறான். ஏன் போறான்னு கேட்க முடியுமா.

 

அந்த பொண்ணு என்ன பண்ணான்னு தெரியல. அபி இப்படி தலைகீழா மாறி கிடக்குறான் என்று சிடுசிடுத்தார்.

 

அவ பின்னாடி போய் கெஞ்சிகிட்டு போறான். பார்க்கவே அசிங்கமா இருக்கு.

 

வள்ளியம்மை பாட்டி சிரித்த முகமாக, புருஷன் பொண்டாட்டினா அப்படி தான. ஏன், கல்யாணம் ஆன புதுசுல நீங்களும் இப்படித் தான இருந்தீங்க.

 

நாமளும், இவங்களும் ஒன்னா.

 

இவங்களும் புருஷன் பொண்டாட்டி தான.

 

நானே எங்க நம்ம பொண்ணு நம்மள விட்டு போயிடுவாளோன்ற பயத்துல தினம் தினம் உட்கார்ந்து இருக்கேன். நீ மட்டும் எப்படி தான் இப்படி நிம்மதியாக இருக்கிறாயோ தெரியல.

 

பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்காது. எங்க அக்கா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.

 

இப்படி நம்பிக்கிட்டே இரு. கடைசியில நீ ஏமாந்து போய் தான் நிற்க போற என்றார் கோபமாக.

 

நான் இப்போ ஊருக்கு கிளம்புற சந்தோஷத்துல இருக்கேன். உங்க கிட்ட பேசி என்னோட மனசை நோகடிச்சுக்க நான் விரும்பல. நான் போயிட்டு வர வரைக்கும் பார்த்து ஜாக்கிரதையா இருங்க.

 

பிறகு, அபிமன்யு ஒரு வழியாக கெஞ்சி கொஞ்சி யாழினியை சமாதானம் செய்து ஊருக்கு கிளம்ப தயாராக கீழே அழைத்து வந்தான்.

 

வள்ளியம்மை பாட்டியும் தயாராக அறையை விட்டு வெளியே வர. ஆரியனும் தன் கையில் ஒரு பெட்டியுடன் வெளியே வந்தான்.

 

மீரா, என்னடா இது.. நீயும் கையில பேக்கோட வர. நீ எங்க போக போற?.

 

நானும் அண்ணா கூட போறேன்.

 

நீ எதுக்குடா. அவன் அவனோட மாமியார் வீட்டுக்கு போறான். நீ அங்க போய் என்ன பண்ண போற?.

 

எல்லாம் எங்க அண்ணனுக்கு ஒரு பாதுகாப்புக்கு தான்‌. இவளை நம்பி தனியா அனுப்ப முடியாது என்று யாழினியை கை காட்டினான்.

 

உங்க அண்ணனை நாங்க எதுவும் பண்ணிட மாட்டோம். உங்க அண்ணன் எங்கள ஒன்னும் பண்ணாம இருந்தா போதாதா என்று கூறி முறைத்தாள்.

 

அண்ணா நீங்களே சொல்லுங்க. நான் வந்தா உங்களுக்கும் டைம் பாஸ் ஆகும்ல.

 

எங்க கூட நீ வந்துட்டா நாளைலருந்து ஆஃபீஸை யாரு கவனிச்சுக்கிறது. நாளையிலிருந்து நீ தான் கரெக்டா ஆஃபீஸ்க்கு போய் அங்க எல்லாம் சரியா நடக்குதானு செக் பண்ணி எனக்கு டெய்லி நைட் ரிப்போர்ட் பண்ணனும் என்றான் ஸ்ட்ரிக்டாக.

 

அண்ணா நீங்க இப்போ எல்லாம் ரொம்ப மாறிட்டீங்க. இவ கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க. என்கிட்ட மட்டும் இப்படி எரிஞ்சு விழுறீங்க.

 

சொன்ன வேலையை ஒழுங்கா பண்ணுடா முதல்ல என்றான் கரராக.

