அவனதிகாரம் - 89

 

அதிகாரம் – 89

 

ஆரியன், இவ்வளவு நாளா நீ எங்க இருந்த... இப்போ தான் என்னை பார்க்க வரணும்னு உனக்கு தோணுச்சா... உன்ன நான் ரொம்ப மிஸ் பண்னேன் தெரியுமா... என்று தனக்குத் தானே பேசியபடி தன் ரூமின் பால்கனியில் இருந்து வர்ஷினியை பார்த்து பேசிக்கொண்டு இருந்தான்.

 

அவனே அறியாமல் அவனின் பின்னே வந்து நின்றிருந்த ஆரணி, என்ன இவன், லூசு மாதிரி தனியா பேசிக்கிட்டு இருக்கான் என்று யோசித்தாள்.

 

அவன் அருகில் சென்று நின்று பார்க்க. அப்பொழுது தான் ஆரணிக்கு புரிந்தது. அவன் வர்ஷினியை பார்த்து பேசிக்கொண்டு இருப்பது.

 

அவனின் தலையில் கொட்டியவள், டேய் இங்க நின்னுகிட்டு என்னடா பண்ற?.

 

ஆரியன் ஆரணியை பார்த்ததும் பதட்டமாக, இதோ இந்த செடிக்கு தண்ணி ஊத்தலாம்னு வந்தேன். பாரு, எப்படி வாடிப்போச்சு... என்னை தவிர யாருமே இதை கவனிக்கிறதே இல்ல என்று தன் பால்கனியில் வைத்திருக்கும் கள்ளிச் செடியை பார்த்து பரிதாபப்பட்டபடி பேசிக் கொண்டிருந்தான்.

 

ஹலோ சார், இந்த செடிக்கு அதிகமா தண்ணி ஊத்துற வேலை இல்லனு தான நீங்களே உங்க பால்கனியில் வச்சிருக்கீங்க. இதுக்கு தண்ணி ஊத்தாம வாடி வேற போயிடுச்சா என்று அங்கலாயித்தாள். உண்மையை சொல்லு, இங்க நின்னுகிட்டு யாரை பார்த்த?.

 

ஹி.. ஹி... சும்மா தான் பார்த்துட்டு இருந்தேன். அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கால்ல என்றான் வர்ஷினியை கைகாட்டி.

 

அவனின் கைமீது அடித்த ஆரணி, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்கிட்டயே வந்து அவள காட்டி அழகா இருக்கானு சொல்லுவ.

 

ஸ்ஸ்... ஆஆ... வலிக்குதுடி லூசு என்றான் தன் கையை தேய்த்து விட்டபடி.

 

தங்கச்சி கிட்ட பேசுற பேச்சா டா இது. நீ எல்லாம் ஒரு அண்ணனா.

 

என்ன என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தை கேட்டுட்ட. என்னுடைய பிரண்ட்ஸோட லவ்வுக்கு எல்லாம் அவங்க தங்கச்சி எவ்வளவு ஹெல்ப் பண்றாங்க தெரியுமா?.

 

அப்போ நீ அந்த பொண்ண சைட் அடிக்கல, லவ் பண்றியா?”.

 

அப்படி தான்னு சொல்ல முடியாது. இப்போ தான் லைட்டா என்று தன் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் சிறியதாக காட்டி கூறினான்.

 

இப்போ தான் பார்த்த, பார்த்த உடனே லவ்வா....

 

இதுக்கெல்லாம் நேரம், காலம் பார்த்தா லவ் பண்ண முடியும். பார்த்த உடனே பிடிச்சிடுச்சு, நான் என்ன பண்றது. ஐ திங்க், லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு நினைக்கிறேன் என்றான் யோசித்தபடி.

 

இதோ, இப்போவே போய் அபி அண்ணா கிட்ட சொல்றேன். அவங்க சொல்லுவாங்க, இது உனக்கு ஃபர்ஸ்ட் சைட்டா இல்ல, இது தான் உனக்கு லாஸ்ட் சைட்டானு.

