அவனதிகாரம் - 84
அதிகாரம் – 84
வெண்ணிலா,
“கயல் நீ ஏன் இப்போ ஒன்னும் இல்லாத
சின்ன விஷயத்த எல்லாம் இவ்வளவு பெருசு பண்ற. அவளுடைய வீட்டுக்காரருக்கு அவ ஊட்டி
விடுறா. இது என்ன அவ்வளவு பெரிய குத்தமா. ஏன் தேவையில்லாம எல்லா விஷயத்துக்குமே
அவள நீ குறை சொல்லிக்கிட்டே இருக்க”.
“நீ மட்டும் தான் இந்த வீட்டிலேயே
என்னை எதுவும் திட்டாம இருந்த. இப்போ நீயும் திட்ட ஆரம்பிச்சிட்டியா. உங்க
யாருக்குமே நான் முக்கியம் கிடையாதுல”
என்றாள் உடைந்த குரலில்.
“அப்படி எல்லாம் இல்ல டி. நீ ஏன்
எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்குற. எனக்கு நீயும் தங்கச்சி தான், யாழினியும்
தங்கச்சி தான். உங்க ரெண்டு பேரையுமே நான் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன். நீயே ஏன்
உன்னை பத்தி இப்படி எல்லாம் தாழ்த்தி பேசிக்குற. நாங்க யாருமே அப்படி உன்ன வேற
மாதிரி பார்க்கல”.
“உங்க எல்லாருக்குமே நான் லவ்
பண்ணி ஓடி போயிட்டேன்னு என் மேல கோபம். அதனால தான் என்னை நீங்க இன்னும் முழு மனசா
ஏத்துக்காம இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க. அது மட்டும் இல்லாம நீயும்,
யாழினியும் நல்ல வசதியான மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழுறீங்க.
ஆனா,
என்னோட வீட்டுக்காரருடைய குடும்பம் அப்படி ஒன்னும் வசதியான குடும்பம் இல்லயே.
சொந்த வீடு கூட கிடையாது. அதனால தான் என்னை யாருமே மதிக்க மாட்டேங்கிறீங்க” என்று படபடவென தன் மனதில் இத்தனை
நாட்களாக வைத்திருந்த வருத்தம் மொத்தத்தையும் கொட்டினாள்.
யாழினி
கயல்விழியின் கையை பிடித்தவள், “அக்கா நீ ஏன் இப்படி எல்லாம்
பேசுற. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் உன்ன நாங்க பார்க்கலக்கா. பாரு, நம்ம மூணு
பேருல நீ தான் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்க. உனக்கு பிடிச்ச வாழ்க்கை அமைந்திருக்கு. வெண்ணிலா அக்காவுக்கு படிக்கணும்னு ஆசை
இருந்துச்சு. ஆனா, அப்பா அதை நிறுத்திட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு.
அவளும் அந்த வாழ்க்கையை விருப்பப்பட்டு ஏத்துக்கிட்டு வாழ ஆரம்பிச்சிட்டா.
எனக்கு... என்னுடைய நிலைமையை நான் சொல்லி உனக்கு தெரியணும்னு இல்ல.
உன்னோட
கல்யாணத்துக்காக நான் ரெடியாகினேன் கா. ஆனா, அன்னைக்கு எனக்கே கல்யாணம் நடக்கும்னு
நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை. நான் கனவுல கூட இப்படி எல்லாம் யோசிச்சதே
கிடையாது. எத்தனை நாள் எனக்கு கல்யாணம் ஆன பிறகு கூட, அவர் கிட்ட பேச முடியாம
கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா.
அக்காவுக்கு
பார்த்த மாப்பிள்ளையை சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்ம கல்யாணம் பண்ணிட்டோமே. எப்படி
அவரை என்னுடைய கணவரா பார்க்க முடியும்னு எத்தன நாள் நான் மனசுக்குள்ளேயே புழுங்கி
இருக்கேன்னு உனக்கு தெரியுமா..
ஜீவா மாமாவ எப்படி
வெண்ணிலா அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையா நான் பார்த்தேனோ, அப்படி தான் இவரையும்
உனக்கு பார்த்த மாப்பிள்ளையா நான் பார்த்தேன். கடைசியில எனக்கே அவர் கூட கல்யாணம்
நடக்கும்னு நான் கனவுல கூட நினைச்சது இல்லக்கா.
நடந்த
எல்லாமே எதோ கனவு மாதிரி நடந்துடுச்சு. கல்யாணம் ஆன பிறகு கூட, பல நாள் நடந்தது
எல்லாமே கனவா இருக்கக் கூடாதான்னு நான் நினைச்சு ஏங்கி இருக்கேன். ஸ்வேதா
கல்யாணத்துல தான் அவர் என்னை விரும்பி கல்யாணம் பண்ணி இருக்காருனு
தெரிஞ்சுகிட்டேன்.
