அவனதிகாரம் - 92
அதிகாரம் – 92
மறுநாளில்
இருந்து ஷைலஜாவின் திருமண வேலைகள் மலமலவென ஆரம்பமாகியது. ஆனால், அது எதிலுமே
விசாலாட்சி கலந்து கொள்ளாமல், ‘யார் வீட்டு விருந்தோ’ என்பது போல் சுற்றிக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணமூர்த்திக்கும்
இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாததால், அவரும் பெரிதாக எதிலும் ஈடுபடவில்லை.
ஷைலஜாவின் திருமண ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் பார்க்கும் பொழுது, யாழினிக்கு
தன்னையும் மீறி அவளின் மனதிற்குள் வருத்தமாக இருந்தது. தனக்கு இப்படி எல்லாம்
நடக்கவில்லையே என்று
அன்று
ஷைலஜாவின் திருமண பத்திரிக்கை அடித்து வந்திருந்தது. கல்லூரியில் இருந்து வீடு
வந்து சேர்ந்த ஆரணியும், யாழினியும் சோர்வாக சோபாவில் அமர. மீரா அவர்களுக்கு
அருந்துவதற்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார்.
ஆரணி
அதை அருந்தியபடியே, “அம்மா என்ன இது..? ஏதோ பண்டல்
பண்டலா வச்சிருக்கீங்க”.
“ஓ.. இதுவா...” என்று அதை பிரித்து அதிலிருந்து ஒரு
பத்திரிக்கையை வெளியே எடுத்தவர், “ஷைலஜாவுடைய
மேரேஜ் இன்விடேஷன். எப்படி இருக்குன்னு பாருங்க” என்று இருவரின் கையிலும் ஒவ்வொன்றை கொடுத்தார்.
அதைப்
பார்த்த யாழினிக்கு தன் திருமணத்திற்கு இப்படியெல்லாம் நடக்கவில்லையே என்று
ஏக்கமாக இருந்தது.
யாழினி,
“ரொம்ப அழகா இருக்குத்த” என்று கூறியவள் தன்னுடனே ஒரு
பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்.
மறுநாள்
முதல் அனைவருக்கும் திருமண பத்திரிகை வைக்கும் வேலை ஆரம்பமானது.
விசாலாட்சி,
“என்னால் வர முடியாதுண்ணா. நீங்க
வேணும்னா போய் பத்திரிக்கை வைங்க. கேட்குறவங்களுக்கு எல்லாம் என்னால பதில்
சொல்லிக்கிட்டு இருக்க முடியாது”.
மகேந்திரன்,
“உன் பொண்ணு கல்யாணத்துக்கு நீ
வைக்காம நாங்க மட்டும் எப்படி விசாலாட்சி தனியா போய் வைக்க முடியும். எல்லாரும்
பொண்ணோட அம்மா, அப்பா வரலையானு கேட்க மாட்டாங்களா...”.
விசாலாட்சி
கோபமாக, “அப்பா ஒழுங்கா இருந்திருந்தா,
எங்களுக்கு ஏன் இந்த தலையெழுத்து. அந்த ஆளு ஊதாறித்தனமா சுத்துறதால தான என் பொண்ணு
இப்படி ஒன்னும் இல்லாதவன் குடும்பத்துக்கு வாழ போறா” என்றார் வெடுக்கென்று.
அதில்,
ஷைலஜாவிற்கும் வருத்தமாகிப் போனது.
“முடிஞ்சு போனது பத்தி பேசி
ஒன்றும் ஆகப்போவதில்ல விசாலாட்சி. உன் பொண்ணு கல்யாண வேலைய நீ எதையுமே எடுத்து
பார்க்க மாட்டேங்குற. பரவாயில்ல... அவளுடைய தாய் மாமாவா முன்னிருந்து
எல்லாத்தையும் நான் பார்ப்பேன். ஆனா, பத்திரிக்கை வைக்க கூட நீ வரலைன்னா எப்படி?
அவ என்ன அம்மா, அப்பா இல்லாத பொண்ணா... அவ மனசு கஷ்டப்படும்ல. உன்
பொண்ணுக்காகவாவது நீ வா”.
“என் மனச யாரும் புரிஞ்சுக்கலயே...
என் மனசு கஷ்டப்படும்னு யாரும் யோசிக்கலையே... இத்தன வருஷம் நம்ம அம்மா நம்மள
எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. அவங்க ஆசைப்படி கல்யாணம் பண்ணிக்கணும்னு
என் பொண்ணுக்கு தோணலயே... நான் ஏன் அவள பத்தி யோசிக்கணும்” என்றார் விட்டேட்ரியாக.
இவரின்
வார்த்தையைக் கேட்டு ‘இவர் புரிந்து தான் பேசுகிறாரா
என்று குழப்பமாக பார்த்தார்’ மகேந்திரன், “நீ எதுக்கும் வர வேண்டாம் விசாலாட்சி.
தயவு செஞ்சு, பத்திரிக்கை வைக்க மட்டும் வா”.
ஒரு
வழியாக திருமண பத்திரிக்கை வைப்பதற்கு தானும் வருவதாக ஒப்புக்கொண்டார் விசாலாட்சி.
ஒருபுறம், உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் திருமண பத்திரிக்கை வைக்கும்
வேலை சென்று கொண்டிருக்க.
மறுபுறம்,
புடவை, நகைகள் எடுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஷைலஜாவிற்கு முகூர்த்தப்பட்டு
எடுப்பதற்காக பிரபல துணிக்கடைக்கு குடும்பமாக மணமகள் வீட்டாரும், மணமகன்
வீட்டாரும் சென்றிருந்தனர்.
கிஷோர்
ஷைலஜாவிற்காக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டிருந்தான். அபிமன்யுவும் கிஷோருடன்
போட்டி போடும் விதமாக, யாழினிக்காக புடவை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆரியன்,
“கிஷோர், மேரேஜ் உங்களுக்கா இல்ல,
என்னோட அண்ணனுக்கானு தெரியலயே. உங்களுக்கு போட்டியா எங்க அண்ணனும் சேரி செலக்ட்
பண்ணிக்கிட்டு இருக்கார்”.
“எனக்கும் அதே சந்தேகம் தான்”.
“இதெல்லாம் கொஞ்சமாகவது நியாயமா
இருக்கா. கல்யாண பொண்ணு ஷைலஜாவா, யாழினியானு எல்லாருக்கும் கன்பியூஸ் ஆயிடும்
போலருக்கு” என்றான் சிரித்தபடி.
“என் மனைவிக்காக நான் செலக்ட்
பண்றேன். கிஷோர் அவனுக்கு வரப்போறவங்களுக்காக செலக்ட் பண்றான். எல்லாம் ஒன்னு
தான்... கல்யாண பொண்ணு ஷைலஜாவா இருந்தாலும், அபிமன்யுவோட வைஃப்னா என்ன
சும்மாவா.... பார்த்ததுமே, எவ்வளவு கூட்டமா இருந்தாலும் இது தான் அபியோட வைஃப்னு
எல்லாரும் கரெக்டா கண்டு பிடிக்கிற மாதிரி தனியா தெரியணும்”.
ஆரியன்,
“அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா
இருக்குண்ணா. தனியா ஒரு ஸ்டேஜ் போட்டு யாழினிய அது மேல ஏறி நிக்க வச்சிடுவோம்.
யார் கூட்டத்துல பார்த்தாலும் தனியா தெரிவா” என்று கிண்டல் அடிக்க.
அனைவரும்
நகைத்தனர். அபிமன்யு அவனைப் பார்த்து முறைக்க.
அபிமன்யு
யாழினியிடம், “யாழினி, நான் உனக்கு அப்புறமா
என்னோட டிசைனர்கிட்ட சொல்லி, தனியா டிரஸ் டிசைன் பண்ணி வாங்கி தரேன். இவங்க
முன்னாடி எல்லாம் எடுத்தா இப்படி தான் ஏதாவது அன்னெசசரியா கமெண்ட் பண்ணிக்கிட்டே
இருப்பாங்க” என்றான் கோபமாக.
கிஷோர்,
“ஐயோ சார்..! நான் சும்மா
விளையாட்டுக்கு தான் சார் சொன்னேன். நீங்க பாருங்க” என்று பின்வாங்க.
“நோ ப்ராப்ளம் கிஷோர். எனக்கு இங்க
எதுவுமே கலெக்ஷன்ஸ் அவ்வளவா பிடிக்கல. நீங்களே பாருங்க..” என்று விட்டு யாழினியிடம், “சரி வா. நம்ம அம்மாவுக்கும், பாட்டிக்கும் சாரி செலக்ட்
பண்ணலாம்”.
ஆரியன்
ஆரணியிடம், “இங்க என்ன நடக்குது... கல்யாண
மாப்பிள்ளையும், பொண்ணும் ஒரு பக்கம் செலக்ட் பண்றாங்கனு பார்த்தா... இவங்க ரெண்டு
பேரும் தான் கல்யாண பொண்ணு, மாப்பிள்ளை மாதிரி எப்போ பாத்தாலும் ஒன்னாவே
சுத்திக்கிட்டு இருக்காங்க” என்று அபிமன்யுவையும்,
யாழினியையும் பார்த்து கேட்டான்.
ஆரணி, “நம்ம அண்ணாவே இப்போ தான் ஒழுங்கா
இருக்கார். அது உனக்கு பிடிக்கலையா... எப்போ பார்த்தாலும் ஏன் டா அவங்களயே
பார்த்துக்கிட்டு இருக்க”.
“பின்ன, இந்த யாழினி பண்றதெல்லாம்
பார்த்தா கடுப்பாகாதா, நீயே சொல்லு ஆரணி. நான் அப்படி என்ன பெருசா கேட்டுட்டேன்...
சொல்லு... நான் என்ன பெருசா கேட்டுட்டேன்...”.
“என்னனு சொல்லேன்டா. என்கிட்ட
வந்து என்ன கேட்டேன், என்ன கேட்டேன்னா எனக்கு என்ன தெரியும். என்ன கேட்டனு நீயே
சொல்லு”.
“அந்த யாழினிகிட்ட வர்ஷினியுடைய
போன் நம்பர் குடுனு மட்டும் தான் கேட்டேன். அது கூட தர மாட்டேங்குறா. அதையும்
அவகிட்ட நான் எப்படி கேட்டேன் தெரியுமா...”.
ஆரணி
சலிப்பாக, “எப்படி கேட்ட..”.
“அண்ணி... ப்ளீஸ் அண்ணி.... எனக்கு
வர்ஷினியுடைய போன் நம்பர் மட்டும் கொடுங்கனு கெஞ்சி கேட்டேன். அதுக்கு அந்த யாழினி
என்ன சொன்னா தெரியுமா”.
“என்ன சொன்னா... அதையும் நீயே
சொல்லித்தொல”.
“அதுக்கு அந்த யாழினி சொல்றா, என்
பிரண்டோட வாழ்க்கை உன்னை கட்டிக்கிட்டு என் கண்ணு முன்னாடியே நாசமா போறத என்னால
பார்க்க முடியாது. அப்படினு என் முகத்துக்கு நேரா சொல்லுறா டி”.
“அவ சொல்றதும் வாஸ்தவம் தான டா”.
ஆரியன்,
“என்ன டி இரண்டு பேரும் கூட்டு
சேர்ந்துட்டீங்களா” என்று கோபத்தில் பொங்கி
எழுந்தான்.
“ஓகே.. ஓகே... கூல்... என்ன
இருந்தாலும், நீ என்னுடைய அண்ணன். உன்ன எப்படி அவ இப்படி கேட்டிருக்கலாம். உனக்கு
என்ன இப்போ, வர்ஷினியோட நம்பர் தான வேணும். அவ கிட்ட சொல்லி நான் தர சொல்றேன்”.
“நிஜமாவா...!”.
“அப்படி வாங்கி கொடுக்கலாம்னு தான்
நினைச்சேன் டா. ஆனா, என்ன பண்றது... உன்னோட பேட் லக்கா... இல்ல, அந்த வர்ஷினியுடைய
குட் லக்கானு தெரியல. அவகிட்ட போனே இல்ல”.
ஆரியன்
நம்பமுடியாத பார்வையோடு, “நீ பொய் சொல்ற. நான் நம்ப
மாட்டேன்... அது எப்படி போனே இல்லாம இருக்க முடியும்”.
“இதே மாதிரி தான் நானும் சந்தேகமா
கேட்டேன். வர்ஷினியே என்கிட்ட சொன்னா நான் போன் எல்லாம் யூஸ் பண்ண மாட்டேன்னு”.
“என்ன, ரெண்டு பேரும் வேற வேற
மாதிரி பேசினாலும், உங்களுடைய மோட்டிவ் ஒன்னு தான். எனக்கு இந்த ஜென்மத்துல லவ்
செட்டாக கூடாது. நான் சாகுற வரைக்கும் சிங்கிளாவே இருக்கணும். அதான உங்க ரெண்டு
பேருக்கும் வேணும்”.
“ஹி... ஹி... எப்படி கரெக்டா கண்டு
பிடிச்சுட்ட. ஏற்கனவே, ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்த அபி அண்ணாவே லவ் வந்ததும் எப்படி
ஆயிட்டார் பார்த்தல்ல. நீ ஏற்கனவே ஒரு மாதிரி சுத்திக்கிட்டு இருக்க. உனக்கு
மட்டும் லவ் வந்து செட் ஆயிடுச்சுன்னா என்னுடைய நிலைமைய யோசிச்சு பார்த்தியா, நான்
மட்டும் தனியா சுத்தணும். நீங்க ரெண்டு பேரும் ஜோடியா சுத்துவீங்க”.
ஆரியன்
தன் வாயில் கையை வைத்துக்கொண்டு, “அடிப்பாவி...!
உன்ன போய் நல்லவனு நினைச்சேனே டி”.
“சரி, யாழினி கூப்பிடுறா. நான்
போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்”.
ஆரியன்,
“எஸ்கேப் ஆக பார்க்குறியா...
எல்லாரும் ஒன்னா சேர்ந்து கடைசி வரைக்கும் என்னை சிங்கிளாவே வச்சிருக்கலாம்னு
பார்க்குறீங்களா... நெவர்... உங்களுடைய ஆசை எதுவுமே நடக்காது. நான் அந்த
வர்ஷினியையே கரெக்ட் பண்ணி காட்டுறேன்”
என்று தனக்குத் தானே சபதம் எடுத்துக்கொண்டான்.
ஷைலஜா, “கிஷோர், இந்த சாரி நல்லா இருக்குல்ல..?”.
“இல்ல ஷைலு, உன்னோட கலருக்கு இந்த
மெருன் கலர் சாரி சூப்பரா இருக்கும். வச்சு பாரு”.
அபிமன்யு,
“என்ன கிஷோர், இன்னுமா செலக்ட்
பண்றீங்க. முடிஞ்சுதா, இல்லையா?”.
“எங்க சார்... உங்க அத்த பொண்ணு
என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குறா”.
“கிஷோர் சொல்றதை கேளு ஷைலஜா”.
பிறகு,
ஒரு வழியாக முகூர்த்த புடவை, மாத்து புடவை, குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு
புடவை என அனைவருக்கும் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவர்கள் நேராக நகை
கடைக்கு சென்றனர். அங்கேயும் இதே போல் கலாட்டாக்களுடன் நகைகளை எல்லாம்
வாங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
அபிமன்யு
யாருக்கும் தெரியாமல் யாழினிக்கு பிரத்தியேகமாக இதய வடிவில் வடிவமைக்கப்பட்ட
டாலருடன் செயினை ஆர்டர் கொடுத்தான். டாலரினுள் இருவருடைய போட்டோவையும் வைத்துக்
கொள்ளும்படி வடிவமைக்க சொல்லி இருந்தான்.
வள்ளியம்மை,
“என்ன மீரா, எல்லோருக்கும்
பத்திரிகை வச்சு முடிச்சாச்சா?”.
“ஆமாம்மா எல்லாமே ஓரளவுக்கு
முடிஞ்சிடுச்சு. இதுக்கு அப்புறம் பிசினஸ் சம்பந்தப்பட்டவங்களுக்கு தான்
வைக்கணுமாம். அதெல்லாம் அவரே பார்த்துக்குறேன்னு சொல்லிட்டார். இப்போ தான் கொஞ்சம்
ரிலீஃப்பா இருக்கு”.
ஆரணி, “அம்மா, ஷாப்பிங் எல்லாம் கூட நாங்களே
முடிச்சிட்டோம். ஜாலியா இருந்துச்சு”.
வள்ளியம்மை
ஆரணியின் தலையை தடவியபடி, “இன்னும் கொஞ்ச நாள்ல என்
பேத்திக்கும் இதே மாதிரி கல்யாணம் பண்ணுவோம்” என்றார் கண்களில் ஆசையுடன்.
ஆரியன்,
“அதை முதல்ல பண்ணுங்க பாட்டி. இவ
இருக்க வரைக்கும், எனக்கு கல்யாணம் பண்ணவிடமாட்டா. இவளுக்கு முதல்ல கல்யாணத்த
பண்ணி அனுப்புனா தான், எனக்கு கல்யாணம் பண்ண முடியும்”.
மீரா, “இப்போ தான் இவள குழந்தையா பார்த்த மாதிரி
இருக்கு. அதுக்குள்ள எவ்வளவு வளர்ந்துட்டா இல்லம்மா”.
இவர்கள்
ஆரணியின் திருமணத்தைப் பற்றி பேசவும், ஆரணியின் மனக்கண் முன்பு அவளவன் வந்து
போனான்.
அதை
சரியாக கவனித்த ஆரியன், “என்ன ஆரணி, கல்யாணம்னு சொன்னதுமே
கனவு காண ஆரம்பிச்சிட்ட போலருக்கு”.
ஆரணி
சமாளிப்பாக, “அ... அதெல்லாம் ஒன்றும் இல்ல.
நான் சாதாரணமா தான் இருக்கேன்”.
“பார்த்தா அப்படி தெரியலையே”.
“அம்மா பாருங்கம்மா இவன... எனக்கு
இன்னும் படிப்பு கூட முடியல, அதுக்குள்ள எதுக்கு இப்போ கல்யாண பேச்சு எல்லாம்”.
யாழினி
பின்னிருந்து மீராவின் கழுத்தை கட்டிக்கொண்டவள், “ஆரணிக்கு கல்யாணம் பண்ணி அவ மாமியார் வீட்டுக்கு போயிடுவானு
வருத்தப்படுறீங்களா அத்த. அதான் நான் இருக்கேன்ல. நீங்க ஏன் ஆரணிய நினைச்சு
கவலைப்படுறீங்க. அவ போயிட்டாலும் நீங்களும், நானும் ஜாலியா என்ஜாய் பண்ணலாம்”.
“என்னை எப்போ பேக் பண்ணலாம்னு
கார்த்துகிட்டு இருக்கீங்க போலருக்கு நீங்க ரெண்டு பேரும்”.
“ஆமா, நீ போயிட்டினா அப்புறம்
அத்தையுடைய முழு செல்லம் நான் தான். என்னத்த நான் சொல்றது சரி தான”.
“எனக்கு நீ வேற, ஆரணி வேற
கிடையாது. ரெண்டு பேருமே ஒன்னு தான்”.
ஆரியன்,
“பார்த்தியா யாழினி, எங்க அம்மா
மாதிரி ஒரு மாமியார் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும். இன்னும் ஒரு ஆள்
குறையுதே”.
வள்ளியம்மை
பாட்டி, “யாருடா... யாரை சொல்ற நீ..?”.
“என்னோட வருங்கால மனைவியை தான்
சொல்றேன் பாட்டி. அவளும் வந்துட்டா அம்மாவுக்கு மூணு பொண்ணு ஆயிடும்ல”.
“அதுக்கு இப்போ என்னடா அவசரம்.
ஆரணிய கட்டி கொடுத்து ஒரு பத்து வருஷம் ஆகட்டும். அப்புறமா பார்ப்போம்”.
ஆரியன்
தன் நெஞ்சில் கை வைத்தவாறு, “என்னது பத்து வருஷமா...!
அதெல்லாம் முடியாது. பொண்ணெல்லாம் நான் பார்த்து ரெடி பண்ணிக்கிறேன். கல்யாணம்
பண்றது மட்டும் நீங்க பண்ணுங்க”.
“பாத்தியா மீரா, எவ்வளவு திமிர்
இவனுக்கு. பொண்ணு இவர் பார்ப்பாராம் நம்ம கல்யாணம் பண்ணி வைக்கணுமாம். உங்க அண்ணன்
எப்படி நாங்க சொன்ன பொண்ண கட்டுனான். அப்படித் தான் நீயும், நாங்க சொல்ற பொண்ண
தான் கட்டனும்”.
“அண்ணன் எங்க நீங்க சொன்ன பொண்ண
கட்டுனார். நீங்களா அப்படி நினைச்சுகிட்டு இருக்கீங்க. அண்ணன் யாழினியை பிளான்
பண்ணி கட்டி இருக்கான். கூடிய சீக்கிரமே நானும் இதே மாதிரி ஒரு பிளானோட வந்து
உங்கள மீட் பண்றேன்”.
ஆரணியின்
கனவு நாயகன் யார்..?
யாரை
நினைத்து அவள் உறுகுகிறாள்..?
கருத்துகள்
கருத்துரையிடுக