 

ஆரணியின் கையைப் பிடித்த ஆரியன், ஏய்... ப்ளீஸ் டி, அப்படியெல்லாம் பண்ணாத. என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா... இதுவரைக்கும் எந்த பொண்ணயாவது நான் இப்படி  பார்த்திருக்கேனா. யாரைப் பார்த்தாலும் மொக்கையா இருக்காங்களேனு தான் தோணும். ஆனா, இந்த பொண்ண பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

 

ஆரியன் ஏதோ விளையாட்டுத் தனமாக பேசுகிறான் என்று ஆரம்பத்தில் நினைத்த ஆரணி.

 

அவன் உண்மையிலேயே பேசுகிறான் என்பதை உணர்ந்ததும், என்னடா நிஜமாவே அந்த பொண்ண நீ லவ் பண்றியா?.

 

லவ்வானு தெரியல. பட், இப்போதைக்கு என்னுடைய கிரஷ் என்றான் வெட்கப்பட்டு கொண்டு.

 

என்ன கருமமோ பண்ணித்தொல. ஆனா, தயவு செஞ்சு மறுபடியும் என் முன்னாடி மட்டும் இப்படி வெக்கப்பட்டுடாத என்று விட்டு வெளியேறி விட்டாள்.

 

இவளுக்கு பொறாமை... நமக்கே இப்போ தான் முதல் முறையா ஒரு கிரஷ் கிடைச்சிருக்கு. அதை பார்த்து எப்படி பொறாமைபடுறா பாரு என்று ஆரணியை திட்டியவன், மீண்டும் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.

 

அபிமன்யு அறையில் இருந்து கீழே இறங்கி வந்து பார்க்கையில், ஹாலில் யாரையுமே காணவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள் என்றால் ஆரணி, ஆரியன், யாழினி என மூவரும் ஹாலில் அமர்ந்து ரிமோட்டை எடுத்து வைத்துக்கொண்டு சண்டையிட்டு கொண்டிருப்பார்கள். அல்லது, குடும்பமாக உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.

 

இன்று வழக்கத்திற்கு மாறாக வீடு அமைதியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அபிமன்யு பொதுவாக வீட்டில் தங்க மாட்டான். ஆனால், யாழினி வந்த பிறகு, இவர்களின் கலகலப்பான பேச்சு அபிமன்யுவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்தது.

 

இப்பொழுதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை என்றால் குடும்பத்துடன் செலவிடும் தினமாக அபிமன்யுவிற்கு தோன்றும் அளவிற்கு மனம் மாறி இருந்தான். அதற்கு முழு காரணம் வேறு யாரும் இல்லை, யாழினி மட்டும் தான்..

 

யாரையும் ஹாலில் காணாததால் கிச்சனை நோக்கி சென்ற அபிமன்யு மீராவிடம், மாம், எங்க யாரையுமே காணும்?.

 

மீராவிற்கு பெரும் ஆச்சரியம்... தன் மகன் முதல் முறை கிச்சனிற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறான்.

 

ஆச்சரியமாக அபிமன்யுவை பார்த்தவர், என்ன அபி கிச்சனுக்கு வந்திருக்க? என்றார் அவன் கூறியதை முற்றிலுமாக மறந்துவிட்டு.

 

என்ன மாம், இவ்வளவு ஷாக்கா பார்க்குறீங்க?.

 

உனக்கு ஞாபகம் இருக்கா அபி, இதுக்கு முன்னாடி நீ எப்போ கிச்சனுக்கு வந்தேன்னு.

 

இதற்கு முன்பு வந்திருந்தால் தானே ஞாபகம் இருப்பதற்கு.. மீராவிற்கு பெரும் மகிழ்ச்சி தன் மகன் கிச்சனிற்கு அதுவும் தன்னை தேடி..‌

 

ஃபர்ஸ்ட் டைம் இப்போ தான் கிட்சனுக்கு வந்திருக்க அபி. இது எல்லாத்துக்கும் யாழினி தான காரணம்.

 

மாம், நீங்க எல்லா க்ரிடிட்டும் அவளுக்கு மட்டும் தான் கொடுக்குறீங்க. எங்க அவள ஆளையே காணோம்?.

 

அப்போ நீ அம்மாவ தேடி வரலையா. யாழினியை தேடி தான் வந்திருக்க என்றார் கிண்டலாக.

 

மாம், வர வர இந்த யாழினியோட சேர்ந்து நீங்களும் அவள மாதிரியே மாறிக்கிட்டு வரீங்க.

 

நான் மட்டுமா மாறுறேன், நீயும் தான் நிறைய மாறி இருக்க.

 

அதில் அபிமன்யுவிற்கு மெலிதாக வெட்கப் புன்னகை அரும்பியது.

 

என் பையன நான் எப்படி பார்க்கணும்னு ஆசைப்பட்டேனோ... அதே மாதிரி மாத்தி இருக்கா அபி. எனக்கு யாழினி மாதிரி ஒரு மருமக கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்றார் மன நிறைவாக.

 

அபிமன்யு தன் கட்டை விரலால் நெற்றியை தேய்த்தபடி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன், ஓகே மாம். எங்க அவள காணும்?.

 

சொல்ல மறந்துட்டேன் பாரு. அவளுடைய பிரெண்ட்ஸ் வந்திருக்காங்க. எல்லாம் கார்டன்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருக்காங்க.

 

வந்துட்டாங்களா, ஆமா நேத்து சொல்லிக்கிட்டு இருந்தா வராங்கனு. ஓகே மாம் அவங்க படிக்கட்டும். எனக்கு ஒரு காபி வேணும்.

 

நீ ஹால்ல உட்காரு நான் எடுத்துட்டு வரேன். அப்பா கூட உன்கிட்ட ஷைலஜாவுடைய மேரேஜ் பத்தி ஏதோ டிஸ்கஸ் பண்ணனும்னு சொல்லிகிட்டு இருந்தாங்க.

 

சரி என்றவன் கார்டனிற்கு சென்று யாழினியை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு கார்டனை நோக்கி செல்ல.

 

ரவி, என்னடா இது, படிக்கலாம்னு வந்தா இப்போ படிக்கிற மூடே இல்ல என்றான் அலுப்பாக.

 

வர்ஷினி, ஆமா ரவி, எனக்கும் இந்த இடத்துல படிக்கிற மூடே போயிடுச்சு. இந்த இடமே ரொம்ப அழகா இருக்குல்ல என்றாள் சுற்றி முற்றி பார்த்தபடி.

 

இவர்களை பார்த்தபடி அபிமன்யு தன் கைகளை கட்டிக்கொண்டு நிற்க.

 

அசோக், யாழினி, இவங்க ரெண்டு பேருக்கும் படிக்கிற ஐடியாவே இல்லையாம். பேசாம கிளம்பி போக சொல்லு. நம்ம மட்டும் படிப்போம்.

 

இவர்கள் அனைவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க. அஸ்வின் மட்டும் யாழினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அது அபிமன்யுவின் பார்வையில் தப்பாமல் பட்டது.

 

அதற்குள் மீரா உள்ளிருந்து, அபி... என்று அழைக்க. அபி உள்ளே சென்று விட்டான்.

 

யாழினி, சரி வாங்க. எல்லாரும் ஒரு டீ குடிச்சிட்டு வந்து படிக்க பிரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணலாம் என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

 

வர்ஷினி யாழினியின் கையைப் பிடித்து பின் இழுத்தவாறு, யாழினி, யார் இந்த ஹேண்ட்ஸம்? என்று அபிமன்யுவை கை காட்டி கேட்டாள்.

 

ஓ... அதுவா, அது தான் என் அத்தையுடைய ஃபர்ஸ்ட் பையன் என்று விட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

 

பிறகு, அனைவருக்கும் டீ, ஸ்னாக்ஸ் என கொடுத்தனர். அபிமன்யு அஸ்வினையே நோட்டம் விட்டபடி அமர்ந்திருந்தான்.

 

அசோக் அபிமன்யுவிடம், என்ன சார், நீங்க என்ன பண்ணுறீங்கனு சொல்லவே இல்லையே.

 

நீங்க கேட்கவே இல்லையே... பிஸ்னஸ் பண்றேன்.

 

 

அதான் சார், என்ன பிசினஸ் ஏதுனு ஒன்னும் சொல்லலையே.

 

என்ன பிஸ்னஸ்ன்னு சொன்னா என் கூட பார்ட்னர்ஷிப் வச்சுக்க போறீங்களா?.

 

அதுக்கு இல்ல சார். சும்மா ஒரு ஜென்ரல்நாலேஜுக்கு தான் கேட்டேன்.

 

ஏன் யாழினி, என்னை பத்தி இவங்க கிட்ட எதுவுமே சொல்லலையா?.

 

ரவி, ம்ம் சொல்லி இருக்காண்ணா. அவங்க அத்தைக்கு மூணு பசங்கனு சொன்னா. ஆனா, இப்போ தான நேர்ல பார்க்கிறோம்.

 

அப்படியா.. என்று விட்டுவிட்டான்.

 

என்ன தான் பேச்சு இவர்களிடையே இருந்தாலும், கவனம் முழுவதும் அஸ்வினின் மேலே இருந்தது. அவனிடம் எதுவோ சரி இல்லை என்று அபிமன்யுவிற்கு உறுத்தலாக இருந்தது.

 

ஆரியன் வேண்டும் என்றே வர்ஷினிக்கு எதிரே அபிமன்யுவின் அருகில் வந்து அமர்ந்தவன், அண்ணா நாளையிலிருந்து நானும் கம்பெனியில் ஜாயின் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.

 

ஆரியனின் பார்வையை வைத்தே அவனின் நோக்கம் தெளிவாகப் புரிய.

 

என்னுடைய தம்பியா இருந்தாலும், நீ அங்க ஒரு எம்பிளாய் தான். வேலையை கத்துக்குற வரைக்கும் நீயும் ஒரு எம்பிளாயா இருந்து தான் ஒர்க் பண்ணனும். அதுக்கு அப்புறம் உனக்கு என்ன போஸ்டிங் கொடுக்கலாம்னு நானே டிசைட் பண்ணி சொல்லுவேன்.

 

அண்ணா அதெல்லாம் முடியாது. எனக்கு ஏதாவது பெரிய போஸ்டிங் கொடுங்க. அது நம்ம கம்பெனி தான, நான் ஏன் எம்பிளாயா ஒர்க் பண்ணனும்?.

 

எடுத்த உடனே பெரிய விஷயம் கிடைச்சா, அந்த வேலையுடைய வேல்யூ என்னனு தெரியாம போயிடும். ஆரம்பத்தில் இருந்து கத்துக்கிட்டா தான் அந்த வேலைக்கு வரர்து எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியும். இவ்வளவு நாள் ஆபீஸ் வராம டிலே பண்ணதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட்டும் வேணும் இல்ல என்று கூறிவிட்டு தன் கையில் இருக்கும் நியூஸ் பேப்பரை புரட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

வர்ஷினி யாழினியின் கையை சுரண்ட.

 

என்னடி.

 

உன்னோட அத்த பையன் செமையா இருக்கார் டி என்றாள் தன் எதிரே அமர்ந்து இருப்பவர்களை பார்த்து.

 

யாழினிக்கு இவள் அபிமன்யுவை கூறுகிறாளா அல்லது, ஆரியனை கூறுகிறாளா என்று புரியவில்லை. ஒரு வேளை, அபிமன்யுவை கூறினால்...

 

யாழினி பதட்டமாக, படிக்க வந்துட்டு என்ன வேலை பார்க்குற நீ.

 

அதுக்காக அழகான பையன பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா. அழகை பாராட்டணும்ல... செம்ம ஹாண்ட்சம்... அவருடைய லுக்கு, ஸ்டைலு எல்லாமே வேற லெவல். இப்படி ஒரு அத்தை பையன் எனக்கு இருந்தா, எப்படி இருக்கும்...! என்றாள் தன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு தன் எதிர்ப்புறத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி.

 

யாழினிக்கு, வர்ஷினியின் பேச்சில் சிறிதாக பொறாமை தலை தூக்க, சரி வா நாம படிக்க போகலாம்.

 

ஏன் டி... இப்போ என்ன அவசரம். இரு, கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்.

 

அப்புறம் டைம் ஆயிடும். நீ ஹாஸ்டலுக்கு வேற போகணும்ல.

 

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் உன் கூடவே ஸ்டே பண்ணிக்குறேன். நாளைக்கு போய்க்கிறேன் என்றாள் தன் பார்வையை சற்றும் அகற்றாமல்.

 

ஆரியன் வர்ஷினியின் முன்னால் கெத்தாக பெரிய வேலைக்கு செல்ல போகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே அபிமன்யுவிடம் அப்படி கூற. அவனோ அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டான். அதில் கடுப்பாக அமர்ந்திருந்தான்.

 

ஆரணி வேண்டுமென்றே அவனை மேலும் வெறுப்பேற்றும் பொருட்டு அனைவரின் முன்புமே, என்ன அண்ணா பெரிய வேலைக்கு போக போறீங்க போல என்று கிண்டல் செய்ய.

 

ஆரியன் அவளை பார்த்து முறைத்தவன். அனைவரின் முன்பும் எதுவும் கூற முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

ஆரணி, என்னடா ஷாக்ல வாயையே திறக்க முடியலையா. இவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருக்க என்று மேலும் கிண்டல் செய்தாள்.

 

யாழினிக்கு இவர்களின் பேச்சுக்கள் எதுவும் பெரிதாக தெரியவில்லை. வர்ஷினி எங்கே அபிமன்யுவை தான் பார்க்கிறாளோ என்று உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது.

 

தேவையில்லாத ஆசையை ஏதாவது மனதில் வளர்த்துக் கொண்டால் என்ன செய்வது என்று சிந்தித்த யாழினி, வேண்டுமென்றே வர்ஷினியின் முன்பு அபிமன்யுவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

யாழினி, ஆரணி, அதான் ஆரி சும்மா இருக்கான்ல. நீ ஏன் அவன் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்க.

 

நம்ம ஏதாவது இப்படி அப்சட்டா இருந்தா, நம்மள எப்படி கிண்டல் பண்ணுவான். இப்போ அவருக்கு ஒன்னுனா நம்ம சும்மா இருக்கணுமா.

 

யாழினி வேண்டுமென்றே வர்ஷினியின் முன்பு தானும், அபிமன்யுவும் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள அபிமன்யுவை பார்த்து, மாமா இங்க பாருங்க. ஆரணி ஆரியனை ரொம்ப கிண்டல் பண்றா என்று கூற.

 

ஆரணி சும்மா இரு. அவன் தான் அமைதியா இருக்கான்ல.

 

அபிமன்யுவை மீறி ஆரணி கிண்டல் செய்வாளா, அமைதியாகிவிட்டாள்.

 

தேங்க்ஸ் மாமா என்று அபிமன்யுவின் கையை பிடித்துக் கொள்ள.

 

வர்ஷினியிடம் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இருந்ததாக தெரியவில்லை.

 

ஆனால், அஸ்வினிடம் தான் தடுமாற்றங்கள் ஏற்பட்டது. அதை யாழினி கவனிக்க தவறிவிட்டாள். ஆனால், அபிமன்யு சரியாக கவனித்து விட்டான்.

 

அபிமன்யு நடப்பது அனைத்தும் நல்லதுக்கு தான். யாழினி தன்னை அறியாமலே என்னிடம் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது அஸ்வினின் மனதில் இருக்கும் எண்ணத்தை மாற்றும் என்று எண்ணினான்.

 

யாழினி, வர்ஷினிக்காக அபிமன்யுவிடம் நெருக்கமாக இருப்பது போல் காட்ட. அவளே அறியாமல், அது அஸ்வினுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

யாழினி கவனிக்க தவறிய விஷயத்தை அபிமன்யு சரியாக கவனித்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5