அதுவரைக்கும்
உனக்கு பார்த்த மாப்பிள்ளையை அவசரத்துல எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களேனு
நான் ரொம்ப கவலைப்பட்டு இருக்கேன்க்கா. என்னால அவரை என்னுடைய கணவரா யோசிக்க கூட
முடியாம தவிச்சிருக்கேன்.
ஸ்வேதா கல்யாணத்துல
உன்னுடைய லைஃப் செட்டில் ஆனதை பார்த்ததுக்கு அப்புறம், இவர் என்னை விரும்பி
கல்யாணம் பண்ணி இருக்காருனு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா நான்
இவரை கணவராவே ஏத்துக்கிட்டேன்” என்று கூறி முடிக்கும் போது
யாழினியின் கண்களில் கண்ணீர் சுரந்திருந்தது.
யாழினியின்
வார்த்தைகளை கேட்ட பிறகே வெண்ணிலாவிற்கும், கயல்விழிக்கும் யாழினியின் உணர்வு
புரிந்தது. அக்கா இல்லை என தங்கையை திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அப்பொழுது
இருந்த சூழலில் இவர்களின் குடும்பத்தினருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று
மட்டுமே தோன்றியது. என்ன செய்வது என்று அறியாமல் யாழினியை அபிமன்யுவின் பேச்சைக்
கேட்டு திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டனர்.
அதன்
பின்பு, அவளின் வேதனையை நினைத்து இவர்கள் வருந்தினாலும், அந்த இடத்தில் இருக்கும்
யாழினியின் வலி பெரியதல்லவா..! இந்தக் கோணத்தில் கயல்விழி சிந்தித்துப் பார்த்ததே
இல்லை.
தன்னுடைய
வாழ்க்கையை தன் உடன் பிறந்தவர்களின் வாழ்க்கையினோடு எப்பொழுதுமே ஒப்பிட்டு
பார்த்து பேசுவாளே தவிர, இந்த திருமணத்தினால் யாழினியின் மனது ஆரம்ப காலத்தில்
எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்று அவள் சற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
நல்ல
வசதியான இடம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று மட்டுமே இதுவரை
சிந்தித்திருக்கிறாள். தன் தங்கையின் மனதிற்குள் இவ்வளவு வருத்தங்கள் இருக்கின்றதா
என்று ஆறுதல் கூற கூட வார்த்தைகள் இன்றி அமர்ந்திருந்தாள்.
“பார்த்தியா கயல். ஏதோ உனக்கு
மட்டும் தான் கஷ்டம். நீ மட்டும் தான் கஷ்டப்படுற மாதிரி வார்த்தையை கொட்டிட்டியே.
இவளுடைய கஷ்டத்துக்கு முன்னாடி உன்னுடையது எல்லாம் ஒன்னுமே கிடையாது” என்றாள் கோபமாக.
“இவ்வளவு நாள் உன்னுடைய லைஃபையும்,
என்னுடைய லைஃபையும் தான் நான் கம்பேர் பண்ணி யோசிச்சு இருக்கேன். எனக்கு பார்த்த
மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு அதை ஏத்துக்க முடியாம இவ்வளவு கஷ்டப்பட்டு
இருப்பனு நான் நினைச்சது இல்ல. சாரி யாழினி” என்றாள் வருத்தமான குரலில்.
யாழினி
தன் கண்களை துடைத்துக் கொண்டு, “பரவாயில்லக்கா. ஆனா, திரும்பவும்
இப்படி மத்தவங்களுடைய லைப் கூட உன்னுடைய லைஃபை கம்பேர் பண்ணி பார்க்காத. உனக்கு நீ
ஆசைப்பட்ட மாதிரி நல்ல லைஃப் அமைஞ்சிருக்கு. பணத்தை எப்போ வேணும்னாலும்
சம்பாதிக்கலாம். ஆனா, நல்ல குடும்பத்தை சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். உனக்கு அது
தானாவே கிடைச்சிருக்கு. தேவையில்லாம யோசிச்சு நீயே அதை கெடுத்துக்காதக்கா”.
யாழினியை
பின்தொடர்ந்து வந்த அந்த உருவம் இவர்களின் உரையாடலையும் கேட்டுவிட்டு மறைந்து
விட்டது.
கயல்விழி,
“நீ சொன்னது சரி தான். உன்னுடைய
இடத்துல இருந்து பார்த்தா நீ சொல்றது எல்லாமே சரிதான். ஆனா, அதுக்காக உன்னுடைய
வீட்டுக்காரருக்கு நீ சப்போர்ட் பண்ணி பேசாத. அவர் பண்ணது கொஞ்சம் கூட சரி
கிடையாது. உன்னை கல்யாணம் பண்றதுக்காக என்னை எவ்வளவு தாழ்த்தி பேசினார் தெரியுமா”.