 

உடனே வள்ளியம்மையிடம் ஓடிய ஆரியன், பாட்டி நீங்களாவது அண்ணா கிட்ட சொல்லுங்க பாட்டி. நீங்க எல்லாரும் திரும்பி வந்ததும் ஆபீஸ்ல ஜாயின் பண்ணிக்கிறேன் ‌ப்ளீஸ் பாட்டி.

 

அபி அவன் தான் இவ்வளவு தூரம் கேட்கிறானே. பேசாம இவனையும் நம்ம கூட கூப்பிட்டு போலாம் பா.

 

பாட்டி இவனை நம்ம கூட கூப்பிட்டு போறது பத்தி பிரச்சனை இல்ல. ஆனா, இவன் வந்தா சும்மா இருக்க மாட்டான். யாழினியை டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருப்பான்.

 

இதை கேட்டவுடன் ஆரியனுக்கு தாங்க முடியவில்லை.

 

அண்ணா நீங்க வேற என்ன காரணம் சொல்லி இருந்தாலும் நான் கேட்டு இருப்பேன். இவளை நான் தொந்தரவு பண்ணுவேன்னு, நீங்க கூட பிறந்த தம்பி என்னை விட்டுட்டு போக பார்க்குறீங்களா. அப்போ உங்களுக்கு என்னை விட இவ தான் முக்கியமா என்றான் ஆதங்கமாக.

 

அபிமன்யு சற்றும் யோசிக்காமல், ஆமா, இவ தான் முக்கியம்.

 

யாழினி அபிமன்யுவிற்கு தெரியாமல் அபிமன்யுவின் பின் நின்றவாறு ஆரியனுக்கு சைகை மூலம் வெறுப்பேற்ற.

 

அண்ணா இப்போ நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. நானும் உங்க கூட தான் வருவேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டான் ஆரியன்.

 

வர வர நீ பண்றது எல்லாம் பார்த்தா சின்ன பசங்க பண்ற மாதிரி இருக்கு ஆரியன். வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க ட்ரை பண்ணு. இது தான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். திரும்ப இந்த மாதிரி விளையாட்டுத்தனமா எதுவும் பண்ணிக்கிட்டு இருக்காத.

 

அப்போ நான் உங்க கூட வரர்துக்கு உங்களுக்கு ஓகேவா? என்றான் எதிர்பார்ப்போடு.

 

அபிமன்யு கடுப்பாக, வந்து தொலை, வேற என்ன பண்றது. ஷைலஜா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு.

 

சொல்லு அபி.

 

நான் ஊரில் இருந்து ரிட்டன் வர வரைக்கும் நீயும், கிஷோரும் தான் கொஞ்சம் ஆபீஸை பார்த்துக்கணும். ஏதாவது இம்பார்டன்ட்னா நான் வீடியோ காலில் வரேன். எனக்கு டெய்லி நைட் ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்.

 

ஷ்யோர் அபி. நாங்க பார்த்துக்கிறோம். டோன்ட் வொரி யூ என்ஜாய் யுவர் ட்ரிப்.

 

ஆரணி அவசரமாக தன் அறையில் இருந்து கையில் ஒரு பையுடன் ஓடி வந்தாள்.

 

அண்ணா.. அண்ணா.. ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்.. நானும் வரேன் என்றாள் மூச்சு வாங்கிய படி.

 

அபிமன்யு சலிப்பாக, என்ன ஆரணி?.

 

ப்ளீஸ் அண்ணா, இவனை மட்டும் கூட கூப்பிட்டு போறீங்கல்ல என்னையும் கூப்பிட்டு போங்க. அங்க ஊரில் ஜாலியா இருக்கும்.

 

சரி வா.

 

பிறகு, ஒரு வழியாக அனைவரும் கிளம்பி அரசனூரை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்.

 

ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொன்றாக இருக்க.

 

இனி நடக்கப் போவது என்ன..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5