அவனதிகாரம் - 90
அதிகாரம் – 90
அஸ்வினின்
முகமே சரியில்லை... அதை கவனித்த ரவி மெதுவாக, “அஸ்வின் என்னாச்சுடா..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?”.
“ஒன்னும் இல்லடா. கொஞ்சம் தலைவலியா
இருக்கு. நாம கிளம்பலாமா?”.
“என்னடா சொல்ற. இப்போ தானடா
வந்தோம். இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலையே. இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு
போகலாம். இரு” என்று விட்டு மற்றவர்களுடன்
பேச்சில் ஐக்கியமாகி விட்டான்.
அபிமன்யு
அஸ்வினை பார்த்து, “என்ன வந்ததிலிருந்து நீங்க ரொம்ப
சைலன்ட்டாவே இருக்கீங்க”.
யாழினி,
“மாமா அவன் பார்க்க தான் சைலன்டா
இருப்பான். ஆனா, காலேஜ்ல நான் ஜாயின் பண்ணதும் என்னை ராக் பண்ணதே இவன் தான்”.
“ஓ... சார் தான் அவரா...”.
“இல்ல சார். அது சும்மா...
விளையாட்டுக்காக பண்ணது”.
“அஸ்வின் மாமா சும்மா
விளையாட்டுக்காக தான் கேட்குறாங்க. நீ ஒன்னும் சீரியஸா எடுத்துக்காத”.
ஆனாலும்,
அஸ்வினின் முகம் தெளிவடையவே இல்லை. ஆனால் அதற்கு காரணம் அபிமன்யு, யாழினியின்
நெருக்கம் மட்டுமே.
பிறகு,
இவர்கள் படிக்க செல்வதாக கூறிவிட்டு கார்டனுக்கு சென்று விட. மகேந்திரன்
அபிமன்யுவிடம் ஷைலஜாவின் திருமணத்தைப் பற்றிப் பேச தொடங்கினார்.
கார்டனில்
அஸ்வின் முகம் தெளிவடையாமலே அமர்ந்திருந்தான்.
வர்ஷினி
யாழினியிடம் கிசுகிசுப்பாக, “யாழினி உங்க மாமா ரொம்ப ஹேண்ட்ஸமா
இருக்கார் டி. எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு”.
“என்னடி சொல்ற” என்றாள் அதிர்ச்சியாக.
யாழினிக்கு
ஒரு நிமிடம் தன் இதயத்துடிப்பே நின்று விட்டது வர்ஷினியின் வார்த்தையை கேட்டு.
“ஆமா டி. எவ்வளவு மேன்லியா
இருக்காரு பார்த்தியா... ரொம்ப கூலா பேசுறார். எனக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு
நினைக்கிறேன்” என்றாள் வெட்கத்தோடு.
“என்னது... லவ்வா...!”.
வர்ஷினி
வெட்கப்பட்டு கொண்டே, “ஆமா டி. எனக்கு நீ தான் ஹெல்ப்
பண்ணனும்”.
“அவசரப்படாத வர்ஷீ... நான்
உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”.
“எதுவா இருந்தாலும் அப்புறமா
பேசிக்கலாம். என்னுடைய லவ்வுக்கு நீ ஹெல்ப் பண்ணுவியா, மாட்டியா...”.
“இவள் யாரை பற்றி கூறுகிறாள் என்று
தெரியவில்லையே. ஒருவேளை, ஆரியனை பற்றி கூறினால், நமக்கு எந்த பிரச்சினையும்
இருக்காது. ஆனால், ஆரியனை போய் எப்படி மேன்லி, ஹேண்ட்சம் எல்லாம் சொல்லுவா. ஆரியனை
விட அவர் தானே அழகு” என்று எண்ணியவள், “நீ யாரை சொல்லுற?”.
“அதான்டி எனக்கு முன்னாடி
உட்கார்திருந்தாரே, அவரை பார்க்கும் பொழுதே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவர்
பேசும் பொழுது பாத்தியா எப்படி தைரியமா பேசுனார். இந்த மாதிரி ஒரு ஆள தான் நான்
லவ் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்”.
யாழினிக்கு
பதட்டத்தில் நெஞ்சே அடைத்து விடுவது போல் இருந்தது.
‘என் புருஷனை கரெக்ட் பண்ணி தர
சொல்லி, என்கிட்டயே கேட்பா போலருக்கு’
என்று எண்ணியவள்.
அவசரமாக,
“வர்ஷினி நான் சொல்றதை ஒரு நிமிஷம்
கேளு”.
“நீ என்ன சொன்னாலும் என்னுடைய மனச
நான் மாத்திக்க மாட்டேன். அவர் தான் என்னுடைய லவ்வர்னு நான் டிசைட் பண்ணிட்டேன்.
நீ என்னோட ஃப்ரெண்ட், எனக்கு ஹெல்ப் பண்ணி தான் ஆகணும். உனக்கு வேற ஆப்ஷனே இல்லை”.
யாழினி
மற்றவர்கள் அமர்ந்திருப்பதையே மறந்து அவசரத்தில் சத்தமாக, “ஏய்... லூசு... அவருக்கு ஏற்கனவே கல்யாணம்
ஆயிடுச்சு டி”.
வர்ஷினியும்
தங்கள் சுற்றத்தை மறந்து விட்டாள், “என்னடி
சொல்ற. கல்யாணம் ஆயிடுச்சா.... எப்படி... எப்போ... யார் கூட....” என்றவள், “இல்ல, நான் உன்ன நம்ப மாட்டேன். நீ என்னை பிரான்க் பண்ற. அவரைப்
பார்த்தா கல்யாணமான ஆள் மாதிரி தெரியலையே. நீ பொய் தான சொல்ற. நான் உன்னை நம்ப
மாட்டேன்”.
“ஐயோ..! நான் நிஜமா தான் சொல்றேன்”.
“சும்மா சொல்லாத யாழினி. எங்க நான்
உன்னுடைய அத்தை பையனையே லவ் பண்ணி, மேரேஜ் பண்ணிடுவேனோனு தான நீ இப்படி எல்லாம்
சொல்லுற”.
“சரி, நீ என்கூட வா” என்று அவளின் கையை பிடித்து அழைத்து
சென்றவள், ஹாலில் மகேந்திரனுடன் அபிமன்யு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து
அபிமன்யுவை மட்டும் தனியாக வருமாறு சைகை செய்தாள்.
யாழினியின்
சைகை அபிமன்யுவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன’ என்று மீண்டும் அவன் தலையசைக்க.
“இவர் வேற, நேரம் பார்த்து பழி
வாங்குகிறார். ஒரு க்ளு கொடுத்தா கூட புரிஞ்சுக்க முடியல” என்று புலம்பியவள்.
அருகில்
அமர்ந்திருந்த ஆரியனை பார்த்து, அபிமன்யுவை தனியாக அழைத்து வரும்படி சைகை செய்ய.
அதை சரியாக புரிந்து கொண்டான் ஆரியன்.
‘சரி’ என்று கட்டைவிரலை தூக்கி காட்டியவன், “அண்ணா, ஒரு முக்கியமான வேலை கொஞ்சம்
வரீங்களா”.
மகேந்திரன்,
“ஆரி, என்ன முக்கியமான வேலை.
அதைவிட முக்கியமான விஷயத்தைப் பத்தி நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். ஷைலஜா உடைய
கல்யாண விஷயம் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம். டிஸ்டர்ப் பண்ணாத”.
அபிமன்யு,
“அப்பா ஒரு 2 மினிட்ஸ். நான் இப்போ
வந்துடறேன். அதான் அவன் கூப்பிடுறான்ல”
என்று கூறிவிட்டு ஆரியனும், அபிமன்யுவும் மொட்டை மாடிக்கு செல்வதாக சைகை
செய்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
அவர்களின்
பின்னேயே யாருடைய கவனத்தையும் கவராதவாறு யாழினியும், வர்ஷினியும் அவர்களை
பின்தொடர்ந்து மாடிக்கு சென்றனர்.
ஆனால்,
இது அனைத்தையுமே கவனித்துக் கொண்டிருந்த ஆரணி. இவர்கள் யாருமே அறியாமல் இவர்களை
பின் தொடர்ந்து சென்றாள்.
மொட்டை
மாடியை சென்றடைந்ததுமே ஆரியன், “என்னை எதுக்காக அண்ணாவ கூப்பிட்டு
வரச் சொன்ன”.
யாழினியின்
முகம் பதட்டமாக இருப்பதை உணர்ந்து அபிமன்யு, விரைந்து சென்று அவளின் அருகில்
நின்றவன், “என்ன ஆச்சு... ஏதாவது ப்ராப்ளமா?”.
அபிமன்யுவின்
மனதிற்குள், ‘அஸ்வின் ஏதேனும் கூறி
இருப்பானோ...’ என்று ஓட. ஆனால், இங்கு நடந்ததோ
தலைகீழாக இருந்தது.
யாழினி,
“ஆமா”.
“என்ன ஆச்சுனு சொல்லு”.
“வர்ஷினி, நீயே சொல்லு”.
‘அடிப்பாவி! இப்போ தான டி உன்கிட்ட
சொன்னேன். அடுத்த நிமிஷமே கொண்டு வந்து இப்படி நிக்க வச்சுட்டு சொல்லுனா...
என்னத்த சொல்றது’ என்று நினைத்தபடி தடுமாற.
யாழினி
மீண்டும், “சொல்லுடி..”.
“நான் என்ன டி சொல்றது” என்றாள் பதட்டமாக.
“இவகிட்ட உங்களுக்கு கல்யாணம்
ஆயிடுச்சுனு சொன்னா, இவ நம்பவே மாட்டேங்குறா” என்றாள் குற்றச்சாட்டு போல்.
அபிமன்யு,
ஆரியன் இருவருக்குமே ‘இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா...
அவள் நம்பாவிட்டால் என்ன... இதற்கு ஏன் யாழினி இவ்வளவு பதட்டப்படுகிறாள்’ என்று பார்த்தனர்.
வர்ஷினி,
‘ஐயோ..! இவள நம்பி வந்ததுக்கு
நல்லா மாட்டி விட்டுட்டா...’ என்று மனதிற்குள் யாழினியை
திட்டியபடி, வெளியே பல்லை இளித்தபடி நின்றிருந்தாள்.
அபிமன்யு,
“அவ்வளவு தானா... நான் கூட என்னமோ,
ஏதோனு நினைச்சு பயந்துட்டேன். இதெல்லாம் ஒரு விஷயமா யாழினி. ஏன் இதுக்கு போய்
இவ்வளவு பதட்டப்படுற”.
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு
தான. அதை நீங்களே அவகிட்ட சொல்லுங்க...”
என்று அவளின் பிடியிலேயே நின்றாள்.
ஆரியன்,
“யாழினி, இதை சொல்ல தான் இப்போ என்னை
அண்ணன கூப்பிட்டு மாடிக்கு வர சொன்னியா.. படிக்க தான நீங்க எல்லாரும் ஒன்னு
சேர்ந்து இருக்கீங்க. இப்போ எங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, ஆகலையானு டிஸ்கஸ்
பண்றது ரொம்ப முக்கியமா”.
“ஆமா..! முக்கியம் தான்..
சொல்லுங்க, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு தான.. யார் கூட கல்யாணம் ஆச்சு..
எல்லாம் சொல்லுங்க”.
அபிமன்யு
அதிர்ச்சியாக முகத்தை வைத்து கொண்டு, “என்ன...
எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா... எப்போ..?”.
யாழினி,
ஆரியன் இருவருமே அதிர்ச்சியாக ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்தனர்.
ஆரியன்,
‘இது உலக மகா நடிப்புடா சாமி..!’ என்று நினைக்க.
யாழினி,
‘என்ன இவர் இப்படி சொல்றாரு...
என்ன பண்றது’. “விளையாடாதீங்க மாமா, ஒழுங்கா உண்மையை சொல்லிடுங்க”.
“என்ன சொல்ல சொல்ற. எனக்கு தான்
இன்னும் கல்யாணமே ஆகலையே” என்றான் வேண்டுமென்று யாழினியை
வெறுப்பேற்றுவதற்காக.
உடனே
யாழினி பதட்டமாக வர்ஷனியின் புறம் திரும்பியவள், “வர்ஷினி, அவர் சொல்றதெல்லாம் நம்பாத. அவருக்கு கல்யாணம்
ஆயிடுச்சு. அவர் பொய் சொல்றாரு”.
வர்ஷினியோ,
‘இவளிடம் கூறாமலே இருந்திருக்கலாம்’ என்று அலுத்துப் போய்விட்டாள்.
யாழினி
கோபமாக அபிமன்யுவை பார்த்து, “அப்போ உங்களுக்கு கல்யாணம்
ஆகலையா... அப்போ, நான் யாரு உங்களுக்கு... என்னை எதுக்காக உங்க வீட்ல
வச்சிருக்கீங்க...”.
“நீ என்னுடைய மாமா பொண்ணு தான.
எங்க வீட்ல ஸ்டே பண்ணி படிக்கிறதுக்காக வந்திருக்க”.
அபிமன்யு
ஏன் இப்படி மாற்றிக் கூறுகிறான் என்று மற்றவர்களுக்கு புரியவில்லை. யாழினி, ‘இவனுக்கு உண்மையிலேயே தலையில் ஏதேனும்
அடிபட்டு விட்டதா.. திருமணம் ஆனதையே மறந்து விட்டானோ... இல்லையே, அப்படி என்றால்
என்னை பற்றியும் மறந்திருப்பானே. என்னைப் பற்றி அனைத்து விவரங்களையும் சரியாக
கூறுகிறானே. அப்படி என்றால் வேண்டும் என்று தான் இப்படி எல்லாம் பேசுகின்றான்’ என்று கடுப்பாக.
“இங்க பாரு வர்ஷினி எனக்கும்,
இவருக்கும் ஆல்ரெடி மேரேஜ் ஆயிடுச்சு”.
வர்ஷினி
அதிர்ச்சியாக, “என்னடி சொல்ற. நிஜமாவே உனக்கு
மேரேஜ் ஆயிடுச்சா”.
“ஆமா, நான் காலேஜ் ஜாயின்
பண்றதுக்கு முன்னாடியே எங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சு”.
“சூப்பர் டி..! முன்னாடியே சொல்லி
இருக்கலாம்ல” என்றாள் புன்னகையோடு.
யாழினி,
“லவ் பண்றேன்னு சொன்னா... இப்போ
நம்ம கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா சாதாரணமா ரியாக்ட் பண்றா. அப்போ நம்ம கிட்ட
சும்மா சொன்னாலா” என்று எண்ண.
ஆரியன்,
“சரி, இப்போ உனக்கு கல்யாணம் ஆனது
என்ன உலக அதிசயமா... விட்டா நியூஸ் சேனல்ல போய் பேட்டி கொடுப்ப போலருக்கு. இப்போ
என்ன அவசரம் எங்கள மொட்டை மாடிக்கு கூப்பிட்டு வந்து உனக்கு கல்யாணம் ஆனதை
சொல்லிக்கிட்டு இருக்க” என்றான் கடுப்பாக.
“அது வந்து, இவருக்கு ஆல்ரெடி
கல்யாணம் ஆயிடுச்சுனு தெரியாம யாரும் இவர சைட் அடிக்க கூடாதுல, அதுக்காக தான்”.
இப்பொழுது
தான் வர்ஷினிக்கு புரிந்தது. தான் ஆரியனைப் பற்றி கூறியதை... யாழினி, தான்
அபிமன்யுவைப் பற்றி கூறியதாக நினைத்துக் கொண்டாள் என்று.
வர்ஷினி
அவசரமாக, “ஐயையோ...! யாழினி நான் இவர பத்தி
சொல்லலடி. இவரை பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன்” என்று ஆரியனை கை காட்டினாள்.
ஆரியனுக்கு
றெக்கை இல்லாமலே விண்ணில் பறப்பது போல் இருந்தது வர்ஷினியின் வார்த்தைகள்...
இப்பொழுது அதிர்ச்சி அடைவது யாழினியின் முறையாகிற்று.
யாழினி
அதிர்ச்சியாக, “என்ன டி சொல்ற... இவனையா நீ
சொன்ன..?”.
“ஆமா, ஏன் பார்த்தா உனக்கு அப்படி
தெரியலையா?”.
யாழினி
தன் தலையில் அடித்துக் கொண்டு, “ஐயோ, இவன நாங்க எங்க வீட்டில்
மதிக்கவே மாட்டோம். இவனுக்கா நீ அவ்வளவு பில்டப் கொடுத்த. நான் கூட இவர பத்தி தான்
சொல்றியோனு நினைச்சு கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்”.
ஆரியன்,
“யாழினி எதுக்கு அந்த பொண்ணு
முன்னாடி என்னுடைய இமேஜை இப்படி டேமேஜ் பண்ற. என்னை பத்தி எவ்வளவு கெத்தா இந்த
பொண்ணு நினைச்சிருக்கு. பார்த்தியா, என்னுடைய அருமை எல்லாம் உங்களுக்கு தான்
புரியல. புதுசா வந்த பொண்ணு எப்படி என்னுடைய அருமை பெருமைகளை எல்லாம்
புரிஞ்சுகிட்டா பாரு” என்று வர்ஷினியைப் பற்றி
புகழ்ந்தான்.
ஆரியனின்
முன்பே தான் ஆரியனை சைட் அடித்ததாக ஒப்புக்கொண்டதை எண்ணி வர்ஷினிக்கு வெட்கமாகிப்
போனது.
அவசரமாக,
“சரி, நான் கீழ வெயிட் பண்றேன் நீ
வா” என்று விட்டு ஓடி விட்டாள்.
ஆரியன்
யாழினியிடம், “யாழினி, உன் பிரண்டு உன்ன மாதிரி
இல்ல. உன்னயும், ஆரணியையும் பார்த்ததும் பொண்ணுங்கனா இப்படித் தான் இருப்பாங்களோனு
தப்பா நினைச்சுட்டேன். இப்போ உன் பிரண்ட பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது.
பொண்ணுங்கனா இப்படித் தான் வெட்கப்படுவாங்கன்னு”.
“போதும்.. போதும்... நீ ரொம்ப
வழியாத...”.
அபிமன்யு,
“சரி, அவ என்னை பத்தி சொல்லி
இருந்தா கூட, உனக்கு என்ன.. நீ ஏன் இவ்வளவு கோவப்படுற”.
“நான் கோவப்படாம வேற யாரு
கோவப்படுவா... நான் கோவப்பட்டது ஒன்னும் உங்க மேல இருக்க அன்பினாலனு
நினைச்சுக்காதீங்க. என் வாழ்க்கை வீணான மாதிரி, இன்னொரு பொண்ணுடைய வாழ்க்கையும்
வீணாகிடக்கூடாதேன்ற நல்ல எண்ணத்தில் தான் நான் கோவப்பட்டேன்” என்று சமாளித்தாள்.
“அப்படியா..! உன்னுடைய நல்ல எண்ணம்
நல்லா தெரிஞ்சது” என்றான் நக்கலாக சிரித்தபடி.
ஆரியன்,
“ஆரம்பிச்சிட்டாங்கடா, இதுக்கு
அப்புறம் இவங்க ரெண்டு பேரும் இப்படியே தான் பேசிகிட்டு இருப்பாங்க. நம்ம போய்
நம்ம ஆள ரூட்டு விடுவோம்” என்றபடி வர்ஷினியைத் தேடி கீழே
இறங்கி சென்று விட்டான்.
காதலில்
ஊடல் கூட அழகு தானே...!
கருத்துகள்
கருத்துரையிடுக