“அவர் என்ன பேசினார்னு எனக்கு
எதுவும் தெரியாதுக்கா. ஆனா, உன் மனசு வருத்தப்படுற மாதிரி அவர் ஏதாவது பேசி
இருந்தா அவருக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். இப்போ நீ பிரக்னண்டா
இருக்க இந்த நேரத்துல சந்தோஷமா இருக்கணும்.
தேவையில்லாததை
எல்லாம் போட்டு மனசுல குழப்பிக்காத. கல்யாணமான இத்தன மாசத்துல ஸ்வேதா
கல்யாணத்துக்கு வந்துட்டு போனதுக்கு அப்புறம் நான் இப்போ தான் நம்ம வீட்டுக்கே
வந்து இருக்கேன். ஆனா, நீ அப்படி இல்ல. நினைச்ச நேரம் வரலாம், நினைச்ச நேரம்
போகலாம்.
என்னை
எல்லாரும் நல்லா பார்த்துக்குறாங்கனு நினைச்சு நீ தேவையில்லாம வருத்தப்படுற. நான்
இப்போ ஊருக்கு போயிட்டா கூட, திரும்ப வர எத்தன மாசம் ஆகும்னு எனக்கே தெரியாது. நீ
வருத்தப்படுற அளவுக்கு எல்லாம் நான் அடிக்கடி வரமாட்டேன்க்கா” என்று வருத்தமான குரலில் கூறிவிட்டு
எழுந்து சென்று விட்டாள்.
கயல்விழிக்கு
தான் சிந்திக்காமல் கோபத்தில் அதிகப்படியாக பேசி விட்டோம் என்று புரிந்தது.
ஆனாலும், யாழினியிடம் சமாதானம் பேச தன்மானம் தடுத்தது.
எழுந்து
செல்லும் யாழினியை பார்த்து உள்ளுக்குள் வருத்தம் ஏற்பட்டாலும், வெளியே அவளை
தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் அமர்ந்திருந்தாள்.
வெண்ணிலா
கோபமாக, “இப்போ உனக்கு சந்தோஷமா. அவ
பேசுனது எல்லாம் கேட்டல்ல. அவ மனசுல எவ்வளவு வருத்தம் இருக்குனு பாரு. நீயும்,
நானும் கல்யாணம் ஆனதிலிருந்து அடிக்கடி அம்மா வீட்டுக்கு வரோம். அவ என்ன
அப்படியா... அவளோட வீட்டுக்காரர் அம்மா வீட்டுக்கே கூப்பிட்டு வர மாட்டேங்குறார்.
இப்போ
கூட ஏதோ கோவிலுக்கு போகணும்ன்றதுக்காக தான் கூப்பிட்டு வந்து இருக்கார். அந்த வேலை
முடிஞ்சதும் திரும்ப கூப்பிட்டு போயிடுவார். அதுக்கு அப்புறம் அவ சொன்ன மாதிரி
தான் எத்தனை மாசம் ஆகுமோ அது யாருக்குமே தெரியாது.
மத்தவங்க
மனச நோகடிக்கிற மாதிரி பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது யோசிச்சிட்டு அப்புறம்
பேசு கயல். நம்ம மூணு பேர்ல எல்லா விஷயத்துக்குமே சரியா முடிவு பண்ணி பேசுறது நீ
தான். நானும், யாழினியும் எந்த விஷயத்துக்குமே பேசுறதுக்கு ரொம்ப யோசிப்போம்.
ஆனா, நீ
அப்படி கிடையாது. தைரியமா எல்லாத்துக்குமே முடிவெடுத்து பேசிடுவ. ஆனா, இப்போலாம்
நீ ரொம்ப மாறிட்ட கயல் பழைய மாதிரி இல்ல. எதுக்கெடுத்தாலும் கோவப்படுற. நீயே உன்னை
ஏன் தாழ்த்தி நினைச்சுக்குறனு எனக்கு புரியல. யாழினி சொன்னது தான் நானும் சொல்றேன்.
உனக்கு
கிடைச்சிருக்குற நல்ல வாழ்க்கையை நீயே குறைச்சு எடை போடாத. பணத்தை எப்போ
வேணும்னாலும் சம்பாதிக்கலாம். நீயே தனியா உட்கார்ந்து யோசிச்சு பாரு. நீ எவ்வளவு
மாறி இருக்கனு உனக்கே தெரியும். நீ திரும்ப எங்களுக்கு பழைய கயலா வேணும். இந்த
புது கயல் எங்களுக்கு பிடிக்கல” என்று விட்டு எழுந்து சென்று
விட்டாள்.
கயல்விழிக்கும்
தற்சமயம் இந்த தனிமை தேவைப்பட்டது. அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோமே,
இதனால் அவளின் மனது எவ்வளவு வேதனைபட்டிருக்கும் என்று தன் தவறை உணர்ந்தவள். இனி
இப்படி தேவையில்லாத பேச்சை பேசக்கூடாது என்று முடிவெடுத்தாள்.
யாழினி
இவ்வளவு நாட்களில் யாரிடமும் கூறாத விஷயத்தை தன் அக்காக்களிடம் கூறிவிட்டு
வந்திருக்கிறாள். உடன் பிறந்தவர்களிடம் தன் மனதில் இருக்கும் விஷயத்தை பகிர்ந்து
கொண்டதில் அவளிற்கும் சற்று மனதிற்கு ஆறுதலாக இருந்தது. அப்பொழுது அவளின் செல்
போன் இசைக்க, அதை எடுத்து பார்க்க ஸ்வேதா தான் அழைத்து இருந்தாள்.
ஆர்வமாக
போனை அட்டென்ட் செய்தவள் தன் காதில் வைத்தபடி, “ஹலோ ஸ்வேதா எப்படி இருக்க?”.
“என்ன டி ஊருக்கு வந்து இத்தன நாள்
ஆகுது என் ஞாபகமே உனக்கு வரலையா. ஒரு வார்த்தை கூட நீ சொல்லவே இல்ல. அண்ணா சொல்லி
தான் எனக்கே தெரிந்தது” என்றாள் கோபமாக.
“அப்படி எல்லாம் இல்ல டி. கோவில்
போறது அப்படி இப்படினு கொஞ்சம் பிஸியாவே போயிடுச்சா. அதான் உனக்கு சொல்ல முடியல.
சரி நீ சீக்கிரமா கிளம்பி வா”.
“சீக்கிரம் கிளம்பி வானா
எப்படி வரர்து. என் வீட்டுக்காரர் கிட்ட கேட்டுட்டு வரேன்”.
“சரி டி கேட்டுட்டு வா”.
ஸ்வேதா,
“சரி” என்று அழைப்பை துண்டித்தவள்.
அன்றே
தன் கணவனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு இவர்களின்
வீட்டிற்கு யாழினியைப் பார்க்க வந்து சேர்ந்தாள்.
ஸ்வேதாவின்
திருமணத்திற்கு வந்தது அதோடு இன்று தானே இவர்கள் சந்திக்கிறார்கள். திருமணத்திலும்
மணமகள் என்பதால் ஸ்வேதாவால் அதிக நேரம் யாழினியுடன் செலவிட முடியவில்லை.
மேலும்,
திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையினால் யாழினி உடனே கிளம்பும் படி ஆகிவிட்டது. அதோடு
இன்று தான் இருவரும் சந்திக்கின்றனர்.
யாழினியை
பார்த்த ஸ்வேதா ஆர்வமிகுதியில் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். ஆனந்தத்தில்
கண்கள் கலங்கிவிட்டது.
ஸ்வேதா,
“எப்படி இருக்க? உன்ன பார்த்து
எத்தன மாசம் ஆச்சு. கல்யாணத்தப்போ கூட சரியா உன்கிட்ட பேசவே முடியல. நல்லா
இருக்கியா?”.
“நான் நல்லா இருக்கேன் டி. நீ
எப்படி இருக்க? நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க?” என்று ஸ்வேதாவின் கணவரை வரவேற்றாள்.
ஸ்வேதாவின்
கணவர் சந்துரு, “நல்லா இருக்கேன் மா. நீங்க எல்லாரும்
எப்படி இருக்கீங்க? ஸ்வேதா நீங்க ஊர்ல இருந்து வந்திருக்கீங்கனு சொன்னா, அதான்
விட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று கூறிவிட்டு
கிளம்பிவிட்டார்.
“இப்போ தானே வந்தீங்க. கொஞ்சம்
நேரம் இருந்துட்டு போங்கண்ணா” என்று யாழினி எவ்வளவோ கூறியும்.
அவர், “இல்லமா நான் அப்புறமா வந்து ஸ்வேதாவை
கூப்பிட்டுக்கிறேன்” என்று விட்டு கிளம்பி விட்டார்.
“என்ன டி உன் வீட்டுக்காரர் தங்க
சொன்னா தங்காமலே போயிட்டாரே”.
“அவர் அப்படி தான் டி. நான் தான்
உன்கிட்ட அப்போவே போன்ல சொன்னேன்ல. அதை விடு வா உன்கிட்ட பேச நிறைய விஷயம் இருக்கு” என்று அவளின் கையை பிடித்து அழைத்துக்
கொண்டு பம்பு செட் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.
யாழினியின்
மனதை இப்பொழுதாவது கயல்விழி புரிந்து கொண்டு இருப்பாளா..?
கருத்துகள்
கருத்துரையிடுக