அவனதிகாரம் - 91

 

 

அதிகாரம் – 91

 

அபிமன்யு, அவ நிஜமாவே என்னை சைட் அடிச்சிருந்தா கூட, அதுல உனக்கு என்ன பிரச்சனை யாழினி? நீ ஏன் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு ப்ரூஃப் பண்ண இவ்வளவு மெனக்கெடுற.

 

அதான் சொன்னேனே... அந்த பொண்ணோட லைஃபை காப்பாத்த தான் இப்படி பண்ணேன்.

 

அபிமன்யு அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, அவளுடைய வாழ்க்கையை நீ காப்பாத்துறியா... ஜஸ்ட், பார்க்குறதால அவளோட வாழ்க்கை வீணா போயிடுமா என்ன... அவளுடைய வாழ்க்கையை காப்பாத்த பார்க்குறியா? இல்ல, உன்னுடைய வாழ்க்கையை காப்பாத்திக்க பார்க்குறியா?.

 

அபிமன்யுவின் கேள்வியில் யாழினிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

 

அவனின் முகத்தை பார்க்காமல் திரும்பி நின்றபடி, இங்க பாருங்க, நீங்க தேவையில்லாம பேசாதீங்க. நீங்க ஒன்னும் அந்த அளவுக்கு வொர்த் இல்ல. அதனால தான் அவளே ஆரியனைப் பார்த்து இருக்கா. நான் தான் ஏதோ குழப்பத்துல இப்படி எல்லாம் நடந்துகிட்டேன் என்றவள்.

 

தன்னைத்தானே திட்டிக் கொண்டாள், லூசு.. லூசு... நீயே இப்படி வாயை கொடுத்து நல்லா மாட்டிக்கிட்டியே.. போ, இதை வச்சு உன்ன நல்லா எல்லாம் ஓட்டப் போறாங்க. அவகிட்ட தெளிவா கேட்டுட்டு அப்புறமா இவங்க கிட்ட பேசி இருக்கணும். எல்லாத்துலயும் உனக்கு அவசரம் தான்.

 

ஆமா யாழினி, எல்லாத்துக்குமே நீ ரொம்ப அவசரபடுற என்ற அபிமன்யுவின் வார்த்தைகள் அருகில் கேட்கவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளின் முகம் அபிமன்யுவின் முகத்தோடு வெகு அருகில் இருந்தது.

 

அதில் யாழினிக்கு மூச்சே அடைத்து விட்டது. அவளை நகர விடாதபடி தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன்.

 

ஒரு இன்ச் இடைவேளையில், இப்போ சொல்லு, ஏதோ பேசிக்கிட்டு இருந்தியே... என்ன பேசுன?.

 

யாழினியின் விழிகள் ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல், அங்கும் இங்குமாய் அலை பாய்ந்தது. வார்த்தைகள் எழவில்லை, மூச்சு விடவே சிரமமாக இருந்தது‌.

 

யாழினிக்கு புரியவில்லை, என்ன இது, எத்தனை முறை இவனை அருகில் பார்த்தாலும் தனக்கு இப்படியே ஆகின்றதே... இது ஒன்றும் முதல் முறை கிடையாது. திருமணமாகி இத்தனை மாதங்கள் ஆகிறது. இத்தனை மாதங்களாக அவனை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனாலும், ஏனோ முதல் முறை பார்ப்பது போல், ஒவ்வொரு முறையும் தனக்கு அதே உணர்வு ஏற்படுகிறது என்று ஒரு புறம் குழப்பமாகவும்.

 

மறுபுறம், அபிமன்யுவின் அருகில் அவஸ்தையாகவும் இருந்தது.

 

சோ, என்னை மத்த பொண்ணுங்க பார்த்தா உனக்கு பிடிக்கல ரைட்...

 

அ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல... தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காதீங்க.

 

சரி, அப்போ நான் போய் விசாலாட்சி அத்தை கிட்ட யாழினிக்கு எந்த பிரச்சனையும் இல்லையாம்னு சொல்லிடுறேன் என்று விட்டு அவன் நகர முற்பட.

 

அவனது டி-ஷர்டை பிடித்து இழுத்த யாழினி, அவனது உயரத்திற்கு தன் காலை ஊனி அவனது கன்னத்தில் நறுக்கென்று கடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 

யாழினியின் எதிர்பாராத தாக்குதலில் அபிமன்யு செய்வதறியாது ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டான். அவள் சென்ற பிறகு தன் கன்னத்தை தேய்த்து விட்டவன். தனக்குத் தானே சிரித்தபடி கீழே இறங்கி சென்று விட்டான்.

 

ஆரியன் வர்ஷினியையே வட்டமிட்டபடி நின்றிருந்தான். அதுவும், இப்பொழுது வர்ஷினிக்கும் தன் மேல் அபிப்ராயம் இருக்கின்றது என்று தெரிந்ததும். அவருக்கு மிகவும் வசதியாகிப் போனது.

 

வர்ஷினிக்கு தான் ஆரியனை எதிர்கொள்ளவே முடியவில்லை. தான் விளையாட்டாக பேசியதை யாழினி அப்படியே அவர்களிடமே சென்று கூறுவாள் என்று தெரிந்திருந்தால், இவள் சத்தியமாக அப்படி கூறியிருக்கவே மாட்டாள்.

 

வெறுப்பேற்றுவதாக எண்ணி அவளின் மாமன் மகனைப் பற்றி கூறப்போய்... அது தனக்கே வினையாக முடியும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

 

அதுவரை மறைந்து மறைந்து பார்த்த ஆரியன். இப்பொழுது நேருக்கு நேர் பார்க்க தொடங்கி விட்டான். அவனின் கண்ணில் படாமல் தப்பிப்பதே வர்ஷினிக்கு பெரும்பாடாகிப் போனது.

 

இவ கிட்ட போய் சொன்னேன் பாரு. இனிமே, இவகிட்ட எதையுமே ஷேர் பண்ண கூடாது. இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லி என் மானத்தை வாங்கிட்டா. அவளோட மாமா பையன் வேற என்னையே சுத்தி சுத்தி வரான். இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்... இனிமே, இவ வீட்டு பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது. கடவுளே..! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்னை எப்படியாவது காப்பாத்திடு. நாளையில் இருந்து இவங்க வீட்டுக்கு ஒரு கும்பிடு போட்டுடுவேன் என்று அவசர அவசரமாக தன் வேண்டுதலை வைத்தாள்.

 

வர்ஷினி பதட்டமாக அமர்ந்தபடி கையில் புத்தகத்தை வைத்து புரட்டிக் கொண்டு இருந்தாள்.

 

நண்பர்கள் தங்களுக்குள், என்ன ஆச்சு என்று சைகை செய்ய. யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

 

ரவி, என்ன வர்ஷினி, ஏதோ டென்ஷனா இருக்க மாதிரி தெரியுது. என்ன ஆச்சு..?.

 

அசோக், ஆமா, யாழினியும் உன் கூட தான வந்தா. எங்க அவள காணும், நீ மட்டும் வந்து இருக்க.

 

வர்ஷினிக்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. யாழினிக்கு திருமணம் நடந்த விஷயம். உடனே, ஆரியனைப் பற்றி மறந்து போனவள், தன் நண்பர்களிடம் சுவாரசியமாக இதைப் பற்றி பகிர தொடங்கினாள்.

 

வர்ஷினி, உங்களுக்கெல்லாம் ஒரு சூப்பரான ஹாட் நியூஸோட வந்து இருக்கேன். நான் சொல்றதை கேட்டா நீங்க யாரும் நம்பவே மாட்டீங்க. அப்படியே ஷாக் ஆயிடுவிங்க.

 

அஷ்வின், அப்படி என்ன ஷாக் நியூஸ் சொல்ல போற?.

 

நம்ம யாழினியை பத்தி தான்.

 

அசோக், என்ன, யாழினி யாரையாவது லவ் பண்றானு சொல்ல போறியா. என்று கூறி சிரித்தான்.

 

இல்ல, அதுக்கும் மேல. உங்களால கெஸ் பண்ண கூட முடியாது.

 

ரவி, அப்படி என்ன எங்களால் கெஸ் பண்ண முடியாத விஷயம். என்ன, அவளுக்கு கல்யாணமே ஆகிடுச்சுனு சொல்லப் போறியா என்று அசோக்குடன் ஹை ஃபை அடித்துக் கொண்டு சிரிக்க.

 

நீ நம்பினாலும், நம்பலைனாலும் அதான் உண்மை. யாழினிக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்றாள் மகிழ்ச்சியாக.

 

அஷ்வின் அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டான்.

 

ரவியும், அசோக்கும் நம்ப முடியாமல் பார்த்தவர்கள், ஹே... விளையாடாத வர்ஷி. இதெல்லாம் விளையாடுற விஷயம் கிடையாது.

 

நானும் உங்கள மாதிரி தான் இதை ஃபர்ஸ்ட் கேட்டதும் யாழினி சும்மா சொல்றானு நினைச்சேன். ஆனா, அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவளுக்கு நிஜமாவே மேரேஜ் ஆயிடுச்சுனு.

 

அஸ்வின், என்ன சொல்ற நீ? என்றான் சீரியஸாக.

 

ஆமா அஷ்வின் அவளுக்கும், அவளுடைய மாமாவோட ஃபர்ஸ்ட் பையன் இருக்கார்ல. இப்போ நீங்க எல்லாம் கூட பேசிக்கிட்டு இருந்தீங்களே... ஏதோ பிசினஸ் பண்றாருனு சொல்லிக்கிட்டு இருந்தாரே... அவர் பெயர் ஆங்... என்ன என்று சிந்தித்தாள்.

 

உடனே ரவி, அபிமன்யு... அபிமன்யு சாரையா சொல்ற.

 

ம்ம்... ஆமா... ஆமா... அவருக்கும், யாழினிக்கும் தான் மேரேஜ் ஆயிருக்கு.

 

அஸ்வின், இது உனக்கு யாரு சொன்னது? அவங்க ரெண்டு பேருக்கும் நிஜமாவே மேரேஜ் முடிஞ்சிடுச்சா... இல்ல, இனிமே தான் பண்ண போறாங்களா? என்று தெளிவாக கேட்டான்.

 

ஐயோ! அஸ்வின் இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன திரும்பவும் ஃபஸ்ட்லருந்து கேக்குற. அவங்க ரெண்டு பேருக்கும் நம்ம காலேஜ் படிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே மேரேஜ் முடிஞ்சிடுச்சு. அவ மேரேஜ் அப்புறம் தான் காலேஜிலேயே அப்ளை பண்ணி இருக்கா. நம்ம கிட்ட தான் இவ்வளவு நாளா மேடம் சொல்லாம மறைச்சிருக்காங்க.

 

வர்ஷினி கூறியதை கேட்டவுடன் அஸ்வினின் முகம் சோகத்தில் வாடி விட்டது. அவனால் அங்கு அமரவே முடியவில்லை. யாழினியிடம் இன்னும் தன் காதலை கூட அவன் கூறவில்லை.

 

ஏன், அவனிடம் யாராவது யாழினியை நீ விரும்புகிறாயா என்று கேட்டால் கூட ஆமாம் என்று அடித்துக் கூறும் அளவிற்கு அவனுக்கு யாழினியின் மேல் காதல் இருக்கிறதா என்று அவனுக்கே தெரியாது.

 

ஆனால், ஏதோ ஒன்று யாழினியின் மேல் அவனுக்கு சொல்ல முடியாத உணர்வு. அதை எப்படி சொல்வது என்று அவனுக்கே தெரியவில்லை. இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று அவனுக்கு தெரியவில்லை.

 

ஆனால், ஏனோ யாழினிக்கு திருமணம் ஆனதை கேள்விபட்ட உடனேயே அவனின் மனதிற்குள் அப்படி ஒரு பாரம். சொல்ல முடியாத உணர்வு பெரிதாக தாக்கியது.

 

சட்டென்று, தன் பொருட்களை எடுத்துக் கொண்டு எழுந்தவன். யாரின் முகத்தையும் பார்க்காமல், எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் அப்புறமா உங்கள மீட் பண்றேன் என்று விட்டு யாரின் பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டான்.

 

ரவி, என்னடா இவன், டக்குன்னு கிளம்பிட்டான்.

 

அசோக், ஒருவேளை, யாழினி அவளுக்கு கல்யாணம் ஆனதை நம்மகிட்ட இருந்து மறைச்சுட்டானு கோச்சிக்கிட்டானோ....

 

வர்ஷினி, இதில் கோவப்பட என்ன இருக்கு. நம்ம யாருமே மேரேஜ் பத்தின டாபிக் இதுவரைக்கும் பேசுனதே இல்லல்ல. மே பி, அதனால கூட அவ சொல்லாம இருந்திருக்கலாம். ஒருவேளை, நாம என்ன மாதிரி மேரேஜ் பண்ண போறோம்னு ஏதாவது பேசி இருந்தா அவ சொல்லியிருப்பாளோ என்னவோ.. இப்போ அவ மறைக்கணும்னு நினைச்சிருந்தா, இன்னைக்கு ஏன் சொல்லப்போறா.

 

ரவி, அதுவும் சரி தான். எனிவேஸ், அவளுக்கு மேரேஜ் நடந்தது நமக்கு இன்னைக்கு தான தெரியும். கண்டிப்பா யாழினி நமக்கு ட்ரீட் கொடுத்தாகணும்.

 

அசோக், ஆமா டா. வாங்க அவ கிட்ட போயிட்டு ட்ரீட் கேட்கலாம்.

 

ரவி, என்ன யாழினி, எங்க கிட்ட சொன்னா நாங்க ட்ரீட் கேட்க போறோம்னு, உனக்கு மேரேஜ் ஆன விஷயத்தையே மறைச்சுட்டியே.

 

அசோக், அதுக்காக நாங்க அப்படியே விட்டுடுவோம்னு நினைக்காத. இப்போ எங்களுக்கு தெரிஞ்சிடுச்சுல, எங்களுக்கு நீ பெருசா ட்ரீட் வைக்கணும்.

 

அபிமன்யு, அதுக்கு என்ன தாராளமா வச்சிடலாம்.

 

ரவி, சார் உங்களை நாங்க பாராட்டியே ஆகணும் சார். இவள கல்யாணம் பண்ணி இருக்கீங்களே, உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான் சார் என்றான் கிண்டலாக.

 

யாழினி அவனை முறைத்துப் பார்த்தவள். அபிமன்யுவின் முன்பு எதுவும் கூற முடியாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

 

அசோக், ஆமா சார். ரவி சொல்றது உண்மை தான். எங்களால காலேஜிலேயே இவள வச்சு சமாளிக்க முடியல. அவ்வளவு பேசுறா.. நீங்க எப்படி சார் இவள வச்சு சமாளிக்கிறீங்க.

 

ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. இப்போ அப்படியே பழகிடுச்சு.

 

என்ன.. நான் அதிகமா பேசுறனா. இங்க பாத்தியா ஆரி, உங்க அண்ணன் என்ன சொல்றாங்கனு.. அவங்க பாவமாம், நான் அவங்கள கஷ்டப்படுத்துறேனாம்....

 

பார்த்தியா, கொஞ்ச நாள் உன் கூட பழகுன உன்னுடைய பிரண்ட்ஸ்கே உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சுருக்கு. அப்போ லைஃப் லாங் உன் கூட இருக்க போற என் அண்ணனுடைய நிலைமையை நினைச்சு பாரு. பாவம்..! என்று உச்சுக் கொட்டினான்.

 

ஆரணி, ஏன் எல்லாம் இப்போ யாழினியை கிண்டல் பண்றீங்க. இங்க பாரு ரவி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எங்க அண்ணா ரொம்ப சாஃப்ட் டைப் கிடையாது. அவரைப் பார்த்தாலே உனக்கு தெரியலையா, அவர் ரொம்ப ரகடான ஆளு. ஆரம்பத்துல யாழினி அவர்கிட்ட எவ்வளவு திட்டு வாங்கி இருப்பானு யோசிச்சு பாருங்க.

 

வர்ஷினி, என்ன யாழினி உன்ன அவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்காரா.. இவ்வளவு கொடுமைப்படுத்துறவர் கூட நீ வாழ்ந்து என்ன பண்ண போற. பேசாம இவர டைவர்ஸ் பண்ணிடுவோம்.

 

யாழினி அதிர்ந்து போய்விட்டாள்.

 

இவர்களை படிப்பதற்காக தன் வீட்டிற்கு அழைத்ததற்கு இலவசமாக தனக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து அனுப்பி விடுவார்கள் போலருக்கே என்று சிந்தித்தவள்.

 

ஹி... ஹி... உங்களுக்கு ட்ரீட் வேணும்னு சொன்னீங்களே, மறந்துட்டீங்களா என்று எடுத்துக் கொடுத்தாள்.

 

ரவி, ஆமா, டாபிக்கை சேஞ்ச் பண்ணாதீங்க. எங்களுக்கு கண்டிப்பாக ட்ரீட் வேணும்.

 

அபிமன்யு, ஓகே, மதியம் லஞ்சுக்கு எல்லாரும் வெளியில் போகலாம். எங்க உங்களுடைய இன்னொரு பிரண்டை காணோம்..?.

 

யாழினி அப்பொழுது தான் கவனித்தவள், வர்ஷினி, எங்க அஸ்வினை காணும்?.

 

ரவி, அஸ்வினுக்கு ஏதோ இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்குன்னு போயிட்டான் யாழினி. அவனுக்கு இன்னொரு நாள் நம்ம காலேஜ்ல ட்ரீட் கொடுத்துக்கலாம். இப்போ நம்ம மட்டும் போயிட்டு வரலாம்.

 

சரி என்று யாழினி ஒப்புக்கொண்டாள்.

 

ஆனால், அபிமன்யுவிற்கு அஸ்வின் சென்றதன் காரணம் தெளிவாக புரிந்தது. இதெல்லாம் இந்த வயதில் கடந்து வருவது தானே என்று சாதாரணமாக விட்டு விட்டான்.

 

பிறகு, அன்றைய தினம் முழுவதும் இவர்கள் அனைவரும் ஒன்றாக வெளியே செலவிட்டனர். யாழினி எதிர்பார்க்கவே இல்லை. அபிமன்யு இவ்வளவு சாதாரணமாக அனைவருடனும் ஒத்துப் போவான் என்று...

 

எப்பொழுதும் விரைப்பாக சுற்றுபவன், இவர்களுடன் கலகலப்பாக இல்லாவிட்டாலும், எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தான். அதுவே யாழினிக்கு பெரிதாக இருந்தது.

 

அனைவரையும் ஒரு பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து சென்ற அபிமன்யு, அங்கே தங்களின் திருமணத்திற்கான ட்ரீட்டை கொடுக்க.

 

பிறகு, பீச், சினிமா என்று அன்றைய தினம் அழகாக கழிந்தது. வர்ஷினி தான் ஆரியனின் பார்வையினால் சற்று தடுமாற்றத்துடனே இருந்தாள். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் வர்ஷினியை இம்ப்ரஸ் செய்கிறேன் என்ற பெயரில், அவளையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.

 

இவர்களின் தினம் இங்கே மகிழ்ச்சியாக கழிய. இங்கிருந்து சென்ற அஸ்வின் நேராக கடற்கரைக்கு சென்று அங்கே மணலில் அமர்ந்தவன் தான்.. அத்தோடு இரவு வரை அப்படியே அமர்ந்த வாக்கிலேயே இருந்தான். அவனால் இதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

அவளின் மேல் காதல் என்று சொல்ல முடியாவிட்டாலும்... ஏதோ, ஒரு உணர்வு வலுவாக இருந்தது. இப்பொழுது அதற்கு அர்த்தம் இல்லாமல் போனது போல் வெகுவாக உடைந்துப் போனான். அவனுக்கு இந்த தனிமை பெரிதாக தேவைப்பட்டது. இனி, எப்படி அவளை எதிர்கொள்வது என்று அன்றைய தினத்தை அப்படியே கடந்தான்.

 

பருவ வயதில் அனைவரும் கடந்து வரும் பாதையை தான் இப்பொழுது அஸ்வினும் கடக்கிறான்...

 

இனி, யாழினியின் உடனான நட்பை அஸ்வின் நீடிப்பானா